Home » Online_news

இலட்சியத்தின் பாதையில் வெற்றி

தி.ரே. மோனிசா

வெற்றி என்பது வாழ்வின் எளிதாக கிடைக்கும் கனியல்ல! தோல்வி என்னும் பல மரங்களைக் கடந்து, தடைகளை தாண்டி எட்டிப் பறிக்கும் கனியே வெற்றி. ஒருவன் வாழ்வில் எத்தனை முறை தோல்வி அடைகிறானோ, அந்த அளவிற்கு அவன் வாழ்வின் உயரத்திற்கு செல்லப் போகின்றான் என்று தான் அர்த்தம்.

நம் எண்ணங்கள் தான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும். வாழ்வில் இலட்சியம் கொண்டு பாதையைக் கடக்க வேண்டும். இலட்சியம் அற்ற மனிதனின் வாழ்வானது சேரும் இடம் அறியாமல் பயணத்தை தொடங்குவது போன்றது. செல்லும் இடம் அறியாமல் வேகமாய் பயணிப்பதில் பலன் ஏதுமில்லை.

ஒரு செடியை நட்டு அதற்கு நாம் தண்ணீர் ஊற்றாமல் இருந்தால் அது பட்டுபோய் விடும். அதே நாம் அதற்கென்று தனி நேரம் செலவிட்டு அதை பராமரித்து வந்தால் தான் அது வளர்ந்து நல்ல பயன் அளிக்கும். அது போல் நாம் வாழ்வில் ஒரு செயலைத் தொடங்கி அதற்கான எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் வெற்றி இலக்கை அடைய முடியாது.

வாழ்வில் வெற்றிக் கனியை பறிக்க ஓடும் இந்த வேளையில் எந்த செயலையும் நாளை என்று தள்ளி போடுபவரை நிறுத்தினாலே வெற்றியின் உச்சியை அடையலாம். நம்மால் ஒரு செயலை முழுமையாக செய்ய முடியுமா? என்ற கேள்விக்கே மனதில் இடம் கொடுக்க கூடாது நம்மால் முடியும் என்று நினைத்து செய்ய வேண்டும்.

வெற்றி ஒருவருக்கு மட்டுமே சொந்தமன்று என்பதை உணர்ந்து அதை நம் வசப்படுத்த நல்ல இலட்சியத்தோடு தோல்வியைத் தூண்டுகோலாக கொண்டு உழைத்துய எடுக்கும் செயல் அனைத்தும் வெற்றியில் தான் முடியும் என்று முழுதாக நம்பினால் வெற்றிக் கனி நம் வசப்படும்.

“முயற்சி என்ற பூட்டை தன்னம்பிக்கை என்னும் திறவுகோலால் திறந்தால் வெற்றி என்றும் உங்கள் கையில் தான்”

தன்னம்பிக்கையோடு முயன்று வெற்றி பாதைக்கு செல்வோம்!! வெல்வோம்!!

தேடாதே ..! உருவாக்கு…!

 “விதைத்தவன் உறங்கினாலும்

விதைகள் உறங்கியதில்லை”

என்ற பொன்மொழியை அறிந்திருப்போம். என்றோ நம்முள் விதைத்த நம்பிக்கை ,ஒரு நாள் வெற்றியை மரம்போல விளைத்தே தீரும் என்ற வார்த்தைக்கு வடிவமாக தன் வாழ்வை வாழ்ந்து மறைந்தவர் அமரர் அ.பெ.ஜெ. அப்துல் கலாம்.

காலம் கணக்கற்ற மனிதர்களைத் தடயமின்றி கடத்திச்  சென்றிருந்தாலும் சிலர் அதில் விலக்கற்றவர்களாக திகழ்வார்கள். பூமி  அவர்களால் புண்ணியங்கள் பெற்றிருக்கும்.  அவர்களின் நம்பிக்கையும் நேர்மறை எண்ணங்களையும் இணைத்தே மாற்றங்களை கொணர்ந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களுள் தலையாயவர் அப்துல்கலாம்.

தக்கள் ஜனாதிபதி , ஏவுகணை நாயகன், எளிமையின் சிகரம் என எந்த நற்சொல்லை அடைமொழியாக்கினாலும் அதற்கு ஏற்றாற்போல மிகச்சரியாக பொருந்தியவர்.வெற்று கனவுகளோடு பயணித்த பலரை  இலட்சியக் கனவு காண அடிக்கோலிட்டவர். ஆரம்ப வயதிலிருந்தே அனுபவத்தின் வாயிலாக அறச்செயல்களை நிரம்பக் கற்றவர்.

மனிதனை மனிதநேயத்தோடும், மாண்பான எண்ணத்தோடும் அணுகியவர். உலக அமைதிக்காக தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்தவர். செயல்படுத்தவும் முனைந்தவர். இந்தியாவின் வல்லரசு கனவைத் தாம் கண்டதோடு நில்லாமல்  எல்லா மக்களையும்  அதனை நோக்கிய கனவைக்  காணச் செய்தவர்.

இவற்றையெல்லாம் புகழாரங்கள் போல பாவிக்காமல் தனிமனிதனின் தன்னம்பிக்கையால் விளைந்த செயலாக பாருங்கள். ஒற்றை மனிதர் எண்ணினால் எந்த அளவில் மாற்றம் கொண்டு வர முடியுமென்பதன் இரகசியத்தை மறைமுகமாக அவர் நமக்கு உணர்த்தி சென்றிருக்கிறார்.

‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம் ’

என்ற ஆகச் சிறந்த இலட்சியங்களை அûவைரின் அகங்களிலும் பதிந்தவர்.

பெரும்பாலும்  இளைய சமூகத்தின் மீதும்  குழந்தைகள் மீதும் தீரா அன்போடு முழு நம்பிக்கையும் கொண்டிருந்தவர். வார்த்தைகளால் தன்னம்பிக்கை ஊட்டியதோடில்லாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டியவர். தன் வயதின் மூப்பை ஒருபோதும் பொருட்படுத்தியவரில்லை. குடியரசுத் தலைவர் பதவியைக் காட்டிலும் ஆசிரியர் பணியை பெரிதும் நேசித்தார். அதனால் இறக்கும் தருவாயிலும் ஆசிரியராகவே இறந்தார்.

விவேகானந்தருக்குப் பிறகு இளைய சமூகத்தை நல்வழிப்படுத்த பிறந்த தலைவர். நாட்டின் நலம் ஒன்றே  நம் தேவையென நாளும் போதித்து பின்பற்றிய பொதுநலவாதி.

 ‘‘ நம்பிக்கை நிறைந்த ஒருவர்

யார் முன்னேயும் எப்போதும்

மண்டியிட மாட்டார்’’

என உற்சாகத்தோடு  தன்னம்பிக்கை விதைத்தவர். எளிமையால் எதையும் வென்றவர்

“ஒரு மனுஷன் பிரியும்போது

அவன் தாயழுதா அவனொரு நல்ல மகன்

அவன் பிள்ளைகள் அழுதா அவனொரு நல்ல தகப்பன்

அவன் பிரிவுக்காக ஒரு நாடே அழுதா

அவன் நல்ல தலைவன்”

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைளில் தான் உள்ளது.

இது போன்ற  பல வரிகளின் வாயிலாக அவர் உணர்ந்த முயன்ற ஒற்றை ஆயுதம் ‘தன்னம்பிக்கை’ அதை வெளியெங்கும்  தேடாதே….!! உன்னுள்ளே உருவாக்கு…!

நல்லோரின் செயல்புரிந்து நாயகனாய் உரு கொள்…!

நாடும் உனை நாடும், நம்பிக்கை கொள்….!

எது சரி

ஆதிகாலத்து மனிதனின்  வாழ்க்கை, வாழத்தொடங்கிய அவன் முடிவில் அதுவும் அழகாய் முடிந்தது.  வாழ்ந்தவனின் வாழ்க்கை அவன் வீழ்ந்த பிறகும் வாழத்தான் செய்கிறது.  உலகின் பலர் மரணமில்லா வாழ்வு வாழ்ந்து கொண்டு தான் இருகிறார்கள்.

இன்றைய நிலை, தனக்கான வாழ்வினை தானம் செய்தே புண்ணியம் சேர்த்து வாழவேண்டி இருப்பதாய் நினைத்து பலர் வாழ்கிறோம்.  மற்றவரின் பார்வை மட்டுமே, நம் வாழ்வினை வழி நடத்தி வருகிறது.  நமது பார்வையோ வாழ்க்கையை ஒரு போராட்டமாக மட்டுமே பார்கிறது.  ஆனால் அது அவ்வாறாக உண்மையல்ல.  நாம் உறங்கினாலும் உறங்க மறுத்தாலும் இரவானது விடியலில் முடியத்தான் போகிறது.  உறங்க மறுப்பவன் மட்டுமே போராடி வருகிறான்.  தேடல் இருக்கத்தான் செய்கிறது.  தேடலில் தேவை மட்டும்  முடிவதில்லை.  நல்லெண்ணம் நல்லதை மட்டுமே வாய்க்கிறது.

மனதார வாழ்த்தி மனசார மண்ணித்து மனப்பொய் இல்லாமல் மகிழ்வோடு அணுகுவது மட்டுமே சிறப்பளிக்கும்.  அடுத்தவரோடு ஒப்பிட்டு வாழ ஆசைப்படுவதே இங்கு அனைத்து துன்பங்களுக்கும் காரணமாக உள்ளது.  ஒருவன் தன் சகதோழனை காணும் போது அவனது நல்வாழ்வினை கண்டு மகிழவேண்டிய உள்ளம், தனக்கு அமைந்த வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்து வருத்தப்படவே செய்கிறது.  வேட்டைக்கு  போகும் விலங்கு  சில நேரம் பட்டினி கிடக்க வேண்டி வரும் அதுவே படைத்தவனின் விருப்பம் எனில்

கார்ல்மார்க்ஸ் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வறுமையில் அவதிப்பட்டவர் இன்று புகழரசனாக பலரின் மனதில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.  “ யார்க்கும் இந்நிலை பொதுவன்றோ” என்ற பாரதியின் சொல்போல எல்லோருக்கும் வாழ்க்கை பொதுவானதாகவே அமைகிறது.  எந்த சூழ்நிலையையும் மகிழ்ச்சியாக அணுகக் கற்றுக் கொண்டால், எல்லா சூழ்நிலையும் மகிழ்ச்சியானதாகவே அமையும்.

ஒருவன் தான் வாழும் வாழ்வினை தனக்கான இறைவனது பரிசு என்பதை உணர்ந்து கொஞ்ச நாள் வாழும் வாழ்வில் தீமையை அகற்றி நன்மையை விதைத்து முழுநம்பிக்கையுடன் அவனது வாழ்வினை அவனுக்காய் அவன் வாழ்வதே சரியாகும்.  தன்னம்பிக்கை ஒன்று போதும் ஒருவனது வாழ்வினை அழகாக்க, வாழ்ந்துபார் வானை வசப்படுத்தும் நம்பிக்கையுடன் அதுவே சரியானதாய் இருக்கும்.

– கௌதமன்

குருதிக் கொடை செய்வீர்

க. தமிழ்செல்வி

தானம் கற்று வருவதில்லை

தானாய் தோன்றும் தர்மச் சிந்தை…!

விபத்தின் காயத்தின் வலி

கண்ணீருக்கே தெரிகின்றது…!

வடிந்த குருதித் துளிகளின்

மகத்துவம் மறைகின்றது…!

இரத்தபந்தம் சாதி மதத்தை முன்வைக்கும்

குருதிக் கொடை சாதி மதத்தை பின்வைக்கும்…!

கொடுக்க கொடுக்க நம்மிடம்

கொழிக்கும் செல்வமே குருதி…!

அக்குருதியை விலைபேசி

வியாபாரம் செய்யாதீர்..!

உடல் உறுப்பு தானம்

இறந்த பின்னும் வாழ்வது..!

ஆனால் வாழும் போது

மனிதாய் வாழ்வது குருதிக்கொடை..!

மற்றாருக்கு வாழ்வு தந்து

உன் வாழ்வை செழிப்படைய வை…!

மனிதா விழித்திரு…!

வே. ரத்னா

தமிழ்த்துறை

சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும்…!

சூழ்நிலையை உருவாக்கிட வேண்டும்…!

மரத்தை நற்றிட வேண்டும்…!

மழையைப் பெற்றிட வேண்டும்…!

நீர் வளத்தைப் பெருக்கிட வேண்டும்…!

நிலத்தை பாதுகாத்திட வேண்டும்…!

கழிவுகளை நீக்கிட வேண்டும்…!

நல்கனிகளைப் பறித்திட வேண்டும்…!

சுகாதாரத்தைப் பெற்றிட வேண்டும்…!

மாசுபாடுகயைத் தடுத்திட வேண்டும்…!

தூய்மைப் படைத்திட வேண்டும்…!

மனிதா நீ திருந்திட வேண்டும்…!

உத்தம யோகா

மஞ்சுளா. ச

தமிழ்த்துறை

புறத்தை மெருகேற்றுவதை விட

அகத்தை தூய்மை செய்…!

உடலை வளைப்பதல்ல

ஆன்ம அமைதியை பெறுவது…!

வாழ்க்கை செழிப்படைய வேண்டுமெனில்

உள்ளம் களிப்படைய வேண்டும்…!

பணத்தால் பெற முடியாதது

மனதால் இன்பம் அடைவது…!

வாழ்வை வளமாக்கும்

ஆயுளை அதிகரிக்கும்…!

ஆற்றல்கள் ஒரு சேர

பலப்படுத்தும் ஒரே கலை…!

எல்லையில்லா இன்பம்

கொள்ளை கொள்ள ஆசை

மனதின் அமைதி

மாற்றத்தின் உறுதி..!

மாற்றத்தின் ஊற்று மே

கௌதம் தர்மா

தை பிறந்தால் வழி பிறக்கும்

விவசாயிக்கு

மே பிறந்தால் மாற்றம் பிறக்கும்

மாணவனுக்கு

மாற்றங்கள் ஒன்று தான் மாறாதது என்று மார்க்ஸ் உரைத்தது போல  பல்வேறு மாற்றங்களை நம் மாணவ சமுதாயத்திற்கு அள்ளித்தருகின்ற மாதங்களில் முதலிடம் பெறுவது இந்த மே மாதம் …

ஆம் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்து அடுத்து  கல்லூரியில் சேரபோகும் மாதமும் இந்த மே மாதம் தான்

கல்லூரிகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புகள் எதுவாயினும் நிறைவடைந்து உண்மையான இந்த போப்புகள் நிறைந்த உலகத்தை எதிர்கொள்ளத் தொடங்கும் மாதமும் இந்த மே தான்…

நம் தமிழக இளைய சமுதாயம் அதிக வழிகாடஙடுதலையும் அரவணைப்பும் அன்பும் தேவைப்படுகின்ற காலகட்டம். ஏனென்றால் அவர்கள் விரக்தியின் ஏமாற்றம் வெறுமை தனிமை போன்றவற்றை உணரும் காலக்கட்டம் ஆகையால் உளவியல் ரீதியாக  தளர்ச்சியடையும் இளைய சமுதாயத்தை தன்னம்பிக்கை என்ற மூன்றாவது கையாக நாம் செயல்பட வேண்டிய தவிர்க்க இயலாத அவசியமுள்ளது.

நம் வீட்டுப்பிள்ளைகள் நம்மை தவிர எதையும் அறியா டின்.ஏஜ்  குழந்தைகள் அவர்கள் பெரும்பாலும் தங்களை தன்னை விட நிறத்தில் அதிகமானவர்களோடும் பணத்தில்  அதிகமானவர்களோடும் அவர்களே ஒப்பிட்டு தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ள தருணத்தில் நாமே அவர்களை மற்றொருவரின் மதிப்பெண்களுடன் ஒப்பிட்டு பாயப்படுத்தக்கூடாது.

அதே மாதிரி பட்டப்படிப்பு முடிந்த வேலைக்கு செல்லாத இளைஞனிடம் அவன் நண்பன் அல்லது உறவினர் வேலைக்கு சென்றுவிட்டார்கள் என்ற ஒப்பிடுதலும் அறவே ஆகாது. ஆங்கிலத்ல் சொல்ல வேண்டும் என்றால் இந்த கம்பேரிசன். இப்பொழுது இருக்கும் இளைய சமுதாயத்திற்கு அறவே  ஆகாத ஒவ்வாமை .

அதேபோல ஒவ்வொரு குழந்தைக்கும் தனக்கென உள்ளார்ந்த திறமைகள் ஏதேனும் ஒன்று இருக்கும் அதனை நாம் வளர்க்க வேண்டாம். ஆனால் அதை மண்ணில் குழி தோண்டி புதைக்காமல் இருந்தாலே போதும் அவர்கள் நாம் நினைக்கும் மாதிரி இரண்டே நாள்களில் ஏ.ஆர்.ரகுமான் ஆகிவிட முடியாது.

நம் குழந்தைகள் கதை எழுதுவது கவிதை எழுதுவது செடி வளர்ப்பது பறவை விலங்குகள் மீதான பாசம் நாம் அதையெல்லாம் என்றுமே ஊக்குவிப்பதும் இல்லை ஏனென்றால் நாம் அனைத்தையுமே பணத்துடனே முடிச்சுப் போட்டு விடுகிறோம்.

நம் குழந்தைகள் என்ன செய்தாலும் நாம் நினைப்பது அதனால் என்ன லாபம்? அடுத்ததாக நம் குழந்தைகளை நாம் அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனைகளை சந்தித்தால் அல்லது வேறு காரணமாக இருந்தாலும் அதனை நம் பிள்ளைகளிடம் வெளிப்படுத்துவது மிகவும் தவறான ஒன்று அவர்களை கண்டபடி திட்டுவது செத்து தொலை என்பது போன்ற வார்த்தை குழந்தைகளின் மனதில் பதிந்து நாம் தானே அவர்களுக்கு உலகம் எனவே உலகமே இருட்டியது போல் உணர்ந்து தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

குறிப்பாக இந்த தேர்வு நேரம் முடிவுகளை வைத்து பல தற்கொலைகள் செய்தி வருடம் வருடம் வெளிவந்து கொண்டுதான் உள்ளது. ஒரு எழுத்துத் தேர்வு விடும் என்று நினைக்கிறீர்களா?

குறிப்பாக (டினேஜ்) பதின் பருவத்து மாணவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது தோழனைப் போன்ற பெற்றோர்கள். அவர்கள் மனம்விட்டு ஆறுதலாக பேசுவதற்கும் அரவணைப்பதற்கும் நல்ல நண்பர்கள் வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. என்ன தான் ஆரோக்கியமான உணவுகள் கொடுத்தாலும் அவர்களின் மனம் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதா? என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்களின் தன்னம்பிக்கை ஊட்டுவதற்கு ஆயிரமாயிரம் கட்டுரை வரலாம். ஆனால் அதனை மேம்படுத்துவதில் நமக்கு அதாவது சமூகம் பெற்றோர்கள் என அனைவருக்கும் பங்கு உண்டு என்று நம்புகிறேன்.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்

மண்ணில் பிறக்கையிலே

அவர் தன்னம்பிக்கை சார்ந்த மனிதராவதும்

அவரவர் பெற்றோர் வளர்ப்பிலே….

வெல்வோம் வென்று காட்டுவோம்

‘பெண்கள் கோழைகளும் இல்லை, வலிமை குறைந்தவர்களும் இல்லை’ என்று பெரும் நம்பிக்கை, பல எதிர்பார்ப்புகள் பெரும் கனவோடு ஊலவரும் நம் நாட்டின் மாபெரும் சிலம்பு வீராங்கணை அலமேலுவோடு நமது சிறு பயணம் துவங்குகின்றது.

பலகலை வாழும் திருவள்ளூரில் கும்மிடிபூண்டியில் நடுத்தரவர்க்கத்தில் 1995 ல் பிறந்தேன் பழ வியாபாரம் செய்யும் நாகராஜ் மற்றும் இலட்சுமி தம்பதியனருக்கு பிறந்த நான் இன்று சிலம்பத்தில் புகழ் பெற்றேன். எனது குடும்பம் இது வரை எனக்கு உதவியாக மட்டுமே இருந்தனர். நான் எதனை செய்ய எண்ணினாலும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்கள் எனது விருப்பு வெறுப்புகளை மதித்து என்னை ஊக்குவித்தனர். பெண்கள் அவர்களின் பலவீனமாய் எண்ணும் வலிமை அவர்கள் மனம் மட்டுமே! அவர்கள் பெரும் வலிமை கொண்டவர்கள் நமது தமிழ்நாட்டு பாரம்பரிய கலைகளை கற்றவர்கள் அனைவருமே வலிமை படைத்தவர்கள் தான்.

பாரம்பரிய கலைகள் அழிந்து வருகின்றது. என் மனம் இதனை எண்ணும் கணம் வருந்துகின்றது. நான் ஒன்பதாம் படிக்கும் போது சிலம்பை கையில் எடுத்தேன். இன்று என் குடும்பத்தில் நான் மட்டுமே விளையாட்டு துறையில் இருகின்றேன். என் குடும்பத்தை தவிர எனது உறவினர்கள் அனைவரும் எனது விருப்பதிற்கு மதிப்பளிக்கவில்லை. எதற்கு பெண்களுக்கு விளையாட்டு என்ற வினாக்கள் பல என்னை நோக்கி பயணித்து கொண்டே இருந்தன. பலர் என்னை விமர்சித்தனர். ஆனால் முயன்று நான் வெல்ல நினைத்தேன். எனக்கு பல விதங்களில் உதவியது என் குருநாதர் ஹரிஹரன் மாஸ்டர் மட்டும் தான்.

என்னை இன்று அவினாசிலிங்கம் பல்துறை கழகத்தில் பகிழ உதவியது நான் பயிற்சி பெற்ற ஹரிஹரன் ஐயாவும், அவரும் சந்தியராஜ் நடத்தி வரும் சிலம்பு கிளப்பும் இணைந்து தான். இன்று என்னை அவினாசிலிங்கம் கல்லூரி பல போட்டிகளுக்கு அவர்கள் செலவில் அனுப்பியது. கடந்த 2014ஆம் ஆண்டில் மலேசியாவில் நடந்த விளையாட்டு விழாவில் இந்தியாவின் சார்பில், என்னை அவர்கள் மதித்தும், எனது திறனை மதித்தும் அனுப்பினர். இந்தியாவின் சார்ப்பில் அனைத்து சிலம்பு போட்டிகளிலும் நான் மட்டுமே பங்கு கொண்டேன்.. இருபது நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நான் இந்தியாவிற்காக 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் முதலிய பதக்கங்களை வென்றேன்.

பதினொரு ஆண்டுகள் நான் சிலம்பு சுழற்றிய நாட்களில் பலர் எனக்கு உதவினர். உதவி இருந்தால் தான் முன்னேற இயலும் என்பதல்ல, உதவி இருந்தால் பலவற்றை சாதிக்கலாம். தமிழ்நாட்டின் தற்காப்பு கலையான  சிலம்பம் தான் என்னுடைய பெரிய இலட்சியம்.

அன்று நடந்த அந்த போராட்டத்தில் நான் பெருமை கொண்டேன். இந்தியாவிற்காக எனது நாட்டின் பாரம்பாரிய கலையை கற்று இன்று பல நாடுகளுக்கு முன்பு வென்று காட்டி மனம் மகிழ்ந்தேன்.. என்றுமே நான் எனது குரு ஹரிஹரனிடம் வாழ்த்து பெற்றே சிலம்பத்தை தொடுவேன். ஆனால் மலேசியாவில் அவர் இன்றி மனம் வருந்தினேன்.

என்னுடைய சிலம்பு பணியை தொடர்ந்த அந்த நாட்களில் நான் ஏறிய முதல் மேடை, இந்திய அளவில் நடந்தது. அதில் முதல் முறையாக தோல்வி கண்டேன்.  முதல் முறை மட்டும் இல்லாது இறுதி முறையாக நான் கண்ட தோல்வியும் அதுவே. கடந்த பதினொரு வருடங்களில் என்னை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது அந்த தோல்வியும் தான். அத்தோல்வி என்னை விமர்சிப்பவர்களுக்கு பெரும் எடுகோளாய் அமைந்தது. வீறுகொண்டு அடுத்தடுத்து நான் வென்றேன்.

சிலம்பு விளையாட்டு ஒலும்பிக்கில் இடம்  பெறாததால் இந்தியாவில் அதிக வாய்ப்பு கிடைப்பது இல்லை. அதற்காக அங்கிகாரத்தை தர மறுகின்றனர். இந்தியாவின் பாரம்பரிய வீரவிளையாட்டிற்கு அங்கிகாரம் கிடைக்காதது தான் பலருக்கு வேதனையாக உள்ளது. எனது வெற்றிக்கு முதல் காரணம் சிலம்பு விளையாட்டிற்காக துவங்கப்பட்ட கிளப் தான். எனது வீட்டிலிருந்து பயிற்சி மையத்திற்கு பதினைந்து நிமிட அவகாசம் உள்ளது. இந்த பயணத்தையும் கூட அவர்கள், கிளப் செலவில் ஏற்று கொண்டனர். எங்கு விளையாட்டு நடந்தாலும் என்னை அங்கு அனுப்ப இவர்கள் தயங்கியதே  இல்லை.

மலேசியாவில் நடந்த போட்டிக்கு பின் பலரும் நேரில் பாராட்டினர். தொலைகாட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் நேர்கானலை நடத்தினர். இதனை தொடர்ந்து நான் பல வெற்றிகளை பெற்றேன். இதுவரை 15 தங்கம், 5 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களும் ஒரு விருதும் பெற்றுள்ளேன்.

என்னை ஊக்குவித்து என் திறனை கண்டறிந்து பலரின் விமர்சனங்களை தாண்டி முன்னேற்றிய என் தாயை என் வாழ்நாட்களில் என்றுமே மறக்க இயலாது. சில வேளைகளில் என் தந்தை என்னை திட்டியுள்ளார். பல இடங்களுக்கு செல்ல தடையும் விதித்துள்ளார். ஆனால் எனது தாய் எக்கணமும் இதற்காக திட்டியது இல்லை. நான் எடுக்கும் முடிவுகள் சரியானதாகவும், நல்பாதையில் பயணிப்பதாகவும் அமையும் என்று மீது நம்பிக்கை கொண்டவர். நேர்வழியில் அடிபிறலாது நடப்பேன் என்று என்னை நம்பி எங்கும் பயணிக்க அனுமதிப்பார்.

என்னை எவ்வித போட்டிகளையும் தோல்வி காணாதவாறும், போட்டிகளை தவறவிடாதவாறும் காத்த என்  சகோதரன் கனேஷ். அவன் மட்டுமே என்னை எக்களத்திற்கும் அழைத்து சென்றவன். என்னை என் தாயுடன் இணைந்து ஊக்கமளித்தவன் என் சகோதரன் மட்டுமே! எனது செலவுகளை ஏற்று எனக்கு உதவி, என்னை ஊக்குவித்து நடைபகிலவைத்தவன். எனக்கு ஒரு துணையாய், என் உணர்வுகளை மதிக்கும் சகோதரனாய் வாழந்தவன். அவனை ஒரு கணம் கூட மறவ மாட்டேன்.

எனக்கு ஆசிரியராய், என் குருவாய், என் நலம்விரும்பியாய் இருந்தவர் மாஸ்டர் ஹரிஹரன் ஐயா மட்டுமே என் வாழ்நாட்களில் மட்டும் இல்லை என் பெயர் நிலைக்கும் வரை அவரை நான் மறக்கவே மாட்டேன். நான் இன்று அவினாசிலிங்கம் பல்துறை கழகத்திற்கு உடற்கல்வி துறை படிக்க வந்தபின்பும் கூட என் குருவிடம் தொடர்பு கொண்டு எங்கு சென்றாலும் ஆலோசனை கேட்பேன்.  நான் எவ்வெற்றி பெற்றாலும் வராத மகிழ்வு அவர் கூறும் ‘வாழ்த்துக்கள்’ என்ற மொழியில் வரும். அவரின் அந்த வார்த்தைகாக நான் தவமிருப்பேன்.

பலதடைகளை தாண்டி பலதரப்பட்ட மக்களை சந்தித்து பலவேறுப்பட்ட சூழல்களை கடந்து தான் வெற்றியை பறிக்க இயலும். பெண்களுக்கு எதற்கு விளையாட்டு படிப்பு மட்டும் போதும் என்று எண்ணுதல் கூடாது. விளையாட்டில் சாதிப்பவர்கள் மட்டும் தான் படிப்பிலும் பல படிகளை  தாண்டுகின்றனர். எவருக்கு எத்துறையில் திறமை உள்ளதோ அவர்களை அத்துறையில் செயல்படுத்த விடுங்கள். அவர்கள் முன்னேறுவர். சிலம்பம், இல்லை எந்த விளையாட்டில் அவர்களுக்கு ஆர்வம் உள்ளதோ அவர்களை அதில் ஈடுபடுத்துங்கள். அப்பொழுது தான் அவர்கள் முன்னேறுவர். பல படிகளை தாண்டி சாதணை புரிவர்.

 

முயன்றேன் வென்றேன்

‘தன் உழைப்பை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அர்ப்பணிக்காது நம் நாட்டின் வளர்ச்சிக்கு அர்ப்பணிக்க தயாராக இருங்கள் இளைஞர்களே!’ என்ற பெரும் எதிர்பார்போடும், கனவோடும் வாழும் நமது இளம் அறிவியலாளன் இராகுலுடன் ஒரு சந்திப்பு.

இயற்கை வளம் கொழிக்கும் பொள்ளாச்சியில் ஓடியகுளம் என்ற ஊரில் பிறந்தேன். நடுத்தர குடும்ப சூழ்நிலையில் தான் ஜீலை மாதம் 1996 ஆம் ஆண்டு பதிமூன்றாம் தேதி எனது வாழ்வே துவங்கியது. அரசு பணியாளராய் மின்துறையில் பணிபுரியும் என் தந்தை மந்தராச்சலதிற்கு நான் பொறியியல் துறையில் பெரும் புகழ் பெறவேண்டும் என்பது தான் விருப்பம். பொறியியல் துறையில் சாதனை புரிய வேண்டும் என்பதை விட அதில் பணிபுரிந்து திருமணம் செய்து சாதாரண குடும்ப வாழ்வை வாழ வேண்டும் என்று தான் அவர் பெரிதும் விரும்பினார்.

எனது சிறு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிய தாய் மஞ்சுளாதேவி வீட்டினை திறம் பட நடத்தி வந்தார்.  ஆர்.கே.ஆர். கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு வரை படித்து வந்தேன். எனக்கு மேற்கொண்டு படிக்க விரும்பம் இன்றி டிப்ளமோ பொறியியல் படித்தேன். படிப்பை தொடர்ந்த முதலாம் ஆண்டிலேயே 2012-இல் ஈழத்தமிழர் படுகொலையை எதிர்த்து பள்ளி கல்லூரி மாணகர்கள் போராட்டத்தை துவங்கவே நானும் பங்கேற்றேன்.

ஈழத்தமிழர்களுக்காக போராட எண்ணும் பொழுது தான் நான் தமிழ் மீது ஆர்வம் கொண்டேன். அன்று தமிழை படிக்கும் பொழுது தான் தமிழில் பலதரப்பட்ட கருத்துகள் நிழவுவதை அறிந்து அன்று முதல் தான் என்னுடைய வாழ்வை துவங்கினேன். அதுவரை படிக்கும் மாணவனாக மட்டுமே பயணத்தை தொடர்ந்திருந்தேன். டிப்ளமோ முடிக்கும் பொழுது என்னுடைய ஆய்வாய் எனது websiteயை, சமர்பிக்கவே எண்ணினேன். ஆனால் குறுப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாததால் வேறு ஆய்வை செய்து முடிக்க, கல்லூரி முடித்த அடுத்த மாதத்தில் எனது ஆய்வை  நிறைவு செய்தேன்.

நான் முடித்த ஆய்வினையே மேலும் தொடர எண்ணி எனது இல்லத்தில் கூறினேன். எனது வீட்டினருக்கு அதனை புரிய வைக்கவே எனக்கு தண்ணீர் பட்ட பாடாய் மறைய, பெரும் சிரமம் கொண்டு எனது இல்லத்திற்கு புரியவைத்தேன். எனது ஆய்வான இந்திய சுயாதீன கண்டுபிடிப்பு வெளியீட்டாளர் (Indian Independent Invention Publisher)  என்பதை எவருமே ஏற்காத ஒன்றாய் போனது. இது இந்தியாவில் எங்குமே இல்லை எனும் போது எனது இல்லத்தினர் ஏற்கவே இல்லை. மேற்கொண்டு பொறியியல் துறையை தொடர கூறவே நான் ஒரு வருடம் வாய்ப்பு கேட்டு  கோவைக்கு வருகை புரிந்தேன். முதல் முறை கோவைக்கு வந்தேன். கணினி மையங்களில் பணிபுரிந்தேன். Date entry, computer service, coding போன்ற பல வேலைகளை செய்தேன். நான் சேர்த்த பணத்தை கொண்டு எனது ஆய்வினையும் அப்பிளிகேசனையும் வெளியிட்டேன்.

நானும் எனது குழுவும் இது தமிழ் நாட்டோடு நிற்க கூடாது என்று பல கண்டுபிடிப்பாளர்களை தேடி சென்றோம். இதன் மூலம் முதல் கண்டுபிடிப்பாளர்களாக சிபி எனும் திருப்பூரை சேர்ந்தவர் நெகிழி இல்லா திருப்பூர் குழுவிலிருந்து சந்தித்தார். அவர் மக்கும் நெகிழியை வெளியிட்டோம். அடுத்து பெண்களின் மாதவிடாய் சமயங்களில் அவர்கள் உபயோகிக்கும் நப்கின்களை இயற்கை முறையில் தயாரிக்க திட்டம் வகுத்தோம். அதற்கு தமிழ்நாட்டின் பல காலங்களை தொட்டு பயணிக்க விரும்பினோம்.  7ஆம் நூற்றாண்டுகளுக்கு பிறகு காட்டனை தான் உபயோகித்தனர் என்பதை சான்றோடு அறிந்து கொண்டோம். புளிச்சக்கீரை என்னும் மூளிகையை தான் அவர்கள் உபயோகித்தனர்.  புளிச்சகீரையை கயிறு திரிக்க உபயோகித்தனர் நமது முன்னோர்கள். இந்த கீரை மற்ற கீரைகளை விட நுண்ணுயிர் கிறுமிகளை கொல்லும் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது. இதனை பெண்களில் நலனுக்காக தயாரிக்கலாம் என்று முயன்று வருகின்றோம்.

எங்களது இந்த கண்டுபிடிப்புகள் மூலம் பலரை பலருக்கு அறிமுகப்படுத்த எண்ணினோம். பலரும் வாய்ப்புகள் அற்று சிரமம் கொண்டு முன்னேற முடியாமல் தவிக்கின்றனர். இதனால் அவர்களை முன்னேற்ற எங்களது இந்த ஆய்வை பயன்படுத்துகின்றோம். பல கண்டுபிடிப்பாளர்களை கண்டு அவர்களை முன்னேற்ற நாங்கள் தயாராக இருகின்றோம். வேலையில்லா நிலையை மாற்ற வேண்டும் என்று எண்ணினோம். 2020இல் வேலையில்லா நிலை பெரிதும் நீடிக்கும். இன்றைய சூழ்நிலைகளில் விவசாயிகள், நடுத்தரவர்க்கத்தின் குழந்தைகள் பலரும் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். பலருக்கு வாய்ப்பு தர எண்ணி ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று இதனை பற்றி எடுத்துரைக்க விரும்பினோம்.

பல கல்லூரிகளுக்கு சென்று சிறப்பு வகுப்புகள் மூலம் பலரை ஊக்குவித்தோம். இன்றைய சூழலில் 200 ஆய்வுகள் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றன. பலரை ஊக்குவிக்கும் பொருட்டு நடக்கும் இந்த போராட்டத்தில். ஆட்டோ மோபைல் என்னும் வேலையை தொடர எண்ணினோம். புதுவகையாக இருசக்கர வாகனத்தை வடிவமைக்கும் பணிகளை தொடர்ந்திருக்கின்றோம். 300 யூனிட் தரும் பொழுது 400கிமீ  தூரம் எளிதாகவும், 80 கிமீ ஒரு மணி காலம் வரை பயணிக்கும்.

இந்த ஆய்வை தொடர எங்களுக்கு பொருளாதாரம் மிகவும் அவசியமாக தேவைபடவே பலரை நாடினோம். பொருட்களை கண்டுபிடிக்கவும், அதனை வெளியிடவும், மக்களிடம் சோர்க்கவும், பொருளைதாரம் ஆவசியமானது. இதற்கான எவ்வித உதவியும் செய்ய எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை. பலரும் அழைபிதழ்களை வாங்கவும் இல்லை, அவர்கள் வாயில்களை தொடவும் விடவில்லை. வங்கிகளில் பணம் தர சில நிறுவணங்கள் இடையூறாய் நின்று உதவ மறுக்க காரணமாய் நின்றன. சுதந்திரமான நடவெடிக்கைகளை எடுக்கும் பொழுது எவருக்கும் அதன் உட்கருத்து புரிவதில்லை. முதலில் மறுத்த எங்களது இல்லங்களும் எங்களுக்கு உதவின. என் பொற்றோரும் நிறுவனத்தில் பணிபுரிவதாய் கூறி உறவினர்கள் மூலம் இன்று உதவுகின்றனர்.

பலநிறுவனங்கள் தயாரிக்கும் நப்கின்களின் விற்பனைகளுக்கு தடை ஏற்படும் என்று எங்களுக்கு பல இன்னங்களை தர தயாராய் நின்றன. இதனை எல்லாம் கடந்து தான் நானும் எங்கள் குழுவும் முயன்று பலவற்றை வெளிகொணர முயன்று வருகின்றோம். இந்த பயணத்தின் பொழுது என்னுடைய பள்ளியில் பயின்ற எங்களது அண்ணா கனகராஜ் என்பவர் பாண்டிசேரி பல்கலைக்கழகத்தில் ஆய்வுதுறையில் பணி புரிகின்றார். அந்த பல்கலைக்கழக்கதிற்குள் மற்றவர்களை அனுமதிக்காத சூழலில் பணியே தடை ஏற்படினும் எங்களின் பணிக்காக உதவினார். அவரது தலைமையில் ஆய்வினை அவரது பல்கலைகழகத்தில் ஆய்வாளர்களை தங்க வைத்து ஆய்வினை முடித்து கொடுத்தார். சீ.வி.முனிஷ் என்னும் பலவிருதுகளின் சொந்தகாரர் எங்களுக்கு உதவினார். இவர்களை நான் மட்டுமின்றி எனது குழுவும் என்றுமே மாறவாதிருப்போம்.

எங்களது பணியை நம்பி முதன் முதலில் அவர்களது படைப்பை கொடுத்த சிபியும், நப்கின் தயாரிக்க உதவிய கௌத்தம், இவர்கள் சுயநலமற்ற நபர்களாக எங்களுக்கு உதவினர். எங்களது பெறும் வெற்றி என்றால் எங்களை அவர்கள் நுழைவாயிலில் கூட அனுமதிக்காத பல நிறுவனங்கள் எங்களை இன்று அழைத்து அவர்களின் வேலையாட்களுக்கு சிறப்பு வகுப்புகளை எடுக்க பணிவதோ!! சில கல்லூரிகளில் நிராகரிக்கப்பட்ட எங்களது திறமைகளை அவர்கள் கல்லூரி மாணகர்கள் அறிய பல வகுப்புகளை எடுக்க அழைத்தனர். இதன் மூலம் வரும் பணத்தை நாங்கள் ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைக்க செலவளிக்கின்றோம். திருப்பூரில் பகிலும் ஒரு பெண்ணை இன்று எங்கள் சார்பில் படிக்க வைக்கின்றோம்.

வளர்ந்து நிற்கும் குடும்பங்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றனர். ஆனால் நடுத்தரமும் ஏழைகளும் உயர்வதில்லை. இதனால்  பலரை முன்னேற்ற பலரை சார்திருப்பவர்களை வெளியேடுப்பதே எங்களது குறிக்கோளாக உள்ளது.