Home » Online News (Page 3)

திறமையே பெருமை தரும்

மெர்வின்

நம்மிடம் இருக்கும் திறமை, செயல்திறன், படைப்பாற்றல், சிந்திக்கும் சக்தி ஆகியவை சேர்ந்ததினால் தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழ முடியும்.

நம் வாழ்க்கை என்னும் நல்ல நிலத்தைப் பெற்று இருப்பதினால், திறமை என்ற பயிர் பசுமையாக விளைகிறது. அந்தப் பயிரைப் பாதுகாத்து உரம் போட்டு வளர்க்க வேண்டும்.

அதிலேயே கவனம் செலுத்தி, அல்லும் பகலும் பாடுபட்டால் அருமையான அறுவடை செய்ய முடியும்.

இது போல நாமும் திறமையைப் பெற்றிருப்பதினால் அதனை சிறந்த முறையில் பயன்படுத்தி, செம்மை செயல்படும் போது தான் வெற்றியைப் பெற இயலும்.

நம்மிடமுள்ள திறமையை தகுந்த முறையில் ஒழுங்காகவும், நேர்மையாகவும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை அறித்து முழுமையாக வெளிப்படுத்தி  மேன்மைப்படுத்துவதில் தான் வெற்றியே அடங்கியிருக்கிறது.

நம்முடைய வாழ்க்கை ஓடும் நீராக இருக்க வேண்டும். அந்த நீர் பலருக்கும் பயன்படுத்தும் படியாக இருக்க வேண்டும்.

காலத்திற்கு ஏற்றபடி திறமையை உயர்த்திக் கொண்டே செல்லும் பொழுது தான் வெற்றியைக் குவிக்க முடியும். நல்ல திறமைக்கு எப்போதும் சந்தர்ப்பம் காத்துக் கொண்டேயி ருக்கும். நேரமும் ஆற்றலும் இருக்கும் போதே அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் வசதியாகவும், வளமாகவும் வாழ, திறமையையும், அறிவையும் பயன்படுத்த வேண்டும்.  வீசும் காற்றும், எழும் அலையும் எப்போதும் திறமையான மாலுமியின் பக்கமே இருக்கும்.

வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் எல்லோரும் தங்களுடைய திறமையிலேயே உருவானவர்கள் தான். வெற்றியின் திறவுகோல் திறமையே, இதனை பயன்படுத்தாவிட்டால், எந்த சந்தர்ப்பம் வந்து காத்துக் கொண்டிருந்தாலும் பயன் இல்லாமல் போய் விடும்.

திறமையை வளர்த்துக் கொண்டால் யாராக இருந்தாலும் நிச்சயமாக  பேரும் புகழும் செல்வாக்கும் பெற முடியும். இதற்கு  சரியான எடுத்துக்காட்டு ஓட்டல் அதிபர் ஓபராய், பள்ளிப்படிப்பு முடித்ததும் செருப்பு தைக்கும்  நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார்.

அதன் பிறகு சிம்லாவில் உள்ள ஓட்டல் பணியாளரானார். தானே ஒரு ஓட்டலை தொடங்கினார். ஓட்டன் முன்னேற்றத்திற்காக இரவும் பகலும் பாடுப்பட்டார்.

அன்பான உபசரிப்பும் பண்பான  வரவேற்பும் பலனாகக் கவர்ந்தது. அதன் பயன் அவருடைய ஓட்டலுக்கு வருபவர்கள் அதிகமானார்கள்.

ஓட்டலே தன்னுடைய முழுத்திறமையையும் செழுத்தி மென்மேலும் விருத்திச் செய்தார். ஓட்டலை விரிவுப்படுத்துவதிலேயே அல்லும் பகலும் செலவிட்டார்.

அதனுடைய பயன்  என்னவென்றால் இந்தியாவிலும் அயல்நாட்டிலும் பல ஓட்டல்களை திறம்பட நடத்திக் காட்டினார்.

மனோத்தத்துவத்துறையில் வல்வரான ஆல்பர்ட் அட்லர் சிறுவனாக இருக்கும் பொழுது, தனக்கு கணக்குப் பாடம் வராது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

வகுப்பை கவனிக்காமல் வெளியே பார்த்துக்  கொண்டிருந்தார். அச்சமயத்தில் கணித ஆசிரியர் ஒரு கணக்கைக் கொடுத்து போட சொன்னார். அவர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் அவரால் அக்கணக்கை போட வழித் தெரியவில்லை. உடனே ஆசிரியர் உனக்கு கணக்கு வராது நீ ஒரு மடையன் என்று கூறினார். இது அட்லர் மனதில் பதியவில்லை. எப்படியும் கணக்கு பாடத்தில் முதன்மை  பெற வேண்டும் என்று முடிவெடுத்து திறமையை வளர்த்துக் கொண்டார்.

ஒரு நாள் ஆசிரியர் கரும்பலகையில் கணக்கை எழுதினார். அதை எப்படிப் போடப் வேண்டும் என்று வகுப்பிருந்த எந்த மாணவர்களுக்கும் போட தெரியவில்லை. ஆனால் அட்லர் என்னால் இக்கணக்கை நன்றாகப் போட முடியும் என்று நம்பினார். உடனே எழுந்து நின்று நான் இந்தக்கணக்கை போட்டு காட்டுகிறேன் என்றார்.

இதைக் கேட்ட வகுப்பில் இருந்த அத்துனை மாணவர்களும் சிரித்தார்கள்.  இவனாவது கணக்கைப் போடுவதாவது, இவனுக்கு தான் கணக்கே தெரியாதே என்று இலக்காரமாய் சிரித்தார்கள்.

அட்லருக்கு வேகம் வந்துவிட்டது. எழுந்து போய் கரும்பலகையில் கணக்கைச் சரியாகப் போட்டு காண்பித்தார்.  எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். அட்லர் தனக்கு கணக்கு போடும் அளவிற்கு திறமை வந்துவிட்டது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை  உறுதியாக நம்பினார்.  அதுவே அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது.

எந்த வயதிலும் தன்னுடைய திறமையை வளர்த்தக் கொள்ள முடியும், திறமையின் மேன்மைக்கு வயது ஒரு தடையில்லை. இளமையிலும் ஏற்றம் பெற முடியும், முதுமையிலும் முன்னேற முடியும், திறமையை வளர்த்துக் கொள்வதில் வயது வித்தியாசம் எதுவும் இல்லை.

நம்முடைய திறமையை வளர்த்துக்  கொண்டு செயல்பட்டால், நிச்சயமாக வெற்றியுடன் வாழ முடியும்.

எண்ணியதை செய்யுங்கள்

கோவை. சரவண பிரகாஷ்

என்றாவது கொலை  செய்வதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? நெஞ்சம் படபடக்காமல்,கைகள் தளர்ந்து போகாமல் கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு கொலை   செய்யும் கலையை உங்களுக்கு சொல்லித்தரப்போகிறேன்.

தினம் தினம் கண்ணனுக்குத் தெரிந்த மனிதர்கள் பலரை கொலை செய்ய வேண்டும் என உங்கள் மனம் குழம்பி இருக்கலாம். உங்களோடு வாழ்கின்ற கண்ணனுக்குத் தெரியாத ஒருவனை நீங்கள் கொலை செய்ய வேண்டும்.

அதிசயம் என்னவென்றால் இந்தச் செயலுக்கு சட்ட அத்தியாயங்களில் தண்டனைகள் குறிப்பிடவில்லை, மாறாக உலகம் உங்களுக்கு பூமாலை சூடலாம். அந்த “ஒருவனை” அறிந்துகொள்ள வேண்டுமெனில் என் கடைசி வரிகளுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டும்.

மனிதா! நீ எச்சில் செய்த தேநீர் ஆறி போவதற்குள் உன்னோடு சில சூடான விவாதங்கள் செய்ய எத்தனிக்கிறேன்.

உலக வாழ்க்கை என்னும் புத்தகத்தில் பிறப்பு, வாழ்வு, இறப்பு என்பவை சொல்லப்படாத சூத்திரங்களக இருக்கும் பொழுது, வரலாற்று புத்தகத்தில் வெகுசிலரே இடம் பிடிக்க முடிகிறது. இங்கே சிலரின்  கனவுகள் மட்டுமே நிஜமாகிறது, பல கனவுகள் நினைவாகின்றன!

அச்சம், நாணம், தோல்வி, குடும்ப சூழல்,ச முதாயம் இவற்றுள் ஒன்று மேலே குறிப்பிட்டதற்கு நிச்சயக்கரணமாக இருக்கலாம்.

எப்போது எங்கயோ தோற்று விட்டோம் என்பதற்காக இப்போது முகம் தெரியாத தோல்விகளிடம் தினம் தினம் தோற்று கொண்டு பத்தோடு பதினொன்றாக வாழ்வதில் அர்த்தம் என்ன?

இந்த உலக வட்டத்தையே வெற்றி கொள்ள பிறந்தவர்கள் நீங்கள், குறிகிய வட்டத்திற்குள் உங்களை நீங்களே ஏன் சுருக்கி கொண்டீர்கள்?

வரலாறு உங்கள்  பெயரை குறிப்பெடுக்க காத்திருக்கிறது, ஆனால் நீங்கள் இன்னும் கவலைகளிடம் மண்டியிட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பது தான் என் ஆதங்கம்.

பூமாலைகள் கிடைப்பதற்கு தாமதமாகிற வேளையில்  கல்லாலான மாலையை ஏற்றுக்கொளவது  எப்படி சரியாகும்?

நாளைய உலகின் வழிகாட்டி நீ,வலுவிழந்து கிடக்கிறாய்!

போராளி நீ,போருக்கு பயந்து பொய் கிடக்கிறாய் ?

சூரியனே !உன்னை பாய் என்று உலகம் சொன்னதால் நீ சுருண்டு போய் கிடக்கிறாய்!

உலகத்தின் பழிச்சொல்லுக்கு செவிசாய்த்து,உன்  கனவுகளை மறுதலித்து  போயிருக்கிறாய்!

உன்னை எழ விடமால் சமுதாயம் உன் கால்களை முடமாகியதால்,நான்கு சுவற்றுக்குள் நீ நலிவடைந்து போயிருக்கிறாய்!

இப்போதைய நீ,நீ இல்லை .அது உலகத்தின் சாதாரண மனித பிம்பம். நீ ஆள்வதற்காக படைக்க பட்டவன், அழுவதற்காக  அல்ல..!

உனக்குள் இந்த பிரபஞ்சமே அடங்கும், ஒற்றை உலகத்திற்கு உன்னை மொத்த பலம் எப்படி தெரியும்…!

குருட்டு உலகத்தின் நியாயமில்லா வார்த்தைகளுக்கு நீ செவிடனாகா மாறிருக்கவேண்டும்!

இனியேனும் துயில் களை, இயற்கையின் எந்த படைப்பும் வீணாக போவதில்லை, நீ மட்டும் அதற்கு விதிவிலக்கா? கைவிட்ட கனவுகளை மறுமணம் செய்து கொள். காலம் ஒருநாள் உன் பெயரை உச்சரிக்கும்!

இந்த இயற்கை   உனக்கென அழகிய உலகத்தினை படைத்திருக்கிறது, நீ தான் உன் கண்களை மூடி கொண்டிருக்கிறாய்! இமைகளையும், இதயத்தையும் ஒருசேர திற, வசந்தங்களின் வாசல்கள் உங்களுக்காக திறக்கப்படும்!

அன்று தேவதைகள் உங்கள்   மேல் பூமாரி பொலிந்து புதிய உலகத்திற்கு வரவேற்கும். அதற்காக உங்களிடம் நீங்கள் சில மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும். கவலை, தாழ்வுமனப்பான்மை, துரோகம், காயம், கண்ணீர் ஆகியவற்றால் நீங்கள் கட்டுண்டு கிடக்கிறீர்கள்.

நம்பிக்கையின்மை என்ற சாத்தான் உங்களுள் சென்று உங்களை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது. அந்த சாத்தானை உங்கள் மனபலத்தால் கொன்றுவிடுங்கள். அவனை கொலை செய்து விடுங்கள். பிறகு உண்மையான நீங்கள் உங்களிடமிருந்து தோன்றுவீர்கள். அந்த நொடியிலிருந்து வாழ்க்கை அர்த்தப்படும்….!

வெற்றி முத்தமிடும்

இளைஞனே

காலம் மிகவிரைவாய்

கருத்துடன் உன்வாழ்வை

தயார்படித்துடு நீ!

விரைவாய் செயல்படு –

அறிவை முடம்மாக்கும்

அம்மூட நம்மபிக்கையை நீ!

புறம் தள்ளிகூடு –

அதிஷ்டம் வரும், என்னும்

வேதாந்த குருட்டு நம்பிக்கையை நீ!

விட் டொழித்திடு

தன்னம்பிக்கை தனை உன்

நம்பிக்கை என்றே நீ

உன்னுல் நிறுத்திடு – எச்

செயலுமே! முடிப்பேன்.

என்னும் உறுதியுடனே.

செயல்படு.

அதோ –

கதிரவன் வீச்சுமே!

நொடுயையும் வெல்லும் –

தாமதம் என்னும் சொல்லுக்கே!

இதன் உடேஇல்லை.

இதன் வீச்சாய்தான் உன்

செயலும் – உனதாகட்டும்.

விடாமுயற்ச்சியை மூலதனம்.

ஆக்கிடு – நீயே!

இம்மூலதனம் தோல்விகாணாது.

இத்தோல்வியும் தோற்று ஓடி ஒழியும்

ஆரத்தழுவும்

– கவிச்சுடர் ஆர் வீ. பார்த்திபன்.

ஒன்று சேர்ந்து செயல்படு

நான்கு எருதுகள் ஒன்று சேர்ந்து

நன்கு மேய்ந்து வாழ்ந்ததும்

பிரிந்து சென்று மேயும்போது

சிங்கம் கொன்று தின்றதும்

நாமறிந்த கதை யன்றோ

நாளும் நினைவில் கொள்ளுவீர்!

ஒன்றுசேர்ந்து செயல் படின்

நன்று ஆகும் காரியம்

பலரின் மூளைச் சிந்தனை

பலரின் வேலைத் திறமைகள்

ஒன்று பட்ட இலக்குடன்

உழைக்க வெற்றி நிச்சயம்!

பாடல் நன்கு பாடினும்

பக்க வாத்தியம் வேண்டுமே

ஆடல் நன்கு ஆடினும்

அனைவர் உழைப்பும் தேவையே!

தஞ்சை பெரிய கோவிலும்

தாஜ்மஹால் கட்டலும்

வந்த கதை தெரியுமா?

வாய்த்த பலரின் கரங்களால்!

தேனி கூடு கட்டலும்

எறும்பு இரையை உருட்டலும்

கூட்டு முயற்சி என்பதை

கூறும் நல்ல செய்தியே!

கூடி வேலை செய்திடின்

புதிய ஆக்க சிந்தனை

பொறுப்புணர்வும் வந்திடும்

தரஉயர்வு செலவு குறைவு

மனவுணர்வும் செழித்திடும்!

ச. வெங்கடேஷ்,

திருப்பூர்

வெற்றியை வாழ்க்கையாக்கு

இராம வேல்முருகன்

வலகைமான்

வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்கள் இப்படித்தான் அமையும்  ஒரு தேர்வு வெற்றி நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை ஒரு தேர்வில் பெறும் மதிப்பெண்கள்  நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில்லை . அவை நமக்கு சிறிது ஊக்கத்தை வேண்டுமானால் தரலாம் ஆனால் அவை வாழ்க்கை முழுவதும் நம்முடன் வாரா.

பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர் தமிழகத்தின் முதல்வரான வரலாறெல்லாம்  நம் நாட்டில் நிறைய உண்டு. எனக்கு தெரிந்து பத்தாம் வகுப்பில் மூன்று முறை தோல்வியடைந்த ஒருவர் தற்போது கணிதப் பேரசிரியராக அரசு கல்லூரியில் பணியாற்றி வருகிறார். அவர் பத்தாம் வகுப்பில்  கணிதப் பாடத்தில் தோல்வியடைந்தவர். தோல்வியைக் கண்டு துவளாமல் படித்துத் தேர்ச்சியடைந்து எநடப் பாடம் தனக்கு வரவில்லையோ அதே பாடத்தில் இளங்கலை , முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டங்கள் பெற்று தற்போது மாதம் ஒரு லட்சம் ஊதியம் பெற்று வருகிறார். தோல்வியால் துவண்டிருந்தால் இன்று அந்த கணித ஆசிரியரை நாம் காணமுடிந்திருக்காது.

இது போன்ற நிறைய உதாரண மனிதர்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். நாமும் அந்த மனிதராக மாற முயல வேண்டும். எது நம் குறிக்கோளோ அதில் விடாப்பிடியாக இருப்பது நல்ல விசயம் தான் .அதே நேரத்தில் அது ஏதோ ஒரு காரணத்தால் கை கூடாத போது வரும் வாய்ப்புகளை நமக்கு சாமகமாக்கிக் கொள்ள வேண்டும்.

எனக்கு தெரிந்த மற்றொரு நண்பர் பள்ளி கல்லூரி காலங்களில் நன்கு படிப்பவர். ஆசிரியர் பயிற்சியில் சிறந்த மாணவராத் தேர்ச்சி பெற்று  அமைச்சர் கைகளில் விருது பெற்றவர். ஆனால் அரசின் கொள்கை முடிவுகளால் அவருக்கு ஆசிரியர் பணி கிடைக்கசவில்லை. தனியார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத் தேர்வுகளை எழுதி இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று உயர் பதவியில் உள்ளார். ஆசிரியர் பெறும் ஊதியத்தைவிட அதிகம் பெறுகிறார். வரும் பணி எதுவெனினும் அதனை ஏற்றுக் கொண்டால் உயர்வு என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

எனவே நாம் வாழ்வில் வெற்றி பெறுவதை விட வெற்றிகரமான மனிதராக வாழ்வதே நன்று. சோர்வடையாத உழைப்பு, எதிர்பார்ப்பு இல்லாத செயல்பாடுகள் எதையும் நேர்மறை எண்ணத்தோடு பார்க்கும் தன்மை வரும் யாவற்றையும் நமக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பாங்கு இவையாவும்  நத்தை வெற்றிகரமான மனிதராக வாழ வழி அதைக்கும்.

விடாமுயற்சியே விஸ்வரூப வெற்றி என்பார்கள். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் தெய்வருத்த கூலி தரும் என வள்ளுவரும், வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் என நவீனக் கவிஞர் ஒருவரும், முயற்சி திருவினையாக்கும் என்றும் முயலாதிருத்தல் இன்மை புகுத்திவிடும் என்றும் பொய்யில் புலவர் கூறியுள்ளார். வாழ்க்கையில் முன்னேற விடாமுயற்சி மிகவும்  அவசியம்.

வருவதை ஏற்கும் மனப்பக்குவம் விடாமுயற்சியை விட மேலானது. முயற்சி செய்கிறோம் பலன் நாம் எதிர்பார்த்த  அளவு கிடைக்கவில்லை. உதாரணமாக தேர்வு எழுதுகிறோம் கடின உழைப்பு கொண்டு படித்து எழுதுகிறோம். தேர்வில் மதிப்பெண் நாம் எதிர்பார்த்த அளவு கிட்டவில்லை மதிப்பீடு செய்த ஆசிரியர் கூட கவனக்குறைவுடன் மதிப்பெண் குறைந்திருக்கலாம். அதற்காக நாம் சோர்வடைதலோ, விரக்தியடைதலோ கூடாது. அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்ய வேண்டும். அடுத்தக்கட்ட நகர்வுகளுக்குச் செல்ல வேண்டும். அடுத்த தேர்வை இன்னும் கூடுதல் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும். நிச்சயம் ஒரு நாள் பலன் கிட்டும்.

நம்பிக்கையே வாழ்க்கை நாளை என்பது உண்டு என்று நம்பித்தான் இரவு தூங்கச் செல்கிறோம். வாழ்க்கை நிலையில்லாதது என்று தத்துவம் பேசிக்கொண்டால்  அது நம் வாழ்விலும் செயலிலும் எதிரொளிக்கும் நம்மால் முடியும் என்று எப்பொழுமும் நம்புவோம்.

நம்மால் முடியாவிட்டால் யாரால் முடியும்

இப்போது இல்லாவிட்டால் எப்போது முடியும்

என்பன போன்ற வாசகங்களை நாம்  வசிக்கும் வீடு அலுவலகம் அறைகளில் நம் கண்களில் படும்படி ஒட்டி வைப்போம். தன்னம்பிக்கை  குறித்தச் செய்திகளை  பற்றி பேசுவோம். அது குறித்த வாசகங்களை நம் கண்களில் படும்படி வைத்திருப்போம் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

அவநம்பிக்கை தரும் செய்திகளைத் தவிர்ப்போம். அவ நம்பிக்கை தரும் மனிதர்களை தவிர்ப்பொம். வரும் விளைவுகளின் இரண்டு பக்கங்களையும் பார்ப்போம். இரணஙடு பக்கங்கள்  வரும் போதும் எவ்வாறு அணுகலாம் என முன்கூட்டியே சிந்திப்போம். நாம் வாழ்வில் வெற்றிபெற விடாமுயற்சி தன்னம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்களே…

இலட்சியத்தின் பாதையில் வெற்றி

தி.ரே. மோனிசா

வெற்றி என்பது வாழ்வின் எளிதாக கிடைக்கும் கனியல்ல! தோல்வி என்னும் பல மரங்களைக் கடந்து, தடைகளை தாண்டி எட்டிப் பறிக்கும் கனியே வெற்றி. ஒருவன் வாழ்வில் எத்தனை முறை தோல்வி அடைகிறானோ, அந்த அளவிற்கு அவன் வாழ்வின் உயரத்திற்கு செல்லப் போகின்றான் என்று தான் அர்த்தம்.

நம் எண்ணங்கள் தான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும். வாழ்வில் இலட்சியம் கொண்டு பாதையைக் கடக்க வேண்டும். இலட்சியம் அற்ற மனிதனின் வாழ்வானது சேரும் இடம் அறியாமல் பயணத்தை தொடங்குவது போன்றது. செல்லும் இடம் அறியாமல் வேகமாய் பயணிப்பதில் பலன் ஏதுமில்லை.

ஒரு செடியை நட்டு அதற்கு நாம் தண்ணீர் ஊற்றாமல் இருந்தால் அது பட்டுபோய் விடும். அதே நாம் அதற்கென்று தனி நேரம் செலவிட்டு அதை பராமரித்து வந்தால் தான் அது வளர்ந்து நல்ல பயன் அளிக்கும். அது போல் நாம் வாழ்வில் ஒரு செயலைத் தொடங்கி அதற்கான எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் வெற்றி இலக்கை அடைய முடியாது.

வாழ்வில் வெற்றிக் கனியை பறிக்க ஓடும் இந்த வேளையில் எந்த செயலையும் நாளை என்று தள்ளி போடுபவரை நிறுத்தினாலே வெற்றியின் உச்சியை அடையலாம். நம்மால் ஒரு செயலை முழுமையாக செய்ய முடியுமா? என்ற கேள்விக்கே மனதில் இடம் கொடுக்க கூடாது நம்மால் முடியும் என்று நினைத்து செய்ய வேண்டும்.

வெற்றி ஒருவருக்கு மட்டுமே சொந்தமன்று என்பதை உணர்ந்து அதை நம் வசப்படுத்த நல்ல இலட்சியத்தோடு தோல்வியைத் தூண்டுகோலாக கொண்டு உழைத்துய எடுக்கும் செயல் அனைத்தும் வெற்றியில் தான் முடியும் என்று முழுதாக நம்பினால் வெற்றிக் கனி நம் வசப்படும்.

“முயற்சி என்ற பூட்டை தன்னம்பிக்கை என்னும் திறவுகோலால் திறந்தால் வெற்றி என்றும் உங்கள் கையில் தான்”

தன்னம்பிக்கையோடு முயன்று வெற்றி பாதைக்கு செல்வோம்!! வெல்வோம்!!

தேடாதே ..! உருவாக்கு…!

 “விதைத்தவன் உறங்கினாலும்

விதைகள் உறங்கியதில்லை”

என்ற பொன்மொழியை அறிந்திருப்போம். என்றோ நம்முள் விதைத்த நம்பிக்கை ,ஒரு நாள் வெற்றியை மரம்போல விளைத்தே தீரும் என்ற வார்த்தைக்கு வடிவமாக தன் வாழ்வை வாழ்ந்து மறைந்தவர் அமரர் அ.பெ.ஜெ. அப்துல் கலாம்.

காலம் கணக்கற்ற மனிதர்களைத் தடயமின்றி கடத்திச்  சென்றிருந்தாலும் சிலர் அதில் விலக்கற்றவர்களாக திகழ்வார்கள். பூமி  அவர்களால் புண்ணியங்கள் பெற்றிருக்கும்.  அவர்களின் நம்பிக்கையும் நேர்மறை எண்ணங்களையும் இணைத்தே மாற்றங்களை கொணர்ந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களுள் தலையாயவர் அப்துல்கலாம்.

தக்கள் ஜனாதிபதி , ஏவுகணை நாயகன், எளிமையின் சிகரம் என எந்த நற்சொல்லை அடைமொழியாக்கினாலும் அதற்கு ஏற்றாற்போல மிகச்சரியாக பொருந்தியவர்.வெற்று கனவுகளோடு பயணித்த பலரை  இலட்சியக் கனவு காண அடிக்கோலிட்டவர். ஆரம்ப வயதிலிருந்தே அனுபவத்தின் வாயிலாக அறச்செயல்களை நிரம்பக் கற்றவர்.

மனிதனை மனிதநேயத்தோடும், மாண்பான எண்ணத்தோடும் அணுகியவர். உலக அமைதிக்காக தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்தவர். செயல்படுத்தவும் முனைந்தவர். இந்தியாவின் வல்லரசு கனவைத் தாம் கண்டதோடு நில்லாமல்  எல்லா மக்களையும்  அதனை நோக்கிய கனவைக்  காணச் செய்தவர்.

இவற்றையெல்லாம் புகழாரங்கள் போல பாவிக்காமல் தனிமனிதனின் தன்னம்பிக்கையால் விளைந்த செயலாக பாருங்கள். ஒற்றை மனிதர் எண்ணினால் எந்த அளவில் மாற்றம் கொண்டு வர முடியுமென்பதன் இரகசியத்தை மறைமுகமாக அவர் நமக்கு உணர்த்தி சென்றிருக்கிறார்.

‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம் ’

என்ற ஆகச் சிறந்த இலட்சியங்களை அûவைரின் அகங்களிலும் பதிந்தவர்.

பெரும்பாலும்  இளைய சமூகத்தின் மீதும்  குழந்தைகள் மீதும் தீரா அன்போடு முழு நம்பிக்கையும் கொண்டிருந்தவர். வார்த்தைகளால் தன்னம்பிக்கை ஊட்டியதோடில்லாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டியவர். தன் வயதின் மூப்பை ஒருபோதும் பொருட்படுத்தியவரில்லை. குடியரசுத் தலைவர் பதவியைக் காட்டிலும் ஆசிரியர் பணியை பெரிதும் நேசித்தார். அதனால் இறக்கும் தருவாயிலும் ஆசிரியராகவே இறந்தார்.

விவேகானந்தருக்குப் பிறகு இளைய சமூகத்தை நல்வழிப்படுத்த பிறந்த தலைவர். நாட்டின் நலம் ஒன்றே  நம் தேவையென நாளும் போதித்து பின்பற்றிய பொதுநலவாதி.

 ‘‘ நம்பிக்கை நிறைந்த ஒருவர்

யார் முன்னேயும் எப்போதும்

மண்டியிட மாட்டார்’’

என உற்சாகத்தோடு  தன்னம்பிக்கை விதைத்தவர். எளிமையால் எதையும் வென்றவர்

“ஒரு மனுஷன் பிரியும்போது

அவன் தாயழுதா அவனொரு நல்ல மகன்

அவன் பிள்ளைகள் அழுதா அவனொரு நல்ல தகப்பன்

அவன் பிரிவுக்காக ஒரு நாடே அழுதா

அவன் நல்ல தலைவன்”

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைளில் தான் உள்ளது.

இது போன்ற  பல வரிகளின் வாயிலாக அவர் உணர்ந்த முயன்ற ஒற்றை ஆயுதம் ‘தன்னம்பிக்கை’ அதை வெளியெங்கும்  தேடாதே….!! உன்னுள்ளே உருவாக்கு…!

நல்லோரின் செயல்புரிந்து நாயகனாய் உரு கொள்…!

நாடும் உனை நாடும், நம்பிக்கை கொள்….!

எது சரி

ஆதிகாலத்து மனிதனின்  வாழ்க்கை, வாழத்தொடங்கிய அவன் முடிவில் அதுவும் அழகாய் முடிந்தது.  வாழ்ந்தவனின் வாழ்க்கை அவன் வீழ்ந்த பிறகும் வாழத்தான் செய்கிறது.  உலகின் பலர் மரணமில்லா வாழ்வு வாழ்ந்து கொண்டு தான் இருகிறார்கள்.

இன்றைய நிலை, தனக்கான வாழ்வினை தானம் செய்தே புண்ணியம் சேர்த்து வாழவேண்டி இருப்பதாய் நினைத்து பலர் வாழ்கிறோம்.  மற்றவரின் பார்வை மட்டுமே, நம் வாழ்வினை வழி நடத்தி வருகிறது.  நமது பார்வையோ வாழ்க்கையை ஒரு போராட்டமாக மட்டுமே பார்கிறது.  ஆனால் அது அவ்வாறாக உண்மையல்ல.  நாம் உறங்கினாலும் உறங்க மறுத்தாலும் இரவானது விடியலில் முடியத்தான் போகிறது.  உறங்க மறுப்பவன் மட்டுமே போராடி வருகிறான்.  தேடல் இருக்கத்தான் செய்கிறது.  தேடலில் தேவை மட்டும்  முடிவதில்லை.  நல்லெண்ணம் நல்லதை மட்டுமே வாய்க்கிறது.

மனதார வாழ்த்தி மனசார மண்ணித்து மனப்பொய் இல்லாமல் மகிழ்வோடு அணுகுவது மட்டுமே சிறப்பளிக்கும்.  அடுத்தவரோடு ஒப்பிட்டு வாழ ஆசைப்படுவதே இங்கு அனைத்து துன்பங்களுக்கும் காரணமாக உள்ளது.  ஒருவன் தன் சகதோழனை காணும் போது அவனது நல்வாழ்வினை கண்டு மகிழவேண்டிய உள்ளம், தனக்கு அமைந்த வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்து வருத்தப்படவே செய்கிறது.  வேட்டைக்கு  போகும் விலங்கு  சில நேரம் பட்டினி கிடக்க வேண்டி வரும் அதுவே படைத்தவனின் விருப்பம் எனில்

கார்ல்மார்க்ஸ் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வறுமையில் அவதிப்பட்டவர் இன்று புகழரசனாக பலரின் மனதில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.  “ யார்க்கும் இந்நிலை பொதுவன்றோ” என்ற பாரதியின் சொல்போல எல்லோருக்கும் வாழ்க்கை பொதுவானதாகவே அமைகிறது.  எந்த சூழ்நிலையையும் மகிழ்ச்சியாக அணுகக் கற்றுக் கொண்டால், எல்லா சூழ்நிலையும் மகிழ்ச்சியானதாகவே அமையும்.

ஒருவன் தான் வாழும் வாழ்வினை தனக்கான இறைவனது பரிசு என்பதை உணர்ந்து கொஞ்ச நாள் வாழும் வாழ்வில் தீமையை அகற்றி நன்மையை விதைத்து முழுநம்பிக்கையுடன் அவனது வாழ்வினை அவனுக்காய் அவன் வாழ்வதே சரியாகும்.  தன்னம்பிக்கை ஒன்று போதும் ஒருவனது வாழ்வினை அழகாக்க, வாழ்ந்துபார் வானை வசப்படுத்தும் நம்பிக்கையுடன் அதுவே சரியானதாய் இருக்கும்.

– கௌதமன்

குருதிக் கொடை செய்வீர்

க. தமிழ்செல்வி

தானம் கற்று வருவதில்லை

தானாய் தோன்றும் தர்மச் சிந்தை…!

விபத்தின் காயத்தின் வலி

கண்ணீருக்கே தெரிகின்றது…!

வடிந்த குருதித் துளிகளின்

மகத்துவம் மறைகின்றது…!

இரத்தபந்தம் சாதி மதத்தை முன்வைக்கும்

குருதிக் கொடை சாதி மதத்தை பின்வைக்கும்…!

கொடுக்க கொடுக்க நம்மிடம்

கொழிக்கும் செல்வமே குருதி…!

அக்குருதியை விலைபேசி

வியாபாரம் செய்யாதீர்..!

உடல் உறுப்பு தானம்

இறந்த பின்னும் வாழ்வது..!

ஆனால் வாழும் போது

மனிதாய் வாழ்வது குருதிக்கொடை..!

மற்றாருக்கு வாழ்வு தந்து

உன் வாழ்வை செழிப்படைய வை…!

மனிதா விழித்திரு…!

வே. ரத்னா

தமிழ்த்துறை

சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும்…!

சூழ்நிலையை உருவாக்கிட வேண்டும்…!

மரத்தை நற்றிட வேண்டும்…!

மழையைப் பெற்றிட வேண்டும்…!

நீர் வளத்தைப் பெருக்கிட வேண்டும்…!

நிலத்தை பாதுகாத்திட வேண்டும்…!

கழிவுகளை நீக்கிட வேண்டும்…!

நல்கனிகளைப் பறித்திட வேண்டும்…!

சுகாதாரத்தைப் பெற்றிட வேண்டும்…!

மாசுபாடுகயைத் தடுத்திட வேண்டும்…!

தூய்மைப் படைத்திட வேண்டும்…!

மனிதா நீ திருந்திட வேண்டும்…!