– 2019 – November | தன்னம்பிக்கை

Home » 2019 » November (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    விழிப்புடன் இருந்தால் செழிப்பு வளரும்

    நண்பா இதோ உன்னுடன் ஒரு நிமிடம். செழிப்புடன் இல்லாவிட்டாலும் விழிப்புடன் இரு. விழிப்புடன் செயல்படும்வரை உனக்கு என்று பொற்காலம் தான். சகோதரனே வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியுமா?

    ஒருவன் தன் வாழ்க்கையை வெல்வதற்கு போராட வேண்டும். போராட வாள் வேண்டும் வீரத்துடன் அவ்வாளை எடுக்க கை வேண்டும்.

    அவ்வாளை கையில் எடுத்துப் போராடினால் தான் ஒருவன் வெற்றி பெற வேண்டுமெனில் வாழ்க்கைக்குள் மறைந்திருக்கும் அவ்வாளைத் துணிவுடன் கையில் எடுக்க வேண்டும். எடுத்தால் தான் வெற்றியுடன் அவ்வாழ்க்கைக்குள் மறைந்திருக்கும் வாளையும் பெற்று முடிவில் வெற்றி வாகை சூட முடியும்.

    வாழ்க்கையில் போராடுபவர்களும்- போராடவும் அதில் உள்ள வாளைத்தான் எடுக்க வேண்டும் ;எடுக்கிறோம்.

    வாள்- ஐ எடுத்து வெற்றி பெற்றவன் ஆள்கிறான் ; தோல்வியுற்றவன் தாழ்கிறான். வாள், ஒருவனை வாழவும் வைக்கும் ; ஆளவும் வைக்கும் ; தாழவும் வைக்கும். வீழவும் வைக்கும்.

    இங்கு வாள் என்பது ஒன்றுதான். வெற்றியும் தோல்வியும், ஆள்வதும்- தாழ்வதும் வீழ்வதும் வாளில் இல்லை ;படை வீரனின் செயல் திறமையில் தான் இருக்கிறது.

    வாள் ஒன்றானாலும் பயன் இரண்டு. போர்களத்தில் நின்றிருப்பவர்கள் அனைவருமே வீரர்கள் தான் ஆனால் இறுதியில் ஒரு வீரன் தான் இருக்கிறான் ;இன்னொரு வீரன் இறக்கிறான்.

    இருந்தவன் ஆள்கிறான். இறந்தவன் ஆள விடுகிறான். வென்றவனுக்கு நல்ல பயன் கிடைக்கின்றது. வெல்ல முடியாமல் மாண்டவனுக்கு அல்ல பயன் கிடைக்கின்றது.

    படை வீரர்களின் செயல் வீரத் திறமைக்குத் தகுந்த பரிசாக தன்னிடம் உள்ள இரு பயன்களையும் வீரனுக்கு ஒன்றென வாளும் கொடுத்துவிட்டது. வீரமிருந்தாலும் விழிப்புடன் செயல்பட்டு போரிட்ட வீரனுக்குத்தான் நல்ல பயன் கிடைத்தது. அப்பயனே வெற்றியென்பதும். அப்பயன் விழிப்புடன் போராடியவனுக்கு மட்டுமே சொந்தமாகிறது. சொந்தமாக்கிப் பயனடைந்தவன் இம் மண்ணை ஆள்கிறான்.

    போரில் திறம்பட தன்னை ஆண்டவன் தான் இம் மண்ணையும் ஆள்கிறான். எனவே இம்மண்ணை ஆள முதலில் தன்னை ஆள வேண்டும். தன்னை ஆள வேண்டுமெனில் எதிலும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.

    சுய விழிப்பாள்கையால் தன்னைத்தானே அன்று ஆண்டவன் இன்று இம்மண்ணையும் தானே ஆள்கிறான்- ஆண்டுகொண்டிருக்கிறான்.

    உன்னை ஆளத் தெரிந்தால் உலகை ஆளலாம்- ஆள்வது எளிது. தன்னை ஆண்டால் இம்மண்ணை ஆளலாம்.

    வாளைப் போல் நம் வாழ்விலும் இரண்டு பயன்கள் உள்ளன. அதில் எதை பெறுவது என்பதும் நம் கையில் தான் உள்ளது.

    வாள் வாழ்வு இரண்டிலுமுள்ள பயன்கள் இரண்டில் நமக்குத் தேவையானது எது என்பதை அடைவதற்கான விழிப்பை முதலில்  நாம் பெற வேண்டும்.

    களத்தில் உள்ளவர்கள் அனைவருமே வீரர்கள் தான் ஏனென்றால் போர்க்களமும் தன்மீது வந்து நிற்க தகுதியுள்ள வீரர்களை மட்டுமே அனுமதிக்கிறது.

    ஒரு வீரன் ஜெயிக்கிறான். ஒரு வீரன் தோற்கிறான். இன்னொரு வீரன் இருக்கிறான்- என்றாலும் இவ்விரண்டில் எது என்பதைக் காண போர்க்களம் சென்று தான் ஆக வேண்டும். வாளையும், கேடயத்தையும் எடுத்துக் கொண்டு சென்றால் தான் எது என்பது தெரியும்.[hide]

    தோற்பதும்- ஜெயிப்பதும் ; ஆவதும் – அழிவதும்; வெல்வதும் கொல்வதும் ; கொள்வதும்- கொல்வதும்; வீழ்வதும் – எழுவதும்; உயர்வதும்- தாழ்வதும்; முதலிலேயே தெரியாது முடிவில் தான் தெரியும்.

    களம் சென்றவனுக்கு மட்டுமே ஏதோ ஒன்று கண்டிப்பாகக் கிடைக்கும். கிடைத்தது எதுவென்பதையும் அத்துடன் தெரிந்து கொள்ளவும் முடியும்.

    விழத்திருப்பவன் நுட்பத்துடன் போராடி எதிரியை வீழ்த்தி நல்லதொன்றைப் பெற்று நன்மையடைவான். போர்க்களம் செல்லாதவன் எந்த ஒன்றையும் அடைய முடிவதில்லை. எது என்பதைக் காண முடிவதுமில்லை.

    வீழ்ந்தவன் வீழ்த்தியவனை இன்னொரு முறை வெல்ல முடியும். வென்றிருக்கிறார்கள் என்று வரலாறு சொல்கிறது. உலகம் பேசுகிறது.

    வெற்றி என்பது ஒரு பொருள். அது சில சமயம் சில விசயங்களில் கைமாறிக்கொண்டே தானிருக்கும். அதற்காக வருந்துவது மடமை. மீண்டும் மீண்டும் அதை அடையப் பாடுபடுவதுதான் நமது கடமை. பாடுபட்டால் அதுவே உன் உடைமை.

    அங்கு வாழ்க்கை என்பது நீயானால்,

    இங்கு-

    களம் என்பது உன் இலட்சியமாகும்

    வாள் என்பது உன் வல்லமையாகும்.

    போர் என்பது உன் இலட்சியம் எனில் கட்டாயமாகச் சந்திக்க வேண்டிய ஒன்றாகும். ஏனென்றால் மேலுள்ள களத்தை நீ தேர்ந்தெடுத்துவிட்டாய்.

    தத்துவப்படி வாழ்க்கை என்கிற வாசகத்தை நன்றாகப் பிடித்தெழுதத் தெரிந்தவன் எவனோ அவனே ஆளவந்தான், தெரியாத மற்றவனெல்லாம் அழவந்தான்- தாழவந்தான்.

    விழிப்புள்ளவனுக்கு ஒன்றைப் பிரிக்கத் தெரியும், விழிப்பற்றவனுக்கு ஒன்றை எரிக்கத்தான் தெரியும்.

    விழிப்புடன் சுய ஆளுகையில் தன்னைத்தானே ஆள்பவன் எதையும் ஆள்வான். இப்போரில் வெல்பவன் வாழ்விலும் வென்றுவிடுகிறான்.

    ஜனநாயகமற்ற சமுதாயமாக முந்தைய சமூகம்(உலகம்)இருந்தது. அதனால் மனிதனின் நடைமுறை விசயங்கள் அப்படியிருந்தது. மக்கள் கட்டுப்படும் எல்லா அதிகாரங்களும் ஒருவனிடத்திலேயே இருந்தது. மக்கள் விருப்பப்படி சட்டதிட்டங்கள் அமைத்து. மக்கள் விருப்பப்படி சட்ட திட்டங்கள் அமைத்து பொதுநல நோக்குடன் ஆளாமல் அவன் விருப்பப்படி முற்றிருலும் சுயநலமாகவே ஆண்டான்.

    தொடரும்[/hide]

    இந்த இதழை மேலும்

    உள்ளத்தோடு உள்ளம்…

    ஒரு விசித்திரமான சிந்தனையுள்ள அரசர் ஒருவர் இருந்தார். அவர் தினசரி காலையில் எழுந்ததும், அரண்மனையில் உள்ளவர்கள் யாருடைய முகத்திலும் விழிக்கமாட்டார். மாறாக அவர் தூங்கி எழுந்ததும் அவருடைய கண்ணை ஒரு துணியால் கட்டி, மதிற்சுவரின் மீதுள்ள மண்டபத்தில் அவரை நிற்க வைப்பார்கள். அந்த வழியாக வழிப்போக்கர் யாராவது வரும்போது மன்னரின் கண் கட்டை அவிழ்த்து விடுவார்கள். அந்த வழிப்போக்கரின் முகத்தில் அரசர் விழிப்பார். இதுதான் அன்றாட வழக்கம்.

    ஒருநாள் காலையில், அரசர் மண்டபத்தில் கண்ணைக் கட்டிக் கொண்டு காத்திருக்கிறார். அப்பொழுது அந்த வழியாக ஒரு விவசாயி தனது தலையில் ஒரு கூடையை கவிழ்த்துக் கொண்டு வருகின்றார். அரண்மனை அருகில் வந்ததும், அவர் தனது தலையில் இருந்த கூடையை விலக்குவதற்கும், அரசரின் கண்கட்டை அவிழ்ப்பதற்கும் சரியாக இருந்தது.

    அரசர் விவசாயியின் முகத்திலும், விவசாயி எதேச்சையாக அரசரின் முகத்திலும் விழித்துக் கொண்டனர். போயும் போயும் இந்த ஏழை விவசாயியின் முகத்திலா விழித்தோம் என்ற வெறுப்போடு அரசர் திரும்புகிற போது அவர் தலை அருகில் இருந்த தூணில் பட்டு, சிறிது காயம் ஏற்பட்டுவிட்டது. உடனே அரசருக்கு கோபம் தலைக்கு மேல் ஏற, இவன் முகத்தில் விழித்ததும் இவ்வாறு நடந்து விட்டதே. இவன் ராசியில்லாதவன். இவன் உயிருடன் இருக்கக்கூடாது என்று தீர்மானித்து அரசர் அவ்விவசாயியை தூக்கிலிட ஏற்பாடு செய்யும் படி உத்தரவிட்டார்.

    அதன்படி, தூக்குக் கயிற்றின் முன்னர் நின்ற விவசாயியிடம், உனது முகத்தில் விழித்தவுடன் எனது தலையில் அடிப்பட்டுவிட்டது. நீ ராசியில்லாதவன், உன்னைத் தூக்கிலிட்டுப் போகிறேன். இறுதியாக உனக்கு சொல்ல ஏதாவது இருந்தால் சொல், அதற்கு ஒரு அவகாசம் கொடுக்கிறேன்… என்றார் அரசர்.

    அதற்கு அந்த விவசாயி பலமாகச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்று அரசர் கத்தினார்.

    அதற்கு அவ்விவசாயி, அரசே! மன்னிக்க வேண்டும், என் முகத்தில் விழித்ததால் உங்களுடைய தலையில் தான் அடிப்பட்டது. உங்களுடைய முகத்தில் விழித்த எனக்குத் தலையே போகப் போகிறது. ஆகவே நம்மில் யார் ராசியில்லாதவர் என்று நினைத்துச் சிரிக்கின்றேன் என்றார்.