Home » Articles » வெற்றிச்சிகரத்தின் விளிம்பில் தோல்வியின் கண்ணீர்..

 
வெற்றிச்சிகரத்தின் விளிம்பில் தோல்வியின் கண்ணீர்..


சிதம்பரம் ரவிச்சந்திரன்
Author:

விண்வெளி ஆராய்ச்சித்துறையில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு சாட்சி சொன்ன நாட்கள் சமீபத்தில் நம்மைக் கடந்துபோயின. வெற்றியைத் தொடும் நேரத்திர்கு சிறிது முன்பு ஏமாற்றத்தின் செய்திகள் தான் வெளியே வந்தன என்றாலும் இந்திய விண்வெளித் துறையின் சந்திராயன்2 திட்டம் அறிவியல் அறிஞர்களிடையில் அரிதினும் அரிதான ஒன்றாக மாறியது. வருடங்கள் நீண்டு நின்ற ஆராய்ச்சிகளின் முடிவில்தான் ISRO நிலவின் தென்துருவத்தில் மேற்பரப்பை ஆராய்வதற்கும், கூடுதல் பரிசோதனைகளைச் செய்வதற்கும் சந்திராயன்2 திட்டத்திற்கு ஆரம்பம் குறித்தது. விண்வெளியில் சீறிப் பாய்ந்தபிறகு 3.84 லட்சம் கி.மீ தொலைவையும் கடந்து நிலவின் மேற்பரப்பை அடைந்து 2.1 கி.மீ தூரம் நெருங்கியபோதுதான் ஆய்வு உபகரணமான விக்ரம் lander நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்து கொண்டிருந்த orbiter உபகரணத்துடனும், அதன் மூலம் பூமியில் ISRO கூடத்துடனும் தகவல் பரிமாற்றத்தை நிறுத்திக்கொண்டது.

வெற்றியைத் தொடும் தூரத்தில் தோல்வி தந்த கண்ணீரின் உவர்ப்புச் சுவையை இந்தியா ருசித்துப் பார்க்கநேரிட்டது. இறுதி லட்சியத்தை அடையமுடியாவிட்டாலும் தன் கடின உழைப்பினால் ISRO நாட்டின் முழுஆதரவையும் பெற்றது. தேசமே கண் இமைகளைக் கூடச் சிமிட்டாமல் விழி மூடாமல்காத்துக் கொண்டிருந்த கடைசி நிமிடத்தில்தான் வெற்றிச் சிகரத்தின் உச்சியைத் தொடமுடியவில்லை என்ற செய்தி வெளிவந்தது.  2019 ஜூலை 22ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் விண்கலனை ஏவியதற்குப் பிறகு உள்ள ஒவ்வொரு கட்டத்திலும் ISRO வெற்றியையே சுவைத்துக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் 6ம் தேதி விண்கலனின் ஐந்தாவது மற்றும் கடைசி சுற்றுவட்டப் பாதையை உயர்த்தும் நிகழ்வும் எதிர்பார்த்தது போலவே வெற்றி கண்டது. சந்திராயன்2 பூமியின் சந்திராயன்2 புவியின் சுற்று வட்டப் பாதையை விட்டு விலகி சந்திரனின் சுற்றுவட்டப் பாதையை ஆகஸ்ட் 20ம் தேதி சென்ரு அடைந்தது. அந்தக் கட்டத்தில் சந்திராயன்2 எடுத்த புகைப்படத்தை ISRO வெளியிட்டிருந்தது. செப்டம்பர் 2ம் தேதி விக்ரம் கருவி சந்திராயன்2 orbiter கலனில்  இருந்து பிரிந்து அன்னை பூமியின் மடியில் இருந்து நிலவின் தரையில் ஓடியாடி விளையாடச் செல்லும் குழந்தையைப் போலச் சென்றது. அத்துடன் orbiter நிலவின் சுற்றுவட்டப் பாதையை சுற்றி வரும் ஒரு செயற்கைக் கோளாக மாறிவிட்டது. செப்டம்பர் 4ம் தேதி சுற்றுவட்டப்பாதையும் உயரம் குறைக்கப்பட்டு விக்ரம் உபகரணம் சந்திரனில் இருந்து 36 கி.மீ தொலைவில் நிலவைச் சுற்றிவர ஆரம்பித்தது.

பிறகுதான் உலகம் உற்றுநோக்கிய safe landing நிகழ்விற்கான நடவடிக்கைகள் தொடங்கின. அந்தக் கட்டத்திலும் விக்ரம் கருவி பத்திரமாகத் தரையிறங்கும் என்றே நம் விஞ்ஞானிகள் நம்பினார்கள். ஆனால், செட்பம்பர் 7ம் தேதி அதிகாலை 1.52க்குப் பிறகு விக்ரம் கருவியில் இருந்து சமிஞ்ஞைகள் ஆர்பிட்டருக்கு வந்து சேராமல் தடைபட்டுப் போனது.  தொடர்ந்து வந்த நிமிடங்களில் விக்ரம் கருவியின் கதி என்ன ஆயிற்று என்பதை நம் விஞ்ஞானிகள் தெரிந்து கொள்ள முயற்சி செய்தார்கள். நிலவின் மேற்பரப்பில் இருந்து 2.1 கி.மீ தூரத்தில் இருக்கும்வரை விக்ரம் கருவி தன் பாதையில் துல்லியமாகப் பயணித்தது. அதன் பின் விக்ரம் கருவி புவியுடனான தன் தொடர்பை இழந்தது. அந்த ஒரு நிமிடத்தில் நாடும், விஞ்ஞான உலகமும் ஏமாற்றத்தில் மூழ்கியது.

அதேநேரம் சந்திராயன் நிலவின் மேற்பரப்பிற்கு மிக அருகில் சென்ருசேர்ந்ததே ஒரு சாதனைதான் என்று அறிஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.நிலவின் தரைப்பகுதியில் இறங்குவதற்கான திட்டத்தில் கடைசி 15 நிமிடங்கள் மிகமுக்கியமானதும், வெற்றி வாய்ப்புகள் மிகவும் குறைவானதும் ஆகும். குறிப்பாக அபாயம் நிறைந்த தென்துருவத்தில் தரையிறங்குவது என்பது மிகவும் கடினமானது ஆகும். அங்குதான் சந்திராயன்2 தன் இலக்கைத் தவறவிட்டது. சந்திரனில் இறங்குவதற்கான இத்தகைய திட்டங்களில் உலக நாடுகள் 37% மட்டுமே இன்றுவரை வெற்றி பெற்றுள்ளன.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2019

நம்பிக்கையை மகிழ்ச்சியாக்கு..! நாளை உலகை உனதாக்கு…!
தன்னம்பிக்கை மேடை
எனக்கு அல்ல – உங்களுக்காக ஒரு நொடி
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 14
உணவை வீணாக்காதீர்….
சிசு பராமரிப்பு
நில்! கவனி !! புறப்படு !!! – 9
துணிச்சல்…
நட்பை வலுப்படுத்தி மேம்படுத்திக் கொள்வது எப்படி?
சின்னஞ்சிறு சிந்தனைகள்…
பேனா எங்கே?
தன்நிலை அறிக முன்னிலை பெறுக
வெற்றிச்சிகரத்தின் விளிம்பில் தோல்வியின் கண்ணீர்..
குறிக்கோள் வெற்றியின் திறவுகோல்
எங்கேயும் எனிமா
வெற்றி உங்கள் கையில் – 71
இலைகளை எண்ணுகிறாயா? பழங்களை உண்ணுகிறாயா?
விழிப்புடன் இருந்தால் செழிப்பு வளரும்
உள்ளத்தோடு உள்ளம்…