![]() |
Author: கோவை ஆறுமுகம்
|
தன்நிலையும், பன்முக நிர்வாகத் திறமையும்
தன்னையறிந்தவன், தரணியாள்வான்.
தனிமனிதனின் கவனம். சிறந்த நிர்வாகத்தின் சூட்சமம்.
தன்நிலை நிர்வாகத் திறமையானவர்
என் நிலை நிர்வாகத்திலும் முன்னிலை வகுப்பார்.
இவையெல்லாம், தன் மேல் தன்னம்பிக்கை, திட நம்பிக்கை கொண்டு, உழைத்து முன்னேறியவர்களின் உண்மையான வெற்றி அனுபவங்களின் எதிரொலிகள்.
ஒரு காரியத்தை சரியான நேரத்தில் ஆரம்பித்து, குறித்து நேரத்திற்குள், அந்த வேலையை செய்பவரின், தனிப்பட்ட வாழ்க்கையிலும், சரியான தன்நிலை நிர்வாகத் திறமையால் வெற்றி மேல் வெற்றி வரும், ஆகவே தன்னையறிதல் மிக மிக அவசியம்.
நவீன மாற்றங்கள் எல்லாம், நிர்வாகத்தின் பரப்பளவை வளர்த்துக் கொண்டே போகின்ற காலத்தில், ஒரு நிர்வாகியின் பன்முக திறன் இருந்தால் மட்டுமே நிர்வாகமும் வளர்ச்சியடைய முடியும்.
ஒரு நிர்வாகக்கு என்ன வேண்டும் என்று கேட்டால்… நிர்வாகத்திறமை, என்று ஒன்றை வார்த்தையால் பதில் வரும். அது, படிப்பு, பட்டம் ஒரளவு அனுபவம் என்பதாலோ, அல்லது சிபாரிசு என்ற வகையிலோ நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
ஆனால், இவர்களால் மட்டுமே நிர்வாக வளர்ச்சியை எட்டிவிட முடியாது. முக்கியமாக, ஒரு கம்பெனியில் தனக்குத் தெரியாத துறைகளையும் நிர்வாகிப்பதே நல்ல திறமையான நிர்வாகி, அதாவது தன் அலுவலகத்தில் அனைத்து பிரிவுகளைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பது. நல்லது அதை உண்மையாக்கும் விதமாக நடந்த உண்மை நிகழ்வு.
இந்த இதழை மேலும்

November 2019



















No comments
Be the first one to leave a comment.