Home » Articles » வெற்றி உங்கள் கையில் – 71

 
வெற்றி உங்கள் கையில் – 71


கவிநேசன் நெல்லை
Author:

வெற்றிப் பாதை.

“இதனால் எனக்கு என்ன இலாபம்?”.

“இவரால் எனக்கு கொஞ்சம்கூட பயன் இல்லை”.

“இந்தச் செயல் செய்வதால், பணம் எனக்குக் கிடைக்காது. பிறகு ஏன் நான் செய்ய வேண்டும்?”

“ஒரு பைசாவுக்குக்கூட பலன் இல்லை. அங்கே போவதற்கு எனக்கு விருப்பமில்லை”

– இவ்வாறு சிலர் வாழ்க்கையில் ‘கணக்குப்போட்டு’ வாழ்கிறார்கள்.

“எந்தச்செயல் செய்தாலும் அதனால் தனக்கு பணவரவு வந்தாக வேண்டும்” என்று எண்ணி இவர்கள் செயல்படுகிறார்கள். தங்களுக்கு பணம் கிடைக்காத நேரத்தில் இவர்கள் மிகவும் சோர்வாகிப் போகிறார்கள். எரிச்சல் அடைகிறார்கள். கோபத்தை கொப்பளிக்கிறார்கள்.

வாழ்க்கையில் எல்லா செயல்களையும் திட்டமிட்டு செய்வது நல்லதுதான். ஆனால், எந்தச்செயல் செய்தாலும் அதில் தனக்கு இலாபம் கிடைக்குமா? என்று யோசித்துக்கொண்டே இருந்தால், நல்ல செயல்களைச் செய்ய இயலாதநிலை ஏற்பட்டுவிடும்.

பொதுவாக, மிகழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு சொத்து, பண வசதிகள் அவசியமான ஒன்றுதான். ஆனால், அந்த வசதிகளை ‘எவ்வாறு நாம் பெற்றோம்?’ என்பதில்தான் உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது.

பிறரை ஏமாற்றி, கொள்ளையடித்து, கொலைத் தொழில்புரிந்து பணம் சம்பாதிக்கும் கும்பல்கள் நாள்தோறும் பெருகிவருகின்றன. இந்தநிலையில் குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிப்பதுதான் வெற்றி வாழ்க்கை என சிலர் நினைக்கிறார்கள். ஆனால், முறையாகப் பெறாத எந்த செல்வமும்;; நம்மோடு தங்குவதில்லை என்பதை உணர்ந்துகொள்வதுதான் விவேகமான செயலாகும்.

அவர் ஒரு பணக்காரர்.

ஒட்டகம் விற்பனை செய்யும் சந்தைக்குச்சென்று நேரடியாக ஒட்டகத்தை வாங்க நினைத்தார்.

பின்னர், ஒருநாள் சந்தைக்குச்சென்று ஒரு பெரும் ஒட்டக வணிகரிடம் நெடுநேரம் பேசி, ஒட்டகத்தை விலைக்கு வாங்கினார்.

வீட்டுக்கு வந்தபின் ஒட்டகங்களை அடைத்து வைத்திருக்கும் தனது ஒட்டகக் கொட்டிலில் அந்த ஒட்டகத்தை அடைப்பதற்கு ஏற்பாடு செய்தார். தனது பணியாளர் ஒட்டகத்தை கொண்டுசென்றார். பின்னர், ஒட்டகத்தின் முதுகின்மீது கட்டப்பட்ட தோல் இருக்கையை (சேணம்) அவிழ்த்தார் பணியாளர். அப்போது, சேணத்திலிருந்து ஒரு சிறிய பை கீழே விழுந்தது. அந்தப் பையை திறந்து பார்த்தார் பணியாளர்.

நவரத்தின கற்கள் அந்தப் பையினுள் இருந்தது. அதிக விலைகொண்ட அந்த நவரத்தின கற்களைப் பார்த்த பணியாளர், ஆச்சரியப்பட்டார். தனது முதலாளியான பணக்காரரிடம் பையை கொண்டுவந்து காண்பித்தார்.

“அய்யா இந்தப் பைக்குள் விலை உயர்ந்த ரத்தினக் கற்கள் இருக்கின்றன. கடவுள் உங்களுக்கு இந்த ஒட்டகம்மூலமாக ரத்தின கற்களைக் கொடுத்திருக்கிறார். நீங்கள் அதனை உங்களுக்கே வைத்துக்கொள்ளுங்கள். கடவுள் கொடுத்த பரிசை நீங்கள் பெற்றுக்கொள்வதுதான் சிறந்தது” என்று பணியாளர் தனது முதலாளியிடம் சொன்னார். ஆனால், அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

“இது எனக்குரிய பொருள் அல்ல. தவறுதலாக ஒட்டகத்தோடு வந்த நவரத்தின கற்கள் அந்தப் பெரும் வணிகருக்குச் சொந்தமானது. அதனை உடனே அவரிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்” என்று சொன்னார். அவசரஅவசரமாக ரத்தின பையைத் தூக்கிக்கொண்டு அந்த பெரும் வணிகரை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்.

பெரும் வணிகரை சந்தித்து ரத்தின கற்கள் அடங்கிய பொக்கி’ பையை கொடுத்தார் அந்தப் பணக்காரர். பையை வாங்கிக்கொண்ட பெரும் வணிகர், “உங்களை நான் பாராட்டுகிறேன். எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உண்மையோடு நடந்துகொண்ட உங்களின் பண்பு மிகச்சிறந்தது. உங்களுக்கு நான் பரிசு வழங்க விரும்புகிறேன். நீங்கள் இப்போது கொண்டுவந்த நவரத்தின கற்களில் சிலவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று நவரத்தின பையை கொடுத்தார்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2019

நம்பிக்கையை மகிழ்ச்சியாக்கு..! நாளை உலகை உனதாக்கு…!
தன்னம்பிக்கை மேடை
எனக்கு அல்ல – உங்களுக்காக ஒரு நொடி
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 14
உணவை வீணாக்காதீர்….
சிசு பராமரிப்பு
நில்! கவனி !! புறப்படு !!! – 9
துணிச்சல்…
நட்பை வலுப்படுத்தி மேம்படுத்திக் கொள்வது எப்படி?
சின்னஞ்சிறு சிந்தனைகள்…
பேனா எங்கே?
தன்நிலை அறிக முன்னிலை பெறுக
வெற்றிச்சிகரத்தின் விளிம்பில் தோல்வியின் கண்ணீர்..
குறிக்கோள் வெற்றியின் திறவுகோல்
எங்கேயும் எனிமா
வெற்றி உங்கள் கையில் – 71
இலைகளை எண்ணுகிறாயா? பழங்களை உண்ணுகிறாயா?
விழிப்புடன் இருந்தால் செழிப்பு வளரும்
உள்ளத்தோடு உள்ளம்…