– 2019 – October | தன்னம்பிக்கை

Home » 2019 » October

 
  • Categories


  • Archives


    Follow us on

    சமத்துவம் எனும் சாட்டை எடு…

    தமிழன்சபரி
      கோபிசெட்டிபாளைம்.

    பலநூற்றாண்டு பண்பாட்ட பண்பாடு எங்கே?

    பச்சிளம்பிள்ளைக்கும் பாலியல் தொந்தரவு இங்கே!

    உணவையே மருந்தாக்கிய உணவுமுறை எங்கே?

    உணவுக்கு முன்பின் மருந்துகள் உண்பது தான் இங்கே!

    சமத்துவம் மேலோங்கிய சமுதாயம் எங்கே?

    சாதிகளை காரணங்காட்டி சண்டைகள் தான் இங்கே!

    நெற்பயிர் முளைத்த விளைநிலங்கள் எங்கே?

    பல மாடிக்கட்டிடங்கள் மட்டும் தான் இங்கே!

    ஆறுகள் சங்கமிக்க கடலொன்று பிறக்கும்!

    இளைஞர்கள் ஒன்றிணைந்தால் நல்ல சமூகம் பிறக்கும்!

    கண்ணியத்தின் கட்டுப்பாட்டால் பெண்ணியத்தை வளர விடு!

    கனவுகளை நினைவாக்கக் குழந்தைத் தொழிலாளர்களுக்கு விடுதலை கொடு!

    கவனமில்லா பயணத்தைக் கனிவோடு நிறுத்திவிடு!

    கனத்த இதயத்தையும் கருணையால் மாற்றிவிடு!

    பட்டினியில்லா சமூகத்தைப் பக்குவமாய்ப் பரப்பிவிடு!

    பூவுலகின் நலன்காக்க புதுமை பல படைத்துவிடு!

    பெற்றவர்கள் நலன்காக்க முதியோரில்லத்தை மூடிவிடு!

    சாதி மத பேதமின்மையை சமூகத்தில் மூடிவிடு!

    செய்யும் தொழில் தெய்வமென்று சத்தமாக உரைத்துவிடு!

    நகோதரத்துவம் நாளும்வளர சமத்துவத்தைப் புகுத்திவிடு!

    விவசாயிகளின் வேதனையை விரல் கொண்டு துடைத்துவிடு!

    விண்ணுலகிலும் நம்கொடியை பட்டொளிவீசிப் பறக்கவிடு…!

    சொந்தங்களும் பந்தங்களும் மனித நேயத்தின் மலர்களே!

    ந. உமாதாணு

    கணித மேதை,

    பொது செயலாளர், மனித நேயப் பேரவையின் உலக சமாதான நட்புறவுப் பூங்கா,

    தலைவர், கணிதம் இனிக்கும் ஆய்வு மையம்,

    கோவை.

    நம் அனைவருக்கும் ஒரே மாதிரி

    திறமை இல்லாமல் இருக்கலாம், ஆனால்

    அனைவருக்கும் திறமையை வளர்க்க

    ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன.

    என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஐயா அவர்களின் கூற்று. இக்கூற்றை தனது வாழ்வில் பேணிக்காத்து வருபவர்.

    ஏழ்மைக் காற்றை எப்போதும் சுவாசிக்கும் குடும்பப் பின்னணியிலிருந்து பிறந்து தனது அசாத்திய கணித அறிவால் இன்று அகிலமெங்கும் அசத்தி வரும் கணித மேதை இவர்.

    ஐ.நா. பொது செயலாளர் பான்.கீ.மூன், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், நெல்சன் மண்டேலா, போப் ஜான் பால், ராஜிவ் காந்தி, சோனியாகாந்தி போன்ற உலகத் தலைவர்களின் பாராட்டுப் பெற்றவர்.

    தான், தனது குடும்பம், தனது பிள்ளைகள் என்று வாழ்வோர் மத்தியில் இந்த சமூகம் சுமூகமாக இருக்க வேண்டும் என்று மனித நேயப் பேரவை என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் பல சேவைகள் செய்து வருகிறார்.

    ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பதை நிதர்சனப்படுத்தும் விதமாக இவரின் வெற்றிக்குப் பின்னால் இவரின் மனைவி கனகம் அவர்கள் ஒரு உந்து சக்தியாக இருந்து வருகிறார்.

    கணித மேதை, சிறந்த ஆசிரியர், நல்ல மனிதர், சமூக சேவகர், இயற்கை ஆர்வலர் கணித ஆராய்ச்சியாளர், தலை சிறந்த நிர்வாகி என பன்முகத் திறமையுடைய ஐயா திரு. ந. உமாதாணு அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.

    கே: நீங்கள் பிறந்தது வளர்ந்தது பற்றிச் சொல்லுங்கள்?

    சூரியனின் பிறப்பும் வள்ளுவரின் சிறப்பும் கொண்ட தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் அஞ்சுகிராமம் என்றும் சிற்றூரிலுள்ள சிவராமபுரம் என்னும் குக்கிராமத்தில் பிறந்தேன். பெற்றோர் திரு. நல்லசிவம் செட்டியார்-சரஸ்வதி அம்மமாள் அவர்களின் மூத்த மகனாகப் பிறந்தேன். விவசாயப் பின்னணியுடைய குடும்பம் என்பதால் மிகவும் வறுமையான குடும்பம் தான். அந்த வறுமையிலும் என் பெற்றோர்கள் எங்களை நன்றாகப் படிக்க வைத்தார்கள். இதனால் அருகிலுள்ள அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் நான் படித்தேன். குடும்ப சூழலின் காரணமாக என்னுடைய சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்தும் படிப்பு சார்ந்ததாகவே இருந்தது. இதனால் பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவன் என்ற பெயரை எடுத்தேன்.

    கே: நீங்கள் கணிதத் துறையைத் தேர்ந்தெடுத்தது பற்றி?

    என்னுடன் பிறந்தவர்கள் நான்கு பேர், நான் தான் மூத்த மகன் எங்கள் குடும்பத்தின் முதல் நிலைப்பட்டதாரி. நான் பட்டப்படிப்பு படிக்கப் போகிறேன் என்று சொன்னவுடன் என் பெற்றோர்கள் யோசித்தார்கள். நமது குடும்பம் ஏற்கனவே வறுமையில் இருக்கிறது, அப்படியிருக்கும் போது அதிக பணம் கொடுத்து படிக்க வைக்க முடியாது என்று சொன்னார்கள். ஆனாலும் என்னுடைய ஆசையை அவர்களால் நிராகரிக்க முடியவில்லை. உடனே, சரி என்று சொல்லியதுடன் ஒரு கட்டளையும் இட்டார்கள். அது என்ன வென்றால் எந்தப் பிரிவில் கட்டணம் குறைவாக இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்து படி என்று சொன்னார்கள். நானும் அவர்களின் வாக்கை ஏற்றுக்கொண்டு கட்டணத்தைப் பார்க்கும் பொழுது கணிதத் துறையில் குறைவாக இருந்ததால் அதைத் தேர்ந்தெடுத்தேன். ஸ்காட் கிருத்துவக் கல்லூயில் பயின்றேன். என் தாய்வழித் தாத்தா திரு. முத்தசாமி செட்டியார் உதவியால் தான் என்னால் படிக்க முடிந்தது.

    இப்படி சேர்ந்தது பிற்காலத்தில் அதுவே என்னுடைய வாழ்க்கையாக வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இப்படித்தான் கணிதத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன்.

    கே: உங்களின் முதல் ஆசிரியர் பணி குறித்துச் சொல்லுங்கள்?

    என்னுடய 21 வயதில் கல்லூரிப் படிப்பை முடித்தேன். 1962 ஆம் ஆண்டு கோவையில் ராஜலட்சுமி மில்ஸ் உயர்நிலைப் பள்ளியில் நேர்காணல் ஒன்று நடந்தது. நானும் அதில் கலந்து கொண்டேன். என்னை பள்ளி தலைமையாசிரியர் கணிதம் குறித்து ஒரு பாடத்தை எடுக்கச் சொன்னார். நான் கற்ற அனுபவத்தின் மூலம் ஒரு பாடத்தை நடத்தி காட்டினேன். இதைப் பார்த்த அடுத்த கணமே பதவி ஆணையைக் கொடுத்துவிட்டார்கள்.  ஐந்து ஆண்டுகள் இந்தப் பள்ளியில் பணியாற்றினேன்.

    அதன் பிறகு தேவாங்கா மேல்நிலைப்பள்ளியில் 30 ஆண்டு காலம் பணியாற்றினேன். மொத்தம் என்னுடைய ஆசிரியர் பயணம் 35 ஆண்டு காலம் தொடர்ந்தது.  இந்த 35 ஆண்டு காலத்தில் பணியாற்றிக் கொண்டே எம். ஏ. ஆங்கிலம், எம். ஏ. அரசியல் அறிவியல், எம்.எட் போன்ற பட்டப்படிப்பை முடித்தேன். 1997 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.  ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் நிறைய மாணவர்களை உருவாக்கிய பெருமை எப்போதும் என்னை மகிழ்ச்சிப்படுத்தும்.

    கே: ஐ.நா வுடன் பணியாற்றிய அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

    அப்போது இந்தியா சோவித் யூனியன் கலாச்சார கழகம் என்ற ஒரு அமைப்பு இருந்தது. அதில் நான் பொதுச் செயலாளராகப் பணியாற்றினேன். அப்போது உலக சமாதானம் என்ற பெயரில் கோவை மாவட்டத்திலுள்ள எல்லா பள்ளிகளையும் ஒருங்கிணைத்து சமாதான ஓட்டம் ஒன்றை ஏற்படுத்தினோம். அக்காலக்கட்டத்தில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.

    அப்போது ஐ.நா சபையின் பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. அதில் கோவை அவிநாசிலிங்கம் மற்றும் லைன்ஸ் கிளப் போன்ற அமைப்புகளுடன் இணைந்து பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்தோம். அதே போல் ஐ.நாவின் வைர விழாவையும் மருத மலை தேவஸ்தானப்பள்ளியில் நடத்தினோம். இதில் பல்வேறு நாட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டது.  இதையெல்லாம் பாராட்டி சோவியத் நாட்டிற்கு என்னை அழைத்து ஒரு 15 நாட்கள் கௌரவித்தார்கள்.

    மேலும் புரட்சியாளர் லெனின் அவர்கள் எழுதிய தேசிய இனப்பிரச்சனைகளும் தீர்வுகளும் என்ற தலைப்பில் 1000 பக்கம் அளவில் புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்தை நான் தமிழில் மொழிபெயர்த்தேன். சோவித் நாட்டிற்கு தமிழ்நாட்டிலிருந்து நான் போகும் பொழுது அங்குள்ள ஒரு நூலகத்திற்கு  என்னை அழைத்துச் சென்று தமிழ்ப்புத்தகங்ளை எல்லாம் காட்டினார்கள். நான் தான் அந்தப் புத்தகத்தை எழுதினேன் என்று தெரியாமல் அந்தப்புத்தகத்தை காட்டி, தமிழர்கள் இங்கு வரும் போதெல்லாம் இந்தப்புத்தகத்தை காட்டுவார்கள் என்று சொன்னார். இந்தப் புத்தகத்தை எழுதியது நான் தான் என்று சொன்னவுடன் அவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

    கே: உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை நட்புறவு எப்படி ஏற்பட்டது?

    உலக சமாதானம் என்ற பெருண்மையில் நான் பல நாட்டுத் தலைவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். அக்கடித்த்தில் போரில்லா நாடு, எங்கும் ஒற்றுமையுணர்வு, வேலைவாய்ப்பின்மை போன்றவை அடியொடு ஒழிய வேண்டும் என்பது தான் என்று எழுதினேன். அப்போது தான் நெல்சன் மண்டேலா அவர்களுக்கு Hero of humanism என்ற பட்டத்தை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கடிதம் எழுதினேன். அவர் எனக்கு உடனே பதில் கடிதம் எழுதினார். உங்களின் பட்டத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று எழுதினார். கிருத்தவர்களின் கடவுள் போப் ஜான் பால் அவர்கள் என்னை பாராட்டி கடிதம் எழுதினார். அவர்களைப் போல  ஐ.நாவின் பொது செயலாளர் பால்கீன் மூன் எனக்கு கடிதம் எழுதியதில் Dr. Umadhanu என்று எழுதி என்னை நெகிழ்வடைய செய்தார். இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர், இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி, அவரின் மனைவி சோனியா காந்தி போன்றோர்களின் பாராட்டும் கிடைத்தது.

    அதே போல் இங்குள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி தாளாளர்கள் என பலரின் பாராட்டும் கிடைத்தது.[hide]

    கே: மனித நேயப் பேரவையின் உலக சமாதான நட்புறவு பூங்கா தொடங்கியது பற்றிச் சொல்லுங்கள்?

    எங்கும் ஒற்றுமை நிகழ்ந்திட வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசையும் கனவும்.

    இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கோவை மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட அரசுப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளை சார்ந்த 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மற்றும், 100 சதவீதம் தேர்ச்சிப் பெறும் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைமையாளர்களை அழைத்து திரு. மகாலிங்கம், வானவராயர் போன்றவர்களை அழைத்து வருவோம்.  இதற்கெல்லாம் மிகப்பெரும் காரணமாக இருப்பவர் வடவள்ளியிலுள்ள பங்களாத் தோட்டம் சிறப்பு புரவலர் உயர்திரு. ம.ராமசாமி அவர்களையே சாரும். இவர் கேட்கும் பொழுதெல்லாம் உதவிகள் செய்யக்கூடியவர், மிகுந்த சமூக சேவையாளர். மேலும் எல்லா நேரத்திலும் எனக்கு உதவியாக இருக்கும் என்னுடைய மனைவி திருமதி. கனகம் உமாதாணு அவர்கள்.

    பள்ளிக்குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உதவிகளைப் போலவே முதியோர்தினம் மற்றும் சர்வதேச வன்முறை எதிர்ப்பு நாள் இன்று (அக் 2 காந்திஜெயந்தி) வயதானவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது.  வீட்டில் வயதான பெரியவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களும் உதவிகள் செய்து வருகிறோம்.இது தொடர்ந்து 13 ஆண்டு காலம் செய்து வருகிறோம்.

    சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்று மனித நேயப் பேரவையின் உலக சமாதானமும் போரில்லாத உலகமும் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வாசித்தேன். அது பெரிய அளவில் பேசப்பட்டது.

    மனிதர் குலத்தைப் பாதித்துக் கொண்டிருக்ககூடிய 11 கொடுமைகளையும் தொகுத்து, TUCGPAD VIEW என்ற சொற்டொரை உருவாக்கியச் செய்தியை அறிவித்ததும் வருகைத் தந்திருந்த பிரநிதிகள் அனைவரும் பாராட்டினர். பின்னர்  ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.

    கே: பொது சேவைக்கு வர வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?

    இதற்கு என் பள்ளி ஆசிரியர்கள் காரணம். பள்ளியில் பாடத்தைப் போதிக்கும் போது பொது சேவை குறித்து நிறைய சொல்லித்தருவார்கள். இதையெல்லாம் கேட்கும் போதே மனதில் பதிந்தது. குறிப்பாக, டாக்டர். பாலமோகன்தம்பி அவர்கள் எங்களுக்கு ஆங்கில ஆசிரியராக இருந்தார். இவர்களை எல்லாம் பார்த்து வளர்ந்தவர் என்ற முறையில் பணியாற்றும் பொழுது நானும் இவர்களைப் போலவே என்னை தகவமைத்துக் கொண்டேன்.

    ஒரு மாணவன் பள்ளிக்கு வரவில்லையென்றால் அவனின் வீட்டிற்குச் சென்று அழைத்து வருவேன்.

    அரசு உதவிப்பெறும் தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பென்சன் அப்போது கொடுப்பதில்லை. அப்போது ஆட்சியில் எம்.ஜி.ஆர் அவர்கள் இருந்தார்.  அவருக்கு ஒரு கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதினேன். அந்த கடிதம் அவரின் பார்வைக்கு போனதும் உடனடியாக நிவர்த்தி செய்து கொடுத்தார்.

    பணியாற்றிய காலத்திலும் சரி, தற்போதும் சரி ஆசிரியர்களின் நன்மைக்காக பல நலத்திட்டங்கள் கொண்டு வந்தேன்.

    கே: பொதுவாகவே கணிதம் என்றாலே கடினம் என்று மாணவர்கள் நினைப்பது ஏன்?

    என்னுடைய 35 ஆண்டு காலம் கணித ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுக்குப் பின்னர் கணிதம் இனிக்கும் ஆய்வு மையம் என்ற ஒரு அமைப்பை நிறுவினேன். இதை கணித மேதை ராமானுஜம் பிறந்தநாளான டிசம்பர் 22 ஆம் நாள்  2012 ஆம் ஆண்டு தொடங்கினேன். இதற்காக நான் கணிதம் சார்ந்த அய்வுகளைச் செய்தேன். இந்த ஆய்வின் முடிவில் கணிதம் கடினமல்ல எளிமை தான் என்றும், புதிய சிந்தனையைத் தூண்டக்கூடியதாகவும் இருந்தது.

    கணித பாடத்தை எளிமையாக கற்பிப்பதற்காக 3 மணி நேரம் ஓடக்கூடிய டி.விடி மற்றும் புத்தகம் ஒன்றும் வெளியிட்டிருக்கிறேன். தற்போது கணித பெட்டகம் ஒன்றை தயாரித்து கொண்டிருக்கிறேன்.

    கே:  நீங்கள் கண்டுபிடித்த கணித முறையைப் பற்றிச் சொல்லுங்கள்?

    ஓர் எண் 2,3,4,5,6,7,8,10,11 ஆகிய எண்களால் வகுபடுவதற்கு சோதனைகள் உள்ளன. ஆனால் ஓர் எண் 7 ஆல் வகுபதற்கான சோதனைகள் கணித புத்தகங்களில் இடம் பெறவில்லை, இதை என்னுடைய ஆய்வில் கண்டுபிடித்தேன்.

    371 என்ற எண் 7 ஆல் வகுப்படுமா? என்று சோதித்துப் பார்க்க வேண்டுமானால் அதற்கான சோதனை என்ன? என்று பார்ப்போம். இறுதியில் இருக்கும் 1 என்ற  எண்ணை 2 ஆல் பெருக்கி மீதியுள்ள 37 லிருந்து கழித்து விட வேண்டும். 35 கிடைக்கிறது. இந்த 35 என்ற எண் 7 ஆல் வகுபடுகிறது. ஆகவே, 371 என்ற எண் 7 ஆல் சோதனையில் 7 ஆல் வகுபடும் என்று தெரிந்து கொள்ள முடியும்.

    கே: இலக்கியத்திற்கும் கணிதத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிச் சொல்லுங்கள்?

    இலக்கியத்திற்கும் கணிதத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று என்னுடைய ஆய்வு முடிவில் வெளிக் கொணர்ந்தேன்.

    குறிப்பாக திருக்குறளுக்கும், கணிதத்திற்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டேன். 7 என்ற சிறப்புமிகு எண்ணுக்கும் திருக்குறளுக்கும் உள்ள தொடர்பை எல்லோரும் வியக்கும் படி செய்தேன்.

    ஒருவரின் பிறந்த ஆண்டை திருக்குறளில் மூலமாக காண்பதற்கான முறையையும் ஆய்வு செய்தேன்.

    இவ்வாறு கணிதத்தில் செய்துள்ள ஆய்வு முடிவுகளெல்லாம் மாணவர்களுக்கு தெரிய வரும் போது கணித பாடம் மாணவிகளுக்கு மிகுந்த ஆர்வத்தை கொடுப்பதாக  அமையும்.

    கணிதப் பாடம் கடினமானதல்ல அது மிகவும் எளிதானது மட்டுமல்ல இனிமையானது என்பதை பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள், யூனூஸ் முறைகள் மூலமாக கணித உலகிற்கு தெரிவிக்கும் இந்த கணிதம் இனிக்கும் ஆய்வு மையம் செய்து வருகிறது. இதன் நிர்வாக இயக்குனரும் என்னுடைய மனைவியின் மிகப்பெரிய ஒத்துழைப்பும், ஊக்குவிப்பும் என்னால் இன்னும்பல சாதனைகளை செய்ய முடியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

    கே: பெற்ற விருதுகள் பாராட்டுகள்?

    இங்குள்ள எல்லா தொலைக்காட்சியும், செய்தித்தாள்களும் என்னை நேர்முகம் செய்திருக்கிறது.

    கணிதம் என்றாலே பயந்த மாணவர்கள் கூட என்னிடம் வந்த பின்னர் மிக எளிமையாக புரிந்து கொண்டு விட்டதாக அவர்களின் பெற்றோர்கள் என்னை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள்.

    சமாதானபுறா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த தலைமைப்பண்பாளர் விருது, ஒரிசா மாநில அமைப்பு தந்தது. கோவையின் நாயகன் என்ற விருது என பல விருதுகளைப் பெற்றிருக்கிறேன். தேர்ந்தெடுத்த முத்துக்கள் (COLLECTED GEMS) என்ற ஆங்கில புத்தகங்கள்

    உலகத் தலைவர்களின் பாராட்டு எங்களுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக கருதுகிறோம்.[/hide]

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

     நேயர் கேள்வி…?

    விபத்தில்லா சாலை எப்படியானதாக இருக்க வேண்டும். இந்த சமுதாயத்திற்கு நீங்கள் தரும் விழிப்புணர்வு பற்றி?

    அருணா தேவி, பொள்ளாச்சி.

    சாலை விபத்துகள் இன்று பெரும் பிரச்சனையாகிவிட்டது. ஏழையும், பணக்காரனும், படித்தவரும், படிக்காதவரும், ஆணும், பெண்ணும், பெரியவர்களும், சிறியவர்களும் பரிதாபமாக சாலையில் இறந்து போகிறார்கள் அல்லது பெரும் காயங்களுக்கு ஆளாகிறார்கள். இறந்தவரோ அல்லது படுகாயமடைந்து உயிருக்குப் போராடுபவரோ எந்த தவறும் செய்யாதவர்களாகக் கூட இருப்பார். விபத்திற்குள்ளானவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இழப்புகள் கணக்கிடலாகாதது; ஈடு செய்ய முடியாதது.

    சென்ற ஆண்டு மட்டும் இந்தியாவில் 4,64,910 விபத்துக்கள் நடந்துள்ளன, இதில் 1,47,913 பேர் உயிரிழந்துள்ளார்கள், 4,70,975 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு நடந்த விபத்துகளில் 16,157 பேர் மாண்டனர் 77,572 பேர் படுகாயமுற்றார்கள். இது தவிர இரயிலில் அடிபட்டு இறந்தவர்கள் 2600 பேர்.

    இன்று உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயை விட கொடியதாக இருக்கிறது சாலை விபத்துக்கள். அதிலும் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் வாகன விபத்தில் சிக்கும் செய்திகள் கேட்டால் இதயமே வெடிக்கிறது. புத்திர சோகம், பெரிய சோகம் என்பார்கள். குடும்பத்தலைவன் விபத்தில் இறந்து வருமானமிழந்த குடும்பம் நடுத்தெருவுக்கு வருவதையும் பார்க்கிறோம். இன்று பெரும்பாலும் காவல் நிலையத்தில் கூட வாகன விபத்துக்குள்ளாகி உடல் உருக்குலைந்து போன காவலர்களையும் அதிகாரிகளையும் பார்க்க முடியும். விபத்துக்கும் அதன் பாதிப்பிற்கும் உள்ளாகாத மனிதர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு சாலை விபத்துக்கள் சாதாரணமாகிவிட்டன எனலாம்.

    சாலை விபத்துக்கள் சமீபகால உயிர் பாதுகாப்பு பிரச்சனையே அன்று வேறில்லை. சென்னைக்கு முதல் மோட்டார் வாகனம் 1897 ஆம் ஆண்டு வந்திருக்கிறது, அதை எவரும் ஓட்ட தெரியாததால் ஸ்பென்ஸர் கட்டிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் EID Parry நிறுவனத்தின் மேலாளர், இங்கிலாந்து சென்று வாகனம் ஓட்ட கற்றுத்தேர்ந்து 1900 ஆம் ஆண்டு அதை மவுண்ட் ரோட்டில் ஓட்டியிருக்கிறார். அந்த ஒரு கார் ஓடும்போது வாகன விபத்திற்கு வாய்ப்பில்லை, ஆனால் வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில் விபத்துக்களும் பெருகிவிட்டன.

    இன்று சென்னையில் மட்டும் 53,94,413 மோட்டார் வாகனங்கள், அதில் இருசக்கர வாகனங்கள் 42,54,811. தமிழகத்தில் 2,56,61,847 மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் பெருகியதால் விபத்துக்களும் அதிகரித்து விட்டன. விபத்துக்களுக்கு அந்த வாகனங்கள் கூட காரணமாக இருக்கின்றன. பழைய சீரற்ற வாகனங்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றில்  சரியாக பிரேக் இல்லை என்றால் ரோட்டில் நடப்பவர் கதி என்ன என்று சிந்தித்துப் பாருங்கள். டயர், உதிரிபாகங்கள் கழன்று போய் விபத்துகள் நடந்துள்ளன. வாகனங்கள் பழது பாக்காமல் ஓட்டுவதாலும் விபத்துக்கள் நடக்கிறது. பேருந்துகளில் தரை தளத்திலிருந்த ஓட்டையில் விழுந்து மாணவர்கள் இறந்த நிகழ்ச்சிகளையும் செய்தித்தாள்களில் படித்தோம். பழுதடைந்த வாகனங்களை சரி செய்ய தொழில்நுட்பம் தெரிந்த தரமான பொறிமுறையாளர்கள் இன்னும் அதிகம் தேவைப்படுகிறார்கள்.[hide]

    பெரும்பாலும் விபத்துக்கள், ஓட்டுநரின் கவனக் குறைவால் தான் ஏற்படுகின்றன. பெரிய வாகனங்கள் ஓட்டுபவர்கள் வெகுநேரம் தூங்காமல் வாகனம் ஓட்டுகிறார்கள், இதனால் விபத்து நிகழ்கிறது. மிகவும் வேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனங்கள் ஓட்டும்போது கட்டுப்பாடு இழந்து விபத்து நடக்கிறது. திடீரென்று வாகனங்கள் நிறுத்துவதாலும் வாகனத்தை திருப்புவதால், மோதல் ஏற்பட்டு அதில் சிறிய வாகனத்தில் வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்ற இலகுவான வாகனத்தில் பயணிப்பவர்கள்தான் பெரும்பாலும் பேராபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். பெரும் வாகன ஓட்டிகளின் அராஜகம் இதற்கு ஒரு காரணம், சிறு வாகனங்கள் ஓட்டுபவரின் அலட்சியமும் இதற்கு ஒரு காரணம்.

    குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் பேராபத்து சாலைகளில் வேறில்லை. இதனால்தான் குடித்து வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்கிறது காவல்துறை. இருந்தாலும் குடிபோதையில் வாகம் ஓட்டி அப்பாவி பாதசாரிகளின் உயிரைக் குடிக்கும் நபர்கள் வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பெரிய தண்டனைகளும் அபராதங்களும் வாகன விபத்துக்களை குறைக்கவில்லை; தவறு செய்பவர்களுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தவும் இல்லை. எனவே சாலை விபத்துக்களின் காரணம் குறித்தும் அவற்றை தடுத்து நிறுத்தும் வழிமுறை குறித்தும் ஆராய வேண்டியுள்ளது. இதில் வாகன அபராதம் கூட்டுவதால் விபத்துக்கள் எந்த அளவு குறையும் என்பதையும் அறிவியல் பூர்வமாக ஆராய வேண்டும்.

    வளர்ந்துவிட்ட நாடுகளில் ஓட்டுநர் உரிமம் எளிதில் கிடைப்பதில்லை. கிட்டத்தட்ட ஒரு பட்டப்படிப்பைப் போல தேர்வுகள் எழுத வேண்டும், அதில் பலமுறை தோல்வியடைய நேரிடும், பின்னர்தான் வாகனம் ஓட்டும் உரிமம் பெற முடியும். அப்படி பாடுபட்டு உரிமம் பெற்றுவிட்ட நபருக்கு வாகன தொழில்நுட்பம், அதை சரியாக ஓட்டும் விதம், வாகன பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, வேகக் கட்டுப்பாடு, சிக்னல் போன்றவை நன்கு தெரிந்திருக்கும். அவர் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவார். நம் நாட்டில் வாகன உரிமம் பெற இப்படியெல்லாம் அரும்பாடு பட தேவையில்லை, எனவே வாகன உரிமம் பெற்றுவிட்டவருக்கு பாதுகாப்பாக வாகனம் ஓட்டத் தெரியும் என்றும் நம்பிவிட முடியாது. பெரும்பாலும் வாகன ஓட்டிகள் முறையாக பயிற்சி எடுத்திருக்கவும் மாட்டார்கள். யாரிடமிருந்தாவது ஓட்டக் கற்றிருப்பார்கள். பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது ஒரு விஞ்ஞானம், ஒரு நுட்பம், அது ஒரு கலை. அதற்கு முறையான பயிற்சி எடுக்க வேண்டும். அதற்கான உயர் ரக பயிற்சி மையங்கள் பல தேவைப்படுகின்றன.

    பாதசாரிகளும் இருசக்கர வாகன ஓட்டிகளும்தான் பாதுகாப்பற்றவர்கள் என்று எளிதில் சொல்லலாம். பெரிய விபத்துக்குள்ளானவர்களில் பெரும்பாலும் இவர்கள்தான். இவர்கள் மீதும் தவறு உண்டு. ஹெல்மட் அணிவதற்கு அவ்வளவு தயக்கம்! தலை தப்பும் என்ற நல்ல காரணத்திற்கு கூட தலைக்கவசம் அணிவது இல்லை. போலீஸ் காவலர்களைக் கண்டால் மட்டும் சிலர் அணிந்து கொள்கிறார்கள். தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவதும், மூன்று நான்கு நபர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் பயணிப்பது, இவையனைத்தும் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்திருந்தும் துணிந்து அலட்சியமான இவர்களைத் தற்கொலைப் படையினர் எனலாம். இந்த கட்டுப்பாடற்ற அல்லது ஒழுக்கமற்ற சாலை நடவடிக்கைகளை ‘கலாச்சாரம்’ என்கிறோம். சரியான சாலை பாதுகாப்பு கலாச்சாரம் நம்மிடம் இல்லை! அதற்கு கல்வி, சமூக, பொருளாதார, உளவியல், நம்பிக்கை கட்டமைப்பு காரணமாக இருக்கின்றன. கலாச்சாரத்தில் அடிப்படை மாற்றங்கள் வந்தாலொழிய சாலைகளில் நல்லொழுக்கத்தைப் எதிர்பார்க்க முடியாது. காவல்துறை, சட்டம், அரசு என்று குறை சொல்லுவதாலும், பழி போடுவதாலும் எந்த பெரிய மாற்றமும் வந்துவிடப் போவது இல்லை, விபத்துக்கள் பெருமளவில் குறையப்போவதும் இல்லை.

    நமது உயிரை மதிக்க வேண்டும்; அதைவிட மேலாக மற்றவர்களின் உயிரையும் மதிக்கிறோம் என்பதற்கு சாட்சி சாலை விதிகளை கடைபிடிப்பதும், சாலையில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதும்தான். உண்மையான ஒழுக்கம் என்பதும் அதுதான். இந்த ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் சமுதாயத்திற்கு நான் தரும் விழிப்புணர்வு.[/hide]

    இந்த இதழை மேலும்

    வைர வரிகள்…

    நேரம் தான் நமக்கு மிக அவசியமான தேவை. ஆனால் அதைத்தான் மிகவும் அதிகமாக வீணாக்குகிறோம் விட்மன்.

    ஒவ்வொரு தங்கச் சரிகையின் இழையில் எவ்வளவு மதிப்பு உள்ளதோ, அவ்வளவு மதிப்புள்ளது ஒவ்வொரு நிமிடமும் ஜே. மேஜன்.

    கடவுளுக்கு அடுத்தபடியாக நேரத்தை மதித்தல் ஒழுக்க முறையில் உயர்ந்த விதியாகும்.  நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் போதிய நேரம் இருக்கத் தான் செய்யும் கதே

    கண்ணியமான புகழுக்கு எதுவழி என்றால் நீ வெளியே எப்படித் தோன்ற விரும்புகிறாயோ அப்படியே ஆகி விடப் பயிற்சி செய் சாக்ரடீஸ்.

    உடலுக்கு உயிர் எப்படியோ, மரத்திற்கு வேர் எப்படியோ, அப்படி செயல்களுக்கு சரியான நோக்கம் இன்றியமையாதவையாகும்-ஸிம்மன்ஸ்.

    கடவுள் தூபத்தையும் காணிக்கையையும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் வணங்குபவரின் மனத்தையும் பக்தியையும் மட்டுமே ஏற்றுக் கொள்கிறார் செனிகா.

    படிப்பதைப் போல் செலவு குறைந்த பொழுது போக்கு வேறில்லை. அதைப் போல் இன்பம் அளிப்பதும் வேறு ஒன்றும் இல்லை- மாண்டெயின்.

    சிறந்தவர்களேடு மட்டும் நம்மனம் உறவாடுவதற்குச் சிறந்த புத்தகங்களையே தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிளினி.

    பணம் அடித்தளம் காண முடியாத கடல் அதில் கௌரவம் மனசாட்சி உண்மை ஆகியவை எல்லாம் முழ்கிவிடும் கோல்லே.

    நீண்ட அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட சிறு வாக்கியங்களே பழமொழிகள்.பழமொழி பலருடைய ஞானத்தைப் பெற்று ஒருவருடைய புத்திநுட்பத்தால் அமைந்தது ரஸ்ஸல்.

    வியாபார உலகில் தங்க நாணயங்கள் எப்படியோ, அப்படி சிந்தனை உலகில் பழமொழிகள் இரண்டும் அளவில் சிறியவை. மக்களிடத்தில் பழக்கத்தில் உள்ளவை மாத்யூஸ்.

    மற்றவர்களுடைய நற்செயல்களைப் பற்றிச் சிந்திப்பதில் மகிழ்ச்சி அடையாதவன் எந்த வித நற்செயலையும் செய்ய முடியாது லவேட்டர்.

    பாராட்டு உன்னதமான உள்ளங்களை மேலும் ஊக்குவிக்கும். பல விதமானவர்கள் பாராட்ரோடு திருப்தி அடைந்து விடுவார்கள். பாராட்டுவது தாமதம் செய்தால் அன்பு குறையும். பொறாமை மிகும் கோல்டன்.

    பிடிவாதமும் முரண்பாடும் காகிதக் காற்றாடிகளைப் போன்றவை. அவைகளை இழுத்துக் கொண்டிருக்கும் வரை தான் அவை உயரே பறக்கும் பிராங்கலின்.

    பிரார்த்தனை என்பது சொற்களை அடுக்குவது அல்ல, மனப்பூர்வமானது. ஆதரவற்ற நிலையை விளக்குவது அன்று. உள்ளத்தின் அந்தரங்க உண்மையாகும் விக்டர் ஹியுகோ.

    கடவுளிடமத் எதை வேண்டிக் கொண்டாலும் அதற்காக உழைக்க வேண்டும். பிரார்த்தனையைச் சுருக்கமாக விளக்கினால் அது நமது விருப்பத்தைக் கடவுள் பக்கமாகத் திருப்புவதாகும்.

    கடவுள் நம்மிடமிருந்து தொலைவில் இருக்கிறார். ஆனால் பிரார்த்தனை அவரை நம்மிடம் கொண்டு வந்து நம் முயற்சிகளுடன் இணைந்து விடுகிறார் லூதர்.

    வாழ்க்கையில் அடையும் பேறுகளுள் புகழே முதன்மையானது. உடல் மண்ணுக்குள் போன பின்பு பெருமையுள்ள புகழ் மட்டும் உயிருடன் வாழ்ந்து வருகிறது ஷில்லர்.

    நல்ல எண்ணமும் பெயரும் பற்பல செயல்களை வைத்து உண்டாவது. ஆனால் இரண்டுமே ஒரே செயலில் போய்விடவும் கூடும் ஜெய்பரே.

    புத்தகங்கள் காலம் என்ற கடலின் கரையில் நிறுத்தப்பட்டுள்ள கலங்கரை விளக்குகள். நாம் பெறும் கருத்துகளின் அறிவைச் செயலில் பயன்படுத்தாவிட்டால் நூல்கள் வெறும் பழைதாள்களே விப்பின்.[hide]

    புத்தகங்கள், ஞானிகள் வீரர்களுடைய இதயங்களை நம் உள்ளத்திற்குப் பிரதி பலித்துக் காட்டும் கண்ணாடிகளாக விளங்குகின்றன கிப்பன்.

    ஒரு நாள் இதயத்தில் இருந்து வெளி வந்து இருந்தால் அது மற்ற இதயங்களுக்குள் புகுவதற்கு வழி செய்து கொள்ளும் கார்வைல்.

    நூல் நிலையம் மனதின் மருந்து. அது மருந்தாக இருக்க வேண்டுமானால் நல்ல புத்தகங்களை மிகுந்த கவனத்துடன் தேர்ந்து எடுக்க வேண்டும் ஏராஸ்மஸ்.

    நல்ல நூல்கள் வெற்றிக்கு வழிகாட்டும் அது உள்ளத்திற்கு உணவு அளிக்கும். புத்தகம் இல்லாத விடு. ஜன்னல் இல்லாத அறை போன்றது பட்லர்.

    சிரிக்க முடியாது முகம் நல்லதாக இருக்க முடியாது.ஒருவர் புன்னகை புளியும் முறையைக் கொண்டு அவர் குணத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் போவீ.

    கடவுளுக்கு அடுத்தபடியாக பெண்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். முதலில் நமக்கு வாழ்வு அளித்தவர்கள் அவர்கள். பிறகு அதை வாழத்தக்கதாகவும் அவர்களே செய்கின்றனர் செஸ்டர் பீல்டு.

    பெண்களைப் பெருமிதம் கொள்ளச் செய்வது அழகு. அவர்களை மிகவும் பாராட்டும் படி கூறுவது பண்பு. அவர்களைத் தெய்விகமாகத் தோன்றச் செய்வது அடக்கம் சேக்ஸ்பியர்.

    பெற்றோர்களின் குரல், தெய்வத்தின் குரலாகும். ஏன் என்றால் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இறைவனின் பிரதிநிதியாக இருக்கிறார்கள் ஸிகோர்னி.

    அதிகமாய் பேசுதல் செருக்கின் அடையாளம். சொற்களை அள்ளிக் கொட்டுபவன் செயலில் கருமியாக இருப்பான். பேசுபவர்கள் நல்ல செயலாளராக இருப்பதில்லை வால்டர் ராலே.

    பெரும் பேச்சாளர்கள் ஓட்டைப் பாத்திரங்களைப் போன்றவர்கள் அவைகளில் ஊற்றியது எல்லாம் வெளியே போய் விடும். ஸிம்மன்ஸ.[/hide]

    இந்த இதழை மேலும்

    தடம் பதித்த மாமனிதர்கள்..

    நம் பாரத நாடு சுதந்திரம் அடைய பாடுபட்ட மாமனிதர்களை நாம் விரல்விட்டு எண்ண முடியாது. ஆனாலும் இந்திய வரலாற்றில் இடம் பெற்றவர்களைப் பற்றி அறிய இயலும். அந்த வகையில் சிவகங்கைச் சீனம் என்ற சொல்லை நாம் உச்சரிக்கும் போதே நம் மனக்கண்முன் தோன்றுபவர்கள் மருது சகோதரர்கள் ஆவார்கள் சின்ன மருது, பெரிய மருது என்ற அழைக்கப்படும் சகோதரர்களைப் பற்றி இக்கட்டுரை விவரிக்கிறது.

    மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் குறிப்பிடப்பட்டவர்கள் ஆவார்கள். 1857 ல் தோன்றிய சிப்பாய் கலகத்திற்கு முன்பே கி.பி.1785 ம் வருடம் முதல் கி.பி.1801 வரை ஆங்கிலேயரை எதிர்த்தும் இறுதிவரை ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் இவர்கள். சின்ன மருது, பெரிய மருது எனப்படும் இந்த சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் பேராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைந்து ஆங்கிலேயரின் அதிருப்த்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.

    இச்சகோதரர்களின் களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார் கோவில் ஆகும். இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் உடையார் சேர்வை என்ற மொக்க பழனியப்பன் என்பவருக்கும் ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் 1748 ம் வருடம் டிசம்பர் 15 ம் நாள் பெரிய மருதுவும் 1753 ம் வருடம் சின்ன மருதுவும் இவர்கள் மகன்களாகப் பிறந்தனர். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்தில் இருந்ததால் சின்ன மருது பாண்டியர் என்று அழைக்கப்பட்டனர் இவ்விருவரும் சிவகங்கைச் சீமையின் மன்னன் முத்து வடுகநாதரின் போர்ப்படையில் சேர்ந்து, பல்வேறு போர்க்கலைகளைக் கற்று தங்கள் திறமையை பல்வேறு போர்களில் வெளிப்படுத்தினர். இதனை அறிந்து முத்துவடுகநாதர் இச்சகோதரர்கள் இருவரையும் தன் படையின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தனர்.

    கி.பி. 1772 ல் ஜோசப் ஸ்மித் தலைமியிலான கிழக்கிந்திய கம்பெனியின் படை, ஆற்காடு நவாப் வரிவசூலை ஆங்கிலேயரோடு பங்கிட்டு கொள்வதாக ஒப்புதல் செய்து கொண்டு இராமநாதபுரத்தைக் கைப்பற்ற சிவகங்கை மீது படையெடுத்தது. இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுக நாதர் காளையார் கோவில் போரில் பலியானதால், அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மருது பாண்டியர் இருவர் ஆகியோர் திண்டுக்கல் அருகில் உள்ள விருப்பாச்சிக் காட்டுக்குத் தப்பிச் சென்றனர். மருது சகோதரர்கள், காட்டில் இருந்து கொண்டே, தங்கள் படைபலத்தை அதிகரித்துக் கொண்டு 1779 ம் ஆண்டு தமது கிளர்ச்சியைத் தொடங்கி, ஆற்காடு நவாப், தொண்டைமான், கும்பினியார் ஆகியோர்களின் படைகளைத் தோல்வியுரச் செய்து 1780 ல் சிவகங்கைச் சீமையை மீட்டி, வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினார்கள். இந்தப் போரில் பெரிய மருது பாண்டியன் மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனச் சேர்வை பூவந்தி வாயிளிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். மேற்கில் தற்செயலாக வந்த ஹைதர் அலியும் பங்கு கொண்டு சிறப்பித்ததை வரலாறு குறிப்பிட்டுள்ளது.

    வேலு நாச்சியாருக்குப்பின் மருது பாண்டியார்கள் சிவகங்கைச் சீமையைச் சிறப்புடன் ஆண்டு வந்தனர் இவர்களின் புகழ் பற்றிய ஒரு செய்தி இவர்களின் பெருமையை இன்றும் நிலை நாட்டி வருகின்றது. இவர்கள் இருவரும் கோவில் பனியில் நாட்டம் கொண்டிருந்த சமயம் சில மரங்களை வெட்டுவதற்கான கட்டளையை வெளியிட்டனர் அது சமயம் காவலர்கள் சென்று மக்களை அணுகும் போது ஒரு குடிமகன், தான் வளர்த்த இரண்டு மரங்களை வெட்ட அனுமதிக்கவில்லை. அதற்கு பதிலாக, தன் தலையை வெட்டிக் கொள்ளும்படி வேண்டியிருக்கின்றான். இதை அறிந்த மருது பாண்டியார்கள் நேரில் சென்று பார்த்த போது அக்குடிமகன், நான் மருது பாண்டியர்  சகோதரர்களில் இது வரை பார்த்தது இல்லை. அவர்களின் நாட்டுப்பற்றையும் மக்களின் மீது அவர்கள் காட்டும் அன்பையும் அறிந்து கொண்டு இந்த மரங்கள் இரண்டையும் பெரிய மருது பாண்டியர், சின்ன மருது பாண்டியர் என வளர்த்து வருகின்றேன். இதை வெட்ட நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியதைக் கேட்டு அச்சகோதரர்கள் இருவரும் மெய்சிலிர்த்து அந்த மரங்களை வெட்ட வேண்டாம் என்று கூறியதுடன் அந்த குடிமகனையும் கௌரவித்து, சிவகங்கையைச் சீமையை ஆங்கிலேயரிடமிருந்து காப்பாற்றம் பணியில் மேலும் தீவிரம் காட்டினர்.[hide]

    மருது சகோதரர்களின் ஆட்சி, மத வேற்றுமை நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. இவர்கள் முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர். இவர்கள் கோவில் கோபுரங்கள் பல கட்டித் தந்தனர். மானாமதுரை சோமேசவர் கோவில் திருப்பணிகளை இன்றும் நாம் அறிந்து கொள்ளும் வகையில் கவிஞர் வேதாந்தம் சுப்ரமணியம் வாரை வீர மதுரைப் புராணத்தைப் பாடியுள்ளார்.

    இந்த இரு சகோதரர்களின் வெளிதோற்றமே அவர்கள் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள் என்பதையும், உடல் பலம் மிக்கவர் என்பதையும் எந்த முடிவும் இவர்கள் இவரின் ஒருமித்த எண்ணத்தில் ஏற்படுத்தப்படும் என்பதும் தெளிவாக வெளிப்படும் வகையில் இருக்கும். இளையவரான சின்ன மருது, அரசியல் தந்திரம் மிக்வவர். தன் சகோதரனுடன் இணைந்து  இவர் தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி வரை மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்திற்கு வித்திட்டனர். 1801 ம் ஆண்டு ஜீன் மாதம் 12 ம் தேதி சின்ன மருது, திருச்சி, திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை ஜம்புத்திவு பிரகடனம் என அழைக்கப்படுகிறது. இவ்வறிக்கை மூலம் எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் நாட்டுப்பற்று மிக்கப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆங்கிலேயருக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என்று அறை கூவல் விடுக்கப்பட்டது. இச்செய்தியை படிக்கும் ஒவ்வொரு இளைஞரும் தம் தமிழ்நாட்டு வீரம் பற்றி உணர்வதோடு, விடுதலைப் போர் தலைவர்களின் வருகைக்கு முன்பே நம் தமிழ்நாட்டில் கட்டபொம்பன், வெள்ளைத்தேவன், மருது பாண்டியர்கள் போன்ற வீரர்கள் இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்டவர்கள் என்ற பெருமையை உணர்ந்து அது போன்ற வீரம் துளிர்க்க வேண்டும் என்பதே, இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

    மருது சகோதரர்கள், கட்ட பொம்பனின் இளைய சகோதரன் ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக கி.பி. 1801 ம் ஆண்டு மே மாதம் 28 ம் தேதி ஆங்கிலேயர் சிவகங்கைச் சீமை மீது போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடைவிடாமல் நடந்துபின் 1801 ம் ஆண்டு அக்டோபர் 24 ம் தேதி ஆங்கிலேய அரசு மருது பாண்டிய சகோதரர்களை தூக்கிலிட்டது. இவர்களது குடும்பத்தைத் சேர்ந்தோரும் 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தினரும் தூக்கிலிடப்பட்டனர். சிறிய வயது காரணமாய், சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியும், மருது வீரர்களின் தளபதியும் நாடு கடத்தப்பட்டனர்.

    இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க மருதுபாண்டிய சகோதரர்களின் முழு உருவ கற்சிலைகள், சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில், காளீஸ்வரர் கோவிலின் உட்புறமும் இவர்கள் இருவரின் சமாதிகள் காளீஸ்வரன் கோயிலின் எதிர்புறமும் அமைக்கப்பட்டு அவர்களின் வீரத்தை பறை சாற்றிக் கொண்டுள்ளன. இத்தகைய வீரம் மிக்க நாட்டுப்பற்று மிக்க சகோதரர்களை பெருமைப்படுத்தும் வகையில் இந்திய அரசு அஞ்சல்துறை 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ம் நாள் இவர்களது நினைவு தபால் தலையை மதுரையிலும் சென்னையிலும் வெளியிட்டு கௌரவப்படுத்தியது ஒரு பெருமை மிக்க செயலாகும். வாழ்க தமிழகம் வாழ்க தமிழர் புகழ் வாழ்க தமிழர் வீரம்.

    தொடரும்[/hide]

    இந்த இதழை மேலும்

    நீங்கள் இரக்கமிக்கவரா? 

    இரக்கம் என்பது மனிதனை தனது வழக்கமான பாதையிலிருந்து சற்று விலகி சென்று உடல் ரீதியாக, மனரீதியாக, உணர்வுரீதியாக வலி வேதனையுடன் தவிப்பவர்களுக்கு ஆறுதல் தருகிறது. மனித சமுதாயம் உயிர் வாழ இரக்க உணர்வு ஆடம்பர தேவையல்ல. அது அத்தியாவசிய தேவை. பிறரை துன்பங்களிலிருந்து விடுவிக்க எடுக்கப்படும் முயற்சியாவும் இரக்கத்தின் சிந்தனைதான். உயிரினங்களின் நலத்தை நன்மையை விரும்புபவர்கள் இரக்க சிந்தையுள்ளவர்கள்.

    தர்ம வாழ்க்கை இரக்கத்தை பாதையாக கொண்டது. பாவ வாழ்க்கை அகந்தை, இறுமாப்பு, கர்வத்தை பாதையாக கொண்டது. ஏன் சிலர் சைவ உணவை மட்டும் உட்கொள்கிறார்கள். ஜைனர்கள் தேவையற்ற வகையில் உயிரினங்களை கொடுமைப்படுத்தி தயாரிக்கப்பட்ட அசைவ உணவு வகைகளை உண்ண மறுக்கிறார்கள். டெல்லியில் “லால் மந்திர்” என்ற இடத்தில் புகழ்பெற்ற ஜெயின் கோவில் உள்ளது. அங்கு இரண்டாவது தளத்தில் இயங்கும் “பறவைகள் மருத்துவமனை” மிகவும் பிரசித்தி பெற்றது. மனித இரக்க உணர்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

    மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் இரக்கத்தை பின்பற்ற வேண்டும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் இரக்கத்தை பின்பற்ற வேண்டும். மற்றவர்களுக்கு தீங்கு செய்து விட்டு நாம் ஓரு போதும் மகிழ்வாக வாழவே முடியாது.

    சிறு குழந்தை அழுதபடியே கிணற்றில் தவறி விழ உள்ள  நிலையில் ஒருவன் பார்க்கிறான். தாவிச்சென்று காப்பாற்றுகிறான். அந்த குழந்தையின் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவதற்க்காக அல்ல. அந்த கிராமத்தினரின் அல்லது நண்பர்களின் பாராட்டை பெறவும் அல்ல. குழந்தையின் அழுகுரலை விரும்பாததாலும் அல்ல. இரக்கம்தான் உண்மை காரணம்.

    குழந்தைகளின் வளர்ச்சியை, ஆரோக்கியத்தை, வலிமையை, விளையாடும் நேரத்தை, வறுமை திருடுகிறது. ஏழைக்குழந்தைகள் பள்ளியில் அமர்ந்து கல்வி கற்பதை வறுமை தடுக்கிறது. அத்தகைய குழந்தைகளை ஆதரிப்பவர்கள் நம்பிக்கையை விதைக்கிறார்கள். நல்ல செய்தியை அந்த குழந்தைகளுக்கு கொண்டு வருகிறார்கள். இரக்கம் நதியாக பிரவாகம் எடுக்கிறது. மற்றவர்கள் மீது அக்கறை காட்டுபவர்களின் இதயம் சீராக இயங்குகிறது. அதில் பாச உணர்வு சுரக்கிறது.

    பச்சிளம் குழந்தை நள்ளிரவில் அழுகிறது. குழந்தை அழுதால் அழட்டும் என்று அப்படியே விட்டு விட பெற்ற தாயின் மனம் இடங்கொடுக்காது. தாய் விழித்துக் கொள்கிறாள். அவளது துட்க்கம் கெடுகிறது. குழந்தைக்கு பால் கொடுக்கிறாள். தாலாட்டுகிறாள். உடனடியாக அந்த குழந்தையின் தேவையை கவனிக்கிறாள். எதையுமே சுயமாக செய்ய முடியாதது பச்சிளம்குழந்தை. பத்து மாதம் சுமந்து பெற்று எடுத்தவள் தாய்.

    நமக்கு பிரியமானவர்களின் பலவீனத்தையோ. கஷ்டத்தையோ பார்த்ததும் எழுகிற உணர்ச்சிதான் இரக்கம். இரக்கம் என்பது ஒருவரின் பலவீனமல்ல. ஆனால், அது அவரது பலம். அவரது இன்றியமையாத பண்பு.

    இந்தியர்கள் ஆங்கிலேயர்களால் அடிமைகளாக்கப்பட்டார்கள். கடுமையாக ஓடுக்கப்பட்டார்கள். வாழ்க்கையே கசந்து போகும்படி நடத்தப்பட்டனர்.  இந்திய மக்கள் வேதனையில் தவித்தார்கள். தத்தளித்தார்கள். அது மகாத்மா காந்தியின் இதயத்தை தொட்டது. மக்கள் படும் துன்பங்களை தன் கண்களால் கண்டார். துயரங்களை அறிந்தார். அவர்களை அகிம்சை வழியில் மீட்டார். இன்றும் ரூபாய் நோட்டில் அவரைப் பார்க்கிறோம்.

    மனிதர்கள் மூன்று வகையாக உள்ளனர். முதலாவதாக, பிறரை துன்புறுத்துபவர்கள் ஓரு வகை. பிறர் துன்புறுவதை கண்டுகொள்;ளாதவர்கள் இரண்டாவது வகை. மூன்றாவதாக, பிறரது துயரை தன் துன்பமாக நினைத்து துடைக்க முயல்பவர்கள்.

    இரக்கம், தயை, பரிவு என்றால் என்னவென்று தெரியாமல் சிலர் இருக்கிறார்கள். லட்சக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகள் பசிக்கு உணவு பெற, தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, பள்ளியில் கல்வியை தொடர, மருத்துவ உதவி பெற, வழிகாட்டுதலுக்கு யாருமின்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் அவர்களை சுரண்டாமல் இருக்கலாம் அல்லவா. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வந்த நிதியை சுரண்டி சொகுசு கார் வாங்கியவர்கள் உள்ளனர். உண்மையற்றவர்களாக  நடந்து கொள்பவர்களால்தான் துன்பத்தை அனுபவிக்கிறோம்.[hide]

    மனிதர்களின் துன்பங்கள் ஒவ்வொரு வகையில் மாறுபட்டது. முற்றிலும் வேறுபட்டது. பாதிக்கப்பட்டவர்கள்  நடந்ததை எளிதில் மறப்பதில்லை. நடப்பதை பற்றி நினைப்பதில்லை. உடல், உள்ளம் நலமின்றி தவிக்கிறார்கள்.

    மனித வரலாற்று பக்கங்களில் எவ்வளவோ அட்டூளியங்கள் நடைபெற்று இருந்தாலும், அதிலிருந்து விடுபட வழிவகுத்தது இரக்க உள்ளம் கொண்ட பண்பாளர்களால்தான். அவர்கள் வணங்கத்தக்கவர்கள்.

    அமெரிக்காவை காலணியாதிக்கத்தின் கீழ் கொண்டு வர நடத்தப்பட்ட ஜரோப்பியர்களின் பூர்வீக குடிகள் மீதான வேட்டை வரலாற்றின் சோகமான பக்கங்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை புத்தகத்தில் தவறாமல் சோக அத்தியாயங்கள் இருக்கவே செய்கிறது.

    ஜெர்மனியில் ஷிட்லரின் இனப்படுகொலை கறை படிந்த வரலாறு. இயற்கை பேரழிவுகள் உலகில் எங்கோ ஒரு மூலையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் வீடற்றவர்களாகிறார்கள்.

    இரக்கமற்ற தீவிரவாதிகள் பயணிகளுடன் விமானத்தை கடத்தி இருக்கிறார்கள். சுட்டுக் கொல்லட்டுமா என மிரட்டி இருக்கிறார்கள். துயரங்களில் இருந்து விடுபடவே விரும்புகிறோம். ஆனாலும், பயம், துயரம், துன்புறுத்தப்படுவதால் ஏற்படும் வலி துக்கத்தின் மற்றொரு பக்கம்.

    வரி ஏய்ப்பவர்கள், பொருளாதார குற்றவாளிகள் தமது நேர்மையின்மையால்  சக மனிதர்களுக்கு கிடைக்க வேண்டிய ரொட்டியை தட்டி பறித்து விட்டு விபச்சாரத்திற்கு நீர் ஊற்றுகிறார்கள்.

    இரக்கமற்ற கயவர்களால் தொல்லைகளுக்கு இலக்கான பாதிக்கப்பட்ட பெண்கள் தான் ப|கடாவாக்கப்பட்டதை, தனது ஆண் நண்பனால் கடுமையாக தாக்கப்பட்டதை மூன்றில் ஓரு பெண் அனுபவித்து இருக்கிறாள் என்கிறது ஆய்வு. தனது கணவனால் அடித்து துவைக்கப்பட்டதை, வாழ்வில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தான் தவறாக நடத்தப்பட்டதை பாலியல் உறவுக்காக பலாத்காரப்படுத்தப்பட்ட நிகழ்வை சந்தித்ததாக அதிக சதவீதமான  பெண்கள் ஆய்வில் தெரிவிக்கிறார்கள்.

    ஒரு பெண் சிடுசிடுப்பவளாக, எரிச்சல்படுபவளாக, எளிதில் நெருங்க முடியாதவளாக, நடந்துகொண்டால் மென்மையாக இல்லாமல் கடுமையாகவும்  வரம்பு மீற துளியும் இடம் கொடுக்காத வகையில் நடந்து கொண்டால், நெருங்கவோ, அவளை குறி வைக்கவோ, கட்டுப்படுத்தவோ, உணர்வுரீதியாக, உடல்ரீதியாக, பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொள்ளவோ முடியாது என்கிறார்கள்.

    ரொம்ப நயமானவளாக ஓரு பெண் நடந்து கொண்டால் அது அந்த பெண்ணுக்கு ஆபத்தானதாகவே முடிவதாக ஆய்வு தெரிவிக்கிறது. மிகவும் இணக்கமாக மென்மையாக, நாகரீகமாக நடந்து கொள்ளும் பெண் வ|மையற்றவளாக, பாதுகாப்பற்றவளாகவே உள்ளாள்.

    இந்த உலகத்திலேலே மிகவும் வியக்கத்தக்க விஷயம் எது? என்று மகாபாரதத்தில் யுதிஸ்திரரிடம் கேட்கப்பட்டது. உலகிலேயே மிகவும் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், நம்மைச் சுற்றி இருப்பவர்கள் இறக்கக்கூடும். ஒரு நாள் இது நமக்கும் நடக்கக்கூடும் என்பதை யாரும் உணர்வதே இல்லை.  எதுவாக இருந்தாலும், உனக்கு இன்று நடந்தது, நாளை எனக்கும் நடக்கலாம்.

    வயோதிக நிலையை அடைந்த முதியவர் ஒரு நாள் எதையுமே சுயமாக செய்ய முடியாத நிலையை அடையும் போது அவர்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. தனிமைப்படுத்தப் படலாம். துரத்தப்படலாம். பலர் நன்றாக உடல் இயங்கிக் கொண்டு இருக்கும்போதே தனது உயிர் போய்விட வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது அதனால்தான்.

    செயின் பறிப்பு சம்பவங்களில் பெண்கள் திருடர்களிடம் அகப்பட்டுக் கொள்கிறார்கள். தாலிச்சங்கிலியை அறுத்துக் கொண்டதுடன் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போகிறான். அந்தப்பக்கமாக வந்தவர்களில் பலர் விலகி போகிறார்கள். ஓரு சிலரின் உதவியால்; பாதிக்கப்பட்டவர் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். காயமடைந்த பெண்ணை முன்பின் தெரியாது. நாடு, மதம், கலாச்சாரம் போன்ற பாகுபாடெல்லாம் இரக்கம் காட்டுவதற்கு தடை கிடையாது.

    ஆதரவற்றவர்களுக்கு நம்மிடம் உள்ள ஆடைகளை தரலாம். பெற்றோருக்கு உதவியாக குழந்தைகள் தாமாக முன்வந்து வீட்டுவேலை செய்து கொடுப்பது பெற்றோரின் சிரமத்தை குறைக்கும். அதுவும் ஒர் இரக்ககுணமுள்ள செயல்தான்.

    சுனாமி, புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகலிடம் தருவது, நம்முடைய நேரம், சக்தி, வளங்களை நிவாரண ஏற்பாட்டிற்கு வழங்குபவர்கள் மனிதநேயமிக்கவர்கள்.

    ணக்காரர்களுக்கு உயர் பதவியில் இருப்பவர்களுக்கு அநாவசிய சலுகை காட்டுகையில் ஏழையின் கூக்குரல் நம் காதில் விழாமல் போய் விடலாம்.  பெற்றோரை எதிர்த்து பேசுவது, கசப்பான விரோதத்தை வளர்ப்பது, அவதுட்றுகளை வளர்ப்பது, சபிப்பது, மற்றவருக்கு தீமை செய்வது, வீம்பு பேசுவது,பொய் சொல்வது ஆகியன உள்ள இடங்களில் நிச்சயம் கலகமும், சகல துர்ச்செயல்களுமுண்டு. ஒருவர் பேசும் விதமே, முகபாவனையே இரக்கமற்றவர் என்பதை காட்டிக் கொடுத்து விடும்.

    தவறு இழைத்தவரை மன்னிக்க தயாராய் இருப்பது இரக்கம் காட்டுவதன் ஒரு அம்சம்தான். சதா குறை காண்பவர்களாய் இல்லாமல் மற்றவர்களுடைய தவறுகளைப் பொறுத்து கொள்வதன் மூலம் நாம் தினசரி இரக்கம் காட்டலாம்.

    பலர் பேராபத்தில் சிக்கி இருளில் தடுமாறுகிறார்கள். தங்கள் சந்திக்கும் பிரச்சனையிலிருந்து வெளியே வர வழி தெரியாதவர்களாக, உண்மையான எதிர்கால நம்பிக்கை எதுவும் இல்லாதவர்களாக, நொடித்து போனவர்களாக, சிதறப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தீபமாய், வெளிச்சமாய் பிரச்னையை சமாளிக்க உதவியாய் இருந்து நம்பிக்கை அளிப்பதுதான் இரக்கம்.

    ஒருவன் தனது இரக்க குணத்தைக் சுருக்கிக் கொள்வது என்பது அவனது இதயத்தையே  சுருக்கிக் கொள்வதாகும். அவன் வாழ்வை இருள் சூழ கசப்புணர்வு உள்புக வழி செய்வதாகும். எங்கே இரக்கம் முடிவுறுகிறதோ, அங்கே அவனை இருளும் சித்ரவதைகளும் துன்பங்களும் சூழ்கின்றன. இவ்வுலகில் துன்பத்தால் துவளாத உயிர்களே இல்லை.

    எண்ணிலடங்காத அளவு வாட்டி வதைத்த வலிகளும், வேதனைகளும், துன்பங்களும் அளித்த அனுபவத்தால் மனிதனது உள்ளமும் மனமும் பண்படுகிறது. இயற்கையின் நியதிகளை அறியாமையின் காரணமாக மீறுவதே துன்பத்திற்கு காரணமாகும்.

    இரக்கம் எளியவர்களின் உலகத்தை மென்மையாக்குகிறது. அன்பில்லாமல் பழிசுமத்துவது, எப்போது ஓரு மனிதன் இன்னொரு உயிரின் மேல் அது வாயில்லா ஜீவனாகக்கூட இருக்கலாம். பலவீனமானவர்களை மிரட்டுவது, உதவிக்கு யாருமற்ற அப்பாவி பெண்களை வேட்டையாடுவது, ஒழுக்கமற்று நடந்து கொள்வது, இறுக்கமான கசப்பான கொடிய எண்ணங்கள் உள்புகுந்த நிலையில் கடுகடுப்பான முகபாவத்தோடு கோப அம்புகளை பாய்ச்சுவது என கொடூரமாக நடந்து கொள்ளும்போது அவன் தன்னையே தாழ்த்திக் கொள்கிறான். துன்பப்பட தன்னை தயார்படுத்திக் கொள்கிறான்.

    வ|மையின் பெருமை, ஒன்றை அழிக்கக்கூடிய அதன் பலத்தில் அல்ல. அதை பாதுகாக்கக்கூடிய அதன் பலத்தில்தான் உள்ளது. வழங்கப்பட்ட இரக்கம் ஒன்றும் வீணாவது இல்லை.

    இரக்கம் விஷத்தை முறிக்கிறது. தேவையான மனிதர்களுக்கு உதவி செய்யாமல் செவிடர்களாய் இருப்பவர்களின் வழிபாட்டு பக்தி வீணானது. இரக்கம் என்பது தண்டனை பெற வேண்டியவர்களுக்கும் தண்டனை தராமல் காட்டும் அன்பு ஆகும்.

    பணம் உலகத்தை கவரும். அழகு உள்ளத்தை கவரும். இரக்கம் நிறைந்த ஓரு செயல் கடவுளையே கவரும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    சிசு பராமரிப்பு

    குழந்தை பிறப்பு ஒவ்வொரு குடும்பத்திலும் சந்தோஷத்தைத் தரும் நல்ல நிகழ்வு. ஒவ்வொரு தாயும் குழந்தை பராமரிப்பு பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். காரணம் சிசுவின் உடல் உறுப்புகள் போதிய வளர்ச்சி அடையாமல் இருப்பதால், முறையான கவனிப்பு குறையும் போது பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

    சிசு பராமரிப்பின் முக்கியத்துவம்

    சிசு பருவம் என்பது பிறந்த முதல் 28 நாட்கள் ஆகும். இந்த காலகட்டத்தில் சிசு பல நிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு தாயும் சிசுவை நோயின்றி காக்க சிசு பராமரிப்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

    அதில் முக்கியமானவை,

    • தாய்ப்பால் ஊட்டுதல்
    • உடல் வெப்பநிலை பாதுகாத்தல்
    • சுத்தம் மற்றும் நோய் தடுப்பு முறைகளைப் பற்றி அறிந்து கொள்வது ஆகும்.

    குழந்தை பிறந்த முதல் சில மணிநேரங்களில் கவனிக்கப்பட வேண்டியவை

    சிசுவைச் சுத்தம் செய்தல்

    சிசு பிறந்தவுடன் சுத்தமான துணியால் இரத்தம் மற்றும் மலம் போன்றவற்றைத் துடைக்கவேண்டும். உடம்பில் ஒட்டியுள்ள வெண்மையான (Vernix) பொருளை துடைக்கக் கூடாது. ஏனென்றால் இது தோலுக்குப் பாதுகாப்பைக் கொடுத்து நோய் வராமல் தடுக்கும். மேலும் துடைப்பதால் தோலில் காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

    அடையாள அட்டை

    எல்லா சிசுவிற்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட வேண்டும். அந்த அடையாள அட்டையில் தாயின் பெயர், மருத்துவமனை எண், ஆணா? அல்லது பெண்ணா? பிறந்த எடை, குழந்தையின் உள்ளங்கால் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும்.

    சிசுவின் எடை

    சிசுவை ஒருமணி நேரத்திற்குள் எடை போட வேண்டும். மின் எடை சாதனமாக இருந்தால் நல்லது.

    வைட்டமின் ஓ1 ஊசி

    எல்லா சிசுவிற்கும் வைட்டமின் ஓ1 ஊசி போட வேண்டும். நிறை பிரசவமாக இருந்தால் 1 மில்லி கிராம் குறை பிரசவமாக இருந்தால் 0.5 மில்லி கிராம் போட வேண்டும். இதனால் குழந்தைக்குப் பின்னால் வரக்கூடிய இரத்தப்போக்கு நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

    வயிற்றைக் கழுவுதல்

    பிறந்த குழந்தையின் வயிற்றைக் கழுவுவது என்பது அவசியமில்லை. சில சமயம், குழந்தை பிறப்பதற்கு முன்னரே மலம் கழித்த தண்ணீரைக் குடித்தால் வாந்தி வராமல் தடுப்பதற்காக வயிற்றைக் கழுவ வேண்டும்.

    பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை

    குழந்தை பிறந்தவுடன், குழந்தைக்கு இதயத்துடிப்பு மற்றும் பிறவிக்குறைபாடு ஏதேனும் உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் மூக்கு வழியாக கத்தீட்டர் (Catheter) போடவோ அல்லது மலவாய் மூலம் கத்தீட்டர் போடுவதைத் தவிர்க்கவேண்டும். குழந்தையின் உடலின் வெப்பநிலையை எலக்ட்ரானிக் வெப்பமானி மூலம் கண்டறிய வேண்டும். பாதரச வெப்பமானி மூலம் வெப்பநிலையைக் கண்டறிதல் தற்காலத்தில் தவிர்க்கப்படுகிறது. ஏனெனில் தவறுதலாக பாதரசம் சிந்தினால் அதிலுள்ள விஷத்தன்மையால் ஆபத்து உண்டாகும். மலக்குடல் வெப்பமானி மூலம் உடலின் வெப்பத்தைப் பார்க்கக் கூடாது.

    இரண ஜன்னியிருந்து பாதுகாத்தல்

    குழந்தையின் தாய் கர்ப்பகாலத்தில் இரண ஜன்னிக்கான தடுப்பூசி போடாமல் இருந்தால் குழந்தை பிறந்தவுடன் இரண ஜன்னிக்கான தடுப்பூசி போட வேண்டும். குழந்தையின் தாய் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டாலோ அல்லது சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ குழந்தை பிறந்தவுடன் இமுனோகுளோபுலின் மற்றும் அவற்றிற்கான தடுப்பூசி போட வேண்டும்.[hide]

    தாயும் குழந்தையும் ஒன்றாக இருத்தல்

    பிறந்த குழந்தையைத் தாயிடமிருந்து பிரிக்கக்கூடாது. குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் குழந்தை சுறுசுறுப்பாகவும், விழித்துக் கொண்டும் இருக்கும். இந்த சமயத்தில் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள உறவு அதிகரிக்கும்.

    குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தல்

    குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். செவிலியர்களோ அல்லது மருத்துவமனை ஊழியர்களோ குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்ட உதவி செய்ய வேண்டும்.

    குடும்பத்தினருடன் உரையாடுதல்

    குழந்தை பிறந்தவுடன் மருத்துவரோ அல்லது செவிலியர்களோ குழந்தை பிறந்த நேரம், எடை, இனம் (ஆண்/பெண்), குழந்தையின் உடல்நிலை பற்றி குடும்பத்தினருடன் உரையாட வேண்டும். குழந்தை ஆணா அல்லது பெண்ணா என அறியவும், குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என அறியவும் குழந்தையைப் பிறந்தவுடன் உறவினர்களிடம் காட்ட வேண்டும்.

    குழந்தை பிறந்த சில நாட்களுக்குள் கவனிக்கப்பட வேண்டியவை

    தொப்புள் கொடி பராமரிப்பு

    தொப்புள் கொடியைச் சுத்தமாகவும், காற்றோட்டம் படும்படியாகவும் வைக்க வேண்டும்.

    5 முதல் 10 நாட்களுக்குள் தொப்புள்கொடி காய்ந்து விழுந்து விடும்.

    தொப்புள் கொடியை ஈரம் படாமல் பாதுகாக்க வேண்டும்.

    பவுடர், விபூதி, மஞ்சள், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைத் தொப்புள்கொடியில் கண்டிப்பாக வைக்கக் கூடாது.

    கண் சுத்தம் செய்தல்

    சுத்தமான துணியைத் தண்ணீரில் நனைத்து குழந்தையின் கண்களைத் துடைக்க வேண்டும்.

    முழுமையான தாய்ப்பால்

    தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றியும், அதை எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் கர்ப்ப காலத்தில் இருந்தே தாய்க்கு அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் தாய், குழந்தைக்கு வெற்றிகரமான முறையில் தாய்ப்பால் புகட்ட முடியும்.

    மஞ்சள்காமாலையைக் கண்டறிதல்

    அனைத்து குழந்தைகளையும் பிறந்த சில நாட்களுக்கு, தினமும் இரண்டு முறை மஞ்சள்காமாலை உள்ளதா என்று பார்க்க வேண்டும். பகல் வெளிச்சத்தில் குழந்தையின் உடல் நிறத்தில் ஏதேனும் மாற்றம் காணப்படுகிறதா என்பதை அறிய வேண்டும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    சக்தி தரிசனம்

    ஊர் சுற்றிப்பார்க்கும் பயணமானாலும், தொழில் நிமித்தமான பயணமானாலும், விடுமுறைக் கால பயணமானாலும் நம் பயண அட்டவனையில் சக்தி வாய்ந்த ஸ்தலங்களுக்கான விஜயமும் இடம் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் நம் பயணம் சக்திமிக்க தன்மையில் முழுமை அடையும்.  ஊர்சுற்றும் பயணத்திலும் வெறும் சுற்றுலாத் தலங்களுக்கு மட்டும் விஜயம் செய்வதை தவிர்த்து சக்தி ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்வது சிறப்பாக இருக்கும். அதுபோலவே தொழில் முறை பயணங்களிலும் நேரம் ஒதுக்கி சக்தி ஸ்தலங்களுக்கும் போய் வருவதால் நம் பயணத்தின் பயன்பாடு அதிகமாகும். ஆன்மீக ஸ்தலங்களில் சக்தி நிலையினை கருவறையில் விஞ்ஞான பூர்வமாக நிலைநிறுத்தி வைத்திருக்கிறார்கள். அவ்வித சக்தி ஸ்தலங்களின் கருவறைக்குள் நம் பூஜை பொருட்களான தேங்காய் மற்றும் வாழைப்பழம் உள்ளே சென்று வெளி வருவதால் அவற்றில் சக்தி ஊட்டம் பெறுகின்றன.

    இன்னும் சில கோவில்களில் தேங்காய் பழங்களை கருவறைக்குள் எடுத்துச் செல்லாமலேயே வெளியேயே உடைத்து நம்மிடம் கொடுக்கிறார்கள். இவைகளால் அதிகப் பலன் கிடையாது. அதே சமயம் நம் பூஜைப் பொருட்களுக்கு பதில் நம்மையே கருவறை வரை அனுமதிக்கும் சக்தி ஸ்தலங்களுக்கு நாம் விஜயம் செய்தால் முழுமையான சக்தி கிரகிப்பை பெறலாம். அவ்வித ஸ்தலங்களில் எனக்குத் தெரிந்த சிலவற்றைப் பற்றி நாம் இப்பொழுது பார்ப்போம்.

    1. சாய்பாபா கோவில்கள்: இக்கோவில்களின் கருவறைக்குள் நம்மை அனுமதிக்கிறார்கள். அங்கேயே நாம் ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்து சக்தி கிரகிப்பை முழுமையாகப் பெறலாம். அனேகமாக எல்லா ஊர்களிலும் சாய்பாபா கோவில்கள் இருக்கின்றன.
    2. ஈஷா தியானலிங்கம்: கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருக்கும் மிக சக்தி வாய்ந்த சர்வமத சக்தி ஸ்தலமாக ஈஷா தியானலிங்கம் விளங்குகிறது. இதனுள்ளும் நாம் அமர்ந்து சக்தியை முழுமையாக கிரகிக்கலாம். இந்த ஸ்தலத்தின் விஷேசமான அம்சம் என்னவென்றால், நமக்கு தியானம் தெரியாவிட்டாலும் நம் உள்ளே சக்தி மாற்றம் நிகழும் விதமாக மிகத் தீவிர சக்திக் களமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனுள் செல்பவர் எவரும் சக்தி ஊட்டம் பெற முடியும்.
    3. மகான்களின் ஜீவ சமாதி ஸ்தலங்கள்: இவ்வித ஸ்தலங்களில் மகான்கள் உகல மக்களின் நலன் வேண்டி தங்களின் உயிர்ச் சக்தியை உடலியேயே நிறுத்தி ஜீவ சமாதியாக நிலைகொண்டுள்ளனர். இவ்விடங்களுக்கு நாம் சென்று அங்கும் தியானம் மூலம் சக்தியாக்கம் பெறலாம்.
    4. நாகூர் தர்கா: இத்தலத்திலும் ஒரு மகான் ஜீவசமாதியாகி இருப்பதால் இதுவும் ஒரு சக்திமிக்க ஸ்தலமே ஆகும். இவ்விடத்திலும் நாம் தியானம் மூலம் முழுமையான சக்தி கிரகிப்பைப் பெற முடியும்.
    5. வேளாங்கன்னி பேராலயம்: இந்தப் பேராலய கருவறையிலும் ஆற்றல் குவிக்கப்பட்டுள்ளதால் இங்கும் நாம் விஜயம் செய்து சக்தியாக்கம் பெறலாம்.[hide]
    6. வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவில்: இங்கு அபரிமிதமான சக்தியை தங்க முலாம் பூசிய கோவில் கருவறையில் நிலைநிறுத்தியிருக்கிறார்கள். இங்கும் நம் உயிர்ச் சக்தியை திணிவாக்கலாம்.
    7. சக்தியுள்ள திருத்தலங்கள்: திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில், சபரிமலை ஐயப்பன் திருக்கோவில், பழனி முருகன் திருக்கோவில், பூரி ஜகநாதர் பெருங்கோவில், அமிர்தசரஸ் பொற்கோவில், அமர்நாத், பத்திரிநாத், கொல்கத்தா காளி கோவில் உள்ளிட்ட எண்ணிலடங்கா கோவில்களும் சக்தியுள்ள ஸ்தலங்களே. இவ்வித ஸ்தலங்களுக்குப் போய் வருவதாலும் நமக்கு சக்தி ஊட்டம் கிடைக்கும்.
    8. கைலாஷ் மற்றும் மானசரோவர்: இவ்விடங்கள் யாவும் பல மகான்களின் ஜீவ ஆற்றல் நிரம்பப் பெற்றிருப்பதால் இவ்விடங்களுக்குப் புனித யாத்திரை போவதன் மூலமும் நாம் அபரிமிதமான சக்தியை கிரகிக்க முடியும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    சின்னஞ்சிறு சிந்தனைகள்…

    வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் வாழ்க்கை முழுதும் காத்தே இருக்கிறார்கள். வாய்ப்புகளைத் தேடி அலைபவர்கள் நிச்சயம் வெற்றி விகரத்தை அடைத்து விடுகின்றார்கள்.

    எப்போதும் தாமதமே, சாக்குப் போக்கும், எந்த விதத்திலும் வெற்றிக்கு உதாவது.

    எப்போதும் சுயநினைவுடன் அதாவது விழிப்பு நிலையில் உள்ளவர்கள் சூழ்நிலைகளுக்கள்ளாக தங்களை கரைத்துக் கொள்வதில்லை.

    எப்போதும் உங்களுக்குள் ஏதாவது ஒரு தனித்தன்மை இருக்கும். அந்த தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக நீங்கள் நடந்து கொள்ளுங்கள்.

    சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்றால் முதலில் நமது மனநிலை மாறட்டும். மனநிலை குழப்பமாக இல்லாமல் அது தெரிந்த நீரோடையாக இருக்கட்டும் இது சரியா அது சரியா என்ற எண்ணங்கள் தான் மனதை குழப்பம் அடைய செய்கின்றன.

    அறிவும் அனுபவமும் இணைந்தது தான் எண்ணம். எண்ணங்கள் நம்பிக்கைகளை உருவாக்குகின்றன. அது நமது மனத்தை நிறைத்துக்கொள்கிறது. எண்ணங்கள் தான் வாழ்க்கையை வடிவமைக்கின்றன.

    எங்கு சென்றாலும் யாரைச் சந்தித்தாலும் கூடுதலான தகவல்களை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள். சில சமயங்களில் அவை நீங்கள் முன் எச்சரிக்கையாக இருக்கவும் உதவக்கூடும். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் அனுபவம், மிகச்சிறந்த ஆசான் ஆகும்.

    வையகம் காப்பவரேனும் சிறு வாழைப் பழக்கடை வைப்பவரேனும் பொய்யகலந்தொழில் செய்தே பிறர் போற்றி வாழ்பவர் எங்கனும் மேலோர்.

    கொஞ்சம் மூலதனத்தோடு, கொஞ்சம் மூளையையும் செலுத்தி தன்னம்பிக்கையுடன் உழைத்தவர்கள் பல தலைமுறைகளாக வாழ்விலும், தொழிலிலும் பிரகாசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    சூழ்நிலைகளுக்குள் கரைந்து போகிறவன் எப்போதும் சாதனை சிகரத்தைத் தொடுவதில்லை. எந்தச் சூழ்நிலையிலும் தனது முயற்சிகளுக்கு சாதமாக மாற்றும் வல்லமை இருந்தால் போதும் என்றும் முயற்சிகளின் கைகளால் தொட முடியாத உயரங்கள் உலகில் இல்லை.[hide]

    வாழ்க்கை என்னதான் துன்பங்கள் விடாது துரத்திக் கொண்டு வந்தாலும் காற்றுக்கு உதிரும் இலையும் சருகுமாய் இல்லாமல் நாம் மலையைப் போல அசையாது நின்று எதிர்கொள்ள வேண்டும்.

    நம்பிக்கை உள்ள மனிதனுக்கு எப்பொழுதுமே ரோஜா தான் கண்ணில் படும். அதன் முட்கள் ஒரு போதும் தெரியாது, அதனால் ஒலிகளை ஏற்றுக் கொண்டால் வாழ்வதற்கான புதிய வழி கிடைக்கும்.

    நமது மனமாவது பெரும்பாலும் நாம் பார்த்து கேட்ட, படித்த விஷயங்களால் சூழப்பட்டதாகும்.

    வாய்ப்புகளை எப்படி இன்னும் நன்றாகப் பயன்படுத்த முடியும் என்று சிந்தித்து செயல்படுங்கள். நமது பலம் என்ன, பலவீனம் என்ன என்று கண்டுபிடித்து, பலத்தை பெருக்கியும், பலவீனத்தைச் சரிபடுத்தியும் முயற்சி செய்யுங்கள்.

    எப்போதும் நீங்கள் வெற்று பெருவதற்காகக் கற்பனை செய்யுங்கள். எவ்வளவு மேலான சூழ்நிலையிலும் இப்படி ஆகிவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ என்று மனதில் தடையை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.

    தன் மீது யாரெல்லாம் மிகப்பெரும் சுய நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ, அவர்கள் எல்லோரும் நல்ல விற்பனையாளர்களாக வருகிறார்கள்.

    அவரவருக்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை. அறியாத மானிடர்க்கு அக்கரையில் பச்சை,

    உன்னத செய்தியை புரிந்து கொள்ள மறுப்பவர்கள் மேலும் வேதனையில் உழல்கிறார்கள். புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொண்டு கையாள்பவர்கள் வாழ்வின் அடுத்த படிநிலைக்கு நகர்கிறார்கள்.

    உலகின் ஒவ்வொரு மனதரும் வலியை கடக்கிறார்கள். ஆனால் அதன் அறிவு மட்டுமே மாறுபடுகிறது. மிகவும் வெற்றிகரமான மனிதர் என பிரகடனம் செய்யப்பட்ட உன்னத மனிதர்கள் கூட பேதனைகளை எதிர்கொண்டவர்களே, அவர்கள் வெற்றிகரமானவர்கள் என்பதால் துயரங்கள் அவர்களை தொடாமல் விட்டதில்லை. அதை நேர்மறை அழைப்பாக எடுத்துக் கொண்டு சந்தித்து எதிர்கொண்டு தாண்டியதாலேயே அவர்கள் வெற்றிகரமான மனிதர்களாக உருமாறினார்கள்.[/hide]

    இந்த இதழை மேலும்

    இலைகளை எண்ணுகிறாயா? பழங்களை உண்ணுகிறாயா?

    கார் என்பது ஒரு பொருள்; அதை உபயோகப்படுத்த வாங்குகிறோம். இதை மறந்துவிட்டு நேசிக்கிறோம்.

    குழந்தை ஓர் உயிர்; நம் வாரிசு. குழந்தையை நேசிக்காமல் பல சமயம் பொருளாக உபயோகிக்கிறோம். இதனால் தான் இன்று இளைஞர் சமுதாயம் சரியான பாதையைத் தவற விட்டுவிட்டது.

    அடிப்படையில் ஒன்றை மறந்துவிட்டோம்.  பிறக்கும் போது ஒன்றையும் எடுத்து வரவில்லை; இறந்தபின்னும் எதையும் எடுத்து செல்ல முடியாது.

    பொருட்கள் அனைத்துமே நம் வாழ்க்கையை வசதியாக வாழ்வதற்காக இயற்கையாலும், மனிதனாலும் உருவாக்கப்பட்டவை. அதில் இன்பம் அடைவதும் துன்பம் அடைவதும் அவரவர் மன நிலையைப் பொறுத்தது.

    நிம்மதி என்பது நம் மனநிலையைப் பொறுத்தது தான். நம் விருப்பங்களை, தேவைகளைப் பெறுவதற்கான தகுதியை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    வாழ்க்கை என்பது இன்பம், துன்பம் கலந்ததே. நாம் விரும்பியவறே எல்லாம் நடந்து விட்டால் அது சாதாரணமாகிவிடும்.

    துன்பம் வரும்போது, அதிலிருந்து மீண்டுவர மேற்கொள்ளும் செயல்களால் தான் நம்மிடமுள்ள திறமைகளை நாம் அறிய முடியும்.

    நம் திறமைகளை அறிந்து கொள்ள எளிமையான முதல் நிலை – மற்றவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல். இதை ஆங்கிலத்தில் ACCEPT AS SUCH என்று சொல்லலாம்.

    இந்த மன நிலை தான் முதல்படி. கல்விக்கூடங்கள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் இதை உபயோகப்படுத்தினால் எவரும் இலைகளை எண்ணாமல் கனிகளை உண்ணும் திறமையை அறிய முடியும்.

    இந்நிலையை அடையத் தெரிந்து கெள்ள வேண்டியது ஒன்று தான்.

    உடல் உருவாக்குவது என்ன?

    மனம் உருவாக்குவது என்ன?

    இவற்றைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால் நாமாகப் பிரச்னைகளை உருவாக்க மாட்டோம்.  வெளிப்பிரச்னைகளும் நம்மை நெருங்காது.

    பசி, தாகம், உறக்கம் போன்றவை உடல் உருவாக்குபவை. இவைகளை உணர்வுகள் என்று சொல்கிறோம்.

    இன்பம், துன்பம், நிம்மதி, கோபம், கவலை, வெறுப்பு, பகை, ஏமாற்றம், அன்பு போன்ற குணங்கள் (பண்புகள்) மனதால் உருவாக்கப்படுபவை, இவைகளை உணர்ச்சிகள் என்று சொல்கிறோம்.

    இந்த உணர்ச்சிகளை அனுபவசாலி மாயை என்று சொல்கின்றனர். உதாரணத்துக்கு ஒன்றைப் பார்ப்போம்.

    பசி நேரம்; 100 பேருக்கு ஒரே மாதிரியான உணவு அளிக்கிறோம். அவர்களுக்கும் நன்றாகப் பசிக்கிறது. இவர்களின் உடல், பசிக்கு உணவு தேவை என்ற உணர்வைச் சொல்லிவிட்டது.

    100 பேரும் சாப்பிட்டு விட்டனர். இப்போது அவர்களிடம் உணவைப் பற்றிக் கருத்து கேட்டால் பலவிதமாகக் கூறுவார்கள். அவர்களின் மனம் அதை எப்படி ஏற்றுக்கொண்டதோ அதன் அடிப்படையில் சொல்வார்கள்.

    உண்ட உணவால் உடலின் பசி என்ற தேவையுணர்வு நிறைவடைந்தது என்ற அளவோடு எண்ணாமல், அதற்கும் மேல் இது நன்றாக இருந்தது அல்லது நன்றாக இல்லை  என்பது உணர்ச்சி.

    இது அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பது. இதனால் தான் மாயை அல்லது மயக்க நிலை  என்றனர்.

    கடுமையான குளிர்; உடல் நடுங்குகிறது. உடலை சூடாக வைத்துக்கொள்ள ஏதாவது ஒன்றால் உடலை மூடிக் குளிரிலிருந்து காத்துக்கொள்ள வேண்டு மென்பது உடலின் தேவை உணர்வு.[hide]

    போர்வை ஒன்றால் உடலை போர்த்திக் கொள்கிறோம். குளிர் குறைந்து உடல் வெதுவெதுப்பாகிறது. மனம் இப்போது நிறைவான உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது.

    இவற்றால் ஒன்றைத் தெளிவாகப் பரிந்து கொள்கிறோம். உடல் தேவை உணர்வுகளும் மன உணர்ச்சிகளும். ஒன்றுடன் ஒன்று தெடர்பு உடையவை என்று.

    இதை என்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    அறிவு தான் நம் உணர்வுகளை வழி நடத்துகிறது.

    கோமா நிலையில் இருப்பவருக்கு, அறிவு செயல்படாது. இதனால் பசி தாகம் போன்ற உடல் தேவைகள் எதுவுமே அவருக்குத் தெரியாது.

    மன உணர்ச்சிகள் ஓர்மைப்படும் போது மிகச்சிறப்பான திறமைகள் வெளிப்படுவதை அனைவரும் அறிவர்.

    ஒருவருக்கு அற்புதமான நினைவாற்றல்; சிறு வயது முதல் நடை பெற்றவைகளைச் சரியாகச் சொல்கிறார் என்றால்  பலராலும் பாரட்டப்படுபவர் ஆகிவிடுவார்.

    இதற்குக் காரணம் அவரது மன ஓர்மைப்பாடாகும். இதற்கு ஒளிக்கற்றைகளை உதாரணமாகச் சொல்லலாம்.

    ஒளி அலைகள் பரந்து விரிந்து செல்பவை ஆனால் லேசர் என்பது மட்டும் துல்லியமாக எதன் மீது நாம் செலுத்துகிறோமோ, அதைமட்டுமே  காண்பிக்கும்.

    ஆங்கிலத்தில் இதை BUNDLE OF RAYS OF LIGHT என்று சொல்கிறோம்.

    மன ஒருமைப்பாடு எவருக்கு அதிகமாக இருக்கிறதோ, அவரால் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்துவிடும்.

    உடலின் தேவை உணர்வுகள் நபருக்கு நபர் வேறுபடும். எனவே, இது பிரபஞ்சத்துக்குத் தெரியாது.

    ஆனால் மன உணர்ச்சிகள் அனைத்துமே பிரபஞ்சத்துக்குத் தெரியும். இதைத் தான் திருவள்ளுவர்..,

    “எண்ணிய எண்ணியாங்கு ஏய்துப எண்ணியர்

    திண்ணிய ராகப் பெறின்”

    –   குறள் 666 என்றார்.

    மனதின் ஆற்றலே மனிதனின் ஆற்றல் பிரபஞ்ச சக்தியைத் கொண்டு இந்த ஆற்றலை கட்டாயம் அதிகரித்துக்கொள்ள முடியும். இதற்குத் தேவை ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் தான். இதை “POSITIVE” என்று சொல்கிறோம்.

    மனோசக்தியை அதிகரிக்கவும் ஆக்கபூர்வமான பாஸிடிவ் மன நிலையைத் தக்க வைக்கவும் தேவை தெளிவான மனம். இதைத் தருவது மவுனம்.

    மவுனம் கலக நாஸ்தி என்றனர் நம் முன்னோர். தேவையில்லாத போது பேசக்கூடாது; தேவைப்படும்போது பேசாமலிருக்கக்கூடாது. இதைக் கடைப்பிடிப்பதற்கு உதவி செய்வது தான் மவுனம்.

    மவுனமாயிருக்கும் போது மனம் தெளிவாக இருப்பதால், நம்மிடமுள்ள குறைகளும் நிறைகளும் நள்றாகவே தெரியும்.

    இதை ஆராய்ந்து தேவையானவைகளை வைத்துக் கொண்டு தேவையில்லாதவைகளை நீக்கவேண்டும்.  இந்த மன நிலைக்கு வராதவர்கள் தான் பழத்தை மறந்து இலைகளை எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

    இதை வணிக மொழியில் இருப்பு பார்த்தல் (STOCK TAKING) என்று சொல்கிறோம். வாரம் ஒருநாள் சில மணிநேரம், மாதம் ஒரு நாள் இந்த மவுனப் பயிற்சி செய்தால், நம் ஆற்றல் பல மடங்காய் பெருகும்.

    இதனோடு உபவாசம் எனும் உண்ணாவிரதமும் இருக்கும் போது இளைஞர்களின் பலம் பல மடங்கு மேலோங்குகிறது.

    எப்படி….?[/hide]

    இந்த இதழை மேலும்