Home » Articles » சத்துணவும் பாதுகாப்பும்

 
சத்துணவும் பாதுகாப்பும்


அனுராதா கிருஷ்ணன்
Author:

நம் பயணத்தின் எல்லா காலங்களிலும் தரமான மற்றும் ஊட்டச்சத்துமிக்க உணவுகள் கிடைப்பது என்பது அரிதான விஷயம். ஆகவே, நம் பயணகால உணவின் பற்றாக்குறைகளை ஈடு செய்யும் விதமாக நமக்கு துணை புரிவதுதான் துணை சத்துணவுகள். அவைகளைப் பற்றி இனி விரிவாகப் பார்ப்போம்.

  1. சமச்சீர் புரதம்: எல்லா அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்ட சமச்சீர் புரதம் நம் உடலின் செரிமான நொதிகளை (Digestive enzymes) உற்பத்தி செய்யவும் மற்றும் நம் உடலின் உயிர் வேதியல் தன்மாற்றத்திற்குத் (Metabolic reactions) தேவையான ஹார்மோன்களை உற்பத்திச் செய்யவும் உதவியாக இருந்து பயண காலத்தில் நம் உடலை சக்தியாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவும். சமச்சீர் புரதம் எடுப்பதால் நாம் களைப்பின்றி பிரயாணம் செய்யலாம்.
  2. உயிர் மற்றும் தாதுச் சத்துக்கள்: இயற்கையான உயிர் மற்றும் தாதுச் சத்து துணைவுணவுகள் நம் உடல் செயலாக்கத்திற்கு வேண்டிய எல்லா உயிர்ச் சத்துக்கள் (vitamins) மற்றும் நம் உடலின் வேதி வினைகளுக்கு வேண்டிய கிரியா ஊக்கிகளான (bio-catalyst) அனைத்து தாதுச் சத்துக்களையும் (minerals) கொண்டிருக்கும். இதனால் நம் உடலின் எல்லா உயிரியல் வினைகளும் சிறப்பாக நடைபெற்று, ஆற்றலாக இருக்க உதவியாக இருக்கும். பிரயாணங்களில் நாம் எல்லா உயிர்ச் சத்துக்கள் மற்றும் தாதுக்களைக் கொண்ட உணவுகளைத் தேடித் தேடி சாப்பிட முடியாது. அந்த பற்றாக்குறைகளை இத்துணை உணவு ஈடு செய்யும்.
  3. ஒமேகா-3 கொழுப்பு: நம் உடலை மென்மையாகவும், தோலை இளமையாகவும், இரத்தக் குழாய்களை இலகுவாகவும், நரம்புகளை தளர்வாகவும் வைக்க ஒமேகா-3 கொழுப்பானது உதவியாக இருக்கும். இதனால் நம் உடல் இயக்கத்தை நரம்பு மண்டலம் சிறப்பாக இயக்கி நம் உடலை வலுப்படுத்தும். பிரயாணக் களைப்பை குறைத்து நம் உடலை இலகுவாக்க ஒமேகா-3 கொழுப்பு மிகவும் உதவியாக இருக்கும்.
  4. நீரில் கரையும் நார்ச் சத்து: இந்த நார்ச் சத்தானது நம் உடலின் செல்லணுக்களின் அசுத்தங்ளை உள் உறுப்புகளுக்குச் சேதாரம் இன்றி வெளியேற்றம் செய்ய உதவியாக இருக்கும். நம் செல்லனுக்களில் கழிவு நீக்கப்பட்ட காலியிடத்தில் ஆகாச சக்தியே நிரம்பி ஆற்றலைக் கொடுக்கும். பிரயாணக் காலங்களில் நம் உடலின் கழிவுகளை எளிதாக வெளியேற்ற நீரில் கரையும் நார்சத்து மிகவும் உதவியாக இருக்கும்.
  5. காய்கனிகளின் செரிவுச் சத்து: இவ்வித துணை உணவுச் சத்தானது, நம் உடலின் இரசம் (ஜீரண மண்டலம்), இரத்தம், சதை, கொழுப்பு (பாதுகாப்பு மண்டலம்), எலும்பு, நரம்பு மற்றும் விந்து நாதம் ஆகிய ஏழு மண்டலங்களின் செயலாக்கத்திற்கு கிரியா ஊக்கிகளாக விளங்கும். இதனால், நம் இரசம், இரத்தம் முதல் விந்து நாதம் வரை வலுவாக்கம் சாத்தியப்படுகிறது. காய்கனிகளின் செரிவுச் சத்தானது நம் உடல் முழுமைக்கும் புத்துணர்வைத் தரும். ஆகையால், நம் பயணம் சிறக்க இதுவும் பக்கபலமாக இருக்கும்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2019

எதையும் விரும்பிச் செய் எதிர்காலத்தைப் பூர்த்தி செய்
தன்னம்பிக்கை மேடை
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 12
பேச்சுக்கலைக்கு பெருமை சேர்க்கும் பெண்மணி…
உயிரின் உதிரம்…
நில்! கவனி!! புறப்படு!!! – 7
புத்தங்களை நேசிப்போம் வாழ்வை சுவாசிப்போம்…
வெற்றி உங்கள் கையில்- 69
சின்னஞ்சிறு சிந்தனைகள்
வளர்பிறை கபாடிக் குழு…
வெற்றியின் முகவரி நீ !
சத்துணவும் பாதுகாப்பும்
குடும்ப உறவுகளைப் பேணிக்காப்பது எப்படி…
ஈரம்..
மனப்பட்டாசு!
கர்ப்ப கால பராமரிப்பு
இலைகளை எண்ணுகிறாயா? பழங்களை உண்ணுகிறாயா?
அறிஞர்களின் அறிவுரைகள்…
உள்ளத்தோடு உள்ளம்