Home » Articles » வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 12

 
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 12


ஞானசேகரன் தே
Author:

இலக்குகள்!

(GOALS)

இந்த நூலின் ஆசிரியர் பிரையன் டிரேசி (Brain Tracy) ஆவார். (இந்நூலினைத் தமிழில் நாகலட்சுமி சண்முகம் மொழியாக்கம் செய்துள்ளார். மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளல்யிட்டுள்ளது.) “கடவுள் வீணானவற்றைப் படைப்பதில்லை” உலகில் பிறந்த ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒருவகையான மேதமையை அடைவதற்கான திறனை கடவுள் கொடுத்திருக்கிறார். ஆனால் பெரும்பாலோர் “நான் போதுமானவனல்ல” என்ற உணர்வுடன் வாழ்வதே நம்முடைய பெரும்பாலான பிரச்சினைகளுக்கான வேர்கள். இந்தத் தடையை முதலில் கடந்து நீங்கள் அறிந்துள்ளதை விடவும் நீங்கள் அதிகச் சிறப்பானவர் என்று உணரும்போது; எல்லாராலும் நீங்கள் அதிகச் சிறப்பானவர் என்று உணரும்போது; எல்லோராலும் தமக்கான இலக்குகளை அடைவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்று பிரையன் டிரேசி கூறுகிறார்.

பெரும்பாலானோருக்கு, தாங்கள் குறிவைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்து விடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்து விடமுடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்கிறார் பிரையன் டிரேசி. ஒரு சில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

இலக்குகளை நிர்ணயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த நிரூபணமான உத்திகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது இந்த நூல். எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத்திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில் முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுய துணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை ஆசிரியர் இப்புத்தகத்தில் அறிவியற் பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்.”இலக்குகளின்றி வெற்றி இல்லை” என்பது பிரைன் டிரேசியின் மந்திரக்கோட்பாடு. எந்தவோர் இலக்கையும் நிர்ணயித்து, அதை அடைவதற்கான பன்னிரண்டு அம்ச வழிமுறையை வருமாறு குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

இலக்கை அடைய 12 வழிமுறைகள்

 • ஓர் ஆழ் விருப்பத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்; உங்களுக்கு உண்மையிலேயே என்ன வேண்டும்.
 • உங்களுடைய இலக்கு அடையப்படக்கூடியதுதான் என்று நம்புங்கள்.
 • உங்கள் இலக்குகளை எழுதிக்கொள்ளுங்கள்.
 • உங்களுடைய துவக்கப் புள்ளியைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
 • ஏன் அது உங்களுக்கு வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
 • ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.
 • உங்கள் வழியிலுள்ள முட்டுக்கட்டைகளைக் கண்டுபிடியுங்கள்.
 • உங்களுக்குத் தேவையான கூடுதல் அறிவும் திறமைகளும் எவை என்று தீர்மானியுங்கள்.
 • உங்களுக்கு யாருடைய உதவி தேவைப்படும் என்பதைக் கண்டு பிடியுங்கள்.
 • எல்லாவற்றையும் ஒன்றிணைத்து ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்.
 • உங்கள் இலக்கைத் தொடர்ந்து மனக்காட்சிப்படுத்துங்கள்.
 • உங்கள் முயற்சியை ஒருபோதும் கைவிடாதீர்கள்.

12 அம்ச வழிமுறையைச் செயலாக்குதல்

12 அம்ச கொள்கைகளை நீங்கள் உங்கள் வாழ்வில் கடைப்பிடிக்கும் போது, நீங்கள் சாதிக்கத் துவங்குகிற விஜயங்களைக் கண்டு நீங்கள் உண்மையிலேயே அசந்துபோவீர்கள். நீங்கள் அதிக நேர்மறையான, அதிகச் சக்திவாய்ந்த, அதிகச் செயற்திறன் கொண்ட நபராக ஆவீர்கள். நீங்கள் உயர்ந்த சுயமதிப்பையும் தன்னம்பிக்கையையும் கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் நீங்கள் ஒரு வெற்றியாளரைப் போல உணர்வீர்கள். எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போல நீங்கள் உணர்வீர்கள். உங்களிடம் அதிக ஆற்றலும் உற்சாகமும் இருக்கும். இதன்விளைவாக, சராசரி நபர்கள் பல வருடங்களில் சாதிக்கக்கூடியவற்றை நீங்கள் ஒருசில வாரங்களில் அல்லது மாதங்களில் சாதித்துவிடுவீர்கள்.

வாழ்நாள் முழுவதும் இலக்குகளை நிர்ணயிக்கும் பழக்கத்தைக் கடைபிடிக்கும் ஒருவராக நீங்கள் ஆகும்போது, ஆய்வு மற்றும் பயிற்சியின் மூலமாக வெற்றிக்கான இந்த முதன்மையான திறமையை உங்கள் ஆழ்மனத்திற்குள் நீங்கள் பதிய வைக்கிறீர்கள். நம் சமுதாயத்தில் மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் நீங்கள் சேர்ந்துகொண்டு, மிகவும் மகிழ்ச்சிகரமான, மிகவும் வெற்றிகரமான மக்களில் ஒருவராக ஆவீர்கள்.

இலக்கை அடைவதற்கான முக்கியத்திறன்

உங்கள் இலக்குகள் என்னவாக இருந்தாலும் சரி. அந்த இலக்குகளை அடைவதற்கு நீங்கள் செய்துமுடிக்க வேண்டிய அனைத்து வேலைகளையும் ஒரு பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு காலக்கெடுவை நிர்ணயம் செய்துகொள்ளுங்கள். பிறகு, குறித்த காலத்திற்குள் அவற்றைச் செய்து முடிப்பதற்கு ஒவ்வொரு நாளும் கடினமாக உழையுங்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் முன்னேற்றத்தை அளவிடுங்கள். தேவைப்படும் இடங்களில் உங்கள் வேகத்தைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யுங்கள். ஆனால் ஒரு விஜயத்தை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; உங்களால் பார்க்க முடியாத ஓர் இலக்கை உங்களால் ஒருபோதும் குறிவைத்துத் தாக்க முடியாது. எனவே உங்களுடைய காலக்கெடுக்கள் மற்றும் அளவீடுகள் குறித்து உங்களுக்கு எவ்வளவு அதிகத் தெளிவு இருக்கிறதோ; அவ்வளவு அதிகமானவற்றை நீங்கள் சாதிப்பீர்கள்; அவற்றை அவ்வளவு அதிக விரைவாகவும் செய்து முடிப்பீர்கள்.

காலக்கெடு இல்லாத ஓர் இலக்கோ அல்லது ஒரு தீர்மானமோ வெறுமனே ஓர் ஆசை மட்டுமே. அதன் பின்னால் எந்த ஆற்றலும் இல்லை. வெடிமருந்து இல்லாத ஒரு தோட்டாவைப் போன்றது இது. காலக்கெடுக்களை நிர்ணயித்துக் கொள்ளாதவரை வாழ்க்கையிலும் சரி, வேலையிலும் சரி, நீங்கள் எதையுமே சாதிக்கமாட்டீர்கள்.

ஒரு யானையைச் சாப்பிடுவது

“ஒரு யானையை எவ்வாறு சாப்பிடுவது” என்ற கேள்வியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். “ஒரு நேரத்தில் ஒரு துண்டு” என்பது தான் அதற்கான விடை. எந்தவொரு பெரிய இலக்கை அடைவதற்கும் இது பொருந்தும். ஒரு மிகப்பெரிய இலக்கை எவ்வாறு அடைவது? ஒரு நேரத்தில் ஒரு செயல், ஒரு நேரத்தில் ஒரு நடவடிக்கை என்ற ரீதியில்தான்.

உங்களுடைய நீண்ட கால இலக்கை வருடாந்திர, மாதாந்திர, வாராந்திர இலக்குகளாகக் கூறு போட்டுக்கொள்ளுங்கள். சில சமயங்களில் ஒவ்வொரு மணிநேரமும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற ரீதியில்கூட நீங்கள் உங்கள் இலக்குகளைக் கூறு போட வேண்டியிருக்கும். இப்படியாகச் சிறு, சிறு துண்டுகளாகச் செய்து பெரிய இலக்கை ஒருவர் அடையலாம் என்பது ஒரு யானையைச் சாப்பிடுவது என்ற எடுத்துக்காட்டின் வழி விளக்குகிறார் பிரையன் டிரேசி. உங்களுடைய மிக முக்கியமான இலக்கிற்கு ஓரடியாவது அருகே செல்லக்கூடிய ஏதாவது ஒரு நடவடிக்கையை ஒவ்வொரு நாளும் செய்தாலே இலக்கை அடைந்துவிடலாம் என்று இந்த நூலில் இடம்பெற்றுள்ள செய்திகள் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2019

எதையும் விரும்பிச் செய் எதிர்காலத்தைப் பூர்த்தி செய்
தன்னம்பிக்கை மேடை
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 12
பேச்சுக்கலைக்கு பெருமை சேர்க்கும் பெண்மணி…
உயிரின் உதிரம்…
நில்! கவனி!! புறப்படு!!! – 7
புத்தங்களை நேசிப்போம் வாழ்வை சுவாசிப்போம்…
வெற்றி உங்கள் கையில்- 69
சின்னஞ்சிறு சிந்தனைகள்
வளர்பிறை கபாடிக் குழு…
வெற்றியின் முகவரி நீ !
சத்துணவும் பாதுகாப்பும்
குடும்ப உறவுகளைப் பேணிக்காப்பது எப்படி…
ஈரம்..
மனப்பட்டாசு!
கர்ப்ப கால பராமரிப்பு
இலைகளை எண்ணுகிறாயா? பழங்களை உண்ணுகிறாயா?
அறிஞர்களின் அறிவுரைகள்…
உள்ளத்தோடு உள்ளம்