Home » Articles » உயிரின் உதிரம்…

 
உயிரின் உதிரம்…


கௌசிகா தேவி ம
Author:

சூரியனின் வெட்பமும் வேதனைக்கொள்கிறது, அந்த இராணுவ வீரர்களின் இரத்தக்கரையை சுடுவதற்கு யாருமில்லா நிலையில் நாளைதான் அந்த உயிரற்ற வீரர்களின் உதிரத்தில் காய்ந்த உடல்களை காணவருவார்கள் மற்றவர்கள். நேரம் கடந்து, இரவும் நிலவைக் கொடுக்கிறது. அந்த வீரமகன்களின் உடல்களை இறுதியாக காதலிப்பதற்கு. ஆனால், இறந்தவர்களில் ஒருவரின் உடல் மட்டும் துடிக்கிறது, தன் தாய் மண்ணிலே மீண்டும் இறக்க வேண்டும் என்பதற்காகவும், மேலும் தன்னை மார்பிலே சுட்டுக்கொன்றவன் கையில் மீண்டும் சாக வேண்டும் என்பதற்காகவும்.

அந்த உறவின் கதையைப்பற்றிக் காண்போம்.

அன்று மாலை 4.30 மணி, இராணுவ வீரர்கள் தன் நாட்டின் எல்லையிலே பாதுகாப்பு பணியில் இருந்தார்கள். அமைதி கொண்ட வானில் திடீர் மின்னலின் ஒளியைப் போல், அப்போது ஒரு குழந்தையின் அழுகைக்குரல் கேட்கிறது. வீரர்கள் சென்று பார்த்து போது ஒரு மூன்று வயது சிறு ஆண்பிள்ளை ஒரு மரத்தின் கிளையில் அடிபட்ட நிலையில் இருந்தான். யார் அந்தப் பிள்ளை, எப்படி இங்கு வந்தான் என்ற சோதனையில் விவரம் தெரியவில்லை, எனவே, அந்த ஆண்பிள்ளையை, பல பீரங்கிகளையும், தூப்பாக்கிகளையும் கண்ட அந்த வீரக் கைகள் பாசத்துடன் காத்தது.

சில வாரங்களுக்கு பிறகு அந்த சிறிய பிள்ளைக்கு முகமது மற்றும் தாமஸ் என்ற தலைமை அதிகாரிகள் அவனுக்கு ஏகன் என்ற அழகிய பெயர் சூட்டினர். அதில் சாரியார் என்ற இராணுவ வீரருக்கு ஏகனை மிகவும் பிடித்திருந்தது, ஏகன் சாரியாரை குருநாத் என்ற பெயரோடே அழைப்பான்.

சாரியார் ஏகனுக்கு அனைத்து இராணுவ பயிற்சிகளையும் கற்றுக் கொடுத்தார். ஏகன் வளர வளர அவனுக்கு நாட்டுப்பற்றையும், நாட்டின் கடமைகளையும், ஒழுக்கத்தின் வீரத்தைப் பற்றியும் விளக்கினார் சாரியார்.

ஆனால், அதில் சிலர் இவன் யார் எந்த நாட்டுப்பிள்ளை என்று தெரியாமல் இப்படி நம்பிக்கை வைப்பது சரியில்லை என்கிறார்கள். அதையெல்லாம் சாரியார் பொருட்படுத்தவில்லை.

ஒரு நாள் ஏகனை எதிர்நாட்டவரிடம் தூதராக அனுப்ப வேண்டிய நிலை. அவன் அந்த எதிர்நாட்டிற்கு சென்ற போது தான் தெரிந்தது, அவன் அந்த நாட்டைச் சார்ந்த பிள்ளை என்று, அதனால் அவனை வளர்த்த வீரர்கள் ஏற்கு மறுத்தனர். அவன் தன் ஆசிரியரின் (சாரியார்) நாட்டுப்பற்று மொழியால் தன் சொந்த நாட்டிலே இராணுவ வீரனாக இணைந்தான்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2019

எதையும் விரும்பிச் செய் எதிர்காலத்தைப் பூர்த்தி செய்
தன்னம்பிக்கை மேடை
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 12
பேச்சுக்கலைக்கு பெருமை சேர்க்கும் பெண்மணி…
உயிரின் உதிரம்…
நில்! கவனி!! புறப்படு!!! – 7
புத்தங்களை நேசிப்போம் வாழ்வை சுவாசிப்போம்…
வெற்றி உங்கள் கையில்- 69
சின்னஞ்சிறு சிந்தனைகள்
வளர்பிறை கபாடிக் குழு…
வெற்றியின் முகவரி நீ !
சத்துணவும் பாதுகாப்பும்
குடும்ப உறவுகளைப் பேணிக்காப்பது எப்படி…
ஈரம்..
மனப்பட்டாசு!
கர்ப்ப கால பராமரிப்பு
இலைகளை எண்ணுகிறாயா? பழங்களை உண்ணுகிறாயா?
அறிஞர்களின் அறிவுரைகள்…
உள்ளத்தோடு உள்ளம்