Home » Articles » புத்தங்களை நேசிப்போம் வாழ்வை சுவாசிப்போம்…

 
புத்தங்களை நேசிப்போம் வாழ்வை சுவாசிப்போம்…


ஜெயப்பிரகாஷ் க
Author:

காடுதோறும் வளர்ந்த மரங்களைப் போல். நூலகம் நிறைந்த புத்தகங்கள் ஒவ்வொன்றும். ஆயிரமாயிரம் சிந்தனையின் விதைகளைத் தாங்கிக் கொண்டுள்ளதை, படிக்க படிக்கவே உணர முடியும்.  படித்தலில் கிடைக்கும் அறிவு, சாதுர்யம் மிக்கது. படித்தலில் வரும் தெளிவு வாழ்வை மிளிர வைக்கத் தக்கது. படிப்பவரால் தான் மனதுள் ஊக்கத்தை விதைத்துக் கொள்ளமுடிகிறது.

எப்பொழுதோ நிகழ்ந்ததை, நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு. இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது, புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து. அதனை இங்குள்ள நமக்கு விளக்குபவை நூல்களே. எவரோ அறிந்ததை, நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவை. நூல்கள் தாம். விலங்குகளின் வாழ்க்கை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ. அப்படியே தான் இன்றும். எப்படியும் வாழலாம் என்பது;விலங்கு வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை. முன்பு வாழ்ந்தவர்களின் அனுபவ அறிவையும் எடுத்துக் கொண்டு அவர்கள் விட்ட இடத்திலிருந்து வாழ்வைத் தொடர்வதால் தான் மனித வாழ்க்கை தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது.

நடுத்தரத் தன்மையை மனதுள் நிலைக்கச் செய்தல். படித்தலால் கவரப்படுவதை. தொடர்ந்து படிப்போரால். அறிய முடிகிறது. விதைத்தால் விளையும் நிலம் போல, படிப்பினால் உதிக்கும் ஞானம், நம்மை சுற்றி இருக்கும் வெளி எங்கும் நன்மையின் வெளிச்சத்தைப் பரவச் செய்யும். மகிழ்ச்சி என்பது எது. என்று அறியக் கூடிய அறிவுக் கூர்மையை படிப்பு மேம்படுத்தும். அதன் பொருட்டாக, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக சிந்தித்து. நாம் தாட்களை, புத்தகங்களை கண்டறியும் முன்னரே, ஓலையில் எழுதத் துவங்கிய. நமது முன்னோர்களையும் நாம் எடுத்துணர வேண்டும்.

நாம் வரலாற்றையும், பூகோளத்தையும், கலாச்சாரத்தையும், கலையையும், அறிவியலையும், தொழில்நுட்பத்தையும்.  நல்ல புத்தகங்களின் மூலம் படித்துக் கற்றுத் தேர்ந்தால் தான், நாம். நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தை, ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாற்ற முடியும்.

புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும். ஒவ்வொரு அகமும், அறிவும் விளக்கேற்றும் கோவில் இன்றி வேறில்லை. அவை நூலகத்திலிருந்து உருவானவை. நிறைய மேதைகள். நம் நாட்டில் உண்டு. இவ்வுலகம். ஒரு புள்ளியில் அடங்கத்தக்கது எனும் நம்பிக்கை. நமக்கெல்லாம் எவ்வளவு வலிமையானதாக உள்ளதோ. அதே அளவு, இந்த ஒரு பிறப்பின் அறிவின்னுள்ளோ அல்லது ஒரு பிறவியின் காட்சிக்குள்ளோ அடங்கிப் பொவதும் கூட இல்லை.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2019

எதையும் விரும்பிச் செய் எதிர்காலத்தைப் பூர்த்தி செய்
தன்னம்பிக்கை மேடை
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 12
பேச்சுக்கலைக்கு பெருமை சேர்க்கும் பெண்மணி…
உயிரின் உதிரம்…
நில்! கவனி!! புறப்படு!!! – 7
புத்தங்களை நேசிப்போம் வாழ்வை சுவாசிப்போம்…
வெற்றி உங்கள் கையில்- 69
சின்னஞ்சிறு சிந்தனைகள்
வளர்பிறை கபாடிக் குழு…
வெற்றியின் முகவரி நீ !
சத்துணவும் பாதுகாப்பும்
குடும்ப உறவுகளைப் பேணிக்காப்பது எப்படி…
ஈரம்..
மனப்பட்டாசு!
கர்ப்ப கால பராமரிப்பு
இலைகளை எண்ணுகிறாயா? பழங்களை உண்ணுகிறாயா?
அறிஞர்களின் அறிவுரைகள்…
உள்ளத்தோடு உள்ளம்