Home » Articles » சின்னஞ்சிறு சிந்தனைகள்

 
சின்னஞ்சிறு சிந்தனைகள்


மாரிமுத்துராஜ் A.G
Author:

நாம் நினைப்பதும் செயல்படுவதும் ஏதோ ஒரு வகையில், நம் வாழ்க்கையில் நம்மோடு  இணைந்து பயணிப்பவர்களின் வாழ்வில் உணர்வில் நிச்சயம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.

நதியில் விட்டெறியும் கல் போலத்தான் நம் செயல்களும், சொற்களும் விழுந்த இடத்தில் மட்டுமல்லாமல், அதைச்சுற்றியும் அதிர்வுகளை ஏற்படுத்த வல்லது.

எந்தச் சூழலிலும் சிரித்துப் பழகும் அணுகுமுறை, அன்பை வெளிப்படுத்தும் உடல் மொழி என எல்லாமும் நல்ல அதிர்வுகளை உங்கள் உறவுகள், நீங்கள் வாழும் சுற்றுப்புறம். உங்கள் சமூகம் ஏன் இறுதியில் இந்த உலகம் முழுமையிலும் கொண்டு சேர்க்கும் இது நிச்சயம்.

பாதை வகுத்தப் பின்பு பயந்தென்ன இலாபம் – அதில் பயணம் நடத்திவிடு மறைந்திருக்கும் பாவம்.

வாழ்வின் சவாலான சூழ்நிலைகளில் கூட மனிதமனம் ஓர் ஆழமான நம்பிக்கையை இறுகப் பற்றிக் கொண்டு தனக்கு நல்லது நடக்கும் என்று நம்புகிறது. தானே வருவது உணர்வு. நம்மால் வருவது உணர்ச்சி.

எண்ணங்களை தயாரித்து இயக்குபவர் நாமில்லை பலர் சேர்ந்து உருவாக்கிய ஒன்று தான் அது இதனைப் புரிந்து கொள்ளுபதே எண்ணங்களைப் கையாளும் ஒரே வழி.

சிந்தனை என்பது நம் சுய கவனத்தில் செய்வது. எண்ணங்களைப் போல தானாக உருவாவது இல்லை.  நம் பொதுவாக நமக்குத் தேவையானவற்றைத் தான் சிந்திக்கிறோம். அதே நேரத்தில். தானாகத் தோன்றி வெளிப்படும் எண்ணங்களைப் பின்பற்றியும் சிந்திக்கிறோம்.

சிந்திக்கும் விஷயத்தை நாம் தான் முடிவு செய்கிறோம் இங்கு கோபப்படலாமா வேண்டாமா என்பதெல்லாம் நம்முடைய முடிவு தான். ஒரே ஒரு நிமிடப் புரிதல் நாம் வாழ்வின் சகல அம்சங்களையும் அடியோடு மாற்றிவிடும்.

பழக்கத்திற்கு பழக்கம் தான் தீர்வு. முள்ளை முள்ளால் எடுப்பது போல், புதிய பழக்கத்தை ஏற்படுத்தி பழைய பழக்கத்தை எடுத்து விடுதல். இயற்கைத் தன்மையிலிருந்து உங்கள் வாழ்க்கை முறை எவ்வளவு மாறியிருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டு அதை ஒழுங்குப் படுத்துங்கள்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2019

எதையும் விரும்பிச் செய் எதிர்காலத்தைப் பூர்த்தி செய்
தன்னம்பிக்கை மேடை
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 12
பேச்சுக்கலைக்கு பெருமை சேர்க்கும் பெண்மணி…
உயிரின் உதிரம்…
நில்! கவனி!! புறப்படு!!! – 7
புத்தங்களை நேசிப்போம் வாழ்வை சுவாசிப்போம்…
வெற்றி உங்கள் கையில்- 69
சின்னஞ்சிறு சிந்தனைகள்
வளர்பிறை கபாடிக் குழு…
வெற்றியின் முகவரி நீ !
சத்துணவும் பாதுகாப்பும்
குடும்ப உறவுகளைப் பேணிக்காப்பது எப்படி…
ஈரம்..
மனப்பட்டாசு!
கர்ப்ப கால பராமரிப்பு
இலைகளை எண்ணுகிறாயா? பழங்களை உண்ணுகிறாயா?
அறிஞர்களின் அறிவுரைகள்…
உள்ளத்தோடு உள்ளம்