Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி…?

படித்தப் படிப்பிற்கு ஏற்ற வேலை தேடுவது நல்லதா? அல்லது படிப்பொன்றும், கிடைத்த வேலை ஒன்றும் செய்வது நல்லதா?

இராமலிங்கம்

பட்டதாரி

கோவை.

உயர்படிப்பு படிப்பதே உயர் பதவி வேலைக்காகத்தான். படிப்பிற்கேற்ற வேலை தேடுவதும் நல்லதுதான், ஆனால் படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பது இன்று சிரமமாகி விட்டது. இது பொறியியல் பட்டதாரிகளுக்கு சரியாகப் பொருந்தும்.

நீங்கள் இந்த கேள்வி கேட்ட மாத்திரத்திலேயே, நான் என்ன படிப்பு படித்தேன், ஆனால் என்ன வேலை செய்கிறேன், என்று எண்ணிப் பார்த்தேன். நான் படித்தது விவசாயம், முதுகலைப்பட்ட படிப்பு, ஆனால் 32 ஆண்டுகள் வேலை செய்வதோ காவல் துறையில், இரண்டு ஆண்டுகள் வங்கி அதிகாரியாகவும் பணி செய்துள்ளேன். இதுவே ஒரு முரண்பாடாகத் தெரிகிறது அல்லவா?.

ஆனால் இதில் எந்த தவறுமில்லை. எந்த படிப்பும் படிக்கலாம் பின்னர் என்ன வேலையும் செய்யலாம். அந்த வேலை பிடிக்கவில்லை என்றால் இன்னொரு வேலை கூட தேடலாம் என்பது தான் 21 ஆம் நூற்றாண்டின் வேலை வாய்ப்பு விதியாக இருக்கிறது.

இன்று பல துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை சற்று உன்னிப்பாக கவனியுங்கள். தமிழ் எழுத்தாளர் மறைந்த சுஜாதா (ரங்கராஜன்) ஒரு மின்னணு பொறியியல் பட்டதாரி, பத்திரிக்கையாளர் குருமூர்த்தி ஒரு பட்டியலிடப்பட்ட கணக்காளர் (Chartered Accountant). மறைந்த கவியரசு கண்ணதாசன் கல்லூரியில் படிக்கவில்லை. ஆக ஒருவருக்கு ஒரு பணியின் மீது ஆர்வம் ஏற்பட்ட பிறகு அவர் அந்தத் துறையைப் பற்றி அதிகம் கற்றுக் கொள்வார், அப்படியே அவரது அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்வார்.

கல்வி கற்காமல் ஒருவர் எந்தத் துறையிலும் பிரகாசிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் அது, பள்ளியிலும் கல்லூரியிலும் தான் கற்க வேண்டும் என்பது இல்ல, வீட்டிலும், வீதியிலும், அங்காடியிலும், நூல்களிலும், அனுபவத்திலும் கூட அந்தத் தொழில் சார்ந்த கல்வியைக் கற்கலாம்.

சாதிக்க, கல்வி என்பது அடிப்படை, அது உயர்கல்வி சாலையில் கற்பது சிறந்தது என்பதில் சந்தேகமில்லை. பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் சிலருக்கு மேற்கத்திய நாடுகளில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் செல்வந்தர்களாக இருந்தர்கள்; சிலர் செல்வந்தர்களின் ஆதரவோடு படிக்கச் சென்றர்கள். அங்கு கணிதம், சட்டம், உலக வரலாறு, பொருளாதாரம், அரசியல், தத்துவம், அறிவியல், முன்னேற்றம் என்று கற்று அறிந்தார்கள். அதோடு நாகரிக மக்களின் சமத்துவக் கொள்கை, ஜனநாயகம், தனிமனித உரிமை, சமூக நீதி போன்வற்றையும் தெரிந்து கொண்டார். இவர்கள் இந்தியாவிற்குத் திரும்பி வந்ததும் இந்திய மக்கள் படும் துன்பங்களைக் கண்டு கதி கலங்கினார்கள், எனவே அவர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தனர். அப்படியே களத்தில் இறங்கிப் போராடினர். அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் தாதாபாய் நவரோஜி (1825 – 1917), மகாத்மா காந்தி (1869 – 1948), ஜவகர்லால் நேரு (1889 – 1964) மற்றும் பி. ஆர். அம்பேத்கர்(1891 – 1956) இவர்கள் பிற்காலத்தில் இந்தியாவின் அரசியல் சட்டத்தை எழுதினார்கள். அவர்கள் அன்று இங்கிலாந்து பல்கலைக் கழகங்களில் பயின்ற உயரிய கல்வி அவர்களுக்குப் பெரிதும் உதவியது. இவர்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடமிருந்தும், நூலகங்களிடமிருந்தும் அறிவை சேகரித்தார்கள்.

ஆனால் எந்தக் கல்லூரி கல்வியும் இல்லாத பெருந்தலைவர் காமராஜர், தேசத் தலைவராகத் திகழ்ந்தார். ஒரு பிரதம மந்திரியை தேர்வு செய்யும் ‘கிங் மேக்கர்’ என்று ஜொலித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை பதவி வகித்தார். அவரது காலத்தில் தான் பவானிசாகர் அணை, கீழ் பவானி, ஆழியார் -பரம்பி குளம் போன்ற பல அணைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இவர் கல்விக்கண் திறந்த அரசியல் வித்தகர். ஆனால் இவர் எந்தக் கல்லூரியிலும் படிக்கவில்லை. குடும்ப சூழ்நிலை, அரசியல் மேடை, தலைவர்களுடன் நெருக்கம், அதிகாரிகள் பழக்கம், சிறைச்சாலை அனுபவம், செய்தித்தாள் வாசிப்பு ஆகியவை அவருக்கு தரமான பயனுள்ள கல்வியைக் கற்றுத் தந்திருக்கிறது. அதனால் அவரால் இங்கிலாந்தில் கற்றவர்களுக்கும் ஒருபடி மேலே போய் நிற்க முடிந்திருக்கிறது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2019

எதையும் விரும்பிச் செய் எதிர்காலத்தைப் பூர்த்தி செய்
தன்னம்பிக்கை மேடை
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 12
பேச்சுக்கலைக்கு பெருமை சேர்க்கும் பெண்மணி…
உயிரின் உதிரம்…
நில்! கவனி!! புறப்படு!!! – 7
புத்தங்களை நேசிப்போம் வாழ்வை சுவாசிப்போம்…
வெற்றி உங்கள் கையில்- 69
சின்னஞ்சிறு சிந்தனைகள்
வளர்பிறை கபாடிக் குழு…
வெற்றியின் முகவரி நீ !
சத்துணவும் பாதுகாப்பும்
குடும்ப உறவுகளைப் பேணிக்காப்பது எப்படி…
ஈரம்..
மனப்பட்டாசு!
கர்ப்ப கால பராமரிப்பு
இலைகளை எண்ணுகிறாயா? பழங்களை உண்ணுகிறாயா?
அறிஞர்களின் அறிவுரைகள்…
உள்ளத்தோடு உள்ளம்