Home » Articles » வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 11

 
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 11


ஞானசேகரன் தே
Author:

சிகரத்தில் சந்திப்போம்

(SEE YOU AT THE TOP)

இந்த நூலை ஜிக் ஜிக்லர் (Zig Zigler) ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். (தமிழில் பாரிகாண்டீபன் மொழிபெயர்த்துள்ளார். கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.) “பிறருக்குத் தேவையான உதவிகளை நீங்கள் செய்வீர்களானால், உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள்” என்கிற நிதர்சனமான உண்மையை, இந்நூல் முழுவதும் ஆங்காங்கே மிக அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். காரணம், இந்தக் கலியுகத்தில், நவீன வியாபாரச் சூழலில், இதுதான் மிகவும் பயன்படக்கூடிய ஒரு நடைமுறைச் சித்தாந்தம் என்று ஜிக் ஜிக்லர் மிக ஆணித்தரமாக அதே நேரத்தில் மிக அதிகமான எடுத்துக்காட்டுகளுடன் நிறுவுகின்றார்.

இந்த நூல் ஏழு இயல்களைக் கொண்டுள்ளது.

1. சிகரத்திற்கான படிகள்,

2. உங்கள் சுயமதிப்பீடு,

3. மற்றவர்களுடன் உங்களது உறவுமுறை,

4. குறிக்கோள்கள்,

5. மனப்பாங்கு,

6. வேலை,

7. ஆசை என்பதாக அமைக்கப்பட்டுள்ள இந்நூல் 615 பக்கங்களைக் கொண்ட பெரிய நூல் ஆகும். மேற்கண்ட ஏழு இயல்களில் சொல்லப்பட்டுள்ள சிகரத்தை அடைவதற்கான சிந்தனைகளை வருமாறு காண்போம்.

  1. சிகரத்திற்கான ஆறு படிகள்

சிகரத்தின் உயரம் படிக்கட்டுகளாக இருந்தால் அவை பின்வரும் ஆறு படிக்கட்டுக்களாக இருக்கும்.

1. சுய கௌரவம் (Self Image),

2. மற்றவர்களுடன் ஒத்துப்போதல் பண்பு,

3. சரியான இலக்கு,

4. சரியான மனோபாவம்,

5. நேர்மறைச் சந்தனையுடன் செயல்படல்,

6. வெற்றியை எட்டும் வேட்கை கொழுந்துவிட்டு எரிதல். இந்த ஆறு படிகளை ஒருவன் சரியாகக் கடந்திட்டால் அவனது வெற்றியை எவராலும் தடுத்திட முடியாது.

வெற்றிபெற விரும்பும் ஒருவரின் குணங்களி ல் மிக முக்கியமானவை நல்ல குணம், நம்பிக்கை, நாணயம், நேர்மை, அன்பு, விசுவாசம் போன்றனவாகும். உங்களுக்கு உங்களி டமும் உங்களது நண்பர்களி டமும் பல விஜயங்கள் பிடித்திருக்கின்றன. உங்களி டம் சில இலக்குகளும், சில சரியான மனோபாவங்களும் உள்ளன. நிறைய பணிகளைச் செய்கின்றீர்கள். தவிர சில ஆசைகளும் உள்ளன. நீங்கள் இப்போது செய்ய வேண்டியது என்னவென்றால் உங்களி டம் இருப்பதை முழுமையாகப் பயன்படுத்துவதும் வளர்ச்சிக்கு உங்களுடைய மனோபாவத்தை பிரயோகிப்பதும் மிக அவசியமானதாகும். காரணம்; உங்களி டம் உள்ளதை அதிகமாக உபயோகிக்கும்போது, இன்னமும் அதிகமாக உபயோகிக்கும்படியான கட்டாயம் ஏற்படும். இதைத் தவிர ஒரு ஆணோ, ஒரு பெண்ணோ வெற்றியாளராவதற்கு நிறைய குணங்கள் தேவையில்லை. “ஒருவரிடம் என்ன இருக்கிறதோ அவற்றைப் பயன்படுத்தினாலே போதும். அவர் சிகரத்தை அடைந்துவிடுவார்” என்கிறார் ஜிக் ஜிக்லர்.

உலக வரைபடமும் மனித உருவமும்

ஓயாமல் தொல்லை செய்யும் தனது மகனின் கவனத்தைத் திசை திருப்ப எண்ணிய தந்தை உலக வரைபடத்தை சுக்குநூறாகக் கிழித்து; இதை ஏற்கனவே இருந்ததுபோல் ஒட்டி வை என்றார். மகன் ஏய் சாலி! இப்பவே செய்கிறேன் என்று ஐந்து மணித்துளி யில் சரியாக ஒட்டிக் காண்பிக்க; தந்தைக்கு அதிர்ச்சி. எப்படி இத்தனை வேகத்தில் செய்தாய் என்று கேட்க. அந்தச் சிறுவன் சொன்னான். “அந்த வரைபடத்தின் பின்னால் ஒரு மனிதனின் படம் உள்ளது. ஆகவே அந்தப் பக்கத்தைத் திருப்பிப் பின்பக்கம் உள்ள மனிதனின் படத்தை ஒன்று சேர்த்தேன். அந்த மனிதனின் உருவம் சரியாக அமைந்தவுடனேயே அந்த வரைபடமும் சரியாகிவிட்டது” என்று சொன்னான். நீங்கள் சரியானால் உங்களி ன் உலகமும் சரியாகிவிடும்” என்று கூறுகிறார் ஜிக் ஜிக்லர். எதைச் செய்வதற்கும் சரியான நேரம் இப்போதே என்ற மனம் கொண்டவர் சிகரம் தொடுவதில் சிரமம் ஏதும் இருக்காது. உண்மையில் உங்களுக்குக் கிடைப்பதை விரும்பாமல்; விரும்பியதைக் கிடைக்க வைக்கலாம். நீங்கள் நம்பத் துவங்கிவிட்டால் பிறகு வெற்றி என்பதே சுலபமானதுதான். ஆனால் முதலில் நீங்கள் நம்ப வேண்டும்.

  1. உங்கள் சுய – மதிப்பீடு

இந்த இயலில் ஆரோக்யமான சுயமதிப்பீட்டின் முக்கியத்துவம் பற்றியும், மோசமான சுயகௌரவம் பற்றியும் விளக்கி; ஒருவர் சுய கௌரவத்தை நல்ல முறையில் வளர்ப்பதற்கான பதினைந்து வழிமுறைகளை விளக்குகிறார் ஆசிரியர். இவற்றில் சில,

“நல்லதே நடக்கும் என்று நம்புவது”

“கடவுள்தோல்வியுறாத மனிதர்களைப் படைப்பதேயில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுதல்”

“சந்தோஷமாக இருக்கும் இதயத்திற்குத் தொடர்ச்சியாக விருந்துகள் கிடைக்கும்”

“உங்களது நண்பர்களைப் பற்றிக் கவனமாக இருங்கள்”

“மற்றவர்களி ன் துயரங்களைப் பங்கு போட்டுக் கொள்ளுங்கள்”

“நேர்மறைச் சிந்தனையுடன் செயல்படுங்கள்” “நீங்கள் பெற்ற வெற்றிகளை எப்போதும் மறந்துவிடாதீர்கள்”

“தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்”

“பிறருடன் நட்புடன் எப்போதும் இருங்கள்”

“உங்கள் தோற்றத்தைக் கச்சித அளவுடன் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள்”

“உங்களை நீங்களே ஒப்புக்கொள்ளுங்கள்”

“தேர்வு உங்கள் கையில்தான் உள்ளது”

“யாராவது உங்களை வீழ்த்துவதால் நீங்கள் வீழ்வதில்லை. நீங்கள் கீழே விழுந்த பின்னரும் அங்கேயே இருந்தால்தான் கீழே விழுந்ததாக அர்த்தம்”.

“உன் மீது நீயே நம்பிக்கை வைத்தாயானால் நிச்சயமாகச் சிகரத்தை அடையலாம்”

“மனிதன்என்பவன்பிறப்பதே வற்றியடை வதற்காகத்தான்”“ஒன்றைத் தொடங்காமல் நிச்சயம் இலக்கை  அடையமுடியாது”

என்று நிறைய எடுத்துக்காட்டுகளுடன் சுயமதிப்பீட்டை மதிப்பீடு செய்கின்றார். தன்னை நேசிப்பவன் ஆரோக்கியமான சுயமதிப்பீட்டாளன். தன்னை வெறுப்பவன் மோசமான சுயமதிப்பீட்டாளன். நம்மால் எதுவும் முடியுமென்று நம்புவது ஆரோக்கியமான சுயமதிப்பீடு. நம்மால் முடியுமா? என்று சிந்திப்பது மோசமான சுயமதிப்பீடு என்பது ஜிக்ஜில்லரின் சிந்தனை.

  1. மற்றவர்களுடன் உங்களது உறவுமுறை

பல வருடங்களுக்கு முன்னர் சுயமாக லட்சாதிபதிகளான நூறு பேர்களைப் பற்றி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் 21 வயது முதல் 70 வயது வரையில் இருந்தார்கள். அவர்களது கல்வித் தகுதி பள்ளி  இறுதி முதல் பிஎச்.டி வரையில் இருந்தது. மற்ற குணாதிசயங்களும் வேறு அம்சங்களும்கூட முற்றிலுமாக வேறுபட்டிருந்தன. ஆனால் அவர்களுக்குள் ஒரு விஜயம் மட்டும் பொதுவாக இருந்தது. எல்லோருமே “நல்லதைத் தேடுபவர்களாக இருந்தனர்.”அவர்கள் மற்றவர்களி டம் இருக்கும் நல்லனவற்றை எல்லாச் சமயங்களி லும் தேடுபவர்களாக இருந்தனர். ஆக மற்றவர்களி டம் உறவுடன் இருக்க விரும்புபவர்கள் வெற்றி மேல் வெற்றி பெறுகிறார்கள் என்று அந்த ஆய்வு முடிவு சொல்லியது.

வாழ்க்கை என்பதே எதிரொலிதான். நீங்கள் எதைத் தருகிறீர்களோ அதையே திரும்பப் பெறுகிறீர்கள். நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதுவே விளைகிறது. நீங்கள் மற்றவர்களி டம் எதைப் பார்க்கிறீர்களோ அது உங்களி டமே இருக்கிறது. நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள் என்பதெல்லாம் பொருட்டல்ல. எல்லா வழிகளி லும் வாழ்க்கையில் நல்லனவற்றை அறுவடை செய்ய வேண்டுமென்றால் ஒரே வழி எல்லோரிடமும் இருக்கும் நல்லவற்றைக் காண்பதுதான். எல்லா சந்தர்ப்பங்களி லும் இந்த விதியை தங்க விதியாக நினைத்து அனுசரியுங்கள். இந்தப் பிரபஞ்சத்தின் விதி என்னவெனில் நீங்கள் மற்றவர்களை எப்படி பார்க்கிறீர்களோ அதேபோல நேசியுங்கள்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2019

பயணமும் உடையும்
டெக் குவாண்டோ
மழையில் மூழ்கிய மாநகரம்..
ஆசையும் இயக்கமும்
பழிக்குப்பழி பயனற்றது
அதிவிரைவு செயல்திறன் குறைபாடு
தடம் பதித்த மாமனிதர்கள்
நில்! கவனி !! புறப்படு !!! – 6
அறிஞர்களின் அறிவுரைகள்
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 11
பாலியல் வன்கொடுமை… போராடாமல் விடிவில்லை…
மாமரத்தில் கொய்யாப்பழம் – 7
தூண்டுகோள்
ஷூ மந்திரகாளி
வெற்றி உங்கள் கையில்-68
அனைத்தும் ஆனந்தமாகட்டும் அகிலமெங்கும் உன் பெயர் சிறக்கட்டும்…!
சின்னஞ்சிறு சிந்தனைகள்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்