பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் தமிழகத்தில்; மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கொடூரமான முறையில் நடந்தேறி வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவை, இன்று அன்றாடச் செய்தியாகி நம் அருகிலேயே நடைப்பெறத் தொடங்கி விட்டது.
தமிழ்நாட்டில் தினமும் ஏதாவதொரு இடங்களி ல் தொடர்ந்து பாலியல் வன்முறைகள் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது. பிறந்த குழந்தை, பள்ளி படிக்கும் சிறுமி, வயது வந்த குமரி, மனைவி, குழந்தைப் பெற்ற தாய், நரை விழுந்த பாட்டி என்று எந்த வயது வித்தியாசமில்லாமல் எப்போதும் ‘தான் ஒரு பெண்” என்கிற எச்சரிக்கை உணர்வோடு பள்ளி , கல்லூரி, வேலை பார்க்கும் இடங்கள், பேருந்து, ரயில் என எங்கு சென்றாலும் அச்சத்தையும் தன்னுடனே நிழலாக சுமந்து கொண்டு செல்கின்றனர் பெண்கள் இன்று. இந்த அச்சம் அவர்களி ன் சொந்த வீட்டிலும் பின் தொடர்கிறது என்பது மிகவும் அவலமான விசயம்.
இப்படி அச்சத்தோடும், பயத்தோடும் பெண்கள் வாழவே தகுதியற்ற நாட்டில் தான் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளி யாக்கி, அவளி ன் உடை சரியில்லை, இரவு நேரத்தில் அங்கு என்ன வேலை என அவள் நடத்தையின் மீதே சந்தேகப்பட்டு குற்றம் சாட்டுவது இச்சமூகத்தின் வேலையாக உள்ளது.
ஆணாதிக்கச் சமுதாயமே இத்தனை சீர்கேடுகளை விளைவிக்கிறது. பெண்ணை அனுபவிக்கக் கூடிய ஒரு போகப் பொருளாக மட்டும் பார்க்கும் மனநிலையை ஒரு மனிதனுக்கு ஏற்படுத்துகிறது. எந்த ஒரு மிருகமும் கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபடுவதில்லை. மனிதன் மட்டும் அந்த மிருகத்தை விடவும் மோசமானவனாக் தாழ்ந்து போகக் காரணம் என்ன?
20 வயது கூட நிரம்பாத இளைஞனும், 80 வயதைத் தாண்டிய கிழவனும் கூட பலாத்காரத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களை மனிதத்தன்மை அற்றவர்களாக மாற்றியது எது? இந்தக் கேள்விகளுக்கு பதில் தோடாமல், குழந்தைகளையும், பெற்றோர்களையும் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி விளம்பரம் போடுகிறார்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் வளர்ந்து வரும் மற்றொரு அபாயம் ஆபாச இணையதளங்கள், ஸ்மார்ட்போன் வடிவத்தில் நம் சட்டைப்பையில் இருக்கும் எதிரி. பெண்களி ன் உடல்களை விதவிதமாகக் காட்டி, மகளா, மனைவியா எனத் தெரியாத அளவிற்கு பாலியல் வெறியூட்டுகிறது. ‘தனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைகக்கூடாது. அதை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்ன வேண்டுமானாலும் அதற்காக செய்வேன்’ என்பதன் உச்சம்தான் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமைகள். பெண்கள் என்றாலே நுகர்ந்துத் தள்ள வேண்டிய, இன்பம் தரும் பண்டம் என்கிற பொதுப்புத்தியை உருவாக்கி, கல்லாக்கட்டும் முதலாளி களி ன் இலாபவெறியால் புகுத்தப்படும் கலாச்சார சீர்கேட்டின் பலனாக வளரும் தலைமுறையான மாணவர்கள் – இளைஞர்கள் சீரழிக்கப்படுகிறார்கள்.
இந்த இதழை மேலும்

August 2019



















No comments
Be the first one to leave a comment.