![]() |
Author: கவிநேசன் நெல்லை
|
மகிழ்ச்சிக்குப் பயிற்சி…
இது ஒரு பரபரப்பு உலகம்.
மிக வேகமாக மனிதர்கள் இயங்கத் தொடங்கிவிட்டார்கள். ஓய்வே இல்லாமல் உழைத்து, அதனால் கிடைக்கும் வருமானத்தில் பிழைத்து வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள். அவசரமாய், இயந்திரகதியாய் செயல்படுவதால், ஓய்வு எடுப்பதற்குக்கூட நேரம் இல்லாமல், பம்பரமாய் சுழன்று வருகிறார்கள்.
சிலர் நெருக்கடியான சூழலில் சிக்கி, மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். பதற்றம் நிறைந்த வாழ்க்கை வாழ்வதால், நிம்மதியற்ற நிலை உருவாகிவிடுகிறது. இதனால், வாழ்க்கையில் தோன்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இயலாமல் சிலர் தவிக்கிறார்கள்.
“எந்தப் பிரச்சினையை எப்படி அணுகுவது?” என்று வழி தெரியாமல் மகிழ்ச்சிக்கு விடை கொடுக்கிறார்கள். இதனால், சோகத்தை அள்ளிச் சுமக்கிறார்கள்.
பொதுவாக – திருப்தியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை ஒருவர் வாழும்போதுதான் அவர் வாழும் வாழ்க்கை பயன் நிறைந்த வாழ்க்கையாக மாறுகிறது.
ஆடம்பரமாய் வாழ்வதும், வீடுகளில் உயர்ந்த ரக டி.வி., வாஷிங்மெஷின், கம்ப்யூட்டர் போன்றவற்றை தேவையில்லாமல் நிறைத்துக்கொள்வதும், கவர்ச்சியான உடைகள் அணிவதும், அதிக விலை கொண்ட ஆபரணங்களை அணிவதும், மகிழ்ச்சித் தருகின்ற வாழ்க்கை என்று சிலர் எண்ணுகிறார்கள்.
எது மகிழ்ச்சியான வாழ்க்கை? என்பதைத் தெரிந்துகொண்டால் நிம்மதியாக வாழலாம்.
அது ஒரு பயிலரங்கம்.
கருத்தரங்கில் கலந்துகொண்ட பயிற்சியாளர் “நீங்கள் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறீர்களா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.
“ஆமாம். சிறப்புடன் வாழ எங்களுக்கு மகிழ்ச்சி கண்டிப்பாக வேண்டும். அதற்கு வழி சொல்லுங்கள்” என்று பலரும் பதில் தந்தார்கள்.
“இந்தப் பயிற்சியை நீங்கள் செய்து முடிக்கும்போது, ‘மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?’ என்பது உங்களுக்குப் புரியும்” – சொல்லிக்கொண்டே பயிற்சியை ஆரம்பித்தார் பயிற்சியாளர்.
முதலில், தான் கொண்டு வந்த பைக்குள் வைத்திருந்த பலூன்களை ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். அதனை ஊதி பெரிதாக்கும்படி அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். எல்லோரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பலூனை மிகப்பெரியதாக ஊதினார்கள். பின்னர், பெரிதாக ஊதப்பட்ட அந்தப் பலூன் ஒவ்வொன்றிலும் தங்கள் பெயரை எழுதும்படி கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொருவரும் தங்கள் பெயரை, தங்கள் பலூன்களில் எழுதினார்கள். பெயர்களை அவர்கள் எழுதி முடித்தப்பின், அந்தப் பலூனை குறுகலான வாசலுள்ள அறைக்குள் வைக்கச்சொன்னார்.
பயிற்சியாளரின் அறிவுரைப்படி அனைவரும் தங்கள் பலூனை அந்த அறைக்குள் வைக்கத் தொடங்கினார்கள். பலூன்கள் குவியலாகக் குவிந்தது.
சிறிது நேரம் கழித்து பயிற்சியாளர் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் வைத்தார்.
“நான் இப்போது ஒரு போட்டி வைக்கப்போகிறேன். இந்தப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தரப்போகிறேன். அந்தப்போட்டி இதுதான்” என்று கூறிக்கொண்டே போட்டியின் விதிமுறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
“உங்கள் ஒவ்வொருவரின் பெயர் எழுதிய பலூன்கள் இந்த அறைக்குள் இருப்பது உங்களுக்குத் தெரியும். உங்களில் யார் தங்கள் பெயர் எழுதிய பலூன்களை எடுத்துக்கொண்டு வருகிறார்களோ, அவர்களில் முதல் 10 பேருக்கு 500 ரூபாய் பரிசாக வழங்கப்படும்” என்று போட்டியை பரிசுடன் அறிவித்தார்.
இந்த இதழை மேலும்


August 2019



















No comments
Be the first one to leave a comment.