Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி…?

தற்போது வாழும் தலைமுறையினர் தங்களுக்கு பின் வரும் தலைமுறையினருக்கு எந்த செல்வங்களை எல்லாம் விட்டு செல்ல வேண்டும்?

பவதாரணி,

இல்லத்தரசி,

சேலம்.   

உலக சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பெருகி வரும் நிலையில் இந்தக் கேள்வியைக் கேட்டதற்க்கு உங்களுக்குப் பாராட்டுகள். அதுவும் இன்று நாம் வாழ்ந்தால் போதும், நமது வாழ்நாள் வரை பூமிக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாது, நமக்கும் எந்த சமூக பிரச்சனைகளும் இல்லை, எனவே நாம் கவலைப்பட வேண்டியது இல்லை என்ற மனநிலையில் மக்கள் வாழ்ந்து வரும் போது இது கேட்கபட வேண்டிய கேள்வியாக உள்ளது.

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கம், புலி, கரடி போன்று ஆப்பிரிக்க காடுகளிலும் பிற நிலப்பரப்புகளிலும் மனிதன் பரவிக்கிடந்தான். சிங்கம் துரத்திய போது ஓடி குகைக்குள் பதுங்கினான் மனிதன். ஆனால் இன்று, அந்த சிங்கத்தையே கூட்டுக்குள் அடைத்து வேடிக்கை பார்க்கிறான். அப்படியே அவன் அனைத்து உயிரினங்களையும் அடக்கி விட்டான். சிலவற்றை வீட்டு செல்லப் பிராணிகளாகவும் மாற்றிவிட்டான். இந்த ஐந்நூறு ஆண்டுகளில் மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துவிட்டதால், அவர்களுக்கு மற்ற உயிரினங்களை வேட்டையாடவும், அடக்கவும், கீழ்படிய வைக்கவும் அவற்றை முழுவதுமாக அழிக்கவும் முடிந்தது.

அணுகுண்டு:

கடந்த சில நூற்றாண்டுகளில் தொழில் நுட்பமும் வளர்ந்தது. துப்பாக்கி, வெடிமருந்து, அணுகுண்டுகள் என்று உலகத்தையே ஒட்டுமொத்தமாக பலமுறை அழிக்கும் ஆயுதங்களை மனிதன் சேகரித்து விட்டான். அடுத்த நூறு ஆண்டுகளில் இந்த அணு ஆயுதம் தான் முதல் ஆபத்து. அப்படி அணு ஆயுதங்களை மனிதன் பயன்படுத்தினால் அடுத்த தலைமுறை கூட இருக்காது, நம்மோடு கடைசி மனிதன் சமாதியாகிவிடுவான். எனவே அணு ஆயுதங்களை உடனே செயலிழக்கச் செய்ய வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய முதல் வேலை இதுதான்.

காடுகள்:

விவசாயம் செய்த மனிதன் காலப்போக்கில் காட்டை அழித்து நாடாக்கினான். பின்னர் நல்ல வேளையாக காடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை பாதுகாக்கவும் துணிந்தான். இருந்தாலும் காடுகள் இன்று விரைவாக அழிக்கப்பட்டு வருகிறது. வனவிலங்குகளும் வேட்டையாடப்படுகின்றன. வனவிலங்குகள் வாழ வேண்டிய இடத்தில் மனிதர்கள் குடியேறுவது தீவிரமாக நடந்து வருகிறது. மக்கள் நெருக்கம் அதிகமான நாடுகளில்தான் வனவிலங்குகளின் வாழ்விடத்துடன் நேரடிப் போட்டி போடுகின்றனர் இன்றைய தலைமுறையினர்.

ஆறுகளும், மலைகளும், காடுகளும், புல்களும், பூக்களும்; புலி, சிறுத்தை, யானை, சிங்கம், முதலை போன்ற வனவிலங்குகளும் நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றனர். ஆனால் நமக்கு பின்வரும் தலைமுறையினர் இதையெல்லாம் பார்க்கக் கிடைக்குமா என்பதே கேள்விக் குறியாக இருக்கிறது. பல வனச் சரணாலயங்களில் புலிகள் முற்றிலுமாக மறைந்து விட்டன. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, மிகப்பெரிய முயற்சி ஒன்றை எடுத்தால் மட்டுமே காடுகளையும் வனவிலங்குகளையும் காப்பாற்ற முடியும். காடுகளில் ரிசாட் கட்டுவதையும், தாதுப்பொருட்களை சுரண்டுவதையும், பாறைகளை உடைப்பதையும் தடுத்து நிறுத்த என்ன வழி என்பதை உடனே ஆராய வேண்டும். அப்போது தான் வரும் தலைமுறையினருக்கு வனத்தையும் வனவிலங்குகளையும்,  காட்டாறுகளையும் நாம் விட்டுச் செல்ல முடியும்.

இயற்கை விவசாயம்:

பெருவாரியான மக்கள் பட்டிணி கிடந்த காலம் மாறி இன்று ஓரளவுக்கு உணவு கிடைக்கிறது. அறிவியல் வேளாண்மையின் பரிசு அது. அதிகபடியான மக்களுக்கு உணவு வழங்க இரசாயன உரமும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு  வருகின்றன. இதனால் புழுக்களும், பூச்சிகளும் மொத்தமாகக் கொல்லப்படுகின்றன. இதில் நன்மை பயக்கும் பூச்சிகளும் அடங்கும். இப்படியே நாம் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தினால் பூச்சி இனம் அழிந்து சில ஆண்டுகளில் உணவைத் தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாமல் மனித இனமே அழிந்துவிடும் அபாயமும் உள்ளதாக அறிவியல் அறிஞர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள். எனவே நாம் நமது அடுத்த தலைமுறைக்கு இயற்கை விவசாயத்தை விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2019

பயணமும் உடையும்
டெக் குவாண்டோ
மழையில் மூழ்கிய மாநகரம்..
ஆசையும் இயக்கமும்
பழிக்குப்பழி பயனற்றது
அதிவிரைவு செயல்திறன் குறைபாடு
தடம் பதித்த மாமனிதர்கள்
நில்! கவனி !! புறப்படு !!! – 6
அறிஞர்களின் அறிவுரைகள்
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 11
பாலியல் வன்கொடுமை… போராடாமல் விடிவில்லை…
மாமரத்தில் கொய்யாப்பழம் – 7
தூண்டுகோள்
ஷூ மந்திரகாளி
வெற்றி உங்கள் கையில்-68
அனைத்தும் ஆனந்தமாகட்டும் அகிலமெங்கும் உன் பெயர் சிறக்கட்டும்…!
சின்னஞ்சிறு சிந்தனைகள்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்