Home » Articles » எளிமை+ வலிமை= வெற்றி

 
எளிமை+ வலிமை= வெற்றி


கோவை ஆறுமுகம்
Author:

யானையினுள் எளிதாய் பாயும் வேலின் வலிமை மென் பஞ்சினில் பாயாது, என்பதும், வலிய இரும்பு கடற்பாறையால் பிளக்காத பாறை, எளிய மரத்தின் வேரினால் பிளவு படும் என்பதையும், எளிமையின் வலிமைக்கு சாரம் அம்சமாகவும் சான்றாகவும் கூறப்படும் உண்மை.

எளிமையான வரிகளையோ, வார்த்தைகளையோ, விளக்கங்களை யோ, எதையும் எளிதாய் புரிந்து கொள்ளும் புரிதலுக்கும் எளிமை தான் மிக முக்கியமாகிறது. ஆக, எளிமை என்பது, வாழ்க்கையை மிக எளிமையாக்கிறது. என்பது தான் வாழ்வியல் சக்தியம். ஆனால் எளிமை என்றதும்., நம் மனக்கண் முன் நிற்பது..

வறுமையின் பிரிதிபலிப்பு, வலிமையற்ற நிலையை சார்ந்தது. வரியவருக்கு உரியது.சமூக அந்தஸ்த்து இல்லாதது அனுபவிக்கத் தெரியாதவர்களின் அடையாளம் என்று தான். நமக்குள் எளிமையைப் பற்றிய அபிப்ராயமாக, தோன்றுகிறது. ஆனால் எளிமையால் வரும் வலிமை தரும் வெற்றி. நிலைத்தத் தன்மை கொண்டது என்பது, நமக்கு தெரியாத உண்மை. ஆனால் அனுபவப்பட்டவர்களுக்கோ சாத்தியம் இதற்கு சான்றுகளும், சான்றானவர்ளும் ஏராளம். எளிமை என்பது ஏளத்திற்குரியதல்ல. ஏற்றத்திற்கு ஏதுவானது. எதிர்ப்பு வரும் போது, வலிமையாவது. வெற்றியின் சாவியாக விடுதலையின் இனிமை இலக்கணமாக இருப்பது எளிமை.

வசதியற்று, பல இன்னல்களை கடந்து, பற்று, காசம், என்பவற்றை முழுமையாக புரிந்து கொண்டதன் மூலமே உள்ளார்ந்த எளிமையாக இருந்து பல திட்டங்களை, சீர்த்திருத்தங்களை  கொண்டு வர முடியும்.

எளிமை என்பது சிக்கனமல்ல. தேவையற்ற விரயத்தை தடுப்பது குறைந்த வசதியில், நிறைந்த திருப்தி அடைவதோடு, கர்வமில்லாது மற்றவர்களுக்கு நிறைந்த மனதோடு தருவது எளிமையின் உண்மை நிலைபாடு. அந்த அடிப்படையில் தான் காந்தியடிகளின் எளிமை அஹிம்சையை ஊட்டியது. சுதந்திரத்தை நாட்டியது. வள்ளலாரின் எளிமை அன்பைக் கூட்டியது. கர்ம வீரர் காமராஜர், கக்கன் அவர்களின் எளிமை, ஏழைகளுக்கு நல்வழி காட்டியது. அப்துல் கலாம் ஐயாவின் எளிமை ஆக்கப்பூர்வமான அறிவையும், மக்கள் அனைவரின் மனங்களையும் ஈர்த்து ஒற்றுமையைச் சேர்த்தது.

யாருக்காகவும், எதற்காகவும் வேஷம் போடாமல், தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்பட்டு சுய கௌரவம், சுயமரியாதை தன் மானம் இழக்காமலும், மற்றவர்களின் பார்வைக்கும் பாராட்டுக்கும், பகட்டுக்கும், போலி எளிமைத்தனம் இல்லாமலும் இருப்பதே, ஆக எளிமையின் அம்சங்கள் எளிமையாக இருக்க எந்த வித முயற்சியும், தேவையில்லாத போதும், சமுதாய மதிப்பை மனதில் கொண்ட எல்லோராலும் எளிமையை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எளிமை என்பது எளிதானது, இயல்பானது, பணிவானது அகங்காரமற்றது, குற்ற உணர்வற்றது அப்படிப்பட்ட எளிமையை மறைத்து, அதன் மீது பூசப்படும் மேல் பூச்சுதான் பகட்டு.

அந்த நிலையற்ற பகட்டை காப்பாற்றிக் கொள்ளத்தான். அதிக முயற்சியும், பயமும், போராட்டமும் தேவைப்படுகிறது. அந்தப்பகட்டை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிதான் இன்றைய வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது. அதே சமயம், நாம் பகட்டாய் வாழ்க்கை வாழ்வதற்கே  விரும்புவதாலும், எதிர்ப்பதாலூம் பிறரின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியால் தான், அதில் எவ்வளவு சிரமங்கள், கஷ்டங்கள் இருந்த போதும் எளிமையின் வலிமையை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment