Home » Articles » கூடைப்பந்தும் சாதனைப் பெண்களும்

 
கூடைப்பந்தும் சாதனைப் பெண்களும்


ஆசிரியர் குழு
Author:

கோயம்புத்தூர் துணிவணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி  மிகவும் பழமை வாய்ந்த பள்ளி. பள்ளியின் சார்பிலிருந்து விளையாட்டிற்கு மிகுந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள். நிறைய விளையாட்டுக்களுக்குப் பள்ளி முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனியாகப் பயிற்சியாளர்களை அமர்த்தி விளையாட்டினை மேம்படுத்தி வருகிறது. இப்பள்ளியானது கல்வியை மட்டுமே முதன்மை நோக்காகக் கொண்டு செயல்படாமல் விளையாட்டிற்கும் முக்கியத்துவ மளிப்பது கருதக்கூடிய ஒன்றாகும்.  முன்னாள் தலைமை ஆசிரியராக இருந்த திரு. சந்திரசேகர் மற்றும் தற்பொழுது தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரும் திருமதி. மணியரசி அவர்களும் நிறைய உதவிகளை இப்பள்ளிகளுக்கு செய்து கொடுத்திருக் கிறார்கள்.

மாணவிகளின் கூடுதல் உழைப்பின் காரணமாக கூடைப்பந்தில் மாநில அளவிலான கோப்பையினை வென்று தற்பொழுது தேசிய அளவிலான கோப்பையை வெல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய வெற்றி வாய்ப்பைத்  தொடர்ந்து முழு நேர உழைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் 9 மற்றும் 10-ம் வகுப்பு பயின்றுவரும் மாணவிகள் ஸ்ரீலட்சுமி, தனுஸ்ரீ, சந்தியா இவர்களின் கூடுதல் முயற்சியால் கிடைத்த வெற்றி, அந்த வெற்றிக்காக அவர்கள் உழைத்த கடின உழைப்பு. அவர்களால் பள்ளிக்கு கிடைத்த பெருமைகள் போன்றவற்றை நம்மிடையே பகிர்ந்துகொண்டனர்.

வணக்கம். என் பெயர் பா. ஸ்ரீலட்சுமி. நான்  9-ம் வகுப்பு பயின்று வருகிறேன். என் அப்பா தங்கப்பட்டறையில் கூலி வேலை செய்து வருகிறார். என் அம்மா கவிதா இல்லத்தரசியாக உள்ளார். எனக்கு உடன் பிறந்த ஒரு தங்கை இருக்கிறாள். அவள் பெயர் ஸ்ரீராஜலட்சுமி. ஏழாம் வகுப்பு படித்து வருகிறாள். எங்கள் குடும்பம் பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய குடும்பம். இத்தகைய சூழ்நிலையில் இருந்து நான் வெற்றி பெற்றதைப் பெருமையாகக் கொள்கிறேன். நான் கடந்த மூன்று வருடங்களாக கூடைப் பந்தின் மீது ஆர்வம் கொண்டு தொடர்ந்து விடா முயற்சியுடன் விளையாடி வருகிறேன். நான் தற்பொழுது  மாநில அளவில் கலந்து கொண்டு கோப்பையை வென்றிருக்கிறேன். தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள என்னைத் தயாராக்கிக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் தேசிய அளவிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன். நான் தனியாக வீட்டில் பயிற்சி எதுவும் மேற்கொள்வதில்லை. அதற்கான வசதிகளும் எங்களிடம் இல்லை. நான் முழுக்க முழுக்க பள்ளியிலேயே என் பயிற்சியை முடித்து விடுவேன். தினமும் காலை 6 மணிமுதல் 9 மணி வரையிலும் மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரையிலும் பயிற்சி செய்வேன். என்னை முழுவதும் ஊக்குவித்தவர்கள் எனது பயிற்சியாளர் பிரபு மற்றும் எனது பெற்றோர். இந்த தருணத்தில் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் தற்பொழுது இந்தியன் பி பிரிவில் தேர்வு செய்யப்பட்டதும் கூடுதல் மகிழ்ச்சியினை அளிக்கிறது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2019

தன் திறமைகளை உச்சபட்ச மேன்மைக்கு உயர்த்திக் கொள்ளுவது எப்படி?
எளிமை+ வலிமை= வெற்றி
குழந்தைகளுக்கான கண் சிகிச்சை
கூடைப்பந்தும் சாதனைப் பெண்களும்
தடம் பதித்த மாமனிதர்கள் – 5
அறிவுபூர்வமான வீரமே அவசியத் தேவை
அவசர நிலை சிகிச்சை
நமது கனவுகளை வலுப்படுத்தும் ஆன்மிகம்
தாவர மூலக்கூறு இனப்பெருக்கத் துறையில் சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருது
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 10
உலக அதியசயம் நீயே!
தடுப்பணை
மாமரத்தில் கொய்யாப்பழம்
நில்! கவனி !! புறப்படு !!! – 5
உழைப்பை விதையாக்கு… உயர்வை வலிமையாக்கு…
வெற்றி உங்கள் கையில்-67
சின்னஞ்சிறு சிந்தனைகள்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்