Home » Articles » அறிவுபூர்வமான வீரமே அவசியத் தேவை

 
அறிவுபூர்வமான வீரமே அவசியத் தேவை


செல்வராஜ் P.S.K
Author:

இலட்சிய வீரர்களே

கடமை கசந்து விட்டதுவிட்டதா செயல்பாட்டில் ஈடுபாடில்லையா?

உலகில் எத்தனை கோடி பேர் வந்தார்கள்? எத்தனை பேர் வரலாற்றில் உள்ளார்கள். வந்தவரெல்லாம் வரலாற்றில் நிலைத்து நின்றிருந்தால் இந்த வரலாறு தான் என்னாவது? இந்த சரித்திரத்திற்கு சக்தி ஏது? மதிப்பேது? வந்தவரெல்லாம் வென்றிருந்தால் வெற்றிக்கு மதிப்பேது.

உடனடியாக -விரைவில்- எளிதில் கிடைத்துவிடுவது வெற்றியல்ல. வெற்றி அவ்வளவு எளிதாக இதுவரை யாருக்கும் கிடைத்ததில்லை.

அறிவும், தெளிவும், துணிவும், தெரிவும், வீரமும், விவேகமும், விழிப்பும், திறமையும் எந்த ஒரு இளைஞனிடம் ஸ்தம்பிக்கின்றதோ அந்த இளைஞனால் எதையும் சாதிக்க முடியும். அவனிடம் பல வெற்றிகள் காணப்படும். அந்த இளைஞனால் சாதிக்க முடியாதது எதுவும் உலகில் இல்லை இருக்காது. இருக்கவும் முடியாது.

ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் (ஒவ்வொரு துறைக்கான) படைப்பாற்றல் உள்ளது. (அதைத் தெரிந்து கொண்டு – புரிந்து கொண்டு) அதைச் சரியாக- முறையாகப் பயன்படுத்துபவர்களே முன்னேறுகின்றனர்- வாழ்வில் சாதனை படைக்கின்றனர்; வரலாற்றில் இடம் பெறுகின்றனர்.

உன்னிடம் ஒரு திறமை இருக்கின்றது. என்பதை நீ கண்டறி. இப்படிக் கண்டறிந்தால் போதும், உலக அரங்கில் உன் திறமை ஒரு நாள் கண்டிப்பாகப் பேசப்படும்.

கல்வெட்டாக வரலாற்றில் பதிந்து கிடக்கும் சாதித்தவர்களின் வரலாறை தெரிந்து கொள்ளாத எவனுக்கும் சாதிக்கின்ற அந்த நம்பிக்கை வராது சாதிக்கவும் முடியாது.

அன்பு மிக்கவனே

நீ எதையும் சாதிக்கப் பிறந்தவன்

நீ எதையும் சந்திக்கப் பிறந்தவன்

நீ எதையும் சிந்திக்கப் பிறந்தவன்

நீ எதையும் முந்திக்கப் பிறந்தவன்

நீ எதையும் போதிக்கப் பிறந்தவன்

எதிலும் வெற்றி வாகை சூட வந்தவன்

நீ, எதற்கும் நாதியற்றவன் அல்ல.

இதுவரை உலகில் தோன்றி மறைந்தோர் எத்தனை கோடி பேர்,  தோன்றிய எல்லோருக்கும் வரலாறு  என்று ஒன்று இல்லை. இதில் சிலருக்கே உண்டு.

இந்த சரித்திரப்பட்டியல் நீதி- அநீதி என இருவகைப்படும். இதில், எதில் நீ இடம்பெறப் போராடிக் கொண்டிருக்கிறாய்? காந்தி இருக்கும் பெயர்ப் பட்டியிலிலா? கோட்சே இருக்கும் பெயர்ப் பட்டியலிலா?

உன்னைப் போன்றுள்ளவர்களின் சாதனைகளைச் கேசரிஇ அதுவே உனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும். அந்த நம்பிக்கையே உனது முன்னேற்றதுக்குத் தேவையானதாகவும், வாழ்வுக்கு அவசியமானதாகவும் இருக்கும்.

முடியாது என்கிற பேச்சசுக்கு இடம் கிடையாது என்று எப்பொழுதும் உன் இதயம் சொல்கிறதோ அப்பொழுதுதான் நீ நினைத்ததை முடிப்பவனாகத் திகழ முடியும்- திகழ்வாய். அப்படித் திகழும் போது தான் உலகம்  உன்னைப் புகழும்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2019

தன் திறமைகளை உச்சபட்ச மேன்மைக்கு உயர்த்திக் கொள்ளுவது எப்படி?
எளிமை+ வலிமை= வெற்றி
குழந்தைகளுக்கான கண் சிகிச்சை
கூடைப்பந்தும் சாதனைப் பெண்களும்
தடம் பதித்த மாமனிதர்கள் – 5
அறிவுபூர்வமான வீரமே அவசியத் தேவை
அவசர நிலை சிகிச்சை
நமது கனவுகளை வலுப்படுத்தும் ஆன்மிகம்
தாவர மூலக்கூறு இனப்பெருக்கத் துறையில் சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருது
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 10
உலக அதியசயம் நீயே!
தடுப்பணை
மாமரத்தில் கொய்யாப்பழம்
நில்! கவனி !! புறப்படு !!! – 5
உழைப்பை விதையாக்கு… உயர்வை வலிமையாக்கு…
வெற்றி உங்கள் கையில்-67
சின்னஞ்சிறு சிந்தனைகள்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்