![]() |
Author: அனுராதா கிருஷ்ணன்
|
நம் பயணங்களில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளைச் சமாளிக்க நம்மிடம் பொக்கிஷமான சில விஷயங்கள் இருக்கின்றன. அவைகளை நான் என் பயணங்களில் பயன்படுத்தி பலன் கண்டதை உங்களுக்கும் பயன்படும் என்று தெரிவிக்க இக்கட்டுரையை வரைகிறேன்.
நம் மலர் மருத்துவத்தில் ரெஸ்கிவ் ரெமடி (Rescue remedy) என்ற மலர் மருந்து நம் அவசரகால சூழல்களுக்கு நிவாரணியாக விளங்குகிறது. இந்த மலர் மருந்தானது ஐந்து மலர் மருந்துகளின் கலவையாகும். அந்த ஐந்து மலர் மருந்துகளின் பெயரும் அதன் பயன்பாட்டையும் முதலில் நாம் பார்ப்போம்.
செரி பிளம் (Cherry plum): இது நம் உடலின் வெப்பத்தைத் தனிக்கும் குணம் கொண்டது. தீக்காயங்கள் விரைவாக குணமாகவும் இது உதவியாக இருக்கும். தீ விபத்துக்கள் நம்மை பாதிக்காவண்ணம் பாதுகாக்கும் இறையாற்றலாக இது விளங்கும்.
கிளமேட்டிஸ் (Clematis): இது நம்மை மயக்கத்திலிருந்து மீட்டெடுக்கும். விபத்துக் காலங்களில் ஏற்படும் அதிர்ச்சியால் நாம் மயங்கி விழாது விழிப்பாக இருந்து செய்ய வேண்டியவற்றைச் செய்ய இம்மருந்து உதவும். நம் பயணங்களில் உணவு மூலம் அல்லது சுவாசம் மூலம் நம்முள் வரும் நச்சுக்களை வெளியேற்றி மயக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.
மிமுலஸ் (Mimulus): பயணங்களில் ஏற்படும் காரணம் சார்ந்த பயங்களிலிருந்து நம்மை காக்கும் இறை சக்தியாக மிமுலஸ் மலர் மருந்து விளங்கும். விபத்து காலத்தில் ஏற்படும் உயிர் பயத்தை இம்மருந்து கணிசமாகப் போக்கி பயணங்களில் நம் உயிரைக் காக்கும்.
ராக் ரோஸ் (Rock Rose) : முந்தைய அத்தியாயத்தில் கூறியுள்ளதுபோல் எதிர்பாராது ஏற்படும் பேராபத்துக் களிலிருந்து நம்மைக் காக்கும் இறை சக்தியாக ராக் ரோஸ் விளங்கும். எதிர்பாராமல் நம் உடலில் சேரும் கடுமையான விஷங்களை வெளியேற்றும் சக்தி இம்மருந்திற்கு உண்டு.
ஸ்டார் ஆப் பெத்தலஹாம் (Star of Bethlam): இம்மலர் மருந்தானது எதிர்பாராத அதிர்ச்சியிலிருந்து நம்மைக் காக்கும் இறை சக்தியாக விளங்கும். விபத்துக்களால் ஏற்படும் அதிர்ச்சியிலிருந்து நம்மை மீட்டெடுக்கவும் இது உதவியாக இருக்கும்.
இந்த இதழை மேலும்


July 2019



















No comments
Be the first one to leave a comment.