Home » Articles » நமது கனவுகளை வலுப்படுத்தும் ஆன்மிகம்

 
நமது கனவுகளை வலுப்படுத்தும் ஆன்மிகம்


சுவாமிநாதன்.தி
Author:

ஆன்மிகம் என்பது ஆன்மாவுடன் தொடர்புடைய  விஷயங்களைக் குறிக்கிறது.  நமது வாழ்வில் ஆன்மீகத்தைப் பின்பற்றுதல் ஒரு பயனுள்ள செயல்பாடு ஆகும். சாத்தியமற்றதாக தோன்றும் அடைய முடியாத இலக்கை நிர்ணயிக்கும் போது இறைவனின் சந்நிதானத்திற்கு செல்கிறோம். பிரார்த்திக்கிறோம். வெற்றி வசப்படுமா? என்பது புரியாத புதிராக இருக்கிறது.

ஆன்மிக நம்பிக்கையுடன் களத்தில்  நிற்கிறோம். நம்மை வீழ்த்த நம்மைச் சுற்றி உள்ளவர்களே நமக்கு எதிராக நிற்கிறார்கள். அவர்களது வியூகங்களை எதிர் கொள்கிறோம். இடையூறுகளை தவிடு பொடியாக்குகிறோம். வெற்றியால் நாம் தலை நிமிரும் போது, அவர்கள் தலைகுனிகிறார்கள். தூரத்தில் பல்லாயிரம் பேர் கரவொலி எழுப்புகிறார்கள். நாம் வென்றாலும் தோற்றாலும் அவர்கள் அப்படித்தான்.

கனவை நனவாக்கிய இறைவனுக்கு நேர்த்திக்கடன் செய்கிறோம். மதம் வேறானதாக இருக்கலாம். கடவுள் வேறானதாக இருக்கலாம். வழிபாட்டு முறை வேறானதாக இருக்கலாம். சமய நூல்கள் வேறானதாக இருக்கலாம். நாம் செல்லும் பாதையோ ஆன்மிகம். நம்மைப் போன்றவர்கள் வழிபடுவதற்க்காகத்தான் உலகமெங்கும் ஆலயங்கள் புனிதத்தலங்கள் வியாபித்து இருக்கிறது.

இறை வழிபாடு மற்றும் ஆன்மிகம் புனிதமானது. நம் மனதில் உள்ள தீய எண்ணங்களை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. பிறருக்கு நன்மை செய்யா விட்டாலும், ஏன் தீமை  செய்ய வேண்டும் என வினாக்களை நம்மிடையே எழுப்புகிறது. நம் மனதில் உள்ள மாசுக்களை சுத்திகரிக்கிறது.

மனதில் வேறு பல சிந்தனைகளுடன் தினம் பல மணி நேரம் பூஜை செய்வதைக் காட்டிலும், வாரம் ஒரு முறையோ, அல்லது மாதம் இரு முறையோ, தவறாமல் குறிப்பிட்ட தினத்தில், குறிப்பிட்ட நேரத்தில் ஆலயம் செல்வது, இறைவனிடம் நமது கனவுகளை மனதிற்க்குள் உரக்கச் சொல்வது ஒரு நாள் மிகவும் பலனளிக்கிறது. கனவு நனவாகிறது.

இறைவனது சந்நிதானத்தில் எவ்வித சிந்தனையுமின்றி அனைத்தும்  நீயாக இருக்கிறாய். இந்த உடலை நீயே வழிநடத்தி  செல் என சரணடைகிறோம். நமது கடமைகளை மிகச் சரியாக செய்வது மட்டுமே நமது பணி. பலனை இறைவனிடம் விட்டு விடுவதாகும்;.

எந்த செயல் செய்தாலும், அது அவனால்தான் செய்யப்படுகிறது என்ற நினைவுடன் செய்து அந்த செயலின் பலனை இறைவனுக்கு சமர்ப்பனம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சக்கட்ட ஆன்மிகமாகும்.

கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால், அனைத்துமே கடவுளாக இருக்கிறார்;. பிரச்சனை, கஷ்டங்கள், சிக்கல்கள் இல்லாத மனிதர்களே இல்லை. அவற்றிற்கு தீர்வு புலப்படாத போது, ஆலயத்திற்கு செல்கிறோம். எவ்வித பிரதி பலனும் பாராமல் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்து,  வாழ்ந்து வந்தால் மிகச்சரியான பாதையில் இறைவனை நாம் நெருங்கிக் கொண்டு இருக்கிறோம் என்று பொருள்.

நமது நற்பண்புகளை வெளிக்கொணர்வதற்கு ஆன்மிகம் உதவியாக உள்ளது. நமது இலக்கை அடைவதற்கு, நமது கனவு நனவானதற்கு, நம் லட்சியம் கைகூடியதற்கு, நமது இன்னல்கள் களைந்ததற்கு ஆன்மிகம் தான் காரணம் என்கிறோம். அதை ஆதாரப் பூர்வமாக நீருபிக்க இயல்வதில்லை.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2019

தன் திறமைகளை உச்சபட்ச மேன்மைக்கு உயர்த்திக் கொள்ளுவது எப்படி?
எளிமை+ வலிமை= வெற்றி
குழந்தைகளுக்கான கண் சிகிச்சை
கூடைப்பந்தும் சாதனைப் பெண்களும்
தடம் பதித்த மாமனிதர்கள் – 5
அறிவுபூர்வமான வீரமே அவசியத் தேவை
அவசர நிலை சிகிச்சை
நமது கனவுகளை வலுப்படுத்தும் ஆன்மிகம்
தாவர மூலக்கூறு இனப்பெருக்கத் துறையில் சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருது
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 10
உலக அதியசயம் நீயே!
தடுப்பணை
மாமரத்தில் கொய்யாப்பழம்
நில்! கவனி !! புறப்படு !!! – 5
உழைப்பை விதையாக்கு… உயர்வை வலிமையாக்கு…
வெற்றி உங்கள் கையில்-67
சின்னஞ்சிறு சிந்தனைகள்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்