Home » Articles » நம்பிக்கை நாயகர்கள்

 
நம்பிக்கை நாயகர்கள்


தமிழ்பாரதி T.K.
Author:

புயலில், மரத்தைத் தாங்கி நிற்கும் ஆணிவேர் போல, வாழ்க்கைப் புயலில் நம்மைச் சாய்த்து விடாமல் காப்பது தான் தன்னம்பிக்கை.  உலகமே எதிர்த்து நின்றாலும், நமக்குப் பின்னின்று ஏசினாலும், நமக்கு முன்னே தூற்றினாலும், நம்மைத் தளர விடாமல் தாங்கிப் பிடிக்கும் முதல் கை தன்னம்பிக்கை. இதுவே, நம் சுயத்தின் பலம் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை.

தன்னம்பிக்கை ஊன்றுகோல் போன்றது. கால் தடுக்கும்போது, கீழே விழுந்து விடாமல் ஊன்று கோல் தாங்கிப் பிடிப்பது போல, நாம் தோல்வியைச் சந்திக்கும் போதும், நம்முடைய முயற்சி, நாம் எதிர்பார்க்கும் பலனைத் தராத போதும்,  நம்மைச் சுற்றியுள்ள உலகம்,  நம் தகுதிக்கும்,  திறமைக்கும் உரிய அங்கீகாரம் தராத போதும்,  நம்மை மனம் தளர விடாமல் தாங்கிப் பிடிப்பது தான் தன்னம்பிக்கை.

தன்னம்பிக்கை வாழ்கையை தங்கமாக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் இந்த கதை.

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த சிறுவன்,  கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாகச் சொல்லி கொடுத்தான். அந்தக் கடிதத்தை அந்தத் தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும்படி படித்தாள்.“உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை. அதனால் தயவு செய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது” என்று.

பல ஆண்டுகளுக்கு பிறகு சிறுவனின் தாயாரும் காலமாகி விட்டார். அவரும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் ஆனார். இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொரு முறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்.  அதில் இப்படி எழுதியிருந்தது.

“மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்ப வேண்டாம்” என்று.  இதைப் படித்த அவர் கதறி அழுதார். அவர் தான் பின்நாளில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன். பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.

“மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்” என்று. நம் பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும். குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்!

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் நூலிழை  தான் வித்தியாசம் என நினைக்க கூடாது. தன்னம்பிக்கை தலை நிமர வைக்கும்.  கர்வம் தலைகுனிய வைக்கும்.  இதை உணர்த்தும் கதை இதோ,

அசாதாரணமான அறிவும்,  தன்னம்பிக்கையும் கொண்ட  ஹிட்லர் நாட்டின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளும் முன் ஜெர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது. நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது. ஆனால் தன்னால் நாட்டை நல்ல நிலைமைக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை திடமாக அவரிடம் இருந்தது. 1933 ல் ஹிட்லர் தன் நாட்டு மக்களிடம் கூறினார். “எனக்கு நான்கே நான்கு வருடங்களைக் கொடுங்கள்.”  என்றார். சொன்னபடி நாட்டின் தலைவிதியை மாற்றிக் காட்டினார்.  எழுபது லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்த நாட்டில் தொழிற்சாலைகளையும், வாணிபஅபிவிருத்தியையும் ஏற்படுத்தி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கினார்.  நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மிக நல்ல நிலைக்கு உயர்த்தினார். எல்லாம் அவரது தன்னம்பிக்கை செய்து காட்டியது.

ஆனால் அதே தன்னம்பிக்கை கர்வமாக மாற ஆரம்பித்தவுடன் அழிவும் ஆரம்பித்தது. தன்னை மிஞ்ச ஆளில்லை என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்தவுடன் அவர் எடுத்த முடிவுகள் அவரின் நாட்டை மட்டுமல்லாமல் உலகத்திலேயே பேரழிவுகளை ஏற்படுத்தின.

அடாத மழையிலும் விடாது முளைக்கும் காளான்போல, எரிந்து போனாலும் சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையைப் போலத் தோல்வியிலிருந்து துள்ளி எழுவதல்லவா வாழ்க்கை! யாருக்குதான் துயரமில்லை. துயரமின்றி உயரமில்லை. துன்பமின்றி இன்பமில்லை. அடிகளால் அனுபவங்கள் கிடைக்கின்றன, அனுபவங்கள் நமக்கு ஆசானாகின்றன. தண்ணீரில் மிதக்கும் கப்பலை சிறுதுளை வழியே உள்நுழையும் தண்ணீரே கவிழ்க்கிறது. நாம் நம் மனதிற்குள் அனுமதிக்கிற கவலைகள்தான் நம்மைக் கவிழ்க்கின்றன.

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் என்றதும் “கனவு காணுங்கள்”என்ற வெற்றிச் சூத்திரம் நம் மனதை வருடுகிறதே! தமிழகத்தின் ராமேஸ்வரம் எனும் சின்னஞ் சிறுதீவில் பிறந்து தன் விடாமுயற்சியால் மாபெரும் விஞ்ஞானியாய், ஆய்வறிஞராய், இந்தியக் குடியரசுத்தலைவராய் உயர்ந்த அந்த மாமனிதர் வாழ்வில் சந்திக்காத தோல்விகளா? ‘கனவுகாணுங்கள்’ என்று கூறி எங்களைத் தூங்கச் சொல்கிறீர்களா? என்றொரு மாணவி அவரிடம் கேட்டார், அதற்குக் கலாம் அவர்கள், ”தூங்கும்போது வருவதல்ல கனவு, எது உன்னைத் தூங்கவிடாமல் செய்கிறதோ அதுவே கனவு” என்ற அவரது பொன்மொழி நினைவுக்கு வருகிறதே! நம்மில் எத்தனைப் பேரிடம் கனவுகாணும் அற்புதக்கண்கள் உள்ளன? இரண்டு சூரியன்களை நம் இமைக்குள்ளே இருத்துக்கொண்டு இருளில் இருப்பதாய் இனியும் சொல்லத்தான் வேண்டுமா?

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2019

முடியும் வரை முயற்சி…! தினந்தோறும்  தரும்  மகிழ்ச்சி…!
சாதிப்பின் சங்கமம் சேரன் விளையாட்டுக் குழு
புறப்பட ஆயத்தமாகுங்கள்
பெண்ணிய உரிமைகள்
தடுப்பணை
உயிருக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு
தடம் பதித்துச் சென்ற மாமனிதர்கள்- 4
குழந்தை வளர்ச்சி
நான் ஏன் வாயே திறப்பதில்லை?
நில்! கவனி !! புறப்படு !!!  4
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 9
நம்பிக்கை நாயகர்கள்
சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்க
ஏற்றுக்கொள்ளுதல்
மாமரத்தில் கொய்யாப்பழம் – 5
வெற்றி உங்கள் கையில் – 66
இன்பமயமான வாழ்வு
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்