Home » Articles » மாமரத்தில் கொய்யாப்பழம் – 5

 
மாமரத்தில் கொய்யாப்பழம் – 5


பன்னீர் செல்வம் Jc.S.M
Speaker:

இனிய வாசகர்களே! வாழ்க வளமுடன்

வாழ்க்கை என்பது என்ன என்ற கேள்விக்கு பதில்- அனுபவங்களின் தொகுப்பு.

அனுபவங்கள் நிறைந்த, அக்கரையும் பாசமும் கொண்ட பெற்றோர் வழிகாட்டுதலின்றி, தவறான முடிவால் துன்பமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கஷ்டப்படும் பலர் உள்ளனர்.

இங்கு தேவைப்படுவது தான் நல்ல நட்பு. நட்பிற்கான உரைகல் இது தான் என திருக்குறள் தெளிவாகச் சொல்லுகிறது.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு-குறள்- 783

நல்ல பண்புடையவர்களை நண்பர்களாய் பெறுவது என்றுமே இன்பம் தரும். எதுபோல் என்றால் நல்ல புத்தகங்களைப் படிக்கப் படிக்க அடையும் இன்பம் போல.

உன் நண்பனைப் பற்றிச் சொல்;

உன்னைப் பற்றிச் சொல்கிறேன்

என்ற தொடர்மொழி உள்ளது.

சிறு குழந்தை முதலே, பெற்று, பாலூட்டி, தாலாட்டி வளர்த்த தாயால் முடியாததைக் கூட நண்பனால் செய்ய முடியும். எனவே தான் நல்ல பண்புள்ள நண்பர்கள் வேண்டும் என்பது.

எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள் என்று பெருமைப் படுவதை விட, நல்ல நண்பர்கள் சிலரே போதும் என்ற எண்ணம் சிறந்தது.

பள்ளிப் பருவ நட்பு மனதில் ஆழப் பதிந்துவிடும். பெற்றோர் கண்காணிப்பில் வளர்வதால் பெரும்பாலும் தவறான பாதைக்குச் செல்ல வாய்ப்பில்லை. ஆனால், சிறு சதவீதம் பெற்றோர்களால், குடும்ப சூழ்நிலையின் காரணமாக குழந்தைகளின் நடவடிக்கைகளைக்அ கவனிக்க இயலாத போது நற்பண்பு என்ற பாதையில் இருந்து மாறி விடுபவர்கள், பின்னர் சமூக விரேதிகளாக மாறி விடுகின்றனர்.

இதற்குப் பெற்றோரும் பொறுப்பு என்பதை அவர்கள் உணர வேண்டும்.

கல்லூரிப் பருவத்தில் அமைத்துக் கொள்கின்ற அல்லது அமைகின்ற நட்பு மிக முக்கியமானது. நன்கு படிக்கும் மாணவர்கள், சுமாராகப் படிப்பவர்கள்,சராசரியாகப் படிப்பவர்கள் என மூன்று ரகமாகப் பிரிக்கலாம்.

சுமாராகப் படிப்பவர்கள் பெரும்பாலும் தவறு செய்ய மாட்டார்கள். நன்றாகப் படிப்பவர்களின் நட்பைப் பெற முயல்வார்கள். அவர்களின் பெற்றோர்களும் நடவடிக்கைகளைக் கவனித்து வருவார்கள்.

சராசரியாகப் படிக்கும் மாணவர்கள் எளிதில் தீய குணங்களுக்கு ஆளாகி விடுவார்கள். நன்கு படிக்கும் மாணவர்களைக் கண்டால் பிரம்மிப்பு; நெருங்கிப் பேச தயக்கம், தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பர்.

இந்தப் பிரிவு மாணவர்கள் சிலரிடம் சில தீய பழக்கங்கள்(புகை, மது போன்றவை) இருக்கலாம். காரணம் பெற்றோர் அல்லது அவர்களது வசிப்பிட சூழ்நிலையாக இருக்கலாம். இவர்கள் தீய பழக்கங்களை விடுவதற்கு நல்ல வழிக்காட்டுதல்கள் தேவை.

ஒருவேளை நன்கு படிக்கும் மாணவர்களுள் ஓரிருவர் செல்வச்செழிப்பால், இத்தீய பழக்கங்களைக் கொண்டிருந்து, அவர்களுக்கு சராசரி ரக மாணவர்கள் நட்பு இணையும் போது தீய பண்புகள் மேலும் கூட வாய்ப்புள்ளது.

இன்று கல்வி நிலையங்களில் ஆசிரியர்களின் நிலை மோசமாகத்தான் உள்ளது. படிப்பு என்ற பகுதியைத் தவிர மற்றவைகளைத் தொட்டு, சிக்கலில் மாட்டிக் கொண்டு கஷ்டப்பட விரும்பாத பலர் உள்ளனர்.

வெகு சிலரே, சமுதாய அக்கரையோடு மாணவர்களுக்கு நல்வழிகாட்டும் புனிதப்  பணியில் ஈடுபடுகின்றனர்.

தலைக்குமேல் வளர்ந்த குழந்தை எனக் கண்டுகொள்ளாமல் இருப்பதை விட்டு, பெற்றோர்கள் வாரத்தில் சில நாட்களாவது அவர்களுடன் நேரம் செலவழித்து, தங்களின் அன்பை, அக்கரையை வெளிப்படுத்த வேண்டும்.

இந்த வாய்ப்பு இல்லாத மாணாக்கர் மாமரத்தில் கொய்யாப்பழத்தை எதிர்பார்க்கும் விதண்டாவாத மன நிலையை வளர்த்துக்கொள்ள நேரிடும்.

வாதம் என்பது விவாதம் ஆகும். தான் கொண்ட கருத்தை வலியுறுத்திப் பேசுவதாகும். விதண்டா என்றால், இயற்கை நியதியைப் புரிந்து கொள்ளாமல் தனது நிலைக்குச் சாதகமாக உலக நிகழ்வுகளைத் தேடிப் பிடித்து சாமார்த்தியமாகப் பேசுவதாகும்.

இந்தப் பருவம் டீன்-ஏஜ் பருவம் என்பதால், பெற்றோர் கூடுதல் முயற்சி எடுத்தால் நல்ல பழக்கங்களை மேற்கொள்ளச் செய்யமுடியும்.

இந்த வாய்ப்பு விடுதிகளில் தங்கி படிப்போர்க்கு சிரமமே.

அடுத்து பணி என்று வரும்போது அமையும் அல்லது அமைத்துக் கொள்ளும் நட்புதான் குடும்ப நட்பாக விரிந்து வாழக்கையை வளப்படுத்துகிறது அல்லது நாசமாக்குகிறது.

மாணவப் பருவத்தில் பணத்துக்கு பெற்றோரை அல்லது மற்றவர்களை எதிர்ப்பார்த்தநிலை, ஆனால் இங்கு சுய சம்பாத்தியம்.

பணிக்கு சேர்ந்த நாள் முதல் திருமணம் வரையிலான காலங்களில்தான் மாமரத்தில் கொய்யாப்பழங்கள் காய்க்கின்றன என்று ஆய்வுகள் மூலம் அறிய முடிகின்றது.

குழந்தை மற்றும் பள்ளிப் பருவத்தில் பெற்றோரது வளர்ப்பு எப்படி இருக்கிறதோ அதற்கேற்பவே இவர்கள் தங்கள் வாழக்கையை அமைத்துக் கொள்கின்றனர்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2019

முடியும் வரை முயற்சி…! தினந்தோறும்  தரும்  மகிழ்ச்சி…!
சாதிப்பின் சங்கமம் சேரன் விளையாட்டுக் குழு
புறப்பட ஆயத்தமாகுங்கள்
பெண்ணிய உரிமைகள்
தடுப்பணை
உயிருக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு
தடம் பதித்துச் சென்ற மாமனிதர்கள்- 4
குழந்தை வளர்ச்சி
நான் ஏன் வாயே திறப்பதில்லை?
நில்! கவனி !! புறப்படு !!!  4
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 9
நம்பிக்கை நாயகர்கள்
சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்க
ஏற்றுக்கொள்ளுதல்
மாமரத்தில் கொய்யாப்பழம் – 5
வெற்றி உங்கள் கையில் – 66
இன்பமயமான வாழ்வு
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்