Home » Articles » நில்! கவனி !! புறப்படு !!!  4

 
நில்! கவனி !! புறப்படு !!!  4


மித்ரன் ஸ்ரீராம்
Author:

சேவை மையத்தை அணுகுங்கள் ! (பாதை 3)

வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே !

“அனைத்திலும் சிறக்கும் ஆறு லட்சம் குடும்பங்கள்” – ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதே உங்கள் வண்ணமயமான வாழ்க்கைக்கு வழி காட்டும் வாழ்வியல் பயிற்சியாளரான  என் லட்சியம்.

அந்த ஆனந்தக்குடும்பத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ள – இந்தத்தொடர் ஒரு இணைப்புப்பாலம்.

சேவை மையத்தை அணுகுங்கள் !

“ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதை – இருவரின் துடிப்பினிலே விளைவது மழலை”.

அந்த மழலையின் வரவை Birth Certificate என்ற கோப்பில் பதிவு செய்ய இருக்கும் “சேவை மையம்” – இவர் ஒரு இந்தியப் பிரஜை என்று இயம்ப உதவுகின்றது.

“ஆடி அடங்கும் வாழ்க்கை – இதில் ஆறடி நிலமே சொந்தம்” – என்று உணர்த்தி உயிர் பிரிந்தவர்களின் வாரிசுகளுக்கான Death Certificate ஐ வழங்கும் “சேவை மையம்” – பல குடும்ப வழக்குகளின் தீர்ப்பை மாற்றி வருவதும் உண்மையே.

“கல்வி, வேலை வாய்ப்பு, ஆதார் எண் போன்ற பல்வேறு வாழ்க்கை நடைமுறைகளுக்கும் சேவை மையங்கள் சிறப்பான சேவை தான் செய்து வருகின்றது.

பல நடைமேடைகள் இருக்கும் இரயில் நிலையங்களில், நம் இரயில் எந்த நடை மேடையில் என்று சொல்வதற்கும், நாம் பயணிக்கும் பெட்டி இஞ்சினில் இருந்து எத்தனை பெட்டிகள் தள்ளி இருக்கின்றது என்று தெரிந்து கொள்வது வரை – “சேவை மையங்கள்” சரியாக சொல்வதால் தான் நம் பயணம் எப்போதும் ஒரு சுக அனுபவமாக இருப்பதை உணர்கின்றோம்.

மனிதனுக்கு வாழ்வில் ஏற்படும் தேவைகளை தீர்த்து வைப்பதற்கு எண்ணிலடங்கா சேவை மையங்கள் ஏராளமாகவே இருக்கின்றது.

அனைத்து அரசியல் அமைப்புகளும் “சேவை மையமாக” தங்களை பிரகடனம் செய்துவரும் சூழலில் “மையம் சேவை” செய்யுமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

“இயற்கையின் சீற்றமும், அதற்கு எதிரான மனிதனின் ஆற்றலும்” நேரடியாக களம் காணும்போது, புயல், வெள்ளம் தந்த இடர்களிலும் “மனித நேயம்” மகத்தான சேவை செய்ததை மானுடம் மறக்காது தன் வரலாற்று பக்கங்களில் பதிவு செய்து வந்திருக்கின்றது.

முன்பெல்லாம் ஓட்டல்களில் தர்மம் Service ல் அழைத்தால் Order செய்யும் அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் தர்மம் க்கே வந்து தருவார்கள்.

விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி, மனித மூளையின் மகத்துவம், Digital India என்று பல விஷயங்கள் இன்று மனிதர்களுக்கு தேவையான அனைத்தும் ஒரு தொலைபேசி அழைப்பிலேயே.

பண பரிவர்த்தனை முதல் பட்டா வரை – விரல் நுனியில் சேவை மையங்களின் சேவையில்.

சமைக்க காய்கனிகள் தொடக்கி – சந்தோஷிக்க வெளிநாட்டு விமான சீட்டு முடிய – அனைத்தும் வீட்டு வாசலில்.

சரி! இவை அனைத்தும் வாழ்க்கையில் தேவைப்படுபவை தானே.  இவையே வாழ்க்கை அல்லவே.

அப்படி என்றால் – வாழ்க்கையின் தேவைகளை தருவதற்கு “சேவை மையம்” இருக்கின்றதா?

இருக்கின்றது.  நிச்சயமாக இருக்கின்றது.

ஒவ்வொரு மனித ஜீவனின் தேவைகளுக்கும் பதில் அளிக்க, உதவ சிறப்பான ஒரு சேவை மையம் இருக்கின்றது.

உங்கள் படிப்பிற்கும், வாழ்வின் வெற்றிக்கும் வேண்டிய எல்லாவற்றையும் மறுக்காமல் தருவதற்கும் ஓர் “சேவை மையம்” உண்டு.

அந்த மையத்தை நீங்கள் தொடர்பு கொண்டால், உங்களுக்கு வாழ்க்கை குறித்த ஒரு தெளிவு கிடைக்கும், வழிகள் கிடைக்கும், பாராட்டுக்கள் கிடைக்கும், புகழ் கிடைக்கும், செல்வாக்கு கிடைக்கும், இலட்சியங்களை அடைய வெற்றி கிடைக்கும் – இப்படி இன்னும் பல..

அந்த சேவை மையத்தின் பெயர் தான் “பிரபஞ்சம்”

அனைத்தும் எல்லை இல்லாமல் நிறைந்திருக்கும் பிரபஞ்சம், நீங்கள் கேட்டதை கொடுக்கும் அட்சய பாத்திரம் போன்றது.

அறிவாளிகள் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் அங்கிருந்து தான் பெறுகிறார்கள்.

பொன்னும் பொருளும் புகழும் வேண்டுபவர்கள் – அதைதான் தங்கள் புதையலாக போற்றுகின்றார்கள்.

நிறைவையும், நிம்மதியையும் தேடுபவர்களின் நெஞ்சம் விரும்புவதும் அதைத்தான்.

பிரபஞ்சத்தின் ஆற்றல் அனைவருக்கும் உடல் சக்தியை மட்டுமல்ல, மன சக்தியையும் பிரவாகமாக அளிக்கிறது.

அந்த பேராற்றலை ஈர்க்கும் நுட்பம் தெரிந்தவர்கள் சத்தமே இல்லாமல் பல சாதனைகளை படைக்கும் வல்லவர்களாக வாழ்கிறார்கள்.

விளங்கினால் விளங்கும் விஞ்ஞானமும்,  விளங்கினாலும் பிரமிக்க வைக்கும் மைஞானமும் தரும் விளக்கங்களுக்கும் மேலாக விஸ்வரூபமாக இருப்பதே இந்த பிரபஞ்சம்.

இந்த பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்க ஒரு எளிமையான வழிமுறையை இப்போது பார்ப்போம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2019

முடியும் வரை முயற்சி…! தினந்தோறும்  தரும்  மகிழ்ச்சி…!
சாதிப்பின் சங்கமம் சேரன் விளையாட்டுக் குழு
புறப்பட ஆயத்தமாகுங்கள்
பெண்ணிய உரிமைகள்
தடுப்பணை
உயிருக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு
தடம் பதித்துச் சென்ற மாமனிதர்கள்- 4
குழந்தை வளர்ச்சி
நான் ஏன் வாயே திறப்பதில்லை?
நில்! கவனி !! புறப்படு !!!  4
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 9
நம்பிக்கை நாயகர்கள்
சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்க
ஏற்றுக்கொள்ளுதல்
மாமரத்தில் கொய்யாப்பழம் – 5
வெற்றி உங்கள் கையில் – 66
இன்பமயமான வாழ்வு
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்