Home » Articles » வெற்றி உங்கள் கையில் – 66

 
வெற்றி உங்கள் கையில் – 66


கவிநேசன் நெல்லை
Author:

வெற்றியின் தொடக்கம்…

வாழ்க்கையை ரசிக்கவும், ருசிக்கவும் பழகிக்கொண்டால், எந்தச்சூழலிலும் வெற்றி நம்மைத்தேடி வரும்.

பொதுவாக – “தோல்விதான் வெற்றிக்கான முதல்படி” என்பதை நன்கு உணர்ந்தவர்கள் வித்தியாசமாக செயல்படுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் தோல்வியடைந்தால் அவர்கள் துவண்டு போவதில்லை. “எப்படியாவது வெற்றி பெறவேண்டும்?” என்றஎண்ணத்தில் பல செயல்களில் ஈடுபடுவார்கள். ஒரு சிறிய வெற்றி கிடைத்தாலும், அதனைப் பெரிதாக அவர்கள் கொண்டாடுவதில்லை. “இந்த வெற்றி நிரந்தரமல்ல. இதுவும் கடந்துபோகும்” என்ற எச்சரிக்கையோடு வாழ்க்கையை எதிர் நோக்குவார்கள்.

இவர்கள் ஒரு சிறிய வெற்றியைப் பெற்ற பின்னர், அடுத்த வெற்றியைப் பெறுவது எப்படி? என்ற சிந்தனையோடு எப்போதும் காணப்படுவார்கள். தோல்விகளை சந்தித்தாலும் தன்னம்பிக்கையோடு உழைத்து வாழ கற்றுக்கொள்வார்கள்.

“முன்னேற்றப்பாதை எது?” எனத் தெரியாமல் திக்குமுக்காடி தவிக்கும் நேரத்தில், சிறந்த வழிகாட்டல்கள் நமக்கு பக்கபலமாக அமைகின்றன. அவை வெற்றிப் பாதையை கண்டறிவதற்கும், அந்தப் பாதையில் பீடுநடை போடுவதற்கும் துணையாக அமையும்.

இந்த வழிகாட்டல்களை – பெற்றோர்கள், பெரியோர்கள், அறிவில் சிறந்தவர்கள், சிறந்த நூல்கள், தொலைக்காட்சித் தொகுப்புகள் போன்றவற்றின் மூலம் முன்கூட்டியே பெற்றுக்கொண்டால், சிக்கல்கள் இல்லாமல் மகிழ்வோடு எல்லா சூழல்களிலும் வெற்றியாளராக வலம் வரலாம்.

தாய்ப்புறா ஒன்று தனியாக இருந்தது. அப்போது, மகள் புறா அருகில் வந்தது.

“அம்மா… எனக்கு எப்போதும் கவலையாகவே இருக்கிறது. மற்ற புறாக்களோடு பேசவே பிடிக்கவில்லை” என வருத்தப்பட்டது.

தாய் புறாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“இவ்வளவு நாள் என்னோடு இருந்தும் தைரியமாக உனக்கு வாழத் தெரியவில்லையே….” என எண்ணிய தாய்ப்புறா பேசத் தொடங்கியது.

“நீ எதற்கும் கவலைப்படாதே. நாம் பிறரோடு பேசிப் பழகினால்தான் நம்மிடம் இருக்கும் தயக்கம் மறையும். வெட்கப்பட்டும், பயப்பட்டும் நீ வாழ்ந்தால் உனக்கு அதிகமான பிரச்சினைகள் ஏற்படும். எனவே, நீ மற்றவர்களோடு பழகு. எதை வேண்டுமானாலும் மற்றவர்களிடம் மனம் திறந்து பேசு. தேவையானவற்றை கேட்டுப் பெற்றுக்கொள்” – என்றது.

“நான் உதவி கேட்கும்போது அவர்கள் மறுத்துவிட்டால் என்ன செய்வது?” – தயங்கிக் கேட்டது மகள் புறா.

“நீ கவலைப்படாதே. யாரும், நாம் கேட்காமல் நமக்குக் கொடுக்கமாட்டார்கள். எந்த உதவியையும் தேவையென்றால் கேட்டுப் பெறலாம். சிலர் கொடுக்கலாம். பலர் மறுக்கலாம். கேட்பது நமது உரிமை. கொடுப்பதும், கொடுக்காததும் அவர்கள் உரிமை” – என்று அறிவுரை சொன்னது, தாய்ப்புறா. பின்னர், தனது மகள் புறாவை அழைத்து “நீ என்னைப் பின் தொடர்ந்து வா” என்று சொல்லி பறக்க ஆரம்பித்தது. முதலில் – ஒரு ஏரியின் அருகே அவர்கள் வந்தார்கள். பின்பு, ஏரிக் கரையோரம் பறந்த தாய்புறா ஏரி நீரில் எச்சமிட்டது. ஏரியின் அலைகள் அந்த எச்சத்தை அடித்துச் சென்றது. எச்சம் நீரில் கரைந்தது. தாய்ப்புறா ஏரியைப் பார்த்து, “எனது எச்சத்தை என் அனுமதி இல்லாமல் கரைத்துவிட்டாய். எனவே, அந்த எச்சத்தை திருப்பிக்கொடு” – எனச் சொன்னது.

“என்னால் உன் எச்சத்தை திருப்பித் தர முடியாது. அதற்குப் பதிலாக நான் ஒரு மீன் தருகிறேன்” – என்றது ஏரி.

மீனைப் பெற்றுக்கொண்ட தாய்ப்புறா ஊருக்குள் வந்தது. ஒரு வீட்டின் முன்வாசலில் அந்த மீனை வைத்துவிட்டு மறைந்து நின்று பார்த்தது. கதவைத் திறந்த வீட்டுக்கார அம்மா “ஆகா… இது நல்ல மீன். இன்றைக்கு குழம்பு வைத்தால் நன்றாக இருக்கும்” என முடிவு செய்தாள். மீன் குழம்பாகி உணவானது. காத்திருந்த தாய்ப்புறா வேகமாக வீட்டுக்கார அம்மாவிடம் வந்தது.

“நீங்கள் எனது மீனை எடுத்துக்கொண்டுபோய் குழம்புவைத்து சாப்பிட்டுவிட்டீர்கள். எனக்கு அந்த மீனைத் தாருங்கள்” என்றது.

“சாப்பிட்ட மீனை எப்படி திருப்பித்தர முடியும்? அதற்குப்பதிலாக என்னிடம் ஒரு கயிறு இருக்கிறது. அதைத் தருகிறேன்” – என வீட்டுக்கார அம்மா சொன்னாள். வீட்டுக்கார அம்மா கொடுத்த கயிற்றை வாங்கிக்கொண்டு தனது மகளோடு தாய்ப்புறா பறந்தது. வழியில் கவலையோடு ஒருவர் ஊர்க்கிணற்றின் அருகே நிற்பதைப் பார்த்து விபரம் கேட்டது.

“எனது கயிறு அறுந்து போய்விடும் நிலையில் உள்ளது. இனி தண்ணீர் இரைக்க இதனை பயன்படுத்த முடியாது. இந்த நல்ல தண்ணீரைக் கொண்டு சென்று தான் வீட்டில் சமையல் செய்ய வேண்டும்” – என வருத்தப்பட்டுச் சொன்னார்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2019

முடியும் வரை முயற்சி…! தினந்தோறும்  தரும்  மகிழ்ச்சி…!
சாதிப்பின் சங்கமம் சேரன் விளையாட்டுக் குழு
புறப்பட ஆயத்தமாகுங்கள்
பெண்ணிய உரிமைகள்
தடுப்பணை
உயிருக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு
தடம் பதித்துச் சென்ற மாமனிதர்கள்- 4
குழந்தை வளர்ச்சி
நான் ஏன் வாயே திறப்பதில்லை?
நில்! கவனி !! புறப்படு !!!  4
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 9
நம்பிக்கை நாயகர்கள்
சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்க
ஏற்றுக்கொள்ளுதல்
மாமரத்தில் கொய்யாப்பழம் – 5
வெற்றி உங்கள் கையில் – 66
இன்பமயமான வாழ்வு
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்