Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி …?

இயற்கை விவசாயம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு துணைபுரியும் என்று நினைக்கிறீர்கள்?

– காதர் மொய்தீன், சென்னை.

விவசாயம் இல்லாத நாடுகள் வளர்ச்சியடைய முடியாது. அப்படி விவசாயம் செய்யாத நாடுகள் மற்ற நாடுகளைச் சார்ந்து வாழ வேண்டியது இருக்கும்.

ஆனால் ஒரு நாடு வளர்ச்சியடைய மக்கள் தொகையில் ஒரு சிலரே விவசாயம் செய்ய வேண்டும். அமெரிக்காவில் விவசாயம் செய்பவர்கள் 1 சதம், கனடாவில் 2 சதம், இஸ்ரேலில் 1 சதம், ஜெர்மனியில் 1 சதம், ஜப்பானில் 3 சதம், நார்வேயில் 3 சதம், ஸ்வீடனில் 2 சதம், ஆஸ்திரேலியாவில் 3 சதம். மற்றவர்கள் சேவை துறையிலும், தொழில் நுட்ப துறையிலும் பணியாற்று கிறார்கள். விவசாயம், நமது நாட்டின் முதுகெலும்பு இங்கு நூற்றுக்கு 44 சதம் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஒரு பிளாஸ்பேக்:

ஒரு காலத்தில் எண்பது சதம் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர், இருப்பினும் அப்போதெல்லாம் எல்லோருக்கும் முழு வயிறு உணவு கிடைக்கவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே நிலம் இருந்தது, பலர் அதில் வேலை செய்வார்கள். விளைச்சலில் ஒரு பகுதி கூலியாகத் தரப்படும். நிலச்சுவான்தாரர்கள் தாராளமாக உண்டு வயிறு பெருத்து அவதிப்பட்டார்கள். நிலத்தில் வேலை செய்த கூலியாட்கள் ஒட்டிய வயிறுடன், அரைகுறை ஆடைகளுடன், கூரை வீடுகளில் எலும்பும் தோலுமாக உயிர் வாழ்ந்து அவதிபட்டார்கள்.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நிலங்கள் அளக்கப்பட்டன. சட்டம், நீதிமன்றம், நிர்வாகம், கலெக்டர் என்று அரசு கட்டமைப்பு உருவானது. சாலைகள், இரயில் போக்குவரத்து ஏற்பட்டது. இந்தியா என்ற ஒரு பெரிய வர்த்தக விவசாய நாடு உருவானது. ஆங்கிலேய ஆட்சியில் எற்பட்ட மாற்றத்தில் முதன்மையானது நுகர்தல் விவசாயம் வர்த்தக விவசாயமாக மாறியதுதான். ஆனாலும் கூட பசி, பட்டிணி. உணவு பற்றாக்குறை பிரச்சனைகளுக்கு அவர்களால் முழு தீர்வு காண முடியவில்லை. வங்காளதேசம் பஞ்சத்தில் (The Great Bengal Famine) 30 லட்சம் பேர் இறந்தார்கள். இது நடந்தது 1943 ஆம் ஆண்டு; இதுபோல பல இடங்களில் நடந்தது, பல ஆண்டுகளாகவே நடந்தது.

ஐந்தாண்டுத் திட்டம்:

சுதந்திர இந்தியாவின் ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயம் முன்னுரிமை பெற்றது. பவானி சாகர், சாத்தனூர், மணிமுத்தாறு, ஆண்டிபட்டி, ஆழியாறு போன்ற இடங்களில் அணைகள் கட்டப்பட்டன. நீர்பாசன திட்டங்கள் விவசாயம் செழிக்க உதவின. அணைகள் தான் நவீன இந்தியாவின் கோவில்கள் என்றார் பண்டித ஜவகர்லால் நேரு.

நிலச்சீர்திருத்தம், உழவனுக்கு நிலம் போன்ற நிலை வந்ததால் உணவு உற்பத்தி பெருகியது. சுதந்திர இந்தியாவில் தொழிற்சாலை, போக்குவரத்து, கல்வி, வேலை வாய்ப்பு என்று வாழ்க்கைத்தரம் உயர உயர மக்களின்  வாங்கும் திறனும் உயர்ந்து பாமர மக்கள் மூன்று வேளை சாப்பிடும் நிலை ஏற்பட்டது. இலவச அரிசி திட்டத்தால் பட்டினி அறவே இல்லாத நிலை ஏற்பட்டது. மதிய உணவுத் திட்டம் ஏழைப் பிள்ளைகளின் பசியை போக்கியதோடு கல்வி பெறவும் வழி வகுத்தது.

இன்று நமக்கு தேவையான தானியங்களை நாமே தயார் செய்கிறோம், ஏற்றுமதி கூட செய்கிறோம். நமக்கு தேவையான பாலும் நாமே உற்பத்தி செய்கிறோம். ஆனால் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி போதுமானதாக இல்லை, அவற்றை இறக்குமதி செய்கிறோம். அவற்றை சாகுபடி செய்ய நிலம் நம்மிடம் இல்லை.

பசுமைப்புரட்சி:

மக்கள் வயிறு நிறைய உண்பதற்கு காரணமாக இருந்தது பசுமைப் புரட்சியும், வெண்மைப் புரட்சியும் தான். அந்தப் பசுமைப் புரட்சி ஏற்பட காரணமானவர்கள் நமது வேளாண்மை விஞ்ஞானிகளும், விவசாய பல்கலைக்கழகங்களும், வேளாண்மை அதிகாரிகளும், விவசாயிகளும் என்றால் அது உண்மை.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2019

முடியும் வரை முயற்சி…! தினந்தோறும்  தரும்  மகிழ்ச்சி…!
சாதிப்பின் சங்கமம் சேரன் விளையாட்டுக் குழு
புறப்பட ஆயத்தமாகுங்கள்
பெண்ணிய உரிமைகள்
தடுப்பணை
உயிருக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு
தடம் பதித்துச் சென்ற மாமனிதர்கள்- 4
குழந்தை வளர்ச்சி
நான் ஏன் வாயே திறப்பதில்லை?
நில்! கவனி !! புறப்படு !!!  4
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 9
நம்பிக்கை நாயகர்கள்
சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்க
ஏற்றுக்கொள்ளுதல்
மாமரத்தில் கொய்யாப்பழம் – 5
வெற்றி உங்கள் கையில் – 66
இன்பமயமான வாழ்வு
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்