Home » Articles » உள்ளுணர்வு

 
உள்ளுணர்வு


அனந்தகுமார் இரா
Author:

“இன்னிக்கு கிளம்பும்பொழுதே கால்தடுக்கிவிடுது! ரொம்ப நல்ல சகுனம் போல…  ஐம்பது இரன்னாவது அடிப்போம்”

இது ஒரு உள்ளுணர்வு…

“இன்னிக்கு போகும்பொழுதே கால்தட்டிவிடுதே!  சகுனமே சரியில்லையே…  ஊத்தி மூடிக்கப் போகுது”…

இதுகூட ஒருவித உள்ளுணர்வு…

சில விஷயங்களை கேட்கும்பொழுதே ஒருவித பூரிப்பு கிளம்புவதை உணரலாம்…  சில சங்கதிகளை செய்யவேண்டும் என்றாலே சங்கடமாக தோன்றும்…

சொல்லவே வேண்டியதில்லை… உள்ளுணர்வுகள்தான் சம்பவங்களை சாதனைகளாக மாற்றுகின்றன… அவற்றை சோதனைகளாக மாற்றுபவையும் உள்ளுணர்வுகளே.

வெளியே பேசுகையில் நாம் சொல்வதெல்லாம் மனதின் வார்த்தைகளாக இருந்துவிடுவதில்லை.  மனதின் ஆழத்தில் நமது எண்ணங்கள் புதைந்து கிடக்கின்றன.  அவற்றின் தரிசனம் நமக்கு எப்பொழுதும் கிடைத்துவிடுவதில்லை.  அவ்வப்பொழுதுதான் அடிமனதை உணரமுடிகின்றது.  நிறையப்பேருக்கு ‘இரண்டு மனம்’ உள்ளது! என்பது தெரியாமலே வாழ்நாள் கடந்துவிடுவதும் உண்டு.  மௌனமாக இருப்பது மனதை புரிந்துகொள்வதற்கான ஒரு வழியாகும் என்று இரமண மஹரிஷி மௌனத்தின் விளக்கம் குறித்து பேசுகையில் தெரிவித்திருப்பதாக பதிவுகள் இருக்கின்றன.

“உங்களுக்கு நூறு ஆயுசுங்க” நினைச்சேன்…  அதைப்பத்தி சொல்லிட்டீங்க!  இப்பத்தான் நினைச்சேன் நீங்க நேரிலேயே வந்துட்டீங்க!  என்று நம் சம்பாஷணைகளில் பலமுறை பயன்படுத்தியது உண்டு.  அவை உள்ளுணர்வைத்தான் குறிக்கின்றன.

இன்று கிரிக்கெட் விளையாடப் போகின்றோம்!  என்கின்ற பரபரப்பே!  தூங்க விடாமல் நான்கு மணிக்கெல்லாம் எழுப்பி விட்டுவிட்டது… அன்றைய தினம் ஆட்டம்… அற்புதமாக அமைந்துவிட்டது…  உள்ளுணர்வுதான்… வேறென்ன!

தங்கல்…  என்றொரு இந்தி திரைப்பட பாடல் உண்டு… தங்கல் என்கின்ற அதே மொழி படத்தில் வந்தது.  அதன் தமிழ் பொருளை புரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது.  மகளும் நானும் இணையத்ளத்தில் தேடினோம்.  அது கிடைத்தது.  நாம் வாழ்வில் எதை நேசிக்கின்றோமோ!  அதை நோக்கி நகர்கின்றோம்!  தங்கல் திரைப்படத்தில் தன்மகளை மிகப்பெரிய மல்யுத்த வீரர் குறித்த கதை… “உன் இதயம்…  பின்வாங்கி… தோற்று… ஒளிந்துகொள்ள துடிக்கும்பொழுது!  கொஞ்சம் துணிச்சல் கொடு உன் முதுகை நீயே தட்டிக் கொடு… அதன்பிறகு நட்சத்திரங்கள் உன் பக்கமும் புன்னகைக்கும்!  மகளே!  அதுதான் மல்யுத்தம்… அதுதான் மல்யுத்தம்” என்று அந்தப்பாடல் செல்கின்றது…

அதிலே பார்த்தீர்களேயானால்…  மல்யுத்தம் ஏதோ…  களத்தில் எதிரியோடுதான் மல்லுக்கட்டுவது என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றோம்! அது சரியல்ல போல…  ஆட்டம் நம் மனசுக்குள்ளேதான் இருக்கின்றது என்பதே உட்பொருள்.  அந்த இதயத்தை அவநம்பிக்கையின் பிடியில் இருந்து அற்புதத்தின் பாதைக்கு அழைத்து வரும்படியான உள்ளுணர்வு வருவதற்கு ‘பயிற்சி’ தேவைப்படுகின்றது.  ஆமாம்… இதிலிருந்து உள்ளுணர்வுக்கு கூட பயிற்சி அளிக்க முடியும் என்று தெரிந்துகொள்ளலாம்.

என் நண்பர் ஒருவருக்கு சுயமுன்னேற்ற புத்தகங்கள் என்றாலே!  அறவே பிடிக்காது.  அவை சுயத்தை முன்னேற்றுவதில்லை… சுயத்தை இழக்கச் செய்து விடுகின்றன என்பது அவர் வாதம்!  பார்க்கும் பொழுது சரியாகத்தான் இருக்கின்றது!  “பறவைகள் பலவிதம்!  ஒவ்வொன்றும் ஒருவிதம்!”  என்கின்ற பாடலே நினைவிற்கு வருகின்றது.  படைப்பாற்றலை அதிகப்படுத்துவது எப்படி? என்கின்ற தலைப்பிலான கட்டுரைகள் புத்தங்களை நாம் கண்டதுண்டு… அவை சொல்கின்ற முறைப்படி படைக்கப்பட்டவை புதுமையான படைப்புக்களா?  சமையல் செய்வது எப்படி?  என்று படித்துவிட்டு செய்வது மட்டும்தான் சமையலா?  நாமாக புதிதாக எதையும் சமைத்துவிட கூடாதா?  என்றெல்லாம் சிந்தனைகள் சென்றது உண்டு!

கடந்த பத்தி முழுக்க சில கேள்விகளை கேட்டு இருந்தோம்.  இலக்கியங்கள் எல்லாமே, மனதின் ஓட்டங்களே.  படிக்கின்ற வாக்கியங்களோடு மனது ஒன்றும்பொழுது உண்மையில் நாம்படிப்பது யாரோ? எழுதிய புத்தக வரிகளை மட்டும அல்ல…  அது நம் மனதைத்தான்… என்று உணர்ந்துகொள்கின்றோம்  அல்லவா…  அதுதான் உள்ளுணர்வை படிப்பது.  கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக கிரிக்கெட் விளையாடினாலும்…  இன்றைக்குத்தான்… வலதுகை மட்டைக்காரர்களின் கை உறைக்கும் இடது கை மட்டைக்காரர்களின் கையுறைக்கும் வித்தியாசம் இருக்கின்றது என்பதை கண்டுகொண்டோம்.  புதிதாக இருந்தது.  மனதில் பதிந்தது.  அதில் பெருவிரல் எந்த கையினுடைய பெருவிரல் பந்து படுவது போல முன்னோக்கி இருக்கிறதோ… அதன் மீது மஞ்சு வைத்து கட்டியிருந்தால் அதுவே பாதுகாப்பு அளிக்கும்.  இவ்வளவு நுணுக்கமும் ஒரு இடதுகை ஆட்டக்காரரிடம் சென்று கையுறையை கடன் கேட்ட பொழுதே!  தெரிந்துகொள்ள நேர்ந்தது அவரிடம் கேட்கலாமா?  வேண்டாமா?  என்ற உள்ளுணர்வின் தயக்கத்தை ஒரு பாய்ச்சலில் தாண்டிய பொழுது கற்றல் நிகழ்கின்றது!  இதில் தயக்கத்தை கடந்த நிம்மதி கூட இருப்பதாக தோன்றுகின்றது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2019

எண்ணத்தை தூய்மைப்படுத்து ஏற்றத்தை மேன்மைப்படுத்து
ஹெப்படைட்டிஸ் ஏ (Hepatitis A)
நம்பிக்கையால் மனதை நிரப்புங்கள்- நல்ல விஷயங்கள் நம்மை தேடி வரும்
கடனே உன்னை வசமாக்குவேன்
வெற்றிலை இரகசியம்
உள்ளுணர்வு
நில்! கவனி !! புறப்படு !!! – 3
சாலை விதி சாதனைக்கு வழி
தன்னம்பிக்கை மேடை