Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

 நேயர் கேள்வி …?

தற்போதைய சூழலில் பெண் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் எதைச் சொல்லி வளர்க்க வேண்டும்?                                                                                         

மேனகா தேவி,

இல்லத்தரசி, கூடலூர்.

கடந்த நூறு ஆண்டுகளில் பெண்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. சிறு வயதில் திருமணமாகி பின்னர் புகுந்த வீட்டில் சமையல் செய்தும், குழந்தைகள் பெற்றும், விவசாயத்தை கவனித்தும், தொடர்ந்து உயிருடன் இருந்தால் பேரப்பிள்ளைகளை கவனித்தப் பெண்களின் நிலை இன்று அதுவல்ல.

இன்றைய பெண்:

பெண் படிக்கிறாள், வேலை தேடுகிறாள், வேலையில் சேர்ந்து வருமானம் ஈட்டிய பின் திருமணம் செய்து கொள்கிறாள். ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றெடுக்கிறாள். அந்தக் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்து, படிக்க வைத்துவிடுகிறாள். படித்தப் பிள்ளைகளை வெளியூருக்கும், வெளிநாடுகளுக்கும் வேலைக்கு அனுப்பி வைக்கிறாள். ஓய்வு பெற்ற பின்னரும் ஏதேனும் வேலை செய்கிறாள். பேரப்பிள்ளைகளுடன் அலைபேசியில் உரையாடி மகிழ்கிறாள். அவள் இறந்த அன்று வெளியூரிலிருந்து மகனும், மகளும், பேரப்பிள்ளைகளும் வந்துவிடுகிறார்கள்!. சில ஆண்டுகளுக்கு முன் சராசரியாக 30 ஆண்டுகள் வாழ்ந்த பெண் இன்று சராசரியாக 69 ஆண்டுகள் வாழ்கிறார்கள். இது ஒரு மாபெரும் மாற்றம், விரும்பதக்க மாற்றம்.

நாளைய பெண்:

அடுத்த நூறு ஆண்டுகளில் பெண்களின் நிலை எப்படி? பெண்கள் ஆண்களுக்கு இணையாக இருப்பார்கள். அவர்கள் ஆண்கள் செய்யும் அனைத்து பணிகளையும் செய்வார்கள், போர் விமானத்தைக்கூட கையாள்வார்கள். சர்வசாதாரணமாக ஆண்களின் கோட்டைகளுக்குள் கோலோச்சுவார்கள். அறிவியல், அரசியல், பொருளாதாரம், தொழில், கல்வி, இராணுவம், வர்த்தகம் என்று எல்லா துறைகளிலும் சமமாக ஆள்வார்கள். பெண்களின் சொத்து மதிப்பு சரிசமமாக இருக்கும். அவர்களை கயவர்கள் சீண்ட முடியாது, அவர்களின் புகைப்படம் அல்லது வீடியோவை வைத்து எவனும் மிரட்ட முடியாது.

நமது மகள் உலக நாடுகளில் தலைமைப் பதவியில் இருக்கும் மதிப்பு மிக்க சுதந்திரப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமா? அல்லது ஒரு அடக்கமான, அன்பான, மனைவியாக சமையல் செய்து கணவனையும், குழந்தையையும் கவனிக்கும் பெண்ணாக இருத்தல் போதும் என்று நினைக்கிறோமா? என்பதை வைத்தே உங்கள் கேள்விக்கு பதில் எழுத முடியும்.

சாதனை மகள்:

புதுமைப் பெண்ணாக நமது மகளை வளர்க்க வேண்டும் என்பதே எனது எண்ணம். ஏனென்றால், இன்று உலகில் வளர்ந்து விட்ட நாடுகளில் பெண் மக்கள் அப்படியே வளர்க்கப்படுகிறார்கள். பெண்களை அங்கு எவரும் போற்றுவதோ தூற்றுவதோ இல்லை. அவர்களுக்கும் ஆண்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் எந்தப் பாகுபாடும் இல்லாமல் நடத்துகிறார்கள்.

பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் எப்படி வளர்க்க வேண்டும் என்பதை முதலில் விளக்குகிறேன்.

அ) ஆணுக்கு இணையான மதிப்பும் மரியாதையும் பெண்ணுக்கும் தர  வேண்டும். சமமான உணவு, உடை, அறை, வீட்டில் முக்கியத்துவம் என அனைத்திலும் சமத்துவம் வேண்டும்.

ஆ) சொத்தில் சம பங்கு பெண்ணுக்குத் தர வேண்டும்.

இ) மகனை எதுவரை படிக்க வைப்பீர்களோ அதுவரை மகளையயும் படிக்க வைக்க வேண்டும். மகள் MBBS, MD, DM என்று படிக்க ஆசைப்பட்டால் அது 11 ஆண்டுகள் என்றாலும் படிக்க வைக்க வேண்டும்.

ஈ) பெண்களுக்கு படிக்கவும், வேலை செய்யவும், சில ஆண்டுகள் சுதந்திரமாக இருக்கவும் ஆர்வம் என்றால், அனுமதிப்பதே நல்லது. சிறுவயதில் திருமணம் என்பது அவ்வளவு நல்ல காரியம் அல்ல. சிலருக்கு திருமணம் செய்வதில் நாட்டமும் இருக்காது, அப்படிப்பட்டவர்களை வற்புறுத்தக் கூடாது.

உ) திருமணமான உடனே குழந்தைப் பெற்றுக்கொடு என்று வேண்டுகோள் வைக்கக் கூடாது. அந்த முடிவை தம்பதிகளுக்கு விட்டுவிடுவதே நல்லது. குழந்தை இல்லை என்றால் யாரிடம் குறை என்ற நாகரீகமற்ற கேள்விகள் கேட்கக் கூடாது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2019

எண்ணத்தை தூய்மைப்படுத்து ஏற்றத்தை மேன்மைப்படுத்து
ஹெப்படைட்டிஸ் ஏ (Hepatitis A)
நம்பிக்கையால் மனதை நிரப்புங்கள்- நல்ல விஷயங்கள் நம்மை தேடி வரும்
கடனே உன்னை வசமாக்குவேன்
வெற்றிலை இரகசியம்
உள்ளுணர்வு
நில்! கவனி !! புறப்படு !!! – 3
சாலை விதி சாதனைக்கு வழி
தன்னம்பிக்கை மேடை