March, 2019 | தன்னம்பிக்கை - Part 2

Home » 2019 » March (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  எல்லாம் அசாதாரணமே

  போயும் போயும் அது எறும்புதானே… அதனால் அப்படி என்ன சாதிக்க காட்டிட முடியும்னு நீங்க சாதாரணமா நெனச்சா அது ரொம்ப ரொம்பத் தப்புங்க அதே எறும்பு உருவத்திலே ரொம்ப ரொம்பப் பெரிய ஒரு யானையோடு போகட்டும்.. அப்போ யானை படும் பாடு இருக்கே…அது சொல்லி மாளாது.  அந்த நேரத்தல்  தெரியுங்க அந்தக் குட்டியூண்டு எறும்போடக் குறும்பும் அதனோடு அபாரத் திறமையும்.

  கடுகு சிறுசா இருக்கேன்னு பார்க்காதீங்க என்னா கடுகு சிறுத்தாலும் காரம் போகாதும்பாங்க.

  அதே மாதரி குழந்தைகள் தானேன்னு அவங்களை அலட்சியமா  எண்ணிடப் படாது. குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னுச் சொல்லும் போது  அந்தக் குழந்தைங்க கிட்டயும் ஏராளமான திறமைகளும் அதிசயங்களும் மறைந்திருக்குமில்லியா?

  சில கண்டுபிடிப்புகள் நமக்கு மலைப்பாக இருக்கலாம். ஆனா அந்தக் கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிக்க அமைந்த அந்த தருணங்களும் அவற்றின் மூலங்களும் ஆச்சரியமானவை. அதிசயிக்கக் கூடியவை.

  இப்படித்தான் ரெண்டு குழந்தைங்க விளையாடிக் கொண்டு இருந்தாங்க.. எவ்வளவு நேரந்தான் விளையாடுவாங்க. கொஞ்ச நேரம் ஓய்வா ஒரு மரக்கட்டையை மேல வந்து உட்கார்ந்தாங்க. அப்பவும் விளையாட்டுதான்.

  ஒரு குழந்தை மரக்கட்டையோடு ஒரு முனையில டொக்கு டொக்குன்னு தட்ட இன்னொரு குழந்தை இன்னொரு முனையில் காதை வைத்துக் கேட்டது.

  டேய் நீ தட்ற சத்தம் இங்கே எங்காதிலே நல்லா விழறதுடா நீகேளேன் நான் இப்பத் தட்றேன் என்று அந்தக் குழந்தைகள் இரண்டும் மாறி மாறித் தட்டுவதும் மாறி மாறிக் கேட்பதுமாக விளையாட்டைத் தொடர்ந்தனர்.

  இந்த விளையாட்டை ஒருவர் நீண்ட நேரம் பக்கத்திலே நின்று பார்த்து ரசித்துக் கொண்டே இருந்தார். அவருக்குத் திடீரென்று என்ன தோன்றியதோ தெரியவில்லை. வந்த வழியே மீண்டும் நடந்தார். ஒரு மருத்துவமனைக்குள் நுழைந்தார்.  பிறகு தான் தெரிந்தது. அவர் ஒரு டாக்டர் என்று.

  இந்த இதழை மேலும்

  ஊசல்

  தூரி கட்டி விளையாடியிருக்கின்றீர்களா? என்று ஒரு அண்ணா கேட்டார்…… உங்கள் ஊரில் ஒருவேளை வேறு எதாவது பெயரில் அதை குறிப்பிடலாம்…. தூரியை ஊஞ்சல் என்று கூட சொல்லலாம். ஊஞ்சல் என்பது இன்டோர் (indoor) ஆக இருக்கக்கூடும் தூரி அவுட்டோர்….

  ஊஞ்சல் ஆண்டு முழுவதும் இருக்கும்… ஆனால் தூரி… ஆடிமாதம்…சின்னவதம்பச்சேரி (கோவை மாவட்டம்) மாதிரியான சிறிய ஊர்களில் 1980 களில் நான் பார்த்து இருக்கின்றேன். இராஜா அண்ணா வீட்டில் ஒரு மிகப்பெரிய மரம் இருந்தது அதில் தாம்புக்கயிறை இரட்டை மடிப்பாகப் போட்டு….. கிட்டத்தட்ட இருபது முப்பது அடி நீளத்தில் தொங்கும் வண்ணம் கட்டி…. தரையிலிருந்து ஒன்றரை அடி உயரத்தில் யு வடிவில் வளைந்து கட்டியிருப்பார்கள். அதில் உட்கார்ந்து கொள்ள ஏதுவாக சாக்கு ஒன்றை மடித்து போட்டால் தூரி ரெடி…..

  அப்போது நான் ஒரு அரைக்கால் சட்டை சிறுவன்…. ஒரு பெரிய கூட்டமே… தூரி விளையாட ஆடிமாத திருவிழாவில் கூடும். பெரியவர்களும் வருவார்கள். வண்ண வண்ண சேலை, தாவணிகளில் பெண்களும் பெருமளவில் கலந்து கொள்ளும் இந்த திருவிழாக்களில் இன்றைய 2018 களில் கலந்துகொள்வது அருகிவிட்டது. சில நேரங்களில் இன்னும் வேகமாக ஆட்டி விடுங்கள் என்று நண்பர்கள் கேட்க… கீழே நின்றுகொண்டு தொங்குகின்ற சாக்கு நுனியை இழுத்து ….. வேகமாக உயரமாக ஆட்டிவிடுவதுண்டு.

  ஊரின் பல்வேறு இடங்களில் அவரவர்… வசதிக்கு உகந்தவாறு பல்வேறு உயரங்களில் பலவிதமான மரங்களில் வேப்பமரம்…. வெள்ளை வேலமரம் என்று பல வடிவங்களான மரங்களில் ‘தூரி’ கட்டப்பட்டு சிறுவர் சிறுமிகள் உனக்குப் பிறகு நான்…. என்று வரிசை வைத்து…. ஆளுக்கு 25 ஆட்டம் என எண்ணிக்கை வைத்தும் விளையாடுவதுண்டு. அதற்காக இந்த நாள் இனிமை குறைந்தது என்று குறிப்பிட்டுவிட தோன்றவில்லை. இன்றைக்கும் பழைய ஊர்களில் ஊஞ்சல் தூரிகட்டி ஆடி மாதம் ஆடுகிறார்களா என்று தெரியவில்லை. சென்று சரிபார்க்கும் ஆசை உள்ளது.  ஆனால் சூழ்நிலை இல்லை. அந்தக் காலத்தில் உடன் விளையாடிவர்களில் சிலபேர் அமெரிக்காவில் இருக்க சிலரோ… அடுத்த உலகில் இருக்கிறார்கள்…. தூரம் பின்னோக்கிப் போனாலும் நேரம் ஒரே திசையில் மட்டும் செல்லும் தூரியைப் போல பயணிக்கின்றது.

  நேர்ம குறித்து பேச்சு வந்தவுடன், இந்தக் கட்டுரை, தத்துவத்தை நோக்கி வளைந்து செல்கின்றது.  சமீபத்தில் ‘நிசர்கதத்த மஹராஜ்’ அவர்களைப்பற்றி படிக்க நேர்ந்தது.  இவர் குறித்து பல கட்டுரைகளில் தெரிவித்திருப்பேன்.

  நிசர்கதத்த மஹராஜ் அவர்களுடைய பொன்மொழிகள் குறித்து எட்கார்ட் டல்லி அவர்களது வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே… இவர்கள் இருவருமே தனித்தனியாக பரிட்சயம், மானசீகமாகத்தான். எட்கார்ட் டல்லி (Eckhart Tolle) ன் “இப்பொழுதின் ஆற்றல்” பவர் ஆஃப் நவ்… (Power of Now) என்கின்ற புத்தகம் என் மனதில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை உருவாக்கி இருக்கின்றது. சும்மா இருத்தல் – என்பதை அவ்வளவு நுணுக்கமாக விளக்கி இருப்பார். பழங்காலத்தில் தவம் செய்வதற்காக காடு மலைகளில் சுற்றி ஞானம் தேடி இருப்பது போல இன்றைக்கு இருக்கின்ற இடத்திலேயே சும்மா இருக்க முடியும் என்று ;இரமண மகரிஷி தனது வசனாமிர்தம் – என்கின்ற புத்தகம் வாயிலாக தெரிவித்து இருப்பதும் இதுதான். நாகூர் ரூமி அவர்கள்…. தனது ‘ஃஆல்பா தியானம்’ முதலான புத்தகங்களில் ‘மூச்சு ஊஞ்சல்’ பயிற்சி என்று தெரிவித்து மூச்சை எப்படி ஒரு சீரான கதியில் உள்ளே இழுத்து வெளியே விட்டு தூரி ஆடுவது போல உடலுக்கும் மனதுக்கும் பயிற்சி செய்யலாம் என்று கூறி இருப்பார். காலத்தால் முன்னும் பின்னும் மனதளவில் போகலாம,; ஆனால், உண்மை இருத்தல் ஒரு இடத்தில்தான் உள்ளது அது நமது உள்ளம்தான் என்கின்ற உண்மை உணர்வுக்கு நம்மை அடிக்கடி பரிட்சயப்படுத்திக்கொள்ள தியானம் உதவிபுரிகின்றது. இருபது நிமிடங்கள் மனதில் எதையும் நினைக்காமல் அல்லது எதை நினைக்கின்றது என்று வெளியேயிருந்து எண்ணங்களை கவனித்தால் ஒரு அற்புத அனுபவம் கிட்டுகிறது.

  இந்த இதழை மேலும்

  பயணங்களில் எடுக்க வேண்டிய உணவுகள்

  பயணத்தின் பயன் முழுமையடைய வேண்டுமாயின் பயணங்களில் ஆரோக்கியத்தைக் கெடுக்காத உணவுகளையே நாம் தெரிவு செய்ய வேண்டும். நம் பயண கால உணவானது இலகுவாகச் செரிக்கக் கூடியதாகவும் அதிக ஆற்றலைத் தரக்கூடியதாகவும், முடிந்த அளவு கெடுதல் இல்லாததாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட உணவுகளைப் பற்றி இனிப் பார்ப்போம்.

  1. பழச் சாறுகள்: சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காத பழச் சாறுகளை பயண காலத்தின் களைப்பை நீக்க சிறந்த பானங்களாகும். நாம் கைவசம் மூலிகைத் தினிவுச் சாறு வைத்துக்கொண்டு, தேவைப்படும் போது தண்ணீரில் கலந்து குடிப்பதும் ஆரோக்கிய பயணத்திற்கு உதவியாக இருக்கும்.
  2. இட்லியும் தேங்காய்ச் சட்னியும்: ஆவியில் வெந்த இட்லியும், இயற்கைத் தன்மை அதிகம் கொண்ட தேங்காய்ச் சட்னியையும் பயண காலத்தின் காலை உணவாக எடுப்பது மிகவும் பாதுகாப்பானது. இதற்கு அடுத்த சிறந்த உணவுகளாக இடியாப்பம் தேங்காய்ப் பால், ஆப்பம் தேங்காய்ப் பால் ஆகியவற்றை எடுக்கலாம். வெங்காயச் சட்னி நம் நரம்புகளையும், தக்காளிச் சட்னி நம் சிறுநீரகங்களையும் பதம் பார்க்கும். மறு சுழற்சி எண்ணெய்யில் சுட்ட வடை, பூரி ஆகியன நம் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். தோசை வகைகள் நம் உடல் தண்ணீர் தேவையை அதிகரிக்கச் செய்யும். சப்பாத்தி மற்றும் பரோட்டா வகைகளில் சமையல் சோடா ஆபத்துக்கள் இருகின்றன. அடைகள் செரிக்க கடினம் ஆகையால் பயண உணவாக அவைகளை எடுக்கக்கூடாது.
  3. தரமான சாதம்: மதிய உணவாக சாதம் சாப்பிட வேண்டுமாயின் நாம் தரமுள்ள சாதமாக பார்த்துச் சாப்பிட வேண்டும். நம் சாப்பாட்டின் அளவை கட்டுப்படுத்தவும், சாதத்தை பளிர் வெண்மையாக்கவும், விரைவாக சமைக்கவும் சில ஹோட்டகளில் சமையல் சோடாவை அரிசியோடு சேர்த்து சமைப்பர். இந்தச் சமையல் சோடா வயிற்று வலி மற்றும் செரிமானக் குறைவைத் தரும். சமையல் சோடா சேர்த்த சாதமானது மிகவும் வெண்மை பூத்திருக்கும். சாதம் உதிரியாகவும் வறட்சியாகவும் இருக்கும். சுவை சுத்தமாக இருக்காது. இவ்வித சாதம் எது என்று தெரிந்து அதைத்  தவிர்ப்பது நல்லது. சாதத்தோடு காய்கறிப் பொறியல் அல்லது கூட்டைப் பிசைந்து சாப்பிடலாம். பிறகு காரக் குழம்பு மற்றும் இரசம் சேர்த்து சாப்பிடலாம். 

  இந்த இதழை மேலும்

  நில் ! கவனி !! புறப்படு !!! 1

  “அறிமுகம்”         

  வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

  “அனைத்திலும் சிறக்கும் ஆறு லட்சம் குடும்பங்கள்” – ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறை.

  அதை அமைப்பதே என் வாழ்வின் இலக்கு.

  அந்த வகையில் இதோ உங்கள் செவிகளுக்கும், சிந்தனைக்கும் தன்னம்பிக்கை ஊற்றை தடையின்றி பொழியும் என் புதிய தொடர்.

  “நலமாய் வாழ நாற்பது வழிகள்” – மாதம் ஒன்றாய் மகிழ்ச்சியோடு உங்களுக்கு.

  “ஆறிலிருந்து அறுபதுவரை”  செயல்படுத்த ஏதுவான செயல்முறை பயிற்சிகளை பகிர்ந்து கொள்ள போகின்றேன்.

  ஒவ்வொரு கட்டுரையும் – சில பயிற்சிகளை பின்பற்ற பரிந்துரைக்கும்.

  “கேள்விகளால் ஒரு வேள்வி” எனும் பகுதி இரண்டு கேள்விகளுக்கு விடையளிக்க சொல்லும்.

  உங்கள் வாழ்வை திட்டமிடுவதர்க்கான கேள்விகள் அவை.

  அந்த விடைகள் – உங்கள் தடைகளை விலக்கும்.

  உங்கள் பதில் சிந்தனையோடும் – இதயத்தோடும் இணைந்ததாய் இருந்தால் நலம் பயக்கும்.

  இணைந்து பயணியுங்கள் !  இலக்கை இலகுவாக அடையுங்கள் !

  “வெற்றி”  என்பதே மகிழ்ச்சியை மட்டுமே தரும் சொல்.

  இந்த இதழை மேலும்

  உலகில் தடம் பதித்த சிறப்புமிக்க மாமனிதர்கள்

  ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்

  பொன்றாது நிற்பது ஒன்று இல் (குறள்- 233)

  என்ற குறள் உலகம் உள்ளவரை அழியாமல் நிற்கும் புகழ் பற்றி தனக்கு இணையில்லாது ஓங்கிய புகழல்லாமல் இவ்வுலகத்தில் அழியாமல் நிற்பது வேறொன்றுமில்லை என்ற கருத்தை வலியுறுத்துகின்றது. இந்திய நாட்டில் தோன்றி வெவ்வேறு துறைகளில் தங்களுது நற்பண்பினாலும், கடும் உழைப்பாலும், தனித்திறமையாலும் தங்கள் சாதனைகளைப் இப்பூலகில் பதிவு செய்து விட்டு விண்ணுலகம்  சென்று விட்ட மற்றும்  பதிவு செய்து கொண்டு வருகின்ற மாமனிதர்கள் பற்றிய கட்டுரைத் தொடர்ச்சியின் முதல் கட்டுரை மாமன்னர் அசோக சக்ரவர்த்தி பற்றியதாகும். இக்கட்டுரையின் நோக்கம் மனிதப்பிறவின் முக்கியத்துவம் பற்றியும், இயந்திரங்களுக்கு தன்னை அடிமைப்படுத்தாமல் இன்றைய இளைஞர் சமுதாயம் தனக்குள் புதைந்து கிடக்கும் தன்னுடைய தனித்திறமை என்ன என்பதை உணர்ந்து எழுச்சி பெற்ற சரித்திரப் புகழ் பெற்ற இந்தியாவை உலக நாடுகளின் வரிசையில் முதல் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே ஆகும்.

  உலக வரலாற்றில் பல்வேறு நாடுகளைப் பல்வேறு மன்னர்கள் ஆண்டிருக்கலாம். ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டும் தான் என்றும் அழியாப்புகழுடன் போற்றப்பட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவர் மாமன்னர் அசோகர் ஆவார். மௌரிய சாம்ராஜ்யத்தை இந்திய நாட்டில் உருவாக்கியவர். அசோகரின் பாட்டனார் சந்திர குப்த மௌரியர் ஆவார்.  கி.மு 327 ல் மாவீரன் அலெக்ஸôன்டர் படையெடுத்தாகச் சொல்லப்படும் மகத நாட்டை கி.மு. 324 முதல் கி.மு. 300 வரை ஆண்டார். இவருக்குப்பின் இவரது தந்தை பிந்துசாரர் மௌரிய சாம்ராஜ்யத்தின் மன்னரானார். இவரது மனைவிகள் மூலம் இவருக்கு பல குழந்தைகள் பிறந்தது.

  அசோகரின் தாய் அவருடைய தந்தையின் மற்ற மனைவியர்களை விட தாழ்ந்த குலத்துப் பெண் என்பதால் அவரும் அவருடைய இளைய சகோதரர் வித் அசோகரும் மிகவும் தரக்குறைவாய் பிறரால் நடத்தப்பட்டனர். ஆனாலும் இதைப் பொருட்படுத்தாமல் அசோகர் கல்வியிலும் வீரத்திலும் சிறந்து விளங்கியதால் அவரது தந்தை பிந்து சாரர் அவரை உஜ்ஜியினி பகுதிக்கு கவர்னராக நியமித்தார். பிந்து சாரரின் மறைவிற்குப் பின் அசோகர் கி.மு. 232 வரை மௌரி ராஜ்யத்தின் மன்னராய் திகழ்ந்தார்.  இவருடைய ஆட்சிகாலத்தில் இவரது சாம்ராஜ்யம் தற்போதய ஆப்கானிஸ்தான் முதல் பங்களாதேசம் வரையிலும்  தென்பகுதியில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா தவிர மற்ற பகுதிகள் வரை பரவியிருந்தது. இவருடைய நாடு விரிவுபடுத்தும்  ஆவல் கலிங்கத்துப் போருக்குப்பின் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

  புத்தத்துறவி உபகுப்தனின் சந்திப்பும், அவரது மனைவி மகாதேவியின் உறவாலும் அசோகர் நேரடியாகப் போரில் மடிந்த வீரர்களின் பிணக்குவியல்களையும் போரில் தங்கள் கை, கால் போன்ற உறுப்புகளை இழந்த ஊனமுற்ற வீரர்களைப் பார்த்தாலும் முற்றிலும் மனம் மாறி திருவள்ளுர் மன்னர்கள் எப்படியிருக்க வேண்டும் என்று திருக்குறளில்  நேர்மையான ஆட்சிமுறை என்ற தலைப்பில் கூறியபடி தன்னாட்சியை நடத்தினார். அவற்றில் சில பின்வருமாறு.

  தன் குடிகள் செய்த குற்றங்களை ஆராய்ந்து எந்த பாரபட்சமும் பார்க்காமல் நியாயம் வேண்டி வரும் மக்கள் எளியவனாய் இருந்தாலும் அவர்கள் சொல்லியவற்றை அறநூல் அறிஞருடன் ஆராய்ந்து உண்மைக்கு ஏற்ப தீர்ப்பு சொல்பவராகத் திகழ்ந்தார். அதே போல் குற்றம் செய்தவர்களுக்கு, குற்றங்களுக்குரிய தண்டனைகளையும் வழங்கினார்.

  இந்த இதழை மேலும்

  தன்னம்பிக்கை மேடை

  நேயர் கேள்வி … ?

  புத்தகம் படிப்பது மூலம் ஒருவரால் உயர முடியுமா? சாதிக்க முடியுமா?

  அருள்மொழி நாச்சியார்

  மதுரை.

  நிறைய வாசிக்க வேண்டுமென்று மாணவர்களிடம் சொல்லி வருகிறேன்,  சமீபகாலமாக அவர்களை வற்புறுத்தியும் வருகிறேன். இதைத் தெரிந்து கொண்டுதான் இந்தக் கேள்வியை நீங்களும் எழுப்பினீர்களோ என்னவோ?

  வெளிநாட்டைச் சேர்ந்த தமிழ் அறிஞர் ஒருவர் திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றை எழுதியிருந்தார். அவரது நூல் 1881ம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அரிய நூலில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். இங்கு வாழும் மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள், எனவே இவர்கள் நூல்கள் வாங்குவது இல்லை. பலருக்கு எழுத, படிக்கத் தெரியாது. எனவே, படிப்பதும் இல்லை. பொழுதுபோக்க ஆங்காங்கே கூடியிருந்து பேசுவார்கள். ஆண்கள் சூதாட்டம் நடத்துவார்கள், அங்கும் வெட்டிப் பேச்சுதான். பேச்சு முற்றி, அதுவே கலவரமாக மாறும். அண்ணன் தம்பிகளுக்குள்ளே சண்டை சச்சரவுகள் வரும். பங்காளி சண்டையும், விரோதமும், வழக்கும் அனைத்து குடும்பங்களிலும் இருக்கும். இந்த சண்டைகளால் நீதிமன்றங்களில் வழக்குகளும் நடக்கும். கிடைக்கும் சொற்ப வருமானத்தின் பெரும் பகுதியும் கோர்ட், போலீஸ் என்று செலவிடுகிறார்கள். இதனால் குடிமக்கள் தொடர்ந்து பரம ஏழைகளாகவே இருக்கிறார்கள்.

  அவர் அன்று கண்ட காட்சி இன்றும் கிராமங்களில் காண முடிகிறது. ஏழ்மை நிலையில் துவங்கும் துயரம் ஏழ்மை நிலையிலேயே முடிகிறது. விவசாயப் பணி இல்லாத நேரத்தில் வெட்டி பேச்சு, சூழ்ச்சிகள், சதி திட்டங்கள், வீண் சண்டை என்று பலர் காலத்தை போக்குகிறார்கள். நேரத்தை விரயம் செய்யவும், பணத்தை விரயம் செய்யவும் துணிச்சல் வருகிறது.  நூல் வாசிப்பது இல்லை.

  நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் புத்தகம் வாசிக்கவில்லை என்றால் அவர்களை மன்னித்துவிடலாம். அவர்களில் பலருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் நிலைமை இன்று மாறிவிட்டது. எழுதப்படிக்கத்தெரியும், நூல்கள் வாங்க பணமும் வந்துவிட்டது. இருந்தும் படிக்காமல் இருப்பதால் பல ஆபத்துக்கள் ஏற்படுகின்றன.

  அன்று நமது முன்னோர்கள் நூல் படிக்காமல் போனதால் உலக வரைபடம் அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை.  ஐரோப்பியர்கள் பல ஆயிரம் மைல்கள் கடலில் பயணித்து அமெரிக்கா சென்ற போது நமது முன்னோர்கள் பூமியில் மனிதர்கள் என்னதான் செய்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்கமாட்டார்கள். 1606-ம் ஆண்டு வில்லியம் ஜேன்சூன் என்ற போர்ச்சுக்கீசியர் ஆஸ்திரேலியா கண்டத்தில் கால் வைத்த போதும், 1788 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் அங்கு குடியேறிய போதும், 1768-69ம் ஆண்டு தாமஸ்குக் பசுபிக் கடலில் நிலப்பரப்பு ஏதும் உண்டா என்று தேடிக்கொண்டிருந்தபோதும் ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக இருந்தார்கள் நமது முன்னோர்கள். விளைவு? ஐரோப்பிய மக்கள் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, டாஸ்மானியா, ஐஸ்லாந்து போன்ற பரந்து விரிந்த அழகான நிலபரப்புகளை தமதாக்கிக் கொண்டனர். நூல் வாசிக்கத் தவறிய மக்கள் உலக நிகழ்வுகளை அறியாமலும், புரியாமலும் கிணற்றுத் தவளைகளாக உள்ளுர் வரப்புகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களால் பரந்து விரிந்த உலகை பார்க்க முடியவில்லை. ஐரோப்பியர்கள் நட்சத்திரங்களுக்கான தூரத்தை கணக்கெடுந்தார்கள், இவர்கள் நட்சத்திர பலன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சாதி, மத சண்டை போட்டுக்கொண்டு இருந்த வேளையில் ஐரோப்பியாவில் இருந்து வந்த சில நூறு நபர்கள் எளிதில் நம்மை அடிமையாக்கிவிட்டனர். அதுவே நமது சரித்திரமாகிவிட்டது.

  இனியாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டும். இனி ஒரு வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும். இளைஞர்களால்தான் அது முடியும். இணையதளம் வந்துவிட்ட இன்றைய நிலையில் உலக இளைஞர்களுடன் போட்டியிட்டால்தான் நாமும் சர்வதேச அரங்கில் தலை நிமிர முடியும். அதற்கான இயற்கையான தகுதியும் திறனும் நமது இளைஞர்களிடம் இருக்கிறது. இளைஞர்கள் ஆற்றல்மிக்கவர்களாக மாறிவிட சில வழிமுறைகள் கையாளவேண்டும், அவையாவன:

  அ) தாய்மொழியை கசடறக் கற்க வேண்டும். சிந்தனை அனைத்தும் தாய்மொழியில் இருப்பதால் தமிழ்மொழி ஞானம் தெளிவாக இருந்தால் மட்டுமே சிந்தனை தெளிவாக இருக்க முடியும்.

  இந்த இதழை மேலும்

  உள்ளதோடு உள்ளம்

  புகழ் பெற்ற வயன் இசைக் கலைஞர் படேர்வஸ்கி. அவர் புகழின் உச்சியில் இருந்த போதிலும் தினமும் 10 முதல் 12 மணி நேரம் வயன் இசைத்து பயிற்சி செய்வார். ஒரு முறை அவரது ஈசல் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரிடம் ரசிக்கும் வயன் கலைஞருமான ஒருவர் உங்கள் வெற்றியின் ரகசியம் என்று கேட்டார்.

  அதற்கு படேர்வஸ்கி எனது வெற்றியின் ரகசியம் தினந்தோறும் பயிற்சி செய்வது தான். நான் ஒரு நாள் பயிற்சி செய்யவில்லை என்றல் அதனால் ஏற்படும் மாற்றங்களை என்னால் அறிய முடியும். நான் இரண்டு நாட்கள் பயிற்சி செய்யவில்லை என்றல் அதை எனது விமர்சகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். நான் மூன்று நாட்களுக்கு மேல் பயிற்சி செய்யவில்லை என்றல் அதை இந்த உலகமே அறிந்து கொள்ளும் என்று கூறினார்.

  ஒரு கலைஞர் தொடர்ந்து வெற்றியாளராக திகழ வேண்டுமானால், அவர் தனது கலையில் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். அப்போது தான் அவரால் தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும். உழவுக்கருவியைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால் இது துருப்பிடித்து விடும். அது போலத்தான் கலைஞர்களும் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் திறமை மங்கிவிடும்.

  ஒன்று சேர்ந்து செயல்படு

  ச. வெங்கடேஷ்
  திருப்பூர்

  நான்கு எருதுகள் ஒன்று சேர்ந்து
  நன்கு மேய்ந்து வாழ்ந்ததும்
  பிரிந்து சென்று மேயும்போது
  சிங்கம் கொன்று தின்றதும்
  நாமறிந்த கதை யன்றோ
  நாளும் நினைவில் கொள்ளுவீர்!

  ஒன்றுசேர்ந்து செயல் படின்
  நன்று ஆகும் காரியம்
  பலரின் மூளைச் சிந்தனை
  பலரின் வேலைத் திறமைகள்
  ஒன்று பட்ட இலக்குடன்
  உழைக்க வெற்றி நிச்சயம்!

  பாடல் நன்கு பாடினும்
  பக்க வாத்தியம் வேண்டுமே
  ஆடல் நன்கு ஆடினும்
  அனைவர் உழைப்பும் தேவையே!

  தஞ்சை பெரிய கோவிலும்
  தாஜ்மஹால் கட்டலும்
  வந்த கதை தெரியுமா?
  வாய்த்த பலரின் கரங்களால்!

  தேனி கூடு கட்டலும்
  எறும்பு இரையை உருட்டலும்
  கூட்டு முயற்சி என்பதை
  கூறும் நல்ல செய்தியே!

  கூடி வேலை செய்திடின்
  புதிய ஆக்க சிந்தனை
  பொறுப்புணர்வும் வந்திடும்
  தரஉயர்வு செலவு குறைவு
  மனவுணர்வும் செழித்திடும்!