Home » Articles » ஊசல்

 
ஊசல்


அனந்தகுமார் இரா
Author:

தூரி கட்டி விளையாடியிருக்கின்றீர்களா? என்று ஒரு அண்ணா கேட்டார்…… உங்கள் ஊரில் ஒருவேளை வேறு எதாவது பெயரில் அதை குறிப்பிடலாம்…. தூரியை ஊஞ்சல் என்று கூட சொல்லலாம். ஊஞ்சல் என்பது இன்டோர் (indoor) ஆக இருக்கக்கூடும் தூரி அவுட்டோர்….

ஊஞ்சல் ஆண்டு முழுவதும் இருக்கும்… ஆனால் தூரி… ஆடிமாதம்…சின்னவதம்பச்சேரி (கோவை மாவட்டம்) மாதிரியான சிறிய ஊர்களில் 1980 களில் நான் பார்த்து இருக்கின்றேன். இராஜா அண்ணா வீட்டில் ஒரு மிகப்பெரிய மரம் இருந்தது அதில் தாம்புக்கயிறை இரட்டை மடிப்பாகப் போட்டு….. கிட்டத்தட்ட இருபது முப்பது அடி நீளத்தில் தொங்கும் வண்ணம் கட்டி…. தரையிலிருந்து ஒன்றரை அடி உயரத்தில் யு வடிவில் வளைந்து கட்டியிருப்பார்கள். அதில் உட்கார்ந்து கொள்ள ஏதுவாக சாக்கு ஒன்றை மடித்து போட்டால் தூரி ரெடி…..

அப்போது நான் ஒரு அரைக்கால் சட்டை சிறுவன்…. ஒரு பெரிய கூட்டமே… தூரி விளையாட ஆடிமாத திருவிழாவில் கூடும். பெரியவர்களும் வருவார்கள். வண்ண வண்ண சேலை, தாவணிகளில் பெண்களும் பெருமளவில் கலந்து கொள்ளும் இந்த திருவிழாக்களில் இன்றைய 2018 களில் கலந்துகொள்வது அருகிவிட்டது. சில நேரங்களில் இன்னும் வேகமாக ஆட்டி விடுங்கள் என்று நண்பர்கள் கேட்க… கீழே நின்றுகொண்டு தொங்குகின்ற சாக்கு நுனியை இழுத்து ….. வேகமாக உயரமாக ஆட்டிவிடுவதுண்டு.

ஊரின் பல்வேறு இடங்களில் அவரவர்… வசதிக்கு உகந்தவாறு பல்வேறு உயரங்களில் பலவிதமான மரங்களில் வேப்பமரம்…. வெள்ளை வேலமரம் என்று பல வடிவங்களான மரங்களில் ‘தூரி’ கட்டப்பட்டு சிறுவர் சிறுமிகள் உனக்குப் பிறகு நான்…. என்று வரிசை வைத்து…. ஆளுக்கு 25 ஆட்டம் என எண்ணிக்கை வைத்தும் விளையாடுவதுண்டு. அதற்காக இந்த நாள் இனிமை குறைந்தது என்று குறிப்பிட்டுவிட தோன்றவில்லை. இன்றைக்கும் பழைய ஊர்களில் ஊஞ்சல் தூரிகட்டி ஆடி மாதம் ஆடுகிறார்களா என்று தெரியவில்லை. சென்று சரிபார்க்கும் ஆசை உள்ளது.  ஆனால் சூழ்நிலை இல்லை. அந்தக் காலத்தில் உடன் விளையாடிவர்களில் சிலபேர் அமெரிக்காவில் இருக்க சிலரோ… அடுத்த உலகில் இருக்கிறார்கள்…. தூரம் பின்னோக்கிப் போனாலும் நேரம் ஒரே திசையில் மட்டும் செல்லும் தூரியைப் போல பயணிக்கின்றது.

நேர்ம குறித்து பேச்சு வந்தவுடன், இந்தக் கட்டுரை, தத்துவத்தை நோக்கி வளைந்து செல்கின்றது.  சமீபத்தில் ‘நிசர்கதத்த மஹராஜ்’ அவர்களைப்பற்றி படிக்க நேர்ந்தது.  இவர் குறித்து பல கட்டுரைகளில் தெரிவித்திருப்பேன்.

நிசர்கதத்த மஹராஜ் அவர்களுடைய பொன்மொழிகள் குறித்து எட்கார்ட் டல்லி அவர்களது வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே… இவர்கள் இருவருமே தனித்தனியாக பரிட்சயம், மானசீகமாகத்தான். எட்கார்ட் டல்லி (Eckhart Tolle) ன் “இப்பொழுதின் ஆற்றல்” பவர் ஆஃப் நவ்… (Power of Now) என்கின்ற புத்தகம் என் மனதில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை உருவாக்கி இருக்கின்றது. சும்மா இருத்தல் – என்பதை அவ்வளவு நுணுக்கமாக விளக்கி இருப்பார். பழங்காலத்தில் தவம் செய்வதற்காக காடு மலைகளில் சுற்றி ஞானம் தேடி இருப்பது போல இன்றைக்கு இருக்கின்ற இடத்திலேயே சும்மா இருக்க முடியும் என்று ;இரமண மகரிஷி தனது வசனாமிர்தம் – என்கின்ற புத்தகம் வாயிலாக தெரிவித்து இருப்பதும் இதுதான். நாகூர் ரூமி அவர்கள்…. தனது ‘ஃஆல்பா தியானம்’ முதலான புத்தகங்களில் ‘மூச்சு ஊஞ்சல்’ பயிற்சி என்று தெரிவித்து மூச்சை எப்படி ஒரு சீரான கதியில் உள்ளே இழுத்து வெளியே விட்டு தூரி ஆடுவது போல உடலுக்கும் மனதுக்கும் பயிற்சி செய்யலாம் என்று கூறி இருப்பார். காலத்தால் முன்னும் பின்னும் மனதளவில் போகலாம,; ஆனால், உண்மை இருத்தல் ஒரு இடத்தில்தான் உள்ளது அது நமது உள்ளம்தான் என்கின்ற உண்மை உணர்வுக்கு நம்மை அடிக்கடி பரிட்சயப்படுத்திக்கொள்ள தியானம் உதவிபுரிகின்றது. இருபது நிமிடங்கள் மனதில் எதையும் நினைக்காமல் அல்லது எதை நினைக்கின்றது என்று வெளியேயிருந்து எண்ணங்களை கவனித்தால் ஒரு அற்புத அனுபவம் கிட்டுகிறது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2019

அன்பான அனுசரிப்பு…! அகிலமெங்கும் உன் சிறப்பு…!
நீங்கள் ஒழுங்குமுறையை கையாள்பவரா?
உங்கள் உயர்வுக்கு பாதை அமைப்பது எது?
முயன்றேன் வென்றேன்…
இங்கு… இவர்… இப்படி…
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 6
இளம் வயதில் ஏற்படும் உடல் பருமன்
யார் வேண்டுமென்றாலும் ஜெயிக்கலாம்
வெற்றி உங்கள் கையில் – 63
மாமரத்தில் கொய்யாப்பழம்
எல்லாம் அசாதாரணமே
ஊசல்
பயணங்களில் எடுக்க வேண்டிய உணவுகள்
நில் ! கவனி !! புறப்படு !!! 1
உலகில் தடம் பதித்த சிறப்புமிக்க மாமனிதர்கள்
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்