Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி … ?

புத்தகம் படிப்பது மூலம் ஒருவரால் உயர முடியுமா? சாதிக்க முடியுமா?

அருள்மொழி நாச்சியார்

மதுரை.

நிறைய வாசிக்க வேண்டுமென்று மாணவர்களிடம் சொல்லி வருகிறேன்,  சமீபகாலமாக அவர்களை வற்புறுத்தியும் வருகிறேன். இதைத் தெரிந்து கொண்டுதான் இந்தக் கேள்வியை நீங்களும் எழுப்பினீர்களோ என்னவோ?

வெளிநாட்டைச் சேர்ந்த தமிழ் அறிஞர் ஒருவர் திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றை எழுதியிருந்தார். அவரது நூல் 1881ம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அரிய நூலில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். இங்கு வாழும் மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள், எனவே இவர்கள் நூல்கள் வாங்குவது இல்லை. பலருக்கு எழுத, படிக்கத் தெரியாது. எனவே, படிப்பதும் இல்லை. பொழுதுபோக்க ஆங்காங்கே கூடியிருந்து பேசுவார்கள். ஆண்கள் சூதாட்டம் நடத்துவார்கள், அங்கும் வெட்டிப் பேச்சுதான். பேச்சு முற்றி, அதுவே கலவரமாக மாறும். அண்ணன் தம்பிகளுக்குள்ளே சண்டை சச்சரவுகள் வரும். பங்காளி சண்டையும், விரோதமும், வழக்கும் அனைத்து குடும்பங்களிலும் இருக்கும். இந்த சண்டைகளால் நீதிமன்றங்களில் வழக்குகளும் நடக்கும். கிடைக்கும் சொற்ப வருமானத்தின் பெரும் பகுதியும் கோர்ட், போலீஸ் என்று செலவிடுகிறார்கள். இதனால் குடிமக்கள் தொடர்ந்து பரம ஏழைகளாகவே இருக்கிறார்கள்.

அவர் அன்று கண்ட காட்சி இன்றும் கிராமங்களில் காண முடிகிறது. ஏழ்மை நிலையில் துவங்கும் துயரம் ஏழ்மை நிலையிலேயே முடிகிறது. விவசாயப் பணி இல்லாத நேரத்தில் வெட்டி பேச்சு, சூழ்ச்சிகள், சதி திட்டங்கள், வீண் சண்டை என்று பலர் காலத்தை போக்குகிறார்கள். நேரத்தை விரயம் செய்யவும், பணத்தை விரயம் செய்யவும் துணிச்சல் வருகிறது.  நூல் வாசிப்பது இல்லை.

நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் புத்தகம் வாசிக்கவில்லை என்றால் அவர்களை மன்னித்துவிடலாம். அவர்களில் பலருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் நிலைமை இன்று மாறிவிட்டது. எழுதப்படிக்கத்தெரியும், நூல்கள் வாங்க பணமும் வந்துவிட்டது. இருந்தும் படிக்காமல் இருப்பதால் பல ஆபத்துக்கள் ஏற்படுகின்றன.

அன்று நமது முன்னோர்கள் நூல் படிக்காமல் போனதால் உலக வரைபடம் அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை.  ஐரோப்பியர்கள் பல ஆயிரம் மைல்கள் கடலில் பயணித்து அமெரிக்கா சென்ற போது நமது முன்னோர்கள் பூமியில் மனிதர்கள் என்னதான் செய்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்கமாட்டார்கள். 1606-ம் ஆண்டு வில்லியம் ஜேன்சூன் என்ற போர்ச்சுக்கீசியர் ஆஸ்திரேலியா கண்டத்தில் கால் வைத்த போதும், 1788 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் அங்கு குடியேறிய போதும், 1768-69ம் ஆண்டு தாமஸ்குக் பசுபிக் கடலில் நிலப்பரப்பு ஏதும் உண்டா என்று தேடிக்கொண்டிருந்தபோதும் ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக இருந்தார்கள் நமது முன்னோர்கள். விளைவு? ஐரோப்பிய மக்கள் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, டாஸ்மானியா, ஐஸ்லாந்து போன்ற பரந்து விரிந்த அழகான நிலபரப்புகளை தமதாக்கிக் கொண்டனர். நூல் வாசிக்கத் தவறிய மக்கள் உலக நிகழ்வுகளை அறியாமலும், புரியாமலும் கிணற்றுத் தவளைகளாக உள்ளுர் வரப்புகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களால் பரந்து விரிந்த உலகை பார்க்க முடியவில்லை. ஐரோப்பியர்கள் நட்சத்திரங்களுக்கான தூரத்தை கணக்கெடுந்தார்கள், இவர்கள் நட்சத்திர பலன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சாதி, மத சண்டை போட்டுக்கொண்டு இருந்த வேளையில் ஐரோப்பியாவில் இருந்து வந்த சில நூறு நபர்கள் எளிதில் நம்மை அடிமையாக்கிவிட்டனர். அதுவே நமது சரித்திரமாகிவிட்டது.

இனியாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டும். இனி ஒரு வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும். இளைஞர்களால்தான் அது முடியும். இணையதளம் வந்துவிட்ட இன்றைய நிலையில் உலக இளைஞர்களுடன் போட்டியிட்டால்தான் நாமும் சர்வதேச அரங்கில் தலை நிமிர முடியும். அதற்கான இயற்கையான தகுதியும் திறனும் நமது இளைஞர்களிடம் இருக்கிறது. இளைஞர்கள் ஆற்றல்மிக்கவர்களாக மாறிவிட சில வழிமுறைகள் கையாளவேண்டும், அவையாவன:

அ) தாய்மொழியை கசடறக் கற்க வேண்டும். சிந்தனை அனைத்தும் தாய்மொழியில் இருப்பதால் தமிழ்மொழி ஞானம் தெளிவாக இருந்தால் மட்டுமே சிந்தனை தெளிவாக இருக்க முடியும்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2019

அன்பான அனுசரிப்பு…! அகிலமெங்கும் உன் சிறப்பு…!
நீங்கள் ஒழுங்குமுறையை கையாள்பவரா?
உங்கள் உயர்வுக்கு பாதை அமைப்பது எது?
முயன்றேன் வென்றேன்…
இங்கு… இவர்… இப்படி…
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 6
இளம் வயதில் ஏற்படும் உடல் பருமன்
யார் வேண்டுமென்றாலும் ஜெயிக்கலாம்
வெற்றி உங்கள் கையில் – 63
மாமரத்தில் கொய்யாப்பழம்
எல்லாம் அசாதாரணமே
ஊசல்
பயணங்களில் எடுக்க வேண்டிய உணவுகள்
நில் ! கவனி !! புறப்படு !!! 1
உலகில் தடம் பதித்த சிறப்புமிக்க மாமனிதர்கள்
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்