Home » Articles » முயற்சியை முதன்மைப்படுத்து

 
முயற்சியை முதன்மைப்படுத்து


மலர்விழி ஜெ
Author:

வாழ்க்கை என்பது ஒரு பயணம். கடவுளின் படைப்புகளில் எல்லோரும் சமம்.  நாம் வாழ்வதற்குரிய அனைத்து வசதிகளும் அதனை அடையும் வழிமுறைகளும் இங்கு கொட்டிக்கிடக்கின்றன. ஒரு திரைப்பாடலில் கூறியது போல  பூப்பறிக்க கோடரி எதற்கு.

ஒரு அறையில் தேநீர் தயாரிப்பதற்கு தேவையான அனைத்தையும் வைத்துவிட்டு மூன்று தாய்மார்களை உள்ளே அனுப்பி அவர்களை தேநீர் தயாரிக்கச் சொன்னால், மூவரின் தேநீரும் மூன்று விதமாக இருக்கும். அதுபோல எல்லோருடைய வாழ்க்கையிலும் எல்லாமே இருந்தாலும் அவர்கள் எந்தளவில் எந்த விசயங்களில் முயற்சி செய்கிறார்களோ அதற்கேற்ப பலன்களைப் பெறுகின்றனர்.

வாழ்க்கையில் செய்ய வேண்டிய எல்லா விசயங்களையும் வரிசைப்படுத்தினால், வரிசையில் முதலில் நிறுத்த வேண்டியது தன்னம்பிக்கை என்ற சொல்லோடு முயற்சியையும் தான். அவ்வாறு முயற்சியை முன்நிறுத்தினால் பணமும், புகழும், அமைதியும் பின்னே வரும். இதைப் புரியாமல் மனித இனம் எதன் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறது.

சுய ஆய்வு செய்து கொள்ளுதல்

இன்று மாணவனாக இருக்கும் நீ நாளை முன்னுக்கு வர வேண்டும் என்றால் சுய ஆய்வு செய்.

ஒரு மாணவி உலகளவிலங டென்னிஸ் வீராங்கனைகளான செரினா வில்லியம்ஸ், சானியா மிர்சா போன்றவர்களைப் பார்க்கிறாள். நாமும் அதுபோல விளையாட்டுத்துறையில் புகழ்பெற வேண்டும் என்று பள்ளியில் ஓட்டப்பந்தியத்தில் பங்கு கொள்ள விரும்பி அதற்கான பயிற்சியை தினமும் காலையில், மாலையிலும் மேற்கொள்கிறாள். தூரத்தைக் கடக்கும் நேரத்தைப் பார்க்கிறாள்.மீண்டும்  அதிவேக மெடுத்து ஓட்டப் போட்டிற்காக பயிற்சி செய்கிறாள். வேகம் எடுக்க, வேகம் எடுக்க அவள் விலா எலும்புக்கு இடையில் வலிவருகிறது. முதல் முயற்சி  தோல்வியடைகிறது.

அடுத்து அவள் பள்ளியில் நடக்கும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள தயார்படுத்திக் கொண்டு அனைவரின் முன்னால் பேசுகிறாள். அனால் அப்போட்டியில் அவளுக்குத் தோல்வி.  மற்றவர்கள் ஏற்ற இறக்கத்துடன் பலவித புதிய எடுத்துக்காட்டுக்களைச் சொல்லி கைத்தட்டல்களுடன் பரிசைத் தட்டிச் சென்றார். தோல்வியிலிருந்து ஏன் தோன்றோம் என்பதையும், எதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்கிறாள்.

அடுத்த முறை பள்ளியில் நடக்கும் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்கிறாள். அவனை விட மற்றவர்கள் கையொப்பமும், விளக்கமும் நன்றாக இருந்ததால் இவள் இவ்விடத்தை பிடிக்கமுடியவில்லை, மீண்டும் தோல்வி.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2019

முடியும் என்று புறப்படு சரித்திரம் போற்றப் பெயரெடு
நினைப்பதே நடக்கும் – 3
வெற்றி உங்கள் கையில்- 62
வெற்றியை பாதையில் பயணம் செய்…!
மாறாத காலம்
உண்மை உன்னை உயர்த்தும்
வாஸ்து சாஸ்திரம்
பயணங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
வலிகள் நம்முடைய நண்பன்
ஆஸ்த்துமா
எல்லோரும் மதிக்கும் தலைவராக மாறுவது எப்படி?
முயற்சியை முதன்மைப்படுத்து
“வாழ நினைத்தால் வாழலாம்” – 25
மாமரத்தில் கொய்யாப் பழம்
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 5
‘அமைதி’ என்னும் மகாசக்தி
மந்திரப் புன்னகை
வீரத்தின் வெற்றி
தன்னம்பிக்கை மேடை நேயர் கேள்வி?
உள்ளத்தோடு உள்ளம்