Home » Articles » “வாழ நினைத்தால் வாழலாம்” – 25

 
“வாழ நினைத்தால் வாழலாம்” – 25


மித்ரன் ஸ்ரீராம்
Author:

“சந்தர்ப்பம்”

வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே!

இத்தொடரில் என் 25 வது வாழ்வியல் கட்டுரை!  வெள்ளி விழா!

இத்தொடர் எழுதும் “சந்தர்ப்பத்தை” எனக்களித்த ஆசிரியருக்கும், இதுவரை இணைந்து TVணித்த வாசக நண்பர்களுக்கும் முதலில் என் நன்றிகள் பல.

பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையே “சந்தர்ப்பங்களின்” தொகுப்புதான்.

நல்ல பெற்றோர், நல்ல கல்வி – அங்கே நல்ல ஆசிரியர்கள், நல்ல நட்பு, நல்ல வேலை, நல்ல மணவாழ்க்கை, நல்ல உடல்நலம், நல்ல மனநலம், நிம்மதியான மரணம் – இவை அனைத்தையும் சந்திக்கும் “சந்தர்ப்பம்” அனைவருக்கும் வாய்ப்பதில்லை.  ஒன்றிருந்தால் – மற்றொன்று இருப்பதில்லை.

கவியரசர் சொல்வதுபோல் “பருவம் வந்த அனைவருமே காதல் கொள்ளவதில்லை, காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை, மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை, சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை”

50 வருடங்களுக்கும் மேலாக நான் கொண்ட அனுபவமும், 30 வருடங்களுக்கும் மேலாக இந்த MEDIA துறையில் என் பங்களிப்பும், 9 வருடங்களுக்கும் மேலாக மனவளக்கலை ஆசிரியராக தொண்டாற்ற கிடைத்த வாய்ப்பு – என்று வாழ்வில் எனக்கு கிடைத்த “சந்தர்ப்பங்கள்”எப்படி என்னை வளர்த்தது என்ற ஒரு “நன்றி அறிவிப்பு பட்டியலாக” வெளியிட இந்தக்கட்டுரையை “சந்தர்ப்பமாக” எடுத்துக்கொள்ள விழைகிறேன்.

நல்ல பெற்றோர் அமைந்ததன் காரணம் – சென்னை வில்லிவாக்கம் பகுதியிலுள்ள Singaram Pillai கல்வி குழுமத்தில் 1 முதல் 12 வகுப்பு வரை கல்வி.  NCC ன் Best Cadet Award வாங்கிய “சந்தர்ப்பம்” கிடைத்தது இங்கு தான்.  Botany வகுப்பெடுத்த ஆசிரியர் திருமதி. ஜெயலட்சுமி, தமிழ் வகுப்பெடுத்த திரு. விஜயராகவன் – எனக்குள் இருந்த “விடாமுயற்சி” எண்ணத்தை வெளியே கொண்டு வந்தவர்கள்.

Vivekananda கல்லூரி – என் விலாசத்தின் முதல் வரியை எழுதியது.  1986 ல் அப்போதைய முதல்வர் திரு. கணேசன், என் மதிப்பெண்ணை பார்த்து ஆ.நஸ்ரீ ஆர்ற்ஹய்ஹ் தான் தர முடியும் என்று சொல்லி சேர்த்தார்கள்.  அங்கே தான் பொதிகை தொலைகாட்சியில் “சிந்திக்க ஒரு நொடி” நிகழ்ச்சி நடத்தும் பேராசிரியர். வ.வே.சு. அவர்களின் மாணவனாக அமையும் “சந்தர்ப்பம்” கிடைக்க – அவர் என்னுள் இருந்த இன்னொருவனை உணர வைத்தார்.  All India Radio வில் “இளையபாரதம்” நிகழ்ச்சி அதிகாரி திருமதி.  C.S. குமுதம்  அவர்களிடம் என் எழுதும் ஆர்வத்தை சொல்லி வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.  என் கல்லூரி காலங்கள் முழுவதும் பல நிகழ்ச்சிக்களை ஒரு அறிவிப்பாளராக, தொகுப்பாளராக நான் சென்னை வானொலியில் வழங்க கிடைத்த “சந்தர்ப்பம்” – நான் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று விழைந்த என் ஆசிரியரின் நல்ல எண்ணமே.

ஒரு ஆசிரியர் ஒரு மாணவனின் வளர்ச்சியில் என்னென்ன பங்கு வகிக்க முடியும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.  உரத்த சிந்தனை அமைப்பின் திரு. உதயம் ராம் தொடங்கி – கவியரசு வைரமுத்து வரை அவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்த பிரபலங்கள் அதிகம்.  அது என் எழுத்துக்கும், அறிவுக்கும் இடப்பட்ட தீனி.  நம் “சென்னை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில்” வ.வே.சு. ஒரு Popular பேச்சாளர்.

கோலாகலமான வாழ்க்கை கோவையில் தான் தொடங்கியது.  90 களில் கோவை வானொலியில் – (இப்போதைய நிகழ்ச்சி தலைமை அதிகாரியாக இருக்கும்) திருமதி. சித்ரலேகா அவர்களின் ஆலோசனை, வழிகாட்டுதல்கள் எனக்கு கிடைத்த மிகப்பெரிய “சந்தர்ப்பம்”.  வானொலி நிகழ்சிகளின் வாயிலாக திரைப்பட நடிகர் திரு. சரத்குமார் தொடங்கி, எழுத்தாளர் திரு. ராஜேஷ் குமார், திருமதி.  விமலா ரமணி – என்று பல சாதனை மனிதர்களின் அறிமுகமும், நட்பும் அமைய அடித்தளமிட்டது எனக்கு அமைந்த மகிழ்வான “சந்தர்ப்பம்”

BELL CANADA INC என்ற  நிறுவனத்துடன் இணைந்து GET IT YELLOW PAGES Telephone Directory Publish  செய்யும் பணியில்.  அங்கே அவர்கள் எனக்களித்த Training வகுப்புகள் உலகத்தரம் வாய்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.  இன்றும் வெற்றிகரமான என் பல பயிற்சி வகுப்புகளுக்கு அதுவே ஒரு வழி காட்டி என்ற இரகசியம் – இப்போது உங்களுக்கும் தெரிந்துவிட்டது.  அந்த நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது சிறப்பான “சந்தர்ப்பம்”

2000 களில் திருப்பூரின் பிரபலமான ஒரு விளம்பர நிறுவனத்தில், தொலைகாட்சி விளம்பரங்களை திட்டமிடுவது என் பணி.  குமரன் சில்க்ஸ் (இப்போது சென்னை சில்க்ஸ்) திரு. மாணிக்கம், Viking நிறுவனத்தின் திரு. அருணாசலம், Jansons வேஷ்டிகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்    திரு. திருக்குமார் – போன்ற ஜாம்பவான்களின் விளம்பர திட்டமிடல் செய்யும் “சந்தர்ப்பம்”  பின்னாளில் என்னை தொலைகாட்சி நிறுவனத்திலேயே பணி செய்யும் அளவுக்கு உயர்த்தியது.

2002 ம் ஆண்டு, Raj TV ல் மேலாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து மீண்டும் சென்னைக்கு மாற்றல்.  உரிமையாளர்களான 4 சகோதரர்களில் என்னை வழி நடத்தியது திரு. ரகு அவர்கள்.  தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நேரம் பாராத உழைப்பு, முறையாக வழி நடத்தல் – போன்ற பல நல்ல விஷயங்களின் மொத்த கலவையாக.  ஒரு முறை Sakthi Masala நிறுவனர்களின் குடும்ப  நிகழ்வில் – நான் அவசரத்தில் செய்த ஒரு தவறைக்கண்டு கோபம் கொண்டு உடனே சுட்டிக்காட்டி திருத்தச் சொன்னார்.  அதில் என் சகோதரனின் பாசத்தை பார்க்க முடிந்தது.   “இமயம்” தொலைக்காட்சியில் தலைமைப் பொருப்பில் என் பணி சிறக்க முக்கியமான காரணம் திரு. ரகு அவர்களிடம் நான் கற்ற நடைமுறை கல்வியே.  அவர் என் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை.  சந்தித்த சரியான “சந்தர்ப்பம்” இறைவனின் கட்டளை.

SUN TV ன் தொகுப்பாளர் திரு. ஆடம்ஸ், தந்தி TV – “ஆயுத எழுத்து” Hari – இவர்களின் ஆரம்பகால MEDIA வாழ்க்கை இமயம் TV ல் தான் துவங்கியது.  அவர்களின் ஆர்வம், ஈடுபாடு, என்னுடைய ஆலோசனைகளுடன் இணைந்து TVனித்ததன் விளைவு – இன்று அவர்கள் இருவரும் MEDIA துறையில் அடைந்திருக்கும் உச்சம்.  “சந்தர்ப்பம்” அவர்களுக்கும் வாய்த்தது மகிழ்ச்சியே.

Tele Shopping உலகில் கொடிகட்டி பறக்கும் “Telebuy” நிறுவனத்தின் CEO திரு. வசந்த் அவர்களின் நட்பு கிடைத்த “சந்தர்ப்பம்” – என் உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெகுமதியே.  Air Time Buying, மற்றும் MEDIA Planning-ல் என் பங்களிப்பு, அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது Tele Shopping துறையில் உள்ள பலரும் ஒப்புக்கொள்ளும் உண்மை.

வியாபாரம் தாண்டி – தனி மனித மரியாதை. உதவி, இவற்றில் இன்றும் சிறந்து விளங்கும் Sowbagya Wet Grinder உரிமையாளர் திரு. வரதராஜன், அவர் மகன் திரு. பாலு ஆகியோரின் நட்பு கிடைக்கப்பெற்றது என் சந்தர்ப்பங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய “சந்தர்ப்பம்” .  என் பொதிகை தொலைகாட்சி தொடரான “எண்ணம் போல் வாழ்வு” நிகழ்ச்சிக்கு எந்தவித  கேள்வியும் இல்லாமல் விளம்பரம் தந்து உதவிய அவர்களின் பண்பு – என்றும் என் நன்றிக்குரியது.

2017 ல் மீண்டும் கோவைக்கு வந்தபின் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்த்துறை தலைவர் Dr. ஞானசேகரன் அவர்களை சந்தித்தது மிகவும் நிறைவான “சந்தர்ப்பம்”.  சுவாமி விவேகானந்தர் உயராய்வு மற்றும் கல்வி மையத்தின் தலைவராகவும் அவர் பொறுப்பில் இருந்த நிலையில் – கோவை மட்டுமல்லாது பெருந்துறை, வால்பாறை – என்று பல்கலை மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் எடுக்க எனக்கு கிடைத்த “சந்தர்ப்பங்கள்” – அவரை என் வாழ்வின் நிறைவு மையத்தில் நிலை நிறுத்தும்.

கோவை ரத்தினம் கல்வி குழுமத்தில் ஒரு பயிற்சி வகுப்பு எடுக்க போன நேரத்தில் அவர்களது Rathinavani 90.8 Community FM Radio Station Head திரு. முகேஷ் அவர்கள் தொடர்ந்து என் பேச்சுக்களை தொடர் நிகழ்சிகளாகவும், சிறப்பு தினங்களில் சிறப்பு நிகழ்சிகளாகவும் ஒலிபரப்பு செய்ததும், சமுதாய வானொலி என்ற நிலையில் இந்த சமுதாயத்துக்கு நல்ல விஷயங்களை கொண்டு சேர்க்கும் பணியில் என்னுடன் இணைந்து செயல்பட விழைந்தது சமூகத்துக்கு கிடைத்த சிறப்பான “சந்தர்ப்பம்” தான்.

அவை அனைத்துக்கும் சிகரம் வைத்தது போல “தன்னம்பிக்கை” இதழின் ஆசிரியர் திரு. செந்தில் அவர்களின் அறிமுகம்.  ஒவ்வொரு மனிதர்களின் வாழ்விலும் பெரிய மாற்றத்தையும் ஏற்றத்தையும் விதைக்க விரும்பும் என் எண்ணத்துக்கும், எழுத்துக்கும் தன் இதழில் மிகப்பெரிய மேடையை அமைத்து கொடுத்ததை – என் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளும் “சந்தர்ப்பமாகவே” பார்க்கின்றேன்.

மொத்தத்தில், “சந்தர்ப்பம் தரும் சாதனை” என்ற தலைப்புக்கு கிடைத்த Content போல – என் வாழ்வில் நான் கடந்து வந்த பாதைகள் “சந்தர்பங்களின் சங்கமமாகவே” என்னால் உணர முடிகின்றது.

நண்பர்களே!  என் அனுபவங்கள் கற்றுத்தந்த விஷயங்களில் சில உங்கள் வெற்றி TVணத்துக்கு உதவியாய்.

“இந்த திசையில் தான் என் TVணம், இதுவே என் வாழ்வின் லட்சியம், இதுவே என் தேவை” – என்ற தீர்மானங்களை முதலில் எடுத்து விடுங்கள்.

“திசைகளை தீர்மானித்தபின் TVணம் செய்வது சிரமமாக இருக்காது”.  என்றுமே எனக்கு அது இருந்ததில்லை.

“பல்லாக்கை தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு” என்ற கவியரசரின் வரிகள் எனக்குள் ஒரு வெறியாய்.  அந்த வெறிகள், அந்த வரிகள் எனக்கு இன்றுவரை வழிகாட்டியாய் அமைய பெற்றது என் புத்திக்கு கிடைத்த “சந்தர்ப்பம்”

அவமானங்களும் துரோகங்களும் பலரை தடம் மாற்றலாம்.

சூழ்சிகளும் சூழ்நிலைகளும் சிலரை ஏமாற்றலாம்.

கண்ணுக்கு குளிர்ச்சியான மலர்கள் மலர்வதும், வளர்வதும் – நல்ல மண்ணும், உரமும், சூரிய வெளிச்சமும், தண்ணீரும் சரியான விகிதத்தில் கிடைக்கப்பெறும் “சந்தர்பத்தால்” தான்.  அதே நேரம், இங்கே மண்ணோடு போராடி வெற்றி பெற்ற விதைகளையும் நீங்கள் பார்க்க வேண்டும்.  தானே ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி, தலை நிமிர்ந்து நிற்கும் அதன் கம்பீரத்துக்கும் தலை வணங்கத்தான் வேண்டும்.

நீங்கள் விதையா அல்லது மரமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

உங்களை அவமத்தவர்களை அலட்சியம் செய்யுங்கள் – உங்கள் வெற்றி அவர்களை அவமானப்படுத்தும்.

துரோகிகளை தூர விலக்குங்கள் – உங்கள் தோள்களில் விழும் மாலை அவர்களை தலை குனிய வைக்கும்.

சூழ்சிகளை சுட்டெரியுங்கள் – உங்கள் கோட்டையின் காவலர்களாய் அவர்கள் பணி செய்ய வருவார்கள்.

அதற்கான இரகசியம் இதுவே!

நம்பிக்கை, விடாமுயற்சி, கல்வி, ஞானம், உழைப்பு – என்ற அனைத்தும் உங்களுக்கு பக்க பலமாய்.  கவலைப்படாமல் காலை முன் வையுங்கள்.

“காலை உனதானால் – மாலை உனதாகும்”

“காலை (நேரம்) உனதானால் – மாலை (மாலை உன் தோளில்) உனதாகும்”

“சந்தர்ப்பம்” ஒரு சவால் என்பது எவ்வளவு உண்மையோ “சவாலும்” ஒரு சந்தர்ப்பமே” – என்று முடிவு கண்டு, சந்தர்ப்பத்தை சரியாக பயன் படுத்துங்கள்.

தெளிவான திட்டமிடலும், முறையான ஆலோசனைகளும், சரியான அணுகுமுறைகளும் உங்கள் எண்ணம், சொல், செயலாக மாற வேண்டும்.  மாற்றிக்கொள்ளுங்கள்.

“மாற்றம் தான் ஏற்றம் தரும்”

அதுமட்டுமல்ல,

“வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”

“வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment