Home » Articles » ‘அமைதி’ என்னும் மகாசக்தி

 
‘அமைதி’ என்னும் மகாசக்தி


கிரிஜா இராசாராம்
Author:

கல்லாதவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின். (குறல் – 403) என்ற குறல்

‘கற்றவரின் முன்னிலையில்  ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.’ என்ற கருத்தை வெளிப்படுத்தி ‘அமைதி’ அங்கு எப்படி கல்லாதவர்களையும் நல்லவர்களாக மாற்றும் சக்தி உடையது என்று வெளிப்படுத்துகின்றது. ‘அமைதி’ என்பது வெளியில் ஏற்படும் ஓசையில் கவனம் செலுத்தாமையும் உள் மனதில் எந்த வித சலனம் இல்லாமல் இருக்கும் தியான நிலை என்ற இரண்டையும் குறிக்கும். மேலே குறிப்பிட்ட திருக்குறல் கற்றவர்கள் முன் கல்லாதவர் கடைப்பிடித்த அமைதி முதலாவது ரகம், ஞானிகள் காட்டிற்குள் சென்று தவம் செய்யும் போது கடைப்பிடிக்கும் அமைதி இரண்டாவது ரகம்.

ஒரு சிறு கதை நிலத்தில் ஒரு பெரியவர் வேலை செய்து கொண்டிருந்தார், அப்பொழுது அவரது கைக்கடிகாரம் தவறி விழுந்துவிட்டது. அந்த பெரியவர் அதை கவனிக்கவில்லை தோட்டத்தில் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார். அவருடைய பேரக்குழந்தைகள் வீட்டிற்கு வந்திருந்தனர் தாத்தவின் கையில் கடிகாரம் இல்லை என்பதை அவர் கவனத்திற்கு கொண்டுசென்றனர். பின்னர் தோட்டத்தில் அனைவரும் சென்று தேடிப்பார்த்தனர் அவர்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை அப்பொழுது, ஒரு சிறுவன் மட்டும் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு தோட்டத்தில் எந்தவித சப்தம் இல்லாமல் பார்த்துக்கொண்டு, கவனமாக 1 டிக், டிக், ஒலி எங்கிருந்து வருகின்றது என்பதை கண்டுப்பிடடித்தன், அவன் விரும்பியது போல் அமைதியான சூழ்நிலை அந்த கடிகார ஒலி வரும் இடத்தை நோக்கிசெல்ல உதவியது. அவனும் தெலைந்த கடிகாரத்தை எடுத்துச் சென்று தன் தாத்தாவைச் சந்தோசப்படுத்தினான்.

‘அமைதி’ அளிக்கும் நன்மைகள் பலவாகும், ஆசிரியர் ஒரு கேள்வியை கேட்டவுடன், மாணவனின் சிறிய நேர அமைதி அவனை சரியான விடையளிக்க உதவும். பணிபுரியும் பணியாட்களுக்கு இந்த ‘அமைதி’ அவர்களின் பணி செய்யும் திறனை மேலும் வலுப்படுத்தும். தம்முடைய வாடிக்கையாளர்கள் சொல்வதை அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கும் வியாபாரிகள் தங்கள் தொழிலில் அதிகமான முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஒரு பேச்சாளராய் இருக்கும்போது மற்றும் ஒரு பேச்சாளர் பேசுவதை அமைதியாகக் கேட்க வேண்டும்.  அதை விடுத்து நம் மேடையில் பேசப்போவதைப் பற்றியே நினைத்துக்கொண்டடிருந்தால் அந்தப் பேச்சாளரின் சில கருத்துக்களையே நீங்கள் திரும்பச் சொல்லிட பார்வையாளர்கள் முன் அவமானம் அடையவும் வாய்ப்பு உண்டு அமைதி கடைப்பிடிப்பதால்  எதுவும் நடைப்பெறும் முன் அதற்கான அறிகுறி ’Intution’ – உணரும் சக்தி கிடைக்கும். அமைதி ஒருவர் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி தன் நிலையே தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ‘அமைதி’ என்பதை சிலர் தவறாகப் புரிந்துக்கொண்டு யாரும் இல்லாமல் நாம் தனியாக இருந்தால் அமைதி என்று நினைக்கின்றனர்.  இந்த ‘அமைதி’ நம் தொழிலில் சிறப்படையவும், அடுத்தவர்ளை அவர்களின் உண்மை நிலையை அறிந்து கொள்ளும் தன்மையும் பெற்று மற்றவர்களுக்கு உதவும் தன்மையும் அதனால் ஏற்படும் உண்மையான மகிழ்ச்சியையும் உணரவைக்கும் தன்மையுடையது. இராணுவ வீரர்களின் மரண இறுதி அஞ்சலியின் போதும் பெரும் தலைவர்களின் மறைவின் போதும் மக்கள் அளிக்கும் மௌன அஞ்சலியின் நோக்கம் ‘அமைதி’ யின் மகிமையை நமக்கு உணர்த்துகின்றது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2019

முடியும் என்று புறப்படு சரித்திரம் போற்றப் பெயரெடு
நினைப்பதே நடக்கும் – 3
வெற்றி உங்கள் கையில்- 62
வெற்றியை பாதையில் பயணம் செய்…!
மாறாத காலம்
உண்மை உன்னை உயர்த்தும்
வாஸ்து சாஸ்திரம்
பயணங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
வலிகள் நம்முடைய நண்பன்
ஆஸ்த்துமா
எல்லோரும் மதிக்கும் தலைவராக மாறுவது எப்படி?
முயற்சியை முதன்மைப்படுத்து
“வாழ நினைத்தால் வாழலாம்” – 25
மாமரத்தில் கொய்யாப் பழம்
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 5
‘அமைதி’ என்னும் மகாசக்தி
மந்திரப் புன்னகை
வீரத்தின் வெற்றி
தன்னம்பிக்கை மேடை நேயர் கேள்வி?
உள்ளத்தோடு உள்ளம்