Home » Articles » மந்திரப் புன்னகை

 
மந்திரப் புன்னகை


அனந்தகுமார் இரா
Author:

கொரிய எல்லையில் இருந்த பகைநாட்டு காவலர்கள் போல முறைத்துக் கொள்வதும் உண்டு…

அங்கே கூட இப்போது… நிலைமை… மாறிவருகிறது.   கிம் ஜாங் உன் (Kim Jong – un) (வடகொரியா) மூன் ஜே இன் (Moon Jae – in) (தென் கொரியா) இரண்டு பேரும்… நாட்டின் அதிபர்கள்.  அதிலும்… வடகொரியாக்காரர்… கொஞ்சம் எகனை மொகனையாக பேசி பிரச்சனையை கிளறக்கூடியவர்… இவர்கள் இருவருமே கைகோர்த்துக் கொண்டு தத்தமது எல்லையை கடந்து நடந்துள்ளனர்.  பிறகு நமக்கென்ன?  என்று தொன்றியது.

கொரிய எல்லையில் நடக்கின்ற பதட்டம் மிகுந்த

சூழ்நிலையை படம்பிடித்துக் காட்டிய அற்புதமான

திரைப்படம்…

Joint Security Area J.S.A, இணைந்த பாதுகாப்புப் பகுதி (2000) இயக்குனர்: பார்க் ச்சான் – வூக்.

என்பதாகும்… அதில்… எதிரெதிர் நாட்டு வீரர்களுக்கு இடையே நட்பு பூத்துவிடும்…

ஆஹா… நம்ப இயலாத உண்மைதான்.

‘அன்பே சிவம்’

 என்று இதைவிட எப்படி காட்ட முடியும்.  அவர்கள்… அவ்வப்போது சந்தித்து… மகிழ்வாக பேசிக்கொள்வார்கள்… அதனைத் தொடர்ந்து என்னவானது என்று படம் போகும்…

ஆனால் இங்கே நாம் அப்படி… வேற்றார்கள் இல்லையே… குறைந்தபட்சம்… ஒரு மௌனப்புன்னகை சிந்தலாம்.

இங்கே வெட்கப் புன்னகையில் நாம் நிற்கிறோம்.  கந்தவேலுடன் இருந்த அலுவலர்கள் பாட்டி விளையாட்டாய் சொன்னதை, சீரியஸôக எடுத்துக் கொண்டனர்,

‘அது சரி… பெரியம்மா…

வயசு… அதிகமாக… அதிகமாக… அதற்குத் தகுந்த பென்ஷன் மாறும்… தெரியுமா?

அதனால வயசை சொல்லியாகணும்!

என்று கூற…

பாட்டி சட்டென… குழப்பமடைந்தார்…

அலுவலக ரீதியாக தாம், ஏதோ தவறு செய்துவிட்டதாக நினைத்துக்கொள்ளப் போகிறார்கள் என்று அவர் பயப்படுவது புரிந்தது.

இப்போது அவருக்கு தேவை ஆறுதல் மற்றும் சமாதானம்.   எப்படியாவது பாட்டியின் முகத்தில் மீண்டும் அந்த குறும்புத்தனத்தையும் மகிழ்ச்சியையும் திரும்ப வரவழைக்க வேண்டும்,  அதற்காக கந்தன்… பாட்டியின் பக்கம் பரிந்து பேசினார்.  “அது சரி!  ஆஃபீஸில கேட்டா வயசு சொல்வாங்க!  அதுக்காக லிஃப்டுல எல்லாமா… கேட்கறது!’  என்று ஒருவாறாக சமாளித்தார் கந்தவேல்.

அடுத்து… ஒரு நிசப்தம்…  லிஃப்டுக்குள் நிலவியது, உடன் வந்தவர்கள் இன்னும் திருப்தியடையவில்லை என்பது புரிந்தது…

அட விடுங்கப்பா…

அவங்களுக்கு ஒரு பதினெட்டு வயது இருக்கும்!  மீறி மீறிப் போனா… அவ்வளவுதான் இருக்கும்…  என்று பாட்டியை பார்த்தார் கந்தன்.

இந்த வசனம் நிச்சயம் நிலைமையை எளிதாக்கும்…

இறுக்கத்தைத் தளர்த்தும்…

நகைச்சுவை உணர்வு… ஆயிரம் மந்திரங்களுக்கு சமமான ஆயுதம்…

உடன் வந்திருந்த பெரியம்மா… பாட்டியின் காதில்… உனக்கு பன்னெண்டு வயசுன்னு சொல்றாங்க!  என்று கூறினார்.

அவ்வளவுதான்…

பாட்டியை வெட்கம் பிடுங்கித் தின்பது!  அப்பட்டமாக தெரிந்தது.  வலது கையால்… தன் வாயை மறைத்துக் கொண்டார்.  விரல் இடைவெளிகளில் பொக்கை வாய் தெரிந்தது… புன்னகை… மந்திர புன்னகை ஆக மருவி இருந்தது.

கல்லணையில் எவ்வளவே… குழந்தைகளுக்கு சத்துணவு சமைத்துப் போட்டு அடைந்த சந்தோஷத்துக்கு சமமான சந்தோஷத்தை பாலாமணியம்மாள் இங்கே… லிஃப்டில் இறங்கிக்கொண்டு இருக்கும் பொழுது சந்தோசத்தில் உயர்ந்துகொண்டு இருந்தார்.

லிஃப்ட்… தரைத்தளத்தை தொட்டதும்… கதவுகள் அகல திறக்கின்ற சமயம்…

கந்தவேல்… நெகிழ்வாய் நின்ற பாட்டியின் காலில் விழுந்து ஆசிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் போல தோன்றிய மின்னல் வேக நினைப்பை நொடிப்பொழுதும் தயங்காமல் செயலாக்கினார்.

கதவு திறந்த பிறகு…

அவரவர் திசையில் எல்லோரும் பிரிந்து பயணிக்க தொடங்கினர்…

ஏற்கனவே சொன்னது போல…

வாழ்வில்… புன்னகைக்க வைக்கின்ற தருணங்கள் புனிதமானவை.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2019

முடியும் என்று புறப்படு சரித்திரம் போற்றப் பெயரெடு
நினைப்பதே நடக்கும் – 3
வெற்றி உங்கள் கையில்- 62
வெற்றியை பாதையில் பயணம் செய்…!
மாறாத காலம்
உண்மை உன்னை உயர்த்தும்
வாஸ்து சாஸ்திரம்
பயணங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
வலிகள் நம்முடைய நண்பன்
ஆஸ்த்துமா
எல்லோரும் மதிக்கும் தலைவராக மாறுவது எப்படி?
முயற்சியை முதன்மைப்படுத்து
“வாழ நினைத்தால் வாழலாம்” – 25
மாமரத்தில் கொய்யாப் பழம்
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 5
‘அமைதி’ என்னும் மகாசக்தி
மந்திரப் புன்னகை
வீரத்தின் வெற்றி
தன்னம்பிக்கை மேடை நேயர் கேள்வி?
உள்ளத்தோடு உள்ளம்