Home » Articles » சமயோசித புத்தி

 
சமயோசித புத்தி


கோவை ஆறுமுகம்
Author:

புத்தியை எப்படி கஷ்டமான சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் மாற்றி உபயோத்து,தப்பித்தல் என்பது தான் சமயோஜித புத்தி. இது நம் அனைவருக்கும் இருக்கும் உணர்வு தான். ஆனால் பதட்டத்திலும்,அவசரத்தனத்திலும் இந்த உணர்வு மறந்து விடுவதாலும் பயன்படுத்த தெரியாததாலும் பல சங்கடங்களில் மாட்டிக் கொள்கிறோம்.

“சுய புத்திதான் இல்லை. சொல்புத்தியாவது இருக்கணும்? எப்படித்தான் பொழைக்கப் போறியோ?” என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அதென்ன சொல்புத்தி, சுய புத்தி?

நல்ல அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் சான்றோர்கள் மற்றும் ஞானிகளின் ஆலோசனைகளையும்,அறிவுரைகளையும்,ஞானத்தையும் கேட்டு அதன்படி நடப்பது சொல்புத்தி.

நல்ல அறிவுரைகள் கேட்டாலும் சூழ்நிலைக்கு தகுந்தபடி பிரச்சனைகளை சாமாளித்து வாழ்வது சுயபுத்தியாகும்.

ஒரு சமயம் இராமனுஜர் தன் சீடர்களுக்கு ஆன்மிக சொற்பொழிவு செய்யும் பொழுது சீடர்களிடம், “எல்லா உயிர்களிலும் நாராயணன் இருக்கிறார் .அதனால் எல்லா உயிர்களையும் நாராயணனைப் போல பார்க்க வேண்டும். அன்பு செலுத்த வேண்டும் என்றார்.

சொற்பொழிவு முடிந்து சீடர்கள் சமையலுக்கு விறகு சேகரிக்க காட்டுக்கு சென்றனர். அப்பொழுது ஒரு காட்டு யானை மதம் கொண்டு சீடர்களை நோக்கி ஓடி வந்தது. எல்லா சீடர்களும் உயிர் பிழைக்க பயந்தோடினர். ஆனால் ஒரு சீடர் மட்டும் பயப்படாமல் அப்படியே நின்று கொண்டிருக்க உடன் வந்த மற்றொரு சீடர் “ஓடிவிடு” என எச்சரித்தார் அதற்கு நின்று கொண்டிருந்த சீடர் நம் குரு எல்லா உயர்களிலும் நாராயணனின் மறு உருவாக பார்க்க சொல்லியிருக்கிறார். அதனால் கோபமாக வரும் யானைக்குள் இருக்கும் நாராயணன் என்னை ஒன்றும் செய்ய மாட்டார் என சொல்லும் போதே மதம் கொண்ட யானை பலமாக சீடரை தாக்கியது.பலத்த காயமடைந்த சீடரை ராமனுஜரிடம் தூக்கி வந்து நடந்ததை சொன்னார்கள்.

அதற்கு அடிப்பட்ட சீடர், “குருவே நீங்கள் தானே எல்லா உயிர்களிலும் நாராயணனின் இருக்கிறார் என்று சொன்னீர்கள் அதனால்தான் யானையை நாராயணன் என்றும் என்னை தாக்கமாட்டார் என் நினைத்து நின்று கொண்டேன் என்றார் .அதற்கு ராமானுஜர் யானை நாராயணன் தான் ஆனால் அது தாக்க வரும் போது பக்கத்தில் இருக்கும் இன்னொரு சீடரான நாராயணன் ஒடச் சொல்லி எச்சரித்ததை, அதை நீ கேட்டிருக்கலாமே” என்றாராம்.

ஆக, சுயபுத்தியற்ற மனிதர்களுக்கு நல்லது,கெட்டதின் அர்த்தம் விளங்காது.இவர்கள் தான் குதர்க்கமாகப் பேசி மாட்டி கொள்ளும் ரகம்.

இதே போல் தான் (நேரத்திற்கேற்ற அறிவு) சமயோசித புத்தியும்.  சமயோசித புத்தி என்றதும் நம் நினைவுக்கு வருபவர் தெனாலிராமன் தான் தனக்கு வரும் சோதனைகளை அறிவுப் பூர்வமாக சமாளிக்கும் திறனை தெனாலிராமன் காளியிடம் வரமாகப் பெற்றான். அதனால் அவனுக்கு மட்டும் தான் சமயோசிதமாக நடந்து கொள்ள தெரியும் என்று நினைத்து விடாதிர்கள்.

சகல ஜிவராசிகளுக்கும் இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இறைவன் இந்தப் புத்தி உணர்வை வைத்துள்ளார். இந்த சமயோசித புத்தி உணர்வுக்கு என்று தனி மூளையோ. வரமோ இல்லை.நாம் பயன்படுத்தும் அறிவுடன் நிதானமாக சிந்திக்கும் திறன் இருந்தால் போதும்.

சமீபத்தில் டி.வியின் டிஸ்கவரி சேனலில் ஒரு சிம்பன்ஸி குரங்கின் புத்தி கூர்மை வியக்க வைத்தது.

ஒரு உளுத்து போன மரம். அதினுள்ளே புழுக்கள் உள்ளது. ஆனால் அதை தாராளமாக எடுக்க முடியாது. அங்கு வந்த ஒரு சிம்பன்ஸி குரங்கு அந்தப் புழுக்களை சாப்பிட பல வழிகளில் முயற்சித்தும் புழுக்களை சாப்பிட முடியவில்லை.ஒரு சிறிய துவாரம் மட்டும் தான் இருந்தது அதன் கையையும் நுழைக்க முடியவில்லை. கொஞ்சம் முயற்சிக்கு பின் சுற்றும் முற்றும் எதையோ தேடியது. ஒரு நீண்ட நாணல் குச்சி கிடைத்தது. அதை எடுத்து வந்து தன் வாய் எச்சிலை தடவி அந்த மர துவாரத்தினுள் விட்டு வெளியே எடுத்தது.

என்ன ஆச்சரியம்! அந்த நீண்ட குச்சி முழுவதும் அந்த புழுக்கள் ஒட்டி கொண்டு வந்தது.அதை குரங்கு சாப்பிட தொடங்கியது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2019

சாதனை கண்டுபிடிப்பு…! சரித்திரத்தின் உயர்த்துடிப்பு…!
உண்மை உன்னை உயர்த்தும்
நீங்கள் வெளிப்படைத்தன்மை உடையவரா?
பசுமை பென்சில்
வெற்றி உங்கள் கையில்- 61
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 4
நினைப்பதே நடக்கும் (பாகம் – 2)
மந்திரப் புன்னகை!
தீர்மானித்தல் என்ற திறனின் மகிமை
தன்னம்பிக்கை மேடை
தகுதிகளை மேம்படுத்தித் தலைவராவது எப்படி?
சமயோசித புத்தி
பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி
நாளும் விதையுங்கள் நம்பிக்கையை
பல் பராமரிப்பு
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத்தொழிலாளர்கள்
சிந்திக்க வைக்கும் சீனா – 6
வின்னர்ஸ் அகாடமி மற்றும் அகம் அறக்கட்டளை
“வாழ நினைத்தால் வாழலாம்” – 24
பேச்சும் மூச்சும்
உள்ளத்தோடு உள்ளம்