Home » Articles » சிந்திக்க வைக்கும் சீனா – 6

 
சிந்திக்க வைக்கும் சீனா – 6


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

நிறுத்தி இறங்கி ஒலிம்பிக் ஸ்டேடியம் தொலைவில் தெரிந்ததை பெயருக்குப் பார்த்து படமெடுத்தோம்.

2008 ல் இங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. மீண்டும் 2022 ல் நடைபெற உள்ளது. 80000 பேர் அமரும் வசதி உள்ளதாம். 2008 ல் 91000 பேர் அமர்ந்து போட்டிகளைக் கண்டு களித்தனராம்.

2003 முதல் 2007 முடிய 428 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கட்டியுள்ளனர். தங்குவதற்கு 140 அறைகள் உள்ளதாம். மேற் புறத்தோற்றம் மட்டுமே தெரிந்தது.

பீஜிங் நகரின் சிட்டி சென்டரில் இருந்து விமான நிலையம் 32 கி.மீ தொலைவில் 1480 ஹெக்டேர் நிலப் பரப்பில் அமைத்துள்ளனர். 2 மணி நேரம் காத்திருந்து 10.30 க்கு போர் டிங்பாஸ் வாங்க வரிசையில் நின்றோம்.

செக் இன் பெட்டிக்குள் வைத்திருந்த எலக்ட்ரானிக் பொருட்கள்( பவர் பேங்க், செல் போன் முதலியன) கைப் பைக்கு மாற்றுமாறு கூறினர். போர்டிங் பாஸ் வாங்கவே 1.30 மணி நேரத்திற்கும் மேலானது.

எல்லோரும் வாங்கிய பின் சிறிது தூரம் நடந்து சென்று, ரயிலில் ஏறி பயணித்து, இமிக்ரேசன் முடித்தோம். குழு விசா என்பதால் இங்கும் தாமதம். உலகின் மிகப் பெரிய விமான நிலையங்களில் இதுவும் ஒன்று என்பதால், ஒன்றுமே புரிபடவில்லை.

அடுத்து பாதுகாப்பு சோதனை. குடோன் போலிருந்த பகுதியில் பல குழுக்களாகப் பிரிந்து சென்றோம். வரிசை மெதுவாக நத்தை போல் ஊர்ந்து சென்றது, நேரம் பறந்து கொண்டிருந்தது.

கைப்பையை ஸ்கேன் செய்தனர். என்னுடையதை மீண்டும் ஸ்கேன் செய்து, உள்ளே என்ன இருக்கிறது என சைகையால் கேட்டனர். பவர் பேங்  என எடுத்துக் காண்பித்தேன். நல்ல நேரம் அதை ஒரு டிரேயில் வைக்கச் சொல்லி ஸ்கேன் செய்து அனுப்பினர்.

என்னுடன் சமையல் கலைஞர் இளைஞர் இளவரசன் வந்தார்.  நள்ளிரவு 1.15 மணியானது. விமானம் புறப்படும்  நேரம் 1.30 மணி E7 கேட்டை நோக்கி இருவரும் ஓடினோம்.

அங்கு சென்று போர்டிங் பாஸ் காண்பித்தால் E 28 க்கு செல்லுமாறு கூறினர். மனம் பதைக்க, அது எங்குள்ளது என விசாரித்து ஓடினோம்.

வழியில் உடன் வந்த இருவரை பார்த்த பின் பதட்டம் குறைந்தது. அவர்கள் கதை வேறு. குடிப்பதற்கு வைத்திருந்த பாட்டில் தண்ணீர், ஸ்பிரைட், கோக் போன்றவைகளைப் பிடுங்கி வீசி விட்டார்களாம். இன்னொருவர் பையில் இருந்த பவர் பேங்கை, தனி டிரேயில் வைக்கவில்லையென, தூக்கி வீசினராம்.

அதை அவர் எடுக்கமுடில, கண்டிப்பான குரலில் வெளியே அனுப்பப் படுவீர்கள் என எச்சரித்தனராம். அதன் பின் திட்டிக் கொண்டே வந்ததாய் கூறினார்.

ஒரு வழியாக விமானத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தோம். விசாரித்தால் பலரது அனுபவமும் இதுபோல் தான் என்றனர். பாதுகாப்பு சோதனைப் பகுதியில் சிலர் மட்டும் அரை குறை ஆங்கிலம் பேசினர்.

சீன மொழி தான் எல்லோருமே பேசுகின்றனர். பல நாட்டு விமான நிலையங்களுக்குச் சென்றிருக்கிறேன். இது போன்ற தவிர்க்க வேண்டிய அனுபவம் ஏற்பட்டதில்லை.

மலேசியன் ஏர்லைன்ஸ் ஏர் பஸ் இருக்கை 2+4+2  என மூன்று வரிசைகளில் இருந்தது. குடும்பத்தினர் ஒன்றாக அமரக் கேட்டுக் கொண்டதால் எனது இருக்கை மாறி அமர்ந்தேன்.

சீனா செல்லும் போது விமானத்தில் சைவம் என்றால் முன்பே பதிவு செய்ய வேண்டுமென்றதால், அதைக்கூறி, சைவம் எனச் சிலர் பதிவு செய்திருந்தோம்.

ஒரு வழியாக விமானம் 45 நிமிடம் தாமதமாக அதிகாலை 2.15 க்கு புறப்பட்டது. தேடிப்பிடித்து வெஜ் சாண்ட்வீச் கொடுத்தனர். ஆப்பிள் ஜீஸ் வழங்கினர்.

காலை 6 மணியளவில் வெஜ் உணவாக காளான், ராஜ்மா, கொள்ளு போன்ற பயறு, பழம், பன், வெண்ணெய், ஜாம், ஆப்பிள் ஜீஸ் வழங்கினர்.

அசைவ உணவாக வேறு வழங்கினர். காலை சுமார் 4350 கி.மீ தூரத்தை 6 மணி நேரப் பயணித்து கோலாலம்பூர் விமான நிலையத்தில் 8.15 க்கு விமானம் இறங்கியது.

இறங்கி, நடந்து விசாரித்து G10 என்ற கேட் சென்று, விமானம் ஏறு முன்பாக பாதுகாப்பு சோதனை முடித்து, விமானம் ஏறினோம். காலை 9.45 க்கு ( மலேசியா நேரம்) புறப்பட்ட விமானம் 3.45 மணி நேரம் பறந்து  சென்னை விமான நிலையத்தில் நம் நேரப்படி முற்பகல் 11 மணிக்கு தரையிறங்கியது. நேர வித்தியாசம் 2.30 மணியைக் கழித்து விட வேண்டும்.

இமிக்ரேசன் சீல் அடித்து, வெளியே வந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு எல்லோரும் பறந்து விட்டனர்.

ஒன்று கூடி, நிறுவன உரிமையாளர், சமையல் கலைஞர்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமென்றேன். யாரும் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

நான் மட்டும் தனியே நன்றி சொல்லி சமையல் கலைஞர் இருவருக்கும் தலா ரூ 500 கொடுத்தேன்.

சேலத்து நண்பர்களுடன் ரயில் ஏறி சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தோம். இட்லி சாப்பிட்டு ஏசி தங்கும் ஹாலில் நான் இருந்தேன். மற்றவர்கள் விடை பெற்றுச் சென்றனர்.

நண்பர் யமுனா கிருஷ்ணன் வந்து பழங்கள் கொடுத்து உரையாடிச் சென்றார். அவரைச் சிறிது நேரம் பெட்டியைப் பார்க்குமாறு கூறி, குளித்து தயாரானேன்.

2.30 மணிக்கு கோவை புறப்பட வேண்டிய இண்டர் சிட்டி ரயில் தாமதமாக 3.45 க்குத் தான் வந்தது. காத்திருந்து ரயில் ஏற, 4.15 க்கு புறப்பட்டது. இரவு 7 க்கு இட்லி சாப்பிட்டேன்.

நள்ளிரவு 12 மணிக்கு கோவை வடக்கு ரயில் நிலையத்தில் இறங்கி ரெட் டாக்சியில் இல்லம் திரும்பினேன்.

சீனா மக்கள் தொகையில் உலகின் முதல் நாடு வளர்ந்து வரும் நாடு ஒரே கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி தொடர்வதால், சட்டங்களைக் கடுமையாகப் பின்பற்றுகின்றனர்.

சாலை விதிகள் சரியாக கடைப்பிடிக்கப் படுகின்றன. மூன்று முக்கிய நகரங்களை மட்டுமே பார்த்தோம். கிராமங்களுக்குச் செல்லவில்லை.

இருந்தாலும் ரயில் பயணத்தில் பல கிராமங்களைக் கடந்து சென்றோம். கிராமங்களும் தூய்மையாகத்தன் தெரிந்தன. ரயில் வசதி இல்லாத உட்புற கிராமங்களின் நிலை என்ன என்று தெரிய வாய்ப்பில்லை.

சீனர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது. நாட்டுப்பற்று மற்றும் மொழிப்பற்று அற்புதமான கல்வி முறை. தாய் மொழிக்கல்விதான். மாணவர்கள் காதில் கிளிப் மாட்டியும், கைமீது பிரம்பால் அடித்தும் தண்டிக்கின்றனர். ஒரு நாள் ஆசிரியர் கூட வாழ்நாள் முழுவதும் தந்தையாக மதிக்கப்படுகிறார். இத்தோடு சிந்திக்க வைத்த சீனாவை நிறைவு செய்வோம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2019

சாதனை கண்டுபிடிப்பு…! சரித்திரத்தின் உயர்த்துடிப்பு…!
உண்மை உன்னை உயர்த்தும்
நீங்கள் வெளிப்படைத்தன்மை உடையவரா?
பசுமை பென்சில்
வெற்றி உங்கள் கையில்- 61
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 4
நினைப்பதே நடக்கும் (பாகம் – 2)
மந்திரப் புன்னகை!
தீர்மானித்தல் என்ற திறனின் மகிமை
தன்னம்பிக்கை மேடை
தகுதிகளை மேம்படுத்தித் தலைவராவது எப்படி?
சமயோசித புத்தி
பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி
நாளும் விதையுங்கள் நம்பிக்கையை
பல் பராமரிப்பு
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத்தொழிலாளர்கள்
சிந்திக்க வைக்கும் சீனா – 6
வின்னர்ஸ் அகாடமி மற்றும் அகம் அறக்கட்டளை
“வாழ நினைத்தால் வாழலாம்” – 24
பேச்சும் மூச்சும்
உள்ளத்தோடு உள்ளம்