Home » Articles » உண்மை உன்னை உயர்த்தும்

 
உண்மை உன்னை உயர்த்தும்


செல்வராஜ் P.S.K
Author:

வுவுவு இதற்குள்ளே உன் உயர்வு

அறிவு, துணிவு, தெளிவு, பணிவு போன்ற இந்த வுக்குள் எவனொருவனிடத்தில் (மிகையாக) அதிகமாக உள்ளிருக்கின்றதோ அவனிடத்தில் உயர்வு இருக்கும்.

எவனொருவனிடத்தில் அறிவு அதிகமாக, அதிகமாக,  பணிவும் அதிகமாகிறதோ, அவனே உலகில் உண்மையான அறிவாளி, மென்மையான அறிவாளி.

துணிந்த உள்ளமும் வேண்டும்; நல்லதற்குப் பணிந்த உள்ளமாகவும் இருக்க வேண்டும்.

அடக்கு அடக்கு அடக்கு உன் அகந்தையை அடக்கு அகந்தையை அடக்காவிட்டால் நீ கந்தையாகி விடுவாய். கர்வத்தை விட்டுவிட்டுக் கருமத்தைத் தவிர்.

ஆணவத்தைக் கொல், உன்னை வெல்

நேர்மையானவர்களிடத்தில் அதிகப் பணிவிருக்கும் என்கிறது ஒரு ஆங்கிலப் பழமொழி.

நீதியை நம்பு அதுவே தமிழனின் பண்பு. உண்மையை நம்பு, அதுவே இந்தியனின் பண்பு. நிறம் மாறுவது வேண்டுமானால் மனிதனுக்கு அழகாக இருக்கலாம். ஆனால் தரம் மாறுவது மனிதனுக்கு அழகு அல்ல.

நீதி நியாயமே என்றும் வெல்லும், எங்கும் வெல்லும். அதுவே வரலாற்றிலும் நில்லும், தமது பெயரைச் சொல்லும்.

உண்மையாக இருந்தால் உனக்கு என்றும் நன்மைதான்.

எந்நேரத்திலும் நேர்மையுடன் இருங்கள். வாய்மை இருப்பவனையே இவ்வையகம் போற்றும்வரலாறுபுகழும்

வாய்மையில் தூய்மை வேண்டும்.

உண்மையானவனாகவும், நுண்மையானவனாகவும், மென்மையானவனாகவும் இரு.

நீதி, நேர்மை, நியாயம் இல்லையென்றால் ( இங்கு வர ) நீ யார் என்று வரலாறு உன்னைக் கேட்கும்.

உண்மையை அழிக்கின்ற சக்தி

நேர்மையை ஒழிக்கின்ற சக்தி

நீதியை ஜெயிக்கின்ற சக்தி

வாய்மையை வெல்கின்ற சக்தி

நியாயத்தை சிதைக்கின்ற சக்தி

இவ்வுலகில் எதுவும் இல்லை.

உண்மைக்குஇருக்கும்சக்தி

உலகில் எதற்கும் இல்லை.

வாய்மையானவனாகவும் தூய்மையானவனாகவும் இரு.

அப்படியிருப்பதும் உனது வலிமைதான்.

உயர்வதென்பது எப்படி வேண்டுமானாலும் ( வெற்றி ) உயரலாம்.

உனது வெற்றியில்சாதனையில்உயர்வில் நீதிநேர்மைநியாயம் இருக்கவேண்டும்.

எப்படி வேண்டுமானாலும் செய்வதுசெய்தது சாதனையல்ல.  விதிமுறைகளுடன் இப்படித்தான் செய்யவேண்டும்செய்வதும்செய்ததும்தான் முன்னேற்றச் சாதனைச் சரித்திரமாகும்.

உன் வாழ்க்கைப்போரில் உன் சமூக நியாயமான இலட்சியத்தின் எதிர்ப்பையும்,  எதிரியையும், புறமுதுகில் தாக்கி வீழ்த்தியதெல்லாம் சாதனையாகிவிடாது. அவன் நேர் எதிரே முன்புறமாக நெஞ்சில் தாக்கி வீழ்த்தியதே சாதனையாகும்.

அதேபோல் உனது இலக்கு எதுவாக வேண்டுமானாலும் என்று இருக்கையில் அந்த இலட்சியம் சமூக நீதி ( நியாயம் ) வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

கோட்சேயின் இலட்சியம் காந்தியைக் கொல்வது; இலட்சியப்படி கொன்றான். கோட்சேவாகிய அவனது இலட்சியம் நிறைவேறியது. ஆனால் அதன் பின்பு அவனின் குறிக்கோள் அடைவைநிறைவை இச்சமூகம் ஏற்றதா ? இல்லை ஏற்கவில்லை. இதுவரை ஏற்கவில்லை. இனிமேலும் ஏற்காது, என்றும் ஏற்காது. சமூக அநீதியான அவனது இலட்சியச் செயலை நம் தேசம் மட்டுமல்ல, உலகிலுள்ள எந்த தேசமும் ஏற்காது. அதேபோல் தன் உயிரைவிட அதிகமாக நேசித்த ( தாய் ) இம்மண்ணைவிட்டு தம் உயிர் பிரிகிறதென்று தெரிந்தும்என்னை சுட்டவனை விட்டு விடுங்கள். அவனை ஒன்றும் செய்துவிடாதீர்கள்என்று சொன்னார் மகாத்மா காந்தி அவர்கள். அவரது அகிம்சை, அறவழிக் கொள்கையையேற்ற இந்த உலகமும் இறக்கும்முன் தோன்றிய காந்தியின் அந்த மனிதாபிமானமான, ஆழ்ந்த இரத்தப் பாசமான அந்தக் கொள்கையையும் இந்த உலகம் ஏற்றது.

நமது மனுநீதிச் சோழனை எடுத்துக் கொள்ளுங்கள். சமூக நீதிக்காக தன் ஒரே மகன் என்றுகூட பாராது தன் மகன் ஏற்றி இறந்த அந்த கன்று எந்த இடத்தில் எப்படித் துடிதுடித்து இறந்ததோ அந்த இடத்தில் அதே மாதிரி தன் மகனையும் அதே தேர்ச்சக்கரத்தில் படுக்கவைத்து ஏற்றினான். இதை உலகம் ஏற்கவில்லையா? என்றோ ஏற்றதுதானே, அது என்றும் ஏற்பதுதானே இந்நீதிச் செயலாள்.

சோழனை மனுநீதிச் சோழன் என்று இந்த சமூகம் ஏற்றது.

இந்திய மக்களை அதிகமாக நேசித்தவர்களும், தன் தாய் மண்ணைக் காக்க தன் உயிரையும் துறந்தவர்களுமான மாவீரன் தீர்த்தகிரி என்கிற தீரனையும் கட்டபொம்மனையும் எடுத்துக் கொள்ளுங்கள். நமக்கு அடிமை விலங்கிட்ட ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருந்தபொழுது உடனே அவர்களை ஆங்கிலேயன் தூக்குத் தண்டனை விதித்து தூக்கில் போட்டுக் கொல்லவும் இல்லை. மரண தண்டனை விதித்து உடனே இம்மண்ணோடு மண்ணாகச் சாகடிக்கவும் இல்லை.

தொடரும்

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment