Home » Articles » வின்னர்ஸ் அகாடமி மற்றும் அகம் அறக்கட்டளை

 
வின்னர்ஸ் அகாடமி மற்றும் அகம் அறக்கட்டளை


ஆசிரியர் குழு
Author:

இணைந்து நீட் பயிற்சி வகுப்புகள் துவக்க விழா– 2018

கடந்த 19. 12.2018 ஞாயிற்றுக்கிழமை வின்னர்ஸ் அகாடமியின் இலவச மருத்துவ நீட் பயிற்சி வகுப்பிற்கான துவக்கவிழா ( வின்னர்ஸ் அகாடமி நாவாவூர் பிரிவில்) காலை 10 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து நீட் தேர்வினை எதிர்கொள்ளும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.அதில் பயிற்சி வகுப்பிற்கான 25 மாணவ மாணவிகள் கலந்தாய்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் நீட் தேர்வினை எதிர் கொள்ளும் விதம் குறித்தும், பயிற்சி மேம்பாட்டு வகுப்புகளும், ஊக்குவிப்பு வகுப்புகளும் மாணவ மாணவியருக்கு நீட் தேர்வு தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் நீர் தொடர்பான குறும்படங்களும், நாடக காட்சிகளும் மாணவ மாணவியருக்கு காண்பிக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் இலவச கையேடுகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் வின்னர்ஸ் அகாடமியின் இயக்குநர் திரு. A. பிரசாத் அவர்களும், அகம் அறக்கட்டளையின் செயலாளர் திரு. சசிக்குமார் அவர்களும், அகம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் திரு. வடிவேல் அவர்களும் கலந்து கொண்டர்.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினரர்களாக பாஸ் நிறுவனத்தின் மேலாளர். திரு. ஜிவா அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு நீட் தேர்வினை எதிர் கொள்ளும் விதத்தை விளக்கினார்.

மாணவர்களுக்கு சிறப்புரை வழங்குவதற்காக வனவாசி சேவா சங்கத்தின் சார்பாக திரு. வினய சந்திரன் அவர்களும் கலந்து கொண்டு ஊக்கங்களை வழங்கினார்.

இதில் நீட் தேர்வினை எதிர்கொள்ளும் மாணவ மாணவியர்களும், அவர்களின் பெற்றோர்களும், வின்னர்ஸ் அகாடமியின் நிர்வாகிகளும், ஆசிரியர்களும் பெருவாரியாக கலந்து கொண்டனர்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2019

சாதனை கண்டுபிடிப்பு…! சரித்திரத்தின் உயர்த்துடிப்பு…!
உண்மை உன்னை உயர்த்தும்
நீங்கள் வெளிப்படைத்தன்மை உடையவரா?
பசுமை பென்சில்
வெற்றி உங்கள் கையில்- 61
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 4
நினைப்பதே நடக்கும் (பாகம் – 2)
மந்திரப் புன்னகை!
தீர்மானித்தல் என்ற திறனின் மகிமை
தன்னம்பிக்கை மேடை
தகுதிகளை மேம்படுத்தித் தலைவராவது எப்படி?
சமயோசித புத்தி
பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி
நாளும் விதையுங்கள் நம்பிக்கையை
பல் பராமரிப்பு
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத்தொழிலாளர்கள்
சிந்திக்க வைக்கும் சீனா – 6
வின்னர்ஸ் அகாடமி மற்றும் அகம் அறக்கட்டளை
“வாழ நினைத்தால் வாழலாம்” – 24
பேச்சும் மூச்சும்
உள்ளத்தோடு உள்ளம்