Home » Articles » வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 4

 
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 4


ஞானசேகரன் தே
Author:

பணக்காரத் தந்தை, ஏழைத் தந்தை (Rich Dad & Poor Dad)

இந்த நூலின் ஆசிரியருக்கு இரண்டுதந்தையர். இவர்கள் இருவரிடம் தான் வளர்ந்த விதத்தை இந்நூலின் முன்னுரையில் வருமாறு பதிவு செய்கிறார் ஆசிரியர். ஒருவர் பணக்காரர், மற்றொருவர் ஏழை. ஏழைத் தந்தை டாக்டர் பட்டம் பெற்ற பெரிய கல்வியாளர். பணக்காரத் தந்தை எட்டாம் வகுப்பைக் கூட தாண்டாதவர். இவர்கள் இருவருமே தங்கள் வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்தபோதிலும் அரசு பணியிலிருந்த ஏழைத் தந்தை எப்போதுமே பணத்திற்காகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பணக்காரத் தந்தை ஹவாய் மாநிலத்தின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக ஆனார். ஆனால் பணக்காரத் தந்தை நான் சிறுவனாக இருந்தபோது சாதாரண நிலையில் இருந்தவர்தான். ஆனால் அவரின் பணம் பற்றிய சிந்தனை அவரைப் பணக்காரராக ஆக்கியது. இந்த இரண்டு பேரிடமும் நான் வளரும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த இரண்டு பேருமே என்னை ஆளுமை செலுத்தினர். ஆனால் இருவரின் ஆலோசனைகளும் ஒன்றுபோல் இல்லை. இரண்டு பேரின் பணம் பற்றிய கண்ணோட்டம் வேறு வேறானது. தொடக்கக் காலத்தில் இருவருமே ஒரே மாதிரியாகத்தான் தம் தம் தொழில் வாழ்க்கையைத் தொடர்ந்தனர்.

ஒரு தந்தைபணத்தின் மீதான காதல்தான் தீயவை அனைத்திற்கும் மூல காரணம்என்று கூறுவார். இன்னொருவர்பணமின்மைதான் தீயவை அனைத்திற்கும் மூல காரணம்என்று கூறுவார்.

ஒரு நல்ல நிறுவனத்தில் ஒரு வேலையைத் தேடிக்கொள்ளும் விதத்தில் கடினமாகப் படிஎன்று ஒரு தந்தை பரிந்துரைத்தார். “ஒரு நல்ல நிறுவனத்தை விலைக்கு வாங்கும் விதத்தில் நன்றாகப் படிஎன்று இன்னொருவர் பரிந்துரைத்தார்.

ஒருவர்பணம் என்று வரும்போது, பாதுகாப்பாக நடந்துகொள். தேவையின்றி சவாலான காரியங்களில் இறங்காதேஎன்று கூறினார். இன்னொருவர். “சவாலான முயற்சிகளை நிர்வகிக்கக் கற்றுக் கொள்என்று கூறினார்.

ஒருவர்வீடுதான் நமது மிகப்பெரிய முதலீடு, நமது மிகப் பெரிய சொத்துஎன்று நம்பினார். இன்னொருவர்உன் வீடுதான் உனக்குச் சுமை. உன் வீடுதான் உனது மிகப்பெரிய முதலீடாக இருந்தால், நீ பிரச்சனையில் சிக்கியிருக்கிறாய் என்று அர்த்தம்என்று கூறினார்.

ஒரு தந்தை ஒரு சில டாலர்களைச் சேமிப்பதற்குத் திணறினார். இன்னொருவர் முதலீடுகளை உருவாக்கினார்.

ஒரு நல்லவேலை கிடைப்பதற்காக ஒரு சுயதகவல் தொகுப்பை எவ்வாறு எழுத வேண்டும் என்று ஒரு தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்தார். பல நிறுவனங்களை உருவாக்கும் திட்டங்களை எவ்வாறு எழுத வேண்டும் என்று இன்னொரு தந்தை கற்றுக் கொடுத்தார்.

இரண்டு வித்தியாசமான தந்தையினரின் கீழ்வளர்ந்தது, வெவ்வேறு எண்ணங்கள் எனது வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளைக் கண்காணிப்பதற்கு எனக்கு வாய்ப்புக் கொடுத்தது. மக்கள் உண்மையிலேயே தங்கள் எண்ணங்கள் மூலமாகத் தங்கள் வாழ்க்கையை வடிவமைத்ததை நான் கவனித்தேன்.

எடுத்துக்காட்டாக எனது ஏழைத் தந்தை எப்போதும்நான் ஒரு பணக்காரனாக ஆகப் போவதில்லைஎன்று கூறினார். எனது பணக்காரத் தந்தை எப்போதும் தன்னை பணக்காரனாகவே குறிப்பிட்டார். ஏழைத் தந்தை எனக்குப் பணத்தில் ஆர்வம் இல்லை என்று கூறுவார். என் பணக்காரத் தந்தைஎப்போதும் பணம்தான் சக்திஎன்று கூறுவார்.

இப்படியாக வளர்ந்த நான் எனது ஒன்பதாவது வயதில் வாழ்வில் முன்னேற பணக்காரத் தந்தையின் கருத்தை ஏற்பதென்று தீர்மானித்தேன். ஏழைத் தந்தை பெரிய கல்வியாளர்தான். ஆனால் அவர் பணம் குறித்துக் கூறுவதைக் கேட்கக் கூடாது என்று முடிவு செய்தேன். என் பணக்காரத் தந்தை எனக்கு 39 வயதாகும் வரை அதாவது 9 வயதிலிருந்து 39 வயது 30 ஆண்டுகள் பணம் பற்றி கற்றுக் கொடுத்தார். நான் அவரிடம் கற்றதே இந்நூலில் இடம்பெறும் செய்திகள் என்று ராபர்ட் டி.கியோசகி குறிப்பிடுகின்றார். பணம் பற்றி அறிய படிக்க வேண்டிய முக்கியமான நூல்களில் ஒன்று இந்நூல். இந்நூலில் சொல்லப்பட்டுள்ள சில முக்கியச் செய்திகள்பணம் என்றால் என்ன? பணக்காரர்கள் ஏன் பணக்காரர்களாக இருக்கிறார்கள். ஏழைகள் ஏன் ஏழைகளாக இருக்கிறார்கள் என்பதை அறிய உதவியாக அமையும். அவை வருமாறு.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2019

சாதனை கண்டுபிடிப்பு…! சரித்திரத்தின் உயர்த்துடிப்பு…!
உண்மை உன்னை உயர்த்தும்
நீங்கள் வெளிப்படைத்தன்மை உடையவரா?
பசுமை பென்சில்
வெற்றி உங்கள் கையில்- 61
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 4
நினைப்பதே நடக்கும் (பாகம் – 2)
மந்திரப் புன்னகை!
தீர்மானித்தல் என்ற திறனின் மகிமை
தன்னம்பிக்கை மேடை
தகுதிகளை மேம்படுத்தித் தலைவராவது எப்படி?
சமயோசித புத்தி
பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி
நாளும் விதையுங்கள் நம்பிக்கையை
பல் பராமரிப்பு
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத்தொழிலாளர்கள்
சிந்திக்க வைக்கும் சீனா – 6
வின்னர்ஸ் அகாடமி மற்றும் அகம் அறக்கட்டளை
“வாழ நினைத்தால் வாழலாம்” – 24
பேச்சும் மூச்சும்
உள்ளத்தோடு உள்ளம்