Home » Articles » மந்திரப் புன்னகை!

 
மந்திரப் புன்னகை!


அனந்தகுமார் இரா
Author:

எலிப்பெட்டி ராணி பாத்துக்கிறியா நீ!  நான் பாத்திக்கீறேன்!  தெரிமா

என்றார் முருகன்.

வயது அறுபதுக்கும் எழுபதுக்கும் இடையில் இருக்கலாம்

நீல நிற யூனிஃபார்மில்அதை தாங்கிப்பிடிக்க திராணி இருக்கிறதா? என்று சந்தேகப்படும் அளவிற்குஒடிசலாக கன்னங்கள் ஒட்டிப்போய் இருந்தார்

உழைத்து சாப்பிடணும்என் பேர் பழனி!  அதான் அங்கேருக்கிற ஆள்முருகன்பழனி முருகன்!  என்று பாண்ட்

ஜேம்ஸ் பாண்ட் என்று சொல்வது போல ஸ்டைலாக கூறினார்.

வயதில் பெரியவர்கள் உடன் பேச்சுக்கொடுத்தால்உலகம் தெரிஞ்சுக்கிட்ட ஒரு ஃபீலிங்நம்மை மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் வைத்துக்கொள்ள ஒரு மனப்பாங்கு தேவைப்படுகிறது.  கொடுத்தால் மட்டுமே அடையக்கூடிய விஷயம் மன அமைதி!  எனவே குழந்தைகளையும் முதியவர்களையும் பார்த்தால்ஒரு சம்பாஷணையை எந்த ஓரத்திலிருந்தாவது தொடங்கி விடுவது வழக்கம்.

முருகனாகத்தான் தன்னிச்சையாக, எலிப்பொறி குறித்து என்னவே? சொல்கிறார்.  விநாயகருக்குத்தானே அது வாகனம்?

இராணி என்பதால் மிக்கி மௌஸôக இருக்குமோ?  எலிப்பெட்டி இராணிக்கும் மந்திரப்புன்னகைக்கும்?  என்ன சம்பந்தம்?  ஒரு இடத்தில் பேசக்கூடிய சொல் இன்னும் பல இடங்களுக்கு செல்லுமா? யாவருக்கும் போகுமா?

என்று ஒரு சந்தேகம் நமக்கு வரலாம்

பதிலை கீழே உள்ள பாடல் தரலாம்  

யாவருக்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை

யாவருக்குமாம்உண்ணும்போதொருகைப்பிடி

யாவருக்குமாம்பசுவிற்கொருவாயுறை

யாவருக்குமாம்பிறர்க்குஇன்னுரைதானே!”

என்று மந்திரம் போட்டிருக்கிறார் திருமூலர்.

பரஸ்பரம் புன்னகைக்கவேண்டும் என்று நினைத்தால்தான், பரிட்சயம் இல்லாதவர்கள் முகத்தில் ஒரு சிறிய புன்னகை கீற்றையாவது, உருவாக்கி அதை பின்னர் விளக்குப் போல் சுடர்விட்டு பிரகாசிக்கச் செய்யலாம்

சமீபத்தில்பென்ஷன்அலுவலகத்தில்மூன்றுவயதானபெரியவர்களைகந்தவேல்பார்த்தார்.  கந்தவேலுக்கு பெரியவங்களுடன் பேசுவது, பிடிக்கும்.  அவர்களோடு பேச்சுக்கொடுக்க இயல்பான வாய்ப்பு கிடைத்தால் நழுவ விட்டுவிடமாட்டாப்ல

வி..பி. லிஃப்ட் அருகே மிக வயதான ஒரு பாட்டி இரண்டு நடுத்தர வயதை தாண்டிய உறவினர்களுடன் காத்து நின்றிருந்தார்.  வி..பி. லிஃப்ட் அந்த தளத்திற்கு வராது என்பது கந்தவேலுக்கு தெரியவந்தது.  இன்னொரு லிஃப்ட்டை பயன்படுத்த வேண்டும்.  இதை உள்ளே இருந்து (லாக் – Lock) பூட்டி வைத்து உள்ளனர்.  கந்தவேல் அங்கிருந்து நகரும்பொழுதுபாட்டி வாங்க நீங்களும் அடுத்த லிஃப்டில் போலாம் என்று அழைத்துச் செல்ல!  முற்பட்டார்.  வராத லிஃப்ட்டுக்காக அவர்கள் மூவரும் காத்திருந்து சற்று நேரம் கழித்து தெரிந்துகொள்ளப் போவதை, முன் கூட்டியே தெரிவித்தார்.

இந்தக்குழுஇப்படியேநகர்ந்துபெரியலிஃப்டைபிடித்தது  பாட்டி வர நேரமானதால்லிஃப்டை கொஞ்சம் நிறுத்தி வைத்தனர் வேலுடன் இருந்தவர்கள்.  பொதுவாக இப்படி நிறுத்துவதில் கந்தனுக்கு உடன்பாடில்லை.  மற்ற தளங்களில் இருக்கும் நபர்களுக்கு காத்திருக்கும் நேரத்தை அதிகப்படுத்துமல்லவா?  பூமி ஆள்வதற்கான நேரம் இங்கேதான் கிடைக்கின்றது.

எப்படிஎன்று கேட்கலாம் நீங்கள்.

பொறுத்தார் பூமி ஆள்வார்என்று கேள்விப்பட்டதில்லையா? வாகனங்களில் பயணிக்கும் பொழுது நிதானமாக போகச் சொல்வார்.  முன்னே செல்லும் வாகனம் நின்று யாரேனும் இறங்கிக்கொண்டு இருந்தால்அந்த நேரத்தில்ஒலி எழுப்பி அவசரப்படுத்த வேண்டாம்!   என்பார்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2019

சாதனை கண்டுபிடிப்பு…! சரித்திரத்தின் உயர்த்துடிப்பு…!
உண்மை உன்னை உயர்த்தும்
நீங்கள் வெளிப்படைத்தன்மை உடையவரா?
பசுமை பென்சில்
வெற்றி உங்கள் கையில்- 61
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 4
நினைப்பதே நடக்கும் (பாகம் – 2)
மந்திரப் புன்னகை!
தீர்மானித்தல் என்ற திறனின் மகிமை
தன்னம்பிக்கை மேடை
தகுதிகளை மேம்படுத்தித் தலைவராவது எப்படி?
சமயோசித புத்தி
பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி
நாளும் விதையுங்கள் நம்பிக்கையை
பல் பராமரிப்பு
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத்தொழிலாளர்கள்
சிந்திக்க வைக்கும் சீனா – 6
வின்னர்ஸ் அகாடமி மற்றும் அகம் அறக்கட்டளை
“வாழ நினைத்தால் வாழலாம்” – 24
பேச்சும் மூச்சும்
உள்ளத்தோடு உள்ளம்