– 2018 – December | தன்னம்பிக்கை

Home » 2018 » December (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 3

    இந்த நூலின் ஆசிரியர் கில் எட்வர்ட்ஸ் (Gill Edwards) ஆவார். (தமிழில் PSV குமாரசாமி மொழிபெயர்த்துள்ளார். மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளல்யிட்டுள்ளது.) அன்பால் மட்டுமே இந்த உலகில் நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை இந்த நூல் வலியுறுத்துகிறது. அன்பு இருக்கும் இடத்தில் பயம் இருப்பதில்லை. இந்நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களில் பல நம்மை நாமே அலசிப் பார்க்க உதவுபவை. இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்து முடிக்கும்போது மகிழ்ச்சி, உள்ளார்ந்த அமைதி, மன நிறைவு ஆகியவற்றை உருவாக்குவதற்கான வழிமுறைகளை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். அதோடு உங்கள் அனைத்துக் கனவுகளையும் நனவாக்குவதற்கான தெளிவையும் நீங்கள் பெற்றிருப்பீர்கள். இதிலுள்ள அத்தியாயங்கள் கீழ்க்கண்டவற்றை உங்களுக்கு தெரிவிக்கும்.

    • வாழ்க்கையை ஒரு வேலை என்றோ, ஒரு விபத்து என்றோ அல்லது ஓர் இலட்சியப் பயணம் என்றோ கருதாமல் அதை ஒரு பரிசாக எப்படிப் பார்ப்பது.
    • பயத்திற்குச் செவிசாய்ப்பதற்குப் பதிலாக அன்பின் உட்குரலை எப்படிக் கவனமாகக் கேட்பது.
    • உலகில் ஒரு நேர்மறையான தாக்கத்தை எப்படி ஏற்படுத்துவது.
    • உங்கள் எண்ணங்களை லேசர் ஓளிக்கற்றைகளைப் போல எப்படி ஒருமுகப்படுத்துவது.
    • வாழ்க்கையோடு மல்லுக்கு நிற்பது என்பது ஏன் நேர விரயம் என்பதைப் புரிந்துகொள்வது.
    • நாளைய தினத்தைப் பற்றிக் கனவு கண்டவாறே எப்படி இன்றைய தினத்தை நிறைவாக வாழ்வது.
    • வாழ்க்கை பற்றிய மூன்று நம்பிக்கைகள்: நம் புலனுக்கு அப்பாற்பட்ட பிரபஞ்சத்தின் ஓட்டத்தோடு நம்மை எவ்வாறு இணைத்துக் கொள்வது என்பதை இப்புத்தகம் நமக்குக் காட்டுகிறது. முதல் அத்தியாயம் ஆபிரகாம் லிங்கனின் “சுதந்திரம்தான் வாழ்வின் அடிப்படை, மகிழ்ச்சிதான் வாழ்வின் குறிக்கோள், வளர்ச்சிதான் வாழ்வின் விளைவு” என்ற மேற்கோளோடு தொடங்குகிறது. வாழ்க்கை பற்றிய மூன்று நம்பிக்கைகள் உள்ளன என்றும் அவற்றில் முதலாம் நம்பிக்கை – வாழ்க்கை ஒரு சோதனை என்று நம்புவது, இரண்டாம் நம்பிக்கை – வாழ்க்கை ஒரு விபத்து என்று நம்புவது, மூன்றாம் நம்பிக்கை – வாழ்க்கை ஒரு பரிசு என்று நம்புவது என்று சொல்லும் கில் எட்வர்ட்ஸ் மூன்றையும் வருமாறு சுருக்கமாக விளக்குவார்.
    • நல்லவர்களாக இருங்கள் (வாழ்க்கை ஒரு சோதனை)
    • பாதுகாப்பாக இருங்கள் (வாழ்க்கை ஒரு விபத்து)
    • மகிழ்ச்சியாக இருங்கள் (வாழ்க்கை ஒரு பரிசு)

    இதில் வாழ்க்கையை ஒரு சோதனை என்று கருதுவது மன அமைதியையும், மகிழ்ச்சியையும் இல்லாமல் செய்துவிடுகிறது. அதேபோல வாழ்க்கை என்பது ஒரு விபத்து என்று பார்க்கும் பார்வையிலும் மகிழ்ச்சியோ, சந்தோஷமோ இருக்க வாய்ப்பில்லை. அதேநேரத்தில் வாழ்க்கையை ஒரு பரிசாக நீங்கள் பார்க்கும்போது நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். நீங்கள் இங்கு இருப்பது வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பதற்குத்தான். அன்பு செலுத்துவதற்கும், சிரித்து மகிழ்வதற்கும், மற்றவர்களுடன் ஆழமாக இணைந்திருப்பதற்கும்தான் நீங்கள் இங்கு பிறந்திருக்கிறீர்கள். அன்பு நம்மை ஒன்றிணைக்கிறது, முழுமையாக்குகிறது. நாம் அன்பால் ஓர் அமைதியான, அன்பான உலகத்தை உருவாக்கலாம். மகிழ்ச்சி என்பது நமது இயல்புநிலை, அது நம்மோடு கூடவே பிறந்த ஒன்று. இந்தப் பிரபஞ்சம் நாம் கேட்கும் அனைத்தையும் பரிசாகக் கொடுக்கக் காத்திருக்கிறது. உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதையும் பிரபஞ்சம் அறியும் என்று நம்புங்கள். உங்கள் பரிசுகளை உங்களிடம் அனுப்ப ஓராயிரம் வழிகள் அதற்குத் தெரியும் என்றும் நம்புங்கள். நீங்கள் எப்போதும் ஆனந்த மழையில் நனைந்துகொண்டு இருக்க வேண்டும் என்று பிரபஞ்சம் விரும்புகிறது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் எவை என்பதை இந்நூல் முழுமையிலும் ஆசிரியர் தனது அனுபவத்திலிருந்து சொல்லிச் செல்கிறார். அவை.

    • அடுத்தவரிடம் சிறந்தவற்றையே எதிர்பாருங்கள், அவர்களும் அதையே வெளிப்படுத்துவர்.
    • பிறர் எவருடைய மகிழ்ச்சிக்கும் நீங்கள் பொறுப்பேற்காதீர்கள்.
    • எல்லாவற்றையும் இலகுவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
    • நீங்கள் எதையும் உருவாக்க வேண்டாம் உருவாவதற்கு அனுமதித்தால் போதும்.
    • தற்போதையச் சூழல் தற்காலிகமானதுதான், விரைவில் அது கடந்துவிடும்.
    • நெருக்கடி என்பது எப்போதுமே வளர்ச்சிக்கான ஒரு வாய்ப்புதான்.
    • புற உலகில் குறைகளைக் கண்டுபிடிப்பது உங்கள் அக அமைதியை அழித்துவிடும்.
    • உங்களது பிறவி நோக்கத்தைக் கண்டுபிடியுங்கள்.
    • நீங்கள் விரும்புபவற்றின் மீது கவனத்தைக் குவியுங்கள். உங்களை நன்றாக உணரச் செய்பவற்றின் மீது கவனம் செலுத்துங்கள்.
    • நீங்கள் மாறாதவரை எதுவும் மாறாது.
    • தங்களின் கனவுகளின் அழகில் நம்பிக்கை வைத்து இருப்பவர்களுக்கே வருங்காலம் சொந்தம்.
    • இருப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
    • உங்களுக்குப் பேரானந்தம் கொடுப்பதைப் பின்பற்றுங்கள்.
    • அனைவரையும், அனைத்தையும் பாராட்டுங்கள்.
    • வாழ்க்கையை ஒரு பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
    • உங்களுக்கு ஆதரவு நல்குபவர்களை மட்டுமே உங்களைச் சுற்றிலும் வைத்துக் கொள்ளுங்கள்.
    • நீங்கள் நினைத்த காரியம் நடக்கப் போகிறது என்பது போல நடந்து கொள்ளுங்கள்.
    • புதிய சிந்தனைகளைத் தேர்ந்தெடுங்கள்.
    • நன்றியுணர்வையும், பாராட்டையும் வெளிப்படுத்துங்கள்.
    • இங்கு சொல்லப்பட்ட அனைத்துமே நேர்மறையான மனோபாவத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்வது எப்படி? என்பதற்கான சிந்தனைகளாகவே அமைகின்றன.

    இப்படியான மனநிலையை அடைவதென்பது சாதாரணமான காரியமல்ல. ஆனால் நாம் நினைத்தால் வாழ்க்கையை பயநிலையிலிருந்து அன்பு நிலைக்கு மாற்றிக் கொள்ளமுடியும். அன்புதான் மனித சமூகத்தின் இயல்பான குணம் என்பதை நாம் அறிய நேர்கையில் வாழ்க்கை மகிழ்வளிக்கிறது. அன்பிற்கு அடைக்கும் தாழ் கிடையாது, எப்போதும் அது நம்மை விடுவிக்கும். பிரபஞ்சக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைந்த நிபந்தனையற்ற அன்பைப் பொருத்தவரை, தவறான தேர்வு என்ற ஒன்றே கிடையாது. அன்பே வடிவான பிரபஞ்சத்தில் எதுவும் தவறாகப் போவதற்கு வாய்ப்பே இல்லை. வாழ்க்கையோடு தலைகால் புரியாமல் காதலில் விழுங்கள். ஒருவர் தன்மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைதான் வாழ்க்கை. அதனால் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். சிறகுகளை விரியுங்கள். வாழ்க்கை ஒரு பரிசு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். பிரபஞ்சப் பிரவாகத்தோடு இணைந்து கொள்ளுங்கள். சிறப்பான உணர்வுடன் எப்போதும் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்று இந்நூல் முழுமையும் வாழ்க்கையை நேர்மறை மனோபாவத்தோடு எதிர்கொள்ளலே மகிழ்ச்சிக்கான வழி என்று பேசுகிறார் கில் எட்வர்ட்ஸ்.

    பிரபஞ்ச இரகசியங்கள்

    உங்களுக்கு ஏதாவது ஒரு கனவு இருந்தால், அதை நனவாக்க உங்களால் முடியும். நீங்கள் துவங்கப் போகும் இடம் எதுவாக இருந்தாலும், உங்களால் இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கத்தைப் படைக்க முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் கவனத்தைக் குவிப்பதும், பின் நீங்களே அதற்குத் தடையாக இல்லாமல் விலகிக் கொள்வதும்தான். நீங்கள் என்ன கேட்டாலும் உடனே சரியென்று சொல்லப் பிரபஞ்சம் காத்துக் கொண்டிருக்கிறது. உங்களுடைய பரிசுகளை உங்களுக்குக் கொடுக்க அது விரும்புகிறது. அதனால் உங்கள் பயணத்தின் ஒவ்வோர் அடியிலும் அது உங்களுக்கு வழிகாட்டுகிறது. இப்புத்தகத்தில் கில் எட்வர்ட்ஸ் உங்களுடைய கனவு வாழ்க்கைக்கான இந்த நான்கு பிரபஞ்ச இரகசியங்களை வெளல்ப்படுத்துகிறார்.

    • வாழ்க்கையை ஒரு பரிசாகப் பார்த்தல்
    • ஈர்ப்புவிதியைப் புரிந்து கொள்ளுதல்
    • பிரபஞ்சப் பிரவாகத்தில் உங்களை உணர்தல்
    • நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தப் பயிற்சி செய்தல்

    இந்த இரகசியங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நீங்கள் உங்களது ஒவ்வொரு கனவையும் நனவாக்கலாம். அது அதிக வெற்றி, அதிக செல்வம், நல்ல ஆரோக்கியம், அன்பான உறவுகள், கச்சிதமான வேலை, பிடித்த வீடு, ஆத்ம ஜோடி போன்றவற்றைப் பெறுவதாக இருக்கலாம். அல்லது இவ்வுலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த நீங்கள் விரும்பலாம். அல்லது அக அமைதியையும், ஆனந்தத்தையும் கண்டுபிடிக்க நீங்கள் விரும்பலாம். இந்த நூலை வாசிப்பதனால் நம்மிடையே குடிகொண்டிருக்கின்ற பயமிக்க வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கையாக மலரத் தொடங்குமென்று நான் உறுதியான சான்று தருகின்றேன்.

    – வாசிப்பு தொடரும்…

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை விதைகள்

    உடனடியாக – விரைவில் – எளிதில் கிடைத்துவிடுவது வெற்றியல்ல! வெற்றி அவ்வளவு எளிதாக இதுவரை யாருக்கும் கிடைத்ததில்லை. மனித மனம் உலக அதிசயங்களில் ஒன்றுஎதிர்மறைச் சிந்தனை எதிர்த்து விடும் உன்னை அறிவைப் பெருக்கு ஆசையைச் சுருக்கு , ஆணவத்தை நறுக்குகடின உழைப்பிருந்தால் கடலைக் கூட கடக்கலாம்நீதியைக் கொல்லாமல் உன் இலக்கை வெல்ல வேண்டும்…

    வலிமை மிக்கவர்களால் தான் வரலாறு படைக்க முடியும் சக்தி மிக்கவர்களால் தான் சரித்திரம் செதுக்க முடியும் தன்னம்பிக்கைமிக்கவர்களால் தான் வெற்றி எய்த முடியும்……எல்லாம் உன் வசம் ஆக உன்னைத் தன் வசம் ஆக்குஉன்னை தன் வசம் ஆக்க மனதை உன் வசம் ஆக்குஉன்னை தன் வசம் ஆக்கினால் உலகம் உன் வசம் ஆகும் ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் ஒவ்வொரு துறைக்கான படைப்பாற்றல் உள்ளது. அதைத் தெரிந்து கொண்டு – புரிந்து கொண்டு, அதைச் சரியாக – முறையாகப் பயன்படுத்துபவர்களே முன்னேறுகின்றனர் – வாழ்வில் சாதனை படைக்கின்றனர்; வரலாற்றில் இடம்பெறுகின்றனர்.

    உன்னிடமும் ஒரு திறமை இருக்கின்றது என்பதை நீ கண்டறி. கண்டறிந்தால்    உலக அரங்கில் உன் திறமை ஒருநாள் கண்டிப்பாகப் பேசப்படும். கல்வெட்டாக வரலாற்றில் பதிந்து கிடக்கும் சாதித்தவர்களின் வரலாற்றை தெரிந்துகொள்ளாத எவனுக்கும் சாதிக்கின்ற அந்த நம்பிக்கை வராது சாதிக்கவும் முடியாது!

    அன்பு மிக்கவனே!  என் ஆருயிர்த் தோழனே!

    நீ! எதையும் சாதிக்கப் பிறந்தவன்!

    நீ! எதையும் சந்திக்கப் பிறந்தவன்!

    நீ! எதையும் சிந்திக்கப் பிறந்தவன்!

    நீ! எதையும் முந்திக்கப் பிறந்தவன்!

    நீ! எதையும் போதிக்கப் பிறந்தவன்!

    எதிலும் நீ வெற்றி வாகை சூட வந்தவன்!

    உன்னைப் போன்றுள்ளவர்களின் சாதனைகளைச் சேகரி. அதுவே உனக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும்.அந்த நம்பிக்கையே உனது முன்னேற்றத்துக்குத் தேவையானதாகவும், வாழ்வுக்கு அவசியமானதாகவும் இருக்கும்.முடியாது என்கிற பேச்சுக்கே இடம் கிடையாது என்று எப்பொழுது உன் இதயம் சொல்கிறதோ அப்பொழுதுதான் நீ நினைத்ததை முடிப்பவனாகத் திகழ முடியும் – திழ்வாய். அப்படித் திகழும் பொழுதுதான் உலகம் உன்னைப் புகழும்.

    வீரன் என்பவன் யார்?எதற்கும் அஞ்சாமல் தைரியத்துடன் எதையும் எதிர்கொள்பவன்தான் வீரன். மாவீரன் என்பவன் எவன்? இப்பொழுது சாகிறோம் என்று தெரிந்தும் எவன் ஒருவன் போர்க்களத்தில் கண்ணீர் வடிக்காமல் தைரியத்துடன் செயல்படுகிறானோ அவனே மாவீரன். மண்ணில் இப்பொழுது மடிகிறோம் என்று தெரிந்தும் அந்த மரணத்தை சந்தோசத்துடன் ஏற்று, உயிரை இழந்தாலும் கொள்கையை இழக்கக்கூடாது என்று போர்க்களத்தில் எதிரி என்கிற எமனுடன் பின்வாங்காமல், புறமுதுகு காட்டாமல் இறுதிவரை படுபயங்கர துணிச்சலுடன் எதிர்கொண்டு எழுந்து நின்று எவன் போரிடுகிறானோ அவனும் மாவீரன்தான்!அறிவுப்பூர்வமான வீரனாக இரு; உன்னை யாரும் அவ்வளவு எளிதில் வெல்ல முடியாது. அறிவுப்பூர்வமான வீரனாக இரு; உன்னை யாராலும் அசைக்க முடியாது. அர்த்தம் இருக்கிற வாழ்க்கையில் குறிக்கோள் இருக்கும்; குறிக்கோள் இருக்கிற வாழ்க்கையில் அர்த்தம் இருக்கும்! நோக்கம் இருக்கிற வாழ்க்கையில் ஆக்கம் இருக்கும்! ஆசை இருப்பவனது இதயத்தில் ஓசையிருக்கும்! முயற்சி இருப்பவனது வாழ்வில் உயர்ச்சி இருக்கும்! எண்ணம் இருப்பவனது வாழ்வில் பல வண்ணமிருக்கும்! துணிவிருக்கும் வாழ்வில் துக்கமிராது.

    தெளிவிருக்கும் வாழ்வில் குழப்பமிராது. நோக்கம் இருப்பவனது வாழ்வில் ஏக்கமிராது. கடினமாக உழை, அறிவுப்பூர்வமாக உழை, உன் உழைப்பிற்குள் உன் வெற்றி ஒழிந்திருப்பதைக் கண்டுபிடி. உழைத்தால் தான் உயர முடியும். உயர்ந்துள்ளவர்கள் எல்லாம் உழைத்தவர்கள். உழைத்தவர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள். உழை, உழை , உழை, உழைக்காமல் இருப்பது தான் இவ்வுலகில் நீ செய்யும் பிழை. அதுவும் சந்திரன் சூரியன் பாராது உழை, உழைக்காமல் உயர்வு இல்லை, அதுபோல சிந்திக்காத நோக்கம் இல்லை செயல்படாத வெற்றி இல்லை, சரித்திரம் இல்லை.உளி படாத கல் சிலையானதாக சரித்திரம் இல்லை.

    உழைப்பில்லாத கனவு நனவானதாக சரித்திரமில்லை.

    உழைக்கத் தகுதியற்றவன் உலகில் பிழைக்கத் தகுதியற்றவன் என்ற கருத்தை ஏற்காதவர் உலகில் இல்லை.உழைப்பவனுக்கு மட்டுமே உலகம் உரிமையாகும் என்பது உண்மையாகும் .உலகத்தை ரசிபுத்தகத்தைப் புசி,கன்னியரை மதி, நல்லவர்களைத் துதி. வீதி வீதியாய்த் திரிவது தான் என் தலைவிதி என்று நினைக்காதே, அது பிரம்மனின் சதி.

    அதை வெல்ல வந்த மருந்துதான் மதி.வெற்றியும் தோல்வியும் உன் செயல்களைப் பொறுத்தே அமையும். காலம் உன்னை வெல்வதற்குள், காலத்தை நீ வென்றுவிடு. சரித்திரம் படிப்பவர் பலர். சரித்திரம் படைப்பவர் சிலர். எனவே சரித்திரம் படிப்பதை விட நீ படை.ஜாதகத்தைப் பார்க்காதே. இந்த சமுதாயத்தைப் பார். உலகை நீ துதி. உலகம் உன்னைத் துதிக்கும். உன்னைத்துதிக்க வேண்டும் என்பதற்காக உலகைத் துதிக்கலாகாது. கையளவு உள்ள உன் இதயத்தை முதலில் நீ அடக்கு. பின்பு உலகை உன் கைக்குள் அடக்கலாம் .உறக்கம் வரும்பொழுது உறங்கு. உனக்குள் உறக்கத்தை வரவழைத்துக் கொண்டு உறங்காதே. கம்ப்யூட்டரையே கரைத்துக் குடித்தாலும், கற்றது கடுகளவு என்றறி. ஆழமாகச் சிந்தி.

    அசுத்தமாகச் சிந்திக்காதே. முந்திச் செல்பவனுக்கு வழி விடு. முண்டிச் செல்பவனுக்கு சவால் விடு. நேற்றைய நாளை நினைவு நாளாக்கு. இன்றைய நாளை நல்ல நாளாக்கு. நாளைய நாளை சாதனை நாளாக்கு . ஆக்குவதும் ஆக்காததும் உன் கையில் . ஆகுவதும் ஆகாததும் உன் கையில். கருப்பாய் நீ இருந்தாலும் நெருப்பாய் இரு. எதிலும் நெருப்பாய் விழிப்புடன் செயல் படு. உண்மையைப் பேசு. உரக்கப் பேசு. இளைஞன் என்பதை இன்றே, இளமையிலேயே உணர். ஏற்றத்திற்கு அடுத்து வருவது இறக்கம். துன்பத்திற்கு அடுத்து வருவது இன்பம்.இன்பத்தைச் சென்றடைய பல துன்பங்களைக் கடந்து தான் ஆக வேண்டும்.

    உடலையும், உள்ளத்தையும், சிந்தனையையும், செயலையும் எவனொருவன் ஒன்றாக இயக்குகிறானோ அவனால் முடியாது என்பது உலகில் இல்லை. அனைத்தையும் ஒன்றாக இயக்குபவனே சுய ஆளுகையில் சிறந்தவன்.  மனம் எதையும் முடியும் என்று நினைத்ததால் தான், மனிதனால் முடியாதது இல்லை என்ற கருத்தும் சமூகத்தில் பிறந்தது. பலம் என்பது பலவீனம் என்பதும் உனது மனதே: பலம் என்பது   உடம்பில் இல்லை, மனதில் தான் இருக்கிறது. உன் பலமும், பலவீனமும் மனதில் தான் உள்ளது. மனதைப் பலப்படுத்தினாலே நீ சக்திவாய்ந்த பலமான மனிதனாகிவிடுவாய்.மன வலிமையினால் நீங்கள் எதை நினைத்தாலும் அதை அடைய முடியும்.

    இந்த இதழை மேலும்

    சிந்திக்க வைக்கும் சீனா – 5

    மறுநாள் காலை தயாராகி, அறையைக் காலி செய்து பெட்டிகளை வேனில் ஏற்றினோம். 6.30 மணிக்கு காலை உணவு சாப்பிட்டு, 7.15-க்கு ஏறி புல்லட் ரயில் நிலையம் சென்றோம்.

    இது விமான நிலையம் போல் உள்ளது. தரையில் தண்ட வாளங்கள், பிளாட் பாரங்கள் முதல் தளத்தில் கடுமையான சோதனைக்குப்பின் உள்ளே சென்றோம்.

    மதிய உணவாக புளிசாதம், தயிர் சாதம் கொடுத்தனர். டிக்கெட் பரிசீலித்து, லிப்ட் எஸ்கலேட்டர் வழி கீழே பிளாட்பாரம் சென்று புல்லட் ரயிலில் ஏறினோம்.

    காலை 9.48க்கு புறப்பட்டது. பஸ் போல 3 2 என்ற இருக்கைகள், பெட்டியின் இறுதியில் இரு கழிப்பறைகள், தனியே வாஷ்பேஷின், பெட்டிகள் வைக்க ஷெல்ப். சீட்டுக்கு மேலும் லக்கேஜ் கேரியரில் சிறு பெட்டிகளை வைத்துக் கொள்ளலாம். பெட்டிகள் மிக சுத்தமாய் இருந்தன.

    மணிக்கு 300 கி.மீ வேகம். வழயில் ஒரு ரயில்நிலையத்தில் நின்று புறப்பட்டது. கேட் திறப்பது கிடையாது. நம்மூர் போல இறங்கி ஏற இயலாது. கட்டாயம் புகை பிடிக்கக் கூடாது. புகைபிடித்தால் கைது செய்யப்படுவர் என அறிவிப்பு செய்துள்ளனர். பயணதூரம் 1216 கி.மீ இந்த புல்லட் ரயில் 14 ஜோடிகள் ஷியான் வடக்கு ரயில் நிலையத்திலிருந்து பீஜிங் மேற்கு ரயில் நிலையம் வரை இயக்கப் படுகின்றன. தின் பண்டங்கள் சிறு வண்டியில் வைத்து தள்ளி வந்து விற்றனர். டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டைப் பரிசீலித்துச் சென்றார்.

    சரியாக மதியம் 1.50 மணிக்கு சீனாவின் தலைநகரம் பீஜிங் சென்றோம். மழை பெய்தது. கைடு சரியில்லை. தான் திட்டமிட்டவாறு தான் பயணம் என்றார். கலந்து பேசி இந்த கைடு நாளை வேண்டாம் என்று கூறியதால், மறு நாள் புது கைடு வந்தார்.

    பட்டுத் துணி விற்பனை நிலையம் சென்று பார்த்தோம். பின் ஒரு மால் சென்று ஒருமணி நேரம் சுற்றினோம். பவர்பேங், மைக் வாங்கினேன். உடன் வந்தோர் செல்போன்கள் பேக், துணிகள் வாங்கினர்.

    பின் (Ganges Restaurant) கங்கை உணவகம் சென்று, நம் சமையல் கலைஞர்கள் சமைத்த வெஜ்புலவ், பாயசம், தயிர் சாதம் சாப்பிட்டோம்.

    ஓட்டல் நான்கு ஸ்டார் ஹீவான் சென்று, தங்கினோம். 18 மாடி கட்டடம். 15-ம் மாடியில் 10-ம் எண் அறையில் தங்கினேன். லிப்டில் அறை சாவி (கார்டு) காண்பித்தால், எத்தனாவது மாடியோ அந்த மாடிக்கு மட்டுமே போகும். இது புதுமையாக இருந்தது.

    மறுநாள் தயாராகி 7 மணிக்கு காலை உணவு முடித்து 8.15க்கு பஸ் ஏறி, 8.45க்கு புறப்பட்டோம். பெரிய உணவுக் கூடம். பல வகையான உணவுகள் இருந்தன. இங்கு சீனமக்கள் இருகுச்சியால் எந்த விதமான உணவையும் மிக வேகமாக, லாவகமாக எடுத்துச் சாப்பிட்டனர். அதேபோல் சாப்பிட்டு போட்டோவும் எடுத்துக் கொண்டேன்.

    புது கைடு “மே” (MOIE) வந்தார். கனிவாக விபரங்கள் கூறினார். பீஜிங் நகரின் நடுவிலும் நதி ஓடுகிறது. சுத்தமாயுள்ளது. இது உலகின் 10-வது பெரிய நகரமாம்.

    முதலில் தியானன் மென் (TIANANMEN SQUARE) சதுக்கம் சென்றோம். இந்த இடத்தை 3 மணி நேரம் சுற்றிப் பார்த்தோம். சீனாவின் வளர்ச்சியில் இந்த இடத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

    தெய்வீக அமைதிக்கான வாயில் (GATE OF HEAVENLY PEACE) என்பது தான் தியானன் மென் என்பதன் அர்த்தமாகும். பீஜிங் நகரின் மையத்தில் உள்ளது. 100 ஏக்கர் பரப்புள்ளது.

    1415 ல் கட்டப்பட்டது. 17-ம் நூற்றாண்டில் சேதமானது. மீண்டும் சரி செய்யப்பட்டு 1950 ல் 4 மடங்காக விஸ்தரிக்கப்பட்டது. இங்குள்ள திறந்த வெளி அரங்கில் 6 லட்சம் பேர் அமரலாம். மக்களுக்காகச் சேவை செய்தோருக்கான நினைவுச் சின்னமாகும்.

    சீனாவின் தேசிய மியூசியம் உள்ளது. மாசேதுங்கின் கல்லறை (MAUSOLEUM) உள்ளது. இவர் 1.10.1949 ல் மக்களின் சீனக் குடியரசை அமைத்தார். (கம்யூனிஸ்ட் கட்சி)

    இதன் ஒரு பகுதியில் தினமும் அணி வகுப்பு நடை பெறுகிறது. நம் நாட்டு டில்லியில் உள்ள செங்கோட்டை போன்றது.

    இதன் தொடர்ச்சியாக (FORBIDDEN CITY) தடை செய்யப்பட்ட நகர் உள்ளது. 1420 முதல் 1912 வரை சீனாவை ஆட்சி செய்த அரசர்களது மாட மாளிகைகள், அரண்மனைகள் கலைக் கூடங்கள் என மொத்தம் 980 கட்டடங்கள் உள்ளதாம். 180 ஏக்கர் பரப்பாம். வருடம் ஒன்றுக்கு சுமார் 1.30 கோடி மக்கள் வந்து பார்க்கிறார்கள். சில இடங்களில் தரை தங்கச் செங்கல்களால் கட்டப்பட்டதாம். சில பகுதிகள் மட்டும் பார்த்தோம்.

    மதிய உணவுக்குப்பின் (TORRIS) டோரிஸ் என்ற ஷாப்பிங் மால் சென்று சுமார் 4 மணி நேரம் 5 மாடிகளிலும் உள்ள கடைகளைப் பார்த்தோம். பலரும் பொருடகள் வாங்கினர்.

    இரவு பூரி மசால், மெதுவடை, தயிர் சாதம் சாப்பிட்டு 8 மணிக்கு அறைக்குத் திரும்பினோம். ஓட்டலில் வை-பை வசதி இருந்தாலும் வாட்ஸ் அப் தடை செய்யப் பட்டுள்ளதால், படங்களை அனுப்ப இயலவில்லை. இரவு மழை பெய்தது.

    மறுநாள் காலை (சுற்றுலாவின் இறுதிநாள்) தயாராகி, 7 மணிக்கு காலை உணவு முடித்தோம். தினமும் குளியல் அறையில் சீப்பு, ஷேவிங் செட், டூத்பேஸ்ட், பிரஷ், துணி காலணி வைக்கின்றனர்.

    8.30 க்கு அறைகளைக் காலி செய்து பெட்டிகளை பஸ்ஸில் ஏற்றினோம். 9.30  க்கு புறப்பட்டு ஹைவே வழியே சென்று ஒரு ஜேடு பாக்டரியைப் பார்த்தோம். இந்த சுற்றுலா நிறுவனம் இதுபோல் சில தயாரிப்பு மற்றும் விற்பனை அங்காடிகளுக்கு அழைத்துச் சென்றது வித்தியாசமாயிருந்தது. நம்மூரைவிட இங்கு விலை அதிகம்.

    பின் உலக அதிசயங்களுள் ஒன்றான நிலவிலிருந்து பார்த்தாலும் தெரியும் சீனப்பெரும் சுவரைக் காணச் சென்றோம்.

    6280 கி.மீ நீளமுள்ளது இச்சுவர். மூன்று கணவாய்கள் உள்ளன. அவை ஜியாயு குவான் ஷாங்கை குவான் மற்றும் ஜீயோங் குவான். நாங்கள் சென்றது பீஜிங்கிலிருந்து சுமார் 130 கி.மீ தூரத்திலுள்ள ஜீயோங் குவான் கணவாய் பகுதி.

    கி.மு 770 கட்ட ஆரம்பித்து கி.மு 440 முடிய பல அரசர்களால் கட்டப்பட்டது.

    சுவற்றில் அகலம் 54 அடி முதல் 4 அடி வரை இடத்துக்கேற்றாற்போல் அமைந்துள்ளது. உயரமான படிகள். ஆங்காங்கே காவல் கோபுரங்கள், ஏப்ரல் மாதம் மலை முழுதும் மலர்களாகத் தெரியும் என்றனர். ஆனால் பசுமையான மலைப் பகுதியைத்தான் பார்த்தோம்.

    ஆசைக்கு 100 படிகள் ஏறி, இறங்கி போட்டோ எடுத்துக் கொண்டு புறப்பட்டோம். எக்ஸ்பிரஸ் பாதையில் 4 வாகனப்பாதை உள்ளது. இரு புறமும் சர்வீஸ் பாதை உள்ளது. அதில் வரும் வாகனங்கள் எக்ஸ்பிரஸ் பாதையில் நுழைய தனி ஷெட் போட்டு வழி ஏற்படுத்தி உள்ளனர்.

    அமெரிக்கா, இங்கிலாந்து போல, இப்பாதையில் குறிப்பிட்ட தூர இடைவெளியில் மால்போல் அமைத்து சிரமபரிகாரம் (REST ROOM) செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

    பகல் 2.30க்கு உணவகம் சென்று சாதம், கேசரி, பகோடா என்று நம்மூர் உணவு சாப்பிட்டோம். புறப்பட்டு மூங்கில் மார்க்கெட் சென்று பார்த்தோம்.

    மூங்கிலில் இருந்து நூல் (லினன்) தயாரித்தல், அதிலிருந்து துணி உற்பத்தி செய்தல் ஆகியவற்றை விரிவாய் கூறினர். ஏராளமான சுற்றுலா பஸ்கள் வந்து செல்கின்றன. கழிப்பிடப் பராமரிப்பு சரியில்லை. முகம் துடைக்கும் சிறு துண்டு ரூ.200-க்கு வாங்கினேன்.

    பின் சம்மர் பேலஸ் பகுதிக்குச் சென்றோம். குன்மிங் என்ற பெரிய ஏரி. சுற்றிலும் பசுமையான மலைகள். மலையில் பெரிய வீடு தொலைவில் தெரிந்தது. ஏரிக்கரையிலிருந்து பார்த்தோம். இங்கு முந்தைய மன்னர்கள் வெயில் காலத்தில் ஓய்வு எடுத்தனராம்.

    இந்தப் பகுதி முழுவதும் 2.9 சதுர கி.மீ இதில் ஏரி மட்டும் 2.2 சதுர கி.மீ அதாவது சுமார் 540 ஏக்கர் என்றனர். ஸ்டோன் போட் என்ற பெயரில் நீளமான படகில் பயணிகளை ஏற்றி ஏரியை வலம் வந்தனர். வெயில் காலத்தில் வெப்ப நிலை சுமார் 40 க்கு மேலிருக்குமாம்.

    இந்தப் பகுதியில் தமிழ் முகங்களைப் பார்த்து, மகிழ்ந்து விசாரித்தோம். மதுரை, சென்னை அன்பர்கள் முருகன் டிராவல்ஸ் மூலம் வந்துள்ளதாயும், உணவு இந்திய உணவங்களில் ஏற்பாடு அதுவும் சுமார் தான் என்றனர்.

    அதன் பின் உணவகம் சென்று நாண், குருமா, சேமியா, கிச்சடி, தயிர் சாதம் சாப்பிட்டோம். ஊர் திரும்பும் பயணத்துக்குத் தயாராகி 7.30க்கு புறப்பட்டு, இரவு 8.30க்கு பீஜிங் விமான நிலையம் சென்றோம்.

    இந்த இதழை மேலும்

    நினைப்பதே நடக்கும் – 1

    ஒருமுறை குவைத்திலுள்ள “அதான்” எனும் ஒரு பிரபல அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். பொதுவாக மருத்துவமனைக்கு போனாலே மனசெல்லாம் ஒரு வலி வருகிறது இல்லையா? மருத்துவமனை என்றாலே, அண்ணனுக்கு அடிப்பட்டதும், அம்மாவிற்கு உடல்நலம் சரியில்லாம இருந்ததும், அப்பா வலியில் துடித்ததுமே எல்லோருக்கும் நினைவில் வரும். உடனிருப்பவர்கள் ஒவ்வொருவராய் இறந்துகொண்டே வருகையில் இருப்பதுகூட பயமாகித்தான் விடுகிறது. நான் சரியாக இருக்கிறேன் என்பதையே பிறரின் தவறுகளைக் காண்கையில்தானே அறிகிறோம்? பிறருக்கு வலிக்கும்போதுதான் நான் பாக்கியசாலியென எண்ணம் வருகிறது. சில யோசனைகளோடு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவின் வாசலோரம் நிற்கிறேன்.

    ஒருவருக்கு கார் விபத்தில் அடி பட்டு கால் நசுங்கி ஒரு ஸ்டெக்சரில் இழுத்துவருகிறார்கள். உள்ளே வந்ததும் அவரை வேறொரு ஸ்டெக்சரில் மாற்றி ஏதோ ஒரு பொருள்போல தூக்கிப்போட்டுக்கொண்டு எல்லோரும் வண்டியை தள்üயவாறு உள்ளே ஓடுகிறார்கள், ரத்தம் பொலபொலவென கால்வழியே ஊற்றுகிறது. பார்க்க கண் கீறி வலிக்கிறது. இரத்தத்தை கண்கொண்டு பார்க்கமுடிவதில்லை. எப்படி கழுத்தை அருக்கிறார்களோ தெரியவில்லை. கொலைபாதகர்கள். துடிக்கத்துடிக்க மனைவியின் கழுத்தை கணவன் வெட்டியதாக செய்தியில் படிக்கிறோம், உள்ளம் நடுங்கிப்போகிறது அதை நினைத்தாலே. மனைவியென்பவள் எத்தனை அன்பானவள், இன்னொரு தாயில்லையா ? அவளை அடிக்க முதலில் மனம் வரலாமா? அவளை திட்டினால் வலிக்கிறதே, அவள் அழுதாள் வலிக்கிறதே, எப்படி கழுத்தை வெட்டுவானவன் படுபாவி. இரக்கமற்றவர்களும் கூடும் இடமது நாடு இல்லையா?

    சடாரென இன்னொருவன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு பதறியபடியே காரிலிருந்து இறங்குகிறான், பின்னே ஓடிவந்தபடி மனைவி கதறுகிறாள், குடும்பமே ஓடி வருகிறது, அந்த குழந்தை ஏனோ இழுத்து இழுத்து மூச்சை வலியோடு விடுகிறது. தூக்கிக்கொண்டு உள்ளே ஓடுகிறார்கள். அவசர சிகிச்சைப் பிரிவின் எல்லா அறைகளும் ஆங்காங்கே சரசரவென திறக்கிறது. ஆபரேசன் தியேட்டர் ஓடு ஓடு என்கிறார்கள் சிலர். மருத்துவர்களும் செவிலியத் தாய்களுமாய் பின்னே துரிதமாக ஓடி எல்லோருமந்த அறைக்குள் நுழைகிறார்கள். கதவு படாரென சாற்றப்படுகிறது. மனதுள் ஒரே பயமெனக்கு. கடவுளே என் புள்ளை, எனது பிள்ளையைக் காப்பாற்று. என் பிள்ளைகளுக்கு எதனா இப்படி ஆனா(?) அச்சோ ச்ச பாழும் மனமே, பாவம் இந்த குழந்தையைப் பாரு, கடவுளே முதலில் இந்தக் குழந்தையைக் காப்பாற்று, எனது பிள்ளைகளுக்கு ஒன்னும் ஆகாது, இந்தப் பிள்ளையை காப்பாற்று இறைவா.., மனதுள் வேண்டிக்கொள்கிறேன்.

    ஒரு ஓரத்தில் நின்றிருக்கையில், வேறொரு அரபி எனை எட்டிப்பார்த்து ஏய் என்ன என்கிறார். குவைத் தேசத்தின் விசால மருத்துவமனை இது. பின்புறமுள்ள நுழைவாயிலின் முகப்பில் நிற்கிறேன் நான். ஏய்.. போ போ.. அங்கே போ இங்க நிற்காதே என்கிறார் அவர் மீண்டும். அவரிடம் போய் எனக்கொரு டோக்கன் வேண்டும் காய்ச்சல் அடிக்கிறது என்றேன், மருத்துவம் பார்க்க வேண்டுமென்றேன். அவர் என்னவோ எனது நாய்க்குட்டிக்கு காய்ச்சல் என்றதைப்போல எனைப் பார்த்துவிட்டு போ போ இந்த டோக்கனை பெற்றுக்கொண்டு போய் அங்கே வரிசையில் நில் என்றார். அவர் ஏய் ஏய் என்றதை எனது தன்மானம் துüயும் ஏற்கவில்லை. எனினும் ரத்தம் கொதிக்க நகர்ந்து அங்கே போனேன். “ஏன் எனது தேசத்தை சுதந்திர தேசமேன்கிறோம்” எனும் கேள்விக்கான பதில் இப்படி சரியை சரியாக சொல்லவோ, நீதியை அதன்படி உள்ளவாறு கேட்கவோ, குறைந்தபட்சம் இது நடந்ததென எடுத்துக்கூறவோ கூட அவகாசமில்லாதுபோகையில், இம்மண்ணிற்காக தலைமுறை தலைமுறையாய் உழைத்துக் கொண்டிருக்கிறோமே என்றெண்ணுகையில் தோன்றுகிறது ஏன் ஓணானை உள்ளூரில் பிடிக்கவேண்டுமென்று.

    எப்படியோ ஸ்டாம்ப் ஒட்டி மருத்துவரை அணுக விவரப்படிவம் பெற்றுக்கொண்டு போய் வேறொரு வரிசையில் எனது டோக்கன் எண் வருவதற்காக நின்றுகொண்டேன். சற்று தூரத்தில் இன்னொரு குவைத்தியர் படுஜோராக நின்றிருந்தார். தனது சட்டைப்பையில் கைவிட்டு குவைத்தின் பணக்கட்டுக்களை எடுத்து திருப்பி திருப்பிப் பார்க்கிறார். குரங்கிடம் ஒரு சட்டியில் சில காய்களைப் போட்டு கொடுத்துவிட்டால் அது எப்படி துழாவி துழாவி ஒன்றை விட்டுவிட்டு ஒன்றை எடுக்குமோ தேடுமோ அப்படி அவரும் ஒரு பணக் கட்டை எடுத்து வெüயே வைத்துக்கொண்டு மீண்டும் வேறெதையோ சட்டைபையில் கைவிட்டவாறு தேடிக்கொண்டிருந்தார். கொஞ்சம் இங்கும் அங்குமாக நடந்தார். சிலரின் முகங்களை ஏற இறங்கப் பார்த்தார். மெல்ல நகர்ந்து அங்கிருந்த ஒவ்வொருவரையாய் ஏதோ கேட்டுவிட்டு மீண்டும் தனது பழைய இடத்திற்கே திரும்பிவந்தார். சிலவேளை நாம்கூட அப்படித்தான் கொடீஸ்வரன் ஒருவர் பேருந்தில் ஏறிவிட்டால் ஒரு ரூபாய் டிக்கெட்டெடுக்க பத்துகோடி பணம் வங்கியில் இருப்பதாகச் சொல்வாரே அதுபோல மருத்துவமனை, தபால் நிலையம், பயணச்சீட்டு வாங்க மற்றும் பிற பொது இடங்களுக்குச் செல்கையில் நிறையப்பேர் இப்படி சரியானா சில்லறைகளை கொண்டுவராமல் தெருநெடுக்க கடைகüல் ஏறி இறங்கி நடப்பதை அறிகிறோம், இந்த குவைத் நாட்டில் பல பெரிய மருத்துவமனைகüல் “அதான்” என்பதும் ஒன்று. இங்கே சிகிச்சை பெற அப்போது இரண்டு தினார் ஸ்டாம்ப் ஒட்டி தரவேண்டும். ஸ்டாம்ப் இங்கே பொதுவாக தானியங்கி எந்திரங்கüலிருந்து கிடைக்கும். அந்த குவைத்தியருக்கும் இன்று அப்படித்தான் இரண்டு தினார் ஸ்டாம்ப் எடுக்க வேண்டுமாயிருந்தது. ஏனோ அவர் ஒரேயொரு குவைத்தி தினாரை கையில் வைத்துக்கொண்டு இன்னொரு குவைத்தி தினார் வேண்டி இத்தனை பாடு பட்டுக்கொண்டிருந்தார்.

    கலியாணத்திற்கு மொய்ய்யெழுதக் கேட்டால் நம்மாள் உடனே எடுத்து நீட்டுவான், அரசு அலுவல்ல லஞ்சம் தரணும்னு கேளு தோ இருக்கு சார் குடு சார்னுவான், அதே ஒரு பத்துருபா சில்லறை குடேன் உயிர் போகுதுன்னு கேட்டுப்பாறேன், உயிரா ? யார் உயிருன்னு பார்க்குறாமாதிரியே எட்டி நிப்பான். இங்கே நமது அரபிகள் மட்டும் சளைத்தவர்களா என்ன? யாரும் அவருக்கு ஒரு குவைத் தினாரையோ அல்லது சில்லரையினையோ தரவில்லை. பெரும்பாலும் சில்லறையாக எல்லோரும் இருபது குவைத்தி தினாருக்கெல்லாம் இங்கே வைத்திருப்பதில்லை.

    தூர நின்று இதைக் கண்ட நான் வேகமாக அவரிடம் சென்று, அய்யா அய்யா, உங்களுக்கு ஒரு தினார் தானே வேண்டும் இருங்க நான் தறேன் என்றேன், அவர் சடாரென சட்டைப் பைக்குள் கைவிட்டு ஒரு கற்றை பண நோட்டுகளை எடுத்து அதிலொன்றை நீட்டினார். ஐயோ இருபது தினார் நோட்டு அது. எனக்கு உடம்பெல்லாம் ஆனந்தக் கூத்தாடும் ஐயனார் போல முடிகள் நட்டுக்கொண்டு நின்றது, அடப்பாவி மனுசா ஒரு தினாருக்கு இருபது தினார் தாறானேன்னு நினைத்து ஆன்னு பார்த்துட்டிருந்தா, அந்த நேரம் பார்த்து நம்ம அறம் சும்மா விடுமா, அது ஏதோ உள்ளே மனதையரிக்க, சரி விடு, அதலாம் பரவாயில்லை ஐயா எனக்கு இருபது தினாரெல்லாம் வேண்டாம் என்றேன்.

    உடனே அவர் அரபியில் “சுனு……?” என்று வினவியவாறு பார்த்தார், என்ன… என்றுக் கொவம்போல குறுகுறுவென நோக்கினார், இல்லை ஐயா, ஒரு தினாருக்கு நீங்க இருபது தினாரை தறீங்களே என்றேன், அவர் உடனே பைத்தியமா? நானென்ன சில்லறைக்கு தானே கொடுத்தேன் உனக்கு மொத்தமாவா தர்றேன்னாரே பார்க்கணும் எனக்கு உணர்வெல்லாம் உள்ளே சொய்யேன வாலாட்டி படுத்துக்கொண்ட நாயை போல சோர்ந்துக்கொண்டது.

    சில்லறை என்னிடம் இல்லையே, உங்களுக்கு ஒரு தினார்தானே வேண்டும், இதோ இதை வைத்துக்கொள்ளுங்களென கொடுத்தேன், அவர் அதற்கு அதலாம் செல்லாது செல்லாது, அதும் நான்போய் ஒரு இந்தியிடமிருந்து (பொதுவாக அரேபியர்கள் அதிகபட்சம் நமை இந்தி என்றுதான் அழைப்பதுண்டு) ஒரு இந்தியிடமிருந்து போய் கேவலம் ஒரு தினாரை வாங்கிக்கொள்வதா என்றெண்ணி மீண்டும் எல்லோரிடமும் கையேந்த துவங்கினார், சுற்றி சுற்றி வருகிறார் யாருமே தரவில்லை, அவருக்கு சீ போ என்றானது.

    நான் மெல்ல நகர்ந்து அவரிடம் போய் ஐயா இங்க வாங்களேன் என்றேன் வந்தார். அருகில் சென்று மெல்ல அவரிடம் சொன்னேன் நீங்கள் இப்படி எல்லோரிடமும் கேட்டு நடப்பதால் தானே அதை தவிர்க்கவேண்டி நான் ஒரு தினார் தருகிறேன் என்றேன், அதையும் வாங்கிக்கொண்டு பிறகும் நீங்கüப்படி எல்லோரிடமும் சுற்றினால் என்ன கதை என்றேன். இல்லையில்லை உன்னிடம் நானெப்படி வாங்குவது அது சரியில்லை, இது உன் பணம், உனக்கு மீண்டும் தரவேண்டுமில்லையா என்றார், மிகச் சரி, ஆனால் இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள் ஒருவருக்கு ஒருவர் சட்டென உதவும் அவசரத்திற்கு தான் இந்த பணம் பொருள் இன்னபிற எல்லாமே, பரவாயில்லை வைத்துக் கொள்ளுங்கள் என்றேன். அதற்கவர் இல்லையில்லை என்னிடம் இவ்வளவு பணம் இருக்கிறது ஒரு தினார் இல்லையே என்று மீண்டும் கவலைப்பட்டார்.

    அவரை புரிந்துக் கொண்ட நான் சொன்னேன், சரி உங்களுக்கு என்ன பிரச்சனை இப்பணத்தை எனக்கு மீண்டும் எப்படி திருப்பி தருவது என்று தானே? ஆமாம் ஆமாம் என்றார். நல்லா தலையை இதுக்கு மட்டும் ஆட்டு, ஏன் அவ்வளோ பணத்துல இருந்து ஒரு இருபது தினாரை மட்டும் கொடுத்தாதான் என்ன என்று நினைத்துக்கொண்டு சிரித்தவாறே “ஐயா ஒன்று செய்யுங்களேன், இந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு இப்போதைக்கு நீங்கள் ஸ்டாம்ப் எடுங்கள், பிறகு இவ்வழியே வருகையிலோ அல்லது எங்கோ வேறு யாரையோ நீங்கள் வருத்தப்படும்போது கண்டாலோ அல்லது யாரேனும் ஒரு ஏழை மனிதரோ அல்லது ஒரு முதியவரையோ எங்கேனும் கண்டாலோ இந்த என்னிடம் பெற்ற ஒரு தினாரை அவரிடம் கொடுத்துவிடுங்கள், அது பிறகு தானே எனக்கு கிடைத்துவிடும் என்றேன்.

    அவர் ஒரு நொடி ஆடிப்போய் விட்டார். இது என்னய்யா இது, நான் உன்னிடமிருந்து பணம் பெறுகிறேன், அதை நீ பிறகு யாரோ ஒரு ஏழைக்கு கொடு அல்லது இயலாதோருக்கு கொடு பிறகு அது எனக்கு வேறெங்கோ கிடைத்துவிடும் என்கிறானே இவனென பலத்த யோசனையோடு எனைப் பார்த்தார். நான் மீண்டும் சொன்னேன். எனக்கு ஒன்றாக இல்லை ஐயா இரண்டாகவே கிடைத்துவிடும் நீங்க போங்களென கூறிவிட்டு நான் அங்கிருந்து நடந்துவிட்டேன். அவர் கையி|ருந்த கற்றைப் பணமும் அவருடைய சட்டைப் பைக்குள் பல ஏழைகüன் கேள்விக்குறிகளை கிண்டலடித்துக்கொண்டிருந்தது.

    பொதுவாக நல்லதை இப்படி யாருக்கேனும் சொல்கையிலோ செய்கையிலோதான் நான் உயிர்வாழ்வதாக ஒரு எண்ணமே எனக்கு வருவதுண்டு. வாழ்வதன் அர்த்தமே நன்மைக்கென எண்ணிக்கொண்டால், நன்மையின் சாட்சியாகவே நாமும் அமைந்துவிடுவதை வாழ்பனுபவமாக கண்டுவருகிறேன். அது சரி “நினைப்பது நடக்கும்” என்று தலைப்பை கொடுத்துவிட்டு அதென்ன இவர் ஏதேதோ வேறு சொந்தக் கதைகளை சொல்கிறாரே என்று எண்ணுகிறீர்களா? அந்தப் பணம் உண்மையிலேயே அதே நாüல் எனக்கு இரட்டிப்பாய் கிடைத்தது என்பதும் உண்மை. ஆனால் எப்படி கிடைத்ததென அடுத்த தொடரில் சொல்கிறேன். அதுவரை காத்திருங்கள்.

    எண்ணங்களை விதைத்திருங்கள் அது விளையும், நல்லதையே நினைத்திருங்கள் அது நிச்சயம் நடக்கும்..

    தொடரும்..

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில் – 60

    உணர்வுகளின் அர்த்தங்கள்

    அவர் ஒரு வயதான பெரியவர்

    கையிலே ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்துக்கொண்டு அடிக்கடி அதனை பார்த்துக் கொண்டிருப்பார். பின்னர், சிறிதுநேரம் வேறு வேலைகளைச் செய்துவிட்டு மீண்டும் கண்ணாடியை எடுத்து சிறிதுநேரம் முகத்தை பார்ப்பார். பிறகு சிந்தனை செய்வதில் நேரத்தை செலவழிப்பார்.

    இது அவரது வாடிக்கையான செயலாக மாறிவிட்டது.

    வயதான பெரியவர் அடிக்கடி முகக் கண்ணாடியில் அழகு பார்க்கிறாரே? அந்த “கண்ணாடி இரகசியம்” என்ன? என்பதை அறிய அவரைக் கவனித்துக்கொண்டே இருந்தான் பக்கத்துவீட்டு இளைஞன். தொடர்ந்து ஒரு வாரத்திற்குமேல் கூர்ந்து கவனித்தபின்பும் வயதான பெரியவர் கண்ணாடி பார்க்கும் மர்மம் அவனுக்குப் புரியவில்லை.

    “இந்த கண்ணாடி, மிகப்பெரிய அதிசயங்களை நிகழ்த்தும் வித்தைகள் காட்டும் கண்ணாடியாக இருக்குமோ?” என்று சிந்தித்தான். அவனால் விடைகாண முடியவில்லை. முடிவில் ஒருநாள் அந்த வயதான பெரியவரிடமே தனது சந்தேகத்தை தீர்க்க வேண்டும் என முடிவு செய்தான். பெரியவரிடம் நேரில் வந்தான்.

    “அய்யா நான் கேட்பதை தவறாக நினைக்காதீர்கள். உங்களை பத்து நாட்களாக நான் கவனித்து வருகிறேன். அடிக்கடி நீங்கள் கண்ணாடியில் முகம் பார்க்கிறீர்கள். உங்கள் கையில் இருப்பது மாய கண்ணாடியா? ஏன் இதனை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டான்.

    இளைஞனின் கேள்வியைக் கவனித்த பெரியவர் சிரித்தார்.

    “என்னிடம் இருப்பது சாதாரண கண்ணாடிதான். இந்தக் கண்ணாடியில் என்னைப் பார்த்தால் என் முகம் தெரியும். உன்னைப் பார்த்தால் உன் முகம்தான் தெரியும். வேண்டுமென்றால் நீயே பார்த்துக்கொள்” என்று கண்ணாடியை அவன் கையில் கொடுத்தார். ஆவலோடு அந்தக் கண்ணாடியை வாங்கிப் பார்த்தான் இளைஞன்.

    அந்தக் கண்ணாடி சாதாரண முகம்பார்க்கும் கண்ணாடி என்று புரிந்துகொண்டான்.

    “ஏன் இந்தப் பெரியவர் அடிக்கடி கண்ணாடியை பார்த்துக்கொண்டு இருக்கிறார்?” என்ற சந்தேகம் அவனுக்குள் வலுப்பெற்றது.

    பெரியவர் தொடர்ந்து பேசினார்.

    “தம்பி… நான் இந்த சாதாரண கண்ணாடியை ஏன் அடிக்கடி பார்த்துக்கொண்டே இருக்கிறேன்? என்ற கேள்வி உனக்குள் எழுகிறது அப்படித்தானே?”.

    “ஆமாம்”.

    “இது சாதாரண கண்ணாடிதான். ஆனால், இந்தக் கண்ணாடி நமக்கு நிறைய வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத் தருகிறது. இந்தக் கண்ணாடியை பார்க்கும்போதெல்லாம் உனக்கு சில சிந்தனைகள் மனதிற்குள் வரவேண்டும். நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு இந்த சாதாரண கண்ணாடி போன்றே இருக்க வேண்டும்” என்றார்.

    இளைஞனுக்கு ஒன்றும் புரியவில்லை.

    “இந்தக் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் நமது முகத்தில் அழுக்கு இருந்தால் அதை அப்படியே காட்டும். குறைகள் இருந்தால் உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்கும். நம்மிடம் இருப்பதை அப்படியே பிரதிபலிப்பதுதான் கண்ணாடியின் பணி. இதைப்போலத்தான், நாம் நமது மனதை வைத்துக்கொள்ள வேண்டும். நம்மைச் சார்ந்தவர்கüடம் குறிப்பாக உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்கüடம் ஏதேனும் குறைகள் இருந்தால், இந்தக் கண்ணாடியைப்போலவே உள்ளதை உள்ளபடி சுட்டிக்காட்ட முன்வர வேண்டும். மாறாக, சில கற்பனைகளை சேர்த்து, குறைகளை அதிகமாகக் காட்டும் விதத்தில் தெரிவிக்கக்கூடாது. இல்லாத குறையை இருப்பதுபோல காட்டி மிகைப்படுத்தும்போதுதான் நமக்குள் பிரச்சினை வருகிறது. எனவே, கண்ணாடி சொல்லும் முதல் பாடம் ‘உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும்’ என்பதுதான்” – என்றார் பெரியவர்.

    “கண்ணாடி சொல்லும் இரண்டாவது பாடம் சற்று வித்தியாசமானது. இந்த சாதாரண கண்ணாடியை நீ பார்க்கும்போது மட்டும்தான் அது உனது குறையைச் சுட்டிக்காட்டுகிறது. கண்ணாடியைப் பார்க்கவில்லையென்றால் அந்தக் கண்ணாடி உன் குறையைச் சுட்டிக்;காட்டுவதில்லை. இதைப்போலத்தான் நாமும் ஒருவரை நேரில் சந்திக்கும்போதுதான் அவரது குறையை சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாதபோது அவரைப்பற்றி அவதூறு பேசக்கூடாது” – என்பதை இந்தக் கண்ணாடி நமக்குக் கற்றுத்தருகிறது என்று தொடர்ந்து சொன்னார் பெரியவர்.

    பெரியவரின் பேச்சை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

    “கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும்போது அந்தக் கண்ணாடி நமது முகத்திலுள்ள குறைபாடுகளைக் காட்டினால், அந்தக் கண்ணாடிமீது நாம் கோபப்படுவதில்லை. ஆத்திரப்படுவதில்லை. ஆனால், அதேவேளையில் அந்தக் கண்ணாடியைப் பார்த்து முடிந்தபின்பு பாதுகாப்பாக எடுத்து வைத்துக்கொண்டு நாள்தோறும் கண்ணாடி பார்க்கிறோம். இதைப்போலவே, சிலர் நமது குறைகளை சுட்டிக்காட்டி பேசும்போது அவர்கள்மீது வருத்தப்படக்கூடாது. கோபத்தில் அவர்களை திட்டக்கூடாது. மாறாக, அந்தக் குறைகள் உண்மை என அறிந்தால் நமது குறைகளை நீக்குவதுதான் அறிவார்ந்த செயலாகும். இதுவும் கண்ணாடி நமக்குக் கற்றுத்தரும் இன்னொரு பாடமாகும்” – என்றார் பெரியவர்.

    ஒரு கண்ணாடி இத்தனை வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத்தருகிறதே என்று எண்ணும்போது இளைஞன் ஆச்சரியப்பட்டான். கண்ணாடி ரகசியம் தெரிந்தபின்பு அவன் தன்னை மாற்றிக்கொள்ளவும் முயற்சி செய்தான்.

    ஒரு சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடி வாழ்க்கை யதார்த்தங்களைப் பிரதிப|க்கின்றது. இதைப்போலத்தான் நாம் பயன்படுத்துகின்ற பொருட்கள் பல வாழ்க்கைத் தத்துவங்களை நமக்கு புரியவைக்க முயற்சி செய்கிறது. அதனைப் புரிந்துகொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றிகளைக் காண்கிறார்கள். நாம் பயன்படுத்தும் பொருட்களைத்தவிர பயன்படுத்தாத பொருட்களும் வாழ்வியலை நமக்கு எüதாகக் கற்றுத் தருகின்றன.

    நாம் நாளும் சந்திக்கும் மனிதர்கள், அவர்கள் கூறும் கருத்துக்கள், அவர்களது அங்க அசைவுகள், அவர்கüன் செயல்பாடுகள் போன்றவைகளெல்லாம் எத்தனையோ வாழ்வியல் கருத்துக்களை நமக்கு உணர்த்துகின்றன. நாம் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் கையாளும் பொருட்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும், உணர்த்தும் பாடங்களையும் உள்ளுணர்வோடு புரிந்துகொள்ளும் சக்தி கொண்டவர்களால் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.

    எல்லாச்சூழ|லும் வாழ்விய|ன் நெறிகளை நாம் உணர்ந்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பொதுவாக – மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்கள்மூலம் நாள்தோறும் நாம் பல்வேறு உணர்வுகளைப் பெறுகிறோம். அந்த உணர்வுகள் உணர்த்தும் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொண்டவர்கள் மட்டுமே தங்கள் வாழ்க்கை நிலையை மேன்மையாக்கிக் கொள்கிறார்கள்.

    நாள்தோறும் நமக்குள் உருவாகும் உணர்வுகளை வகைப்படுத்தி, நெறிப்படுத்தி நேர்மையான பாதையில் பயணிக்க முறையான பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். தேவையில்லாத உணர்வுகளை சேமித்து வைப்பதும், அவசியமற்ற தகவல்களை அடைகாப்பதும், நேர்மையற்ற செயல்கüல் களம் இறங்கி செயல்படுவதும் பலரை மாற்றுப்பாதையில் பயணிக்க வைத்துவிடும்.

    நமக்குள் தோன்றும் உணர்வுகüன் உண்மை நிலையை புரிந்துகொள்வது, வாழ்க்கை முன்னேற்றத்தின்; அடிப்படை என்பதை நாம் எப்போதும் நினைவில்கொண்டு செயல்படுவது சிறந்த வெற்றிக்கு துணை நிற்கும்.

    தொடரும்.

    இந்த இதழை மேலும்

    உள்ளத்தோடு உள்ளம்

    ஃபிலடெல்பியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஜரார்டு. இவர் கடவுள் மறுப்புக் கொள்கையாளர். ஒரு நாள் சனிக்கிழமையன்று அவர் தமது நிறுவனத்தில் பணிப்புரியும் பணியாட்களை அனைவரையும் அழைத்து, நாளை ஞாயிற்றுக்கிழமை அனைவரும் அலுவலகம் வர வேண்டும்  என்றும் புதிதாக வந்திருக்கும் பொருட்களை வண்டியிலிருந்து இறக்க உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டர்.

    அப்போது கூட்டத்திலிருந்து ஒரு இளைஞன் மட்டும் ஐயா என்னால் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்ய முடியாது என்றான்.

    இளைஞனே உனக்கு நம்முடைய நிறுவனத்தின் சட்ட திட்டங்கள் பற்றி தெரியும் என்று நினைக்கிறேன் என்றார் ஜிரார்டு.

    தெரியும் ஐயா ஆனாலும் என்னால் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்ய இயலாது என்று மறுபடியும் சொன்னான்.

    அப்படியானால் சரி. நீ உடனே கம்பனி காசாளரைப் போய் பார்த்து உன்னுடைய கணக்கை முடித்துக் கொள் என்றார். அவனும் அதற்கு மறுப்புத் தெரிவிக்காமல் நின்று விட்டான்.

    ஒருநாள் வங்கி மேலாளர் ஒருவர் எங்களின் வங்கிக்கு தகுதியான காசாளர் வேண்டும், அதற்கு நீங்கள் தான் யாரையேனும் பரிந்துரைக்க வேண்டும் என்று ஜிரார்டிடம் கேட்டார். சற்றும் தயங்காத ஜிரார்டு தனது நிறுவனத்தில் வேலை நீக்கம் செய்யபட்ட அந்த இளைஞனையே காசாளர் பதவிக்குப் பரிந்துரை செய்தார்.

    காரணம் ஜிரார்டு அந்த இளைஞனைப் பணி நீக்கம் செய்த போதிலும், அவர் அவருடைய எண்ணத்தில் உறுதியாக இருந்தார். எவரொருவர் தான் நம்பும் ஒன்றிற்காக, தனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களைக் கூட தியாகம் செய்யத் தயாராக இருக்கிறாரோ அவரே ஒரு நம்பிக்கையான, பணிவு மிகுந்த ஆட்களாக இருப்பார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.