Home » Articles » உதவிக்கு கரம் நீட்டுங்கள்

 
உதவிக்கு கரம் நீட்டுங்கள்


ஆசிரியர் குழு
Author:

பாரத மாதா நற்பணி அறக்கட்டளை

உடையாம்பாளையம், கோவை

தொடர்புக்கு: 99949 76720

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவிகள் வழங்கும் விழாவைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறோம். மகிழ்ச்சி என்பது மற்றவர்களை மகிழ்ச்சியடைய செய்வதில் தான் இருக்கிறது. அந்த வகையில்  ஆதரவற்ற இல்லங்களில் வாழும் குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளையும், உதவிப் பொருட்களை வழங்குவது மட்டுமின்றி அவர்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக அவர்களோடு ஒரு நாள் இருந்து விழாவை நிறைவு செய்து வருகிறோம்.

தற்சமயம் மக்களிடையே ஒரு சிலர் மட்டுமே தங்கள் பிறந்தநாள், திருமணநாள், வீட்டு சுபநிகழ்வுகள், துக்க நிகழ்வுகளுக்கு இந்த இல்லங்களைத் தேடிச் சென்று உதவிக்கரம் நீட்டும் எண்ணங்கள் வந்துள்ளது வரவேற்கத்தக்க விசயம். இது முழுமையாக அனைத்து மக்களிடமும் முழுமாற்றம்  உண்டாக்க வேண்டும். நான்  பார்த்த வரை ஒவ்வொரு சுபகாரியங்களிலும் மிதமான உணவுகளை ஆதரவற்ற இல்லங்களுக்குத் தரலாமா? என்ற படி எங்களுக்கு வரும் அழைப்புகள் தான் அதிகம். ஏன் முன்கூட்டியே நமது குடும்ப நிகழ்வுகளுக்கு உணவு ஏற்பாடு செய்யும் போது அருகாமையில்  உள்ள ஆதரவற்ற இல்லங்கள் எது என அறிந்து அவர்களைத் தொடர்பு கொண்டு எவ்வளவு உணவு வேண்டும் என அறிந்து அவர்களுக்கு தந்து உதவினால் அவர்களும் சரியான நேரத்தில் மிகச்சிறந்த உணவை நம்மால் தர முடியும்.

நாங்கள் பார்த்த வரை நமது குடும்ப சுப துக்க நிகழ்வுகள் எதுவானாலும் நேரடியாகவே குழந்தைகளை அழைத்து வந்து கலந்து கொள்ள தயராக உள்ள அமைப்புகளும் உள்ளது. தொடர்பு கொண்டால் நிச்சயம் ஏற்பாடு செய்து தருகின்றோம்.

சுவாமி  விவேகானந்தர் சொன்ன  வறுமை, பசி, பட்டினி இல்லாத இந்தியா என்று உருவாகின்றதோ அன்று தான் வளமான இந்தியாவை காணமுடியும் என்ற லட்சியத்தை நோக்கி பயணப்படும் எங்கள் இலட்சியம் ஆதரவற்ற இல்லங்களே இல்லாத இந்தியா உருவாக்க வேண்டும் என்பது தான்.

குழந்தை வரம் இல்லாதவர்கள் இறைவனின் குழந்தைகளாக ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும்.  தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும், வருடந்தோறும் பாடுபடும் நாம் அனைவரும் வருடத்திற்கு ஒரு முறையாவது ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்பதே எங்களது 20 ஆண்டு கால சமுதாயப் பணியின் நோக்கமாகும்.

பிரிதொருவருக்கு உதவாமல் கழியும் நாட்கள் அனைத்தும் வீண் என உதவும் கரங்கள் வித்யாகர் கூறுவார். கடவுளை வணங்குகின்ற கைகளை விட ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கின்ற கைகள் புனிதமானவை என அன்னை தெரசா கூறுவார். நாமும் அப்படியொரு இலட்சியங்களை நோக்கி நடைபோடுவோம்.

வாருங்கள் வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை வாழ்ந்தோம் என்ற முத்திரையை வரலாற்றில் பதிப்போம்…

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2018

சிற்பமே சிம்மாசனம்…! சிகரமே உன் அரியாசனம்…!
விளையாட்டில் சாதிக்கும் பள்ளி
சாந்தியோடு பிரயாணம்
வாழ நினைத்தால் வாழலாம் – 23
தன்னம்பிக்கை மேடை
எப்போதோ போட்ட விதை!
தொலைக்காட்சி மற்றும் அதன் பாதிப்பு
நீங்கள் உண்மைக்கு கீழ்படிபவரா?
உதவிக்கு கரம் நீட்டுங்கள்
மற்றவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றுவது எப்படி?
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 3
தன்னம்பிக்கை விதைகள்
சிந்திக்க வைக்கும் சீனா – 5
நினைப்பதே நடக்கும் – 1
வெற்றி உங்கள் கையில் – 60
உள்ளத்தோடு உள்ளம்