Home » Articles » சாந்தியோடு பிரயாணம்

 
சாந்தியோடு பிரயாணம்


அனுராதா கிருஷ்ணன்
Author:

நாம் எவ்வளவு மணி நேரம் பிரயாணம் செய்தாலும், அது பகல் அல்லது இரவு நேரப் பிரயாணமாக இருந்தாலும், பேருந்து அல்லது இரயில் பிரயாணமாக இருந்தாலும், மோசமான ரோடு அல்லது மோசமான வாகனம்  அல்லது இரண்டுமே மோசமாக இருந்தாலும், சுயமாக கார் ஓட்டினாலும், வாடகைக் காரில் பயணித்தாலும் பிரயாணம் செய்த களைப்பே இல்லாமல், (கவனிக்கவும் பிரயாணம் செய்த களைப்புத் தெரியாமல் அல்ல இல்லாமல்)  அடுத்த நாள் காலை தொடர்ந்து நம் வேலைகளைப் பார்க்கும் படியான உடல் சக்தியமைப்பு வேண்டுமா? “இது என்ன காதில் பெரிதாக சூரிய காந்திப்பூவையே வைக்கும் அளவிற்கு கதையளக்கிறீர்கள்’ என்று நீங்கள் கேட்க நினைத்தாலும் நான் சொல்வது உண்மை! உண்மையைத் தவிர வேறில்லை. இதை உங்கள் தலைமேல், மன்னிக்கவும் என் தலைமீது வைத்து சத்தியமும் செய்யத் தயார்.

மன்னிக்கவும் என் தலைமீது வைத்து சத்தியமும் செய்யத் தயார்.

அன்புத் தோழ தோழியர்களே! பிரயாண களைப்பே இல்லாமல் பிரயாணம் செய்ய என்னிடம் ஒரு அற்புத இரகசியம் இருக்கிறது. அலாவுதினுக்கு ஒரு அற்புத விளக்குபோல்  எனக்கு மட்டுமல்லாமல் நம் அனைவருக்கும் ஒரு அற்புத விஷயம் இருக்கிறது. அதைக் கொண்டுதான் கடந்த 15 வருடங்களாக பிரயாணம் செய்து வருகிறேன். அது வேறு ஒன்றும் இல்லை 15 வருடங்களுக்கு முன் நான் தவமாய் தவமிருந்து பெற்றுக் கொண்ட சாந்தி என்ற தவப் புதல்விதான். அன்றிலிருந்து எந்த ஒரு பிரயாணத்தையும் அவளோடுதான் நான் மேற்கொள்கிறேன்.

அவளின் அற்புத சக்தியாக்கத்தால் பிரயாண களைப்பு இன்றி பிரயாணங்களை ஆனந்தமாக மேற்கொள்கிறேன். ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே! சாந்தி என்ற சக்தி வாய்ந்த தவப் புதல்வி என்பது வேதாத்திரி மகரிஷி அவர்களின் யோக அமைப்பில் கற்றுக்கொடுக்கப்படும் ஒரு யோக நிலையாகும்.  அந்தப் பயிற்சி நம் கைவரப்பெற்றிடின், நம் பிரயாணங்களில் நாம் சாந்தி தவ நிலையில் இருந்தால், பிரயாணக் களைப்பின்றி இருக்கலாம்.

அன்புத் தோழ தோழியர்களே!  நாம் சாந்தி தவம் இயற்ற வேண்டுமாயின் நாம் வேதாத்திரி மகரிஷி அவர்களின் ‘எளிமைப்படுத்திய குண்டலினி யோக’ அமைப்பில் தக்க குருவிடம் தியான தீட்சை பெற வேண்டும். அதன் பின்னர் அவர்களின் வழிகாட்டுதலின்படி முறையான தியானப் பயிற்சியை மேற்கொண்டு தியானம் கைவரப் பெற்ற பின்னர் இந்த சாந்தி தவத்தை சகஜமாக நாம் பிரயாணத்தில் இயற்ற முடியும். அப்படி சாந்தி தவ நிலையில் பிரயாணம் மேற்கொள்ளும் போது உடலின் ஏழு ஆதாரச் சக்கரங்களின் மூலம் நம் உடலுக்கு ஆகாச சக்தி கிடைக்கப் பெறுவோம். அப்படி பெறப்படும் சக்தியானது நம் பிரயாணக் களைப்பை நீக்கும் அளவிற்கு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும்.

நாம் வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடனேயே சாந்தி தவ நிலைக்குப் போக முடியும். இதில் விசேஷம் என்னவென்றால், நாம் சாந்தி தவநிலைக்கு வந்தபின்னர் நம் ஆழ்மனம் அந்த நிலையைத் தக்கவைத்துக்கொள்ளும். நாம் நம் வெளி மனதின் மூலம் பேசவும் பார்க்கவும்  செய்தாலும் சாந்தி தவ சக்தி நிலை, நிலையாகத் தொடரும். அப்புறம் நாம் சாந்தியில் இருக்கும்போதே தூங்கிவிட்டாலும் நம் ஆழ்மனம் நம்மை சக்தியாக வைத்துக்கொள்வதில் கவனமாக இருக்கும். பிறகு நாம் விழித்துப் பார்க்கும்போதும் சக்தியுடன் இருப்பது தெரிய வரும்.

அன்புத் தோழ தோழியர்களே! இது எப்படி வேலை செய்கிறது என்று விஞ்ஞான பூர்வமாக ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். நாம் கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும் போது முதலில் நமக்குத் தயக்கம் வரும். காரணம் அதுபற்றிய மேல் மனதின் அறியாமைதான். பிறகு நாம் முயற்சி செய்து பலமுறை ஓட்டிப் பழகியபின்பு நாம் ஹாயாக பேசிக் கொண்டும் பாடல் கேட்டுக்கொண்டும் கார் ஓட்டுகிறோம். நாம் முதலில் முன்பின் தெரியாத மற்றும் பழகாத வரைக்கும் அது நம் மேல் மனம் சார்ந்தச் செயலாக இருக்கிறது. அதுவே, நாம் திரும்பத் திரும்ப ஓட்டிப்பழகும் போது அது நம் ஆழ்மனதின் வசமாகிவிடுகிறது. அதுபோலத்தான் நாம் பிரயாணம் செய்யும் போது சாந்தி தவத்தில் நிலைகொள்ளும் வரை மேல்மனம் சார்ந்ததாக இருக்கிறது. பிற்பாடு பழகிய பிறகு அது ஆழ்மன கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகிறது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2018

சிற்பமே சிம்மாசனம்…! சிகரமே உன் அரியாசனம்…!
விளையாட்டில் சாதிக்கும் பள்ளி
சாந்தியோடு பிரயாணம்
வாழ நினைத்தால் வாழலாம் – 23
தன்னம்பிக்கை மேடை
எப்போதோ போட்ட விதை!
தொலைக்காட்சி மற்றும் அதன் பாதிப்பு
நீங்கள் உண்மைக்கு கீழ்படிபவரா?
உதவிக்கு கரம் நீட்டுங்கள்
மற்றவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றுவது எப்படி?
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 3
தன்னம்பிக்கை விதைகள்
சிந்திக்க வைக்கும் சீனா – 5
நினைப்பதே நடக்கும் – 1
வெற்றி உங்கள் கையில் – 60
உள்ளத்தோடு உள்ளம்