Home » Articles » தன்னம்பிக்கை விதைகள்

 
தன்னம்பிக்கை விதைகள்


செல்வராஜ் P.S.K
Author:

உடனடியாக – விரைவில் – எளிதில் கிடைத்துவிடுவது வெற்றியல்ல! வெற்றி அவ்வளவு எளிதாக இதுவரை யாருக்கும் கிடைத்ததில்லை. மனித மனம் உலக அதிசயங்களில் ஒன்றுஎதிர்மறைச் சிந்தனை எதிர்த்து விடும் உன்னை அறிவைப் பெருக்கு ஆசையைச் சுருக்கு , ஆணவத்தை நறுக்குகடின உழைப்பிருந்தால் கடலைக் கூட கடக்கலாம்நீதியைக் கொல்லாமல் உன் இலக்கை வெல்ல வேண்டும்…

வலிமை மிக்கவர்களால் தான் வரலாறு படைக்க முடியும் சக்தி மிக்கவர்களால் தான் சரித்திரம் செதுக்க முடியும் தன்னம்பிக்கைமிக்கவர்களால் தான் வெற்றி எய்த முடியும்……எல்லாம் உன் வசம் ஆக உன்னைத் தன் வசம் ஆக்குஉன்னை தன் வசம் ஆக்க மனதை உன் வசம் ஆக்குஉன்னை தன் வசம் ஆக்கினால் உலகம் உன் வசம் ஆகும் ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் ஒவ்வொரு துறைக்கான படைப்பாற்றல் உள்ளது. அதைத் தெரிந்து கொண்டு – புரிந்து கொண்டு, அதைச் சரியாக – முறையாகப் பயன்படுத்துபவர்களே முன்னேறுகின்றனர் – வாழ்வில் சாதனை படைக்கின்றனர்; வரலாற்றில் இடம்பெறுகின்றனர்.

உன்னிடமும் ஒரு திறமை இருக்கின்றது என்பதை நீ கண்டறி. கண்டறிந்தால்    உலக அரங்கில் உன் திறமை ஒருநாள் கண்டிப்பாகப் பேசப்படும். கல்வெட்டாக வரலாற்றில் பதிந்து கிடக்கும் சாதித்தவர்களின் வரலாற்றை தெரிந்துகொள்ளாத எவனுக்கும் சாதிக்கின்ற அந்த நம்பிக்கை வராது சாதிக்கவும் முடியாது!

அன்பு மிக்கவனே!  என் ஆருயிர்த் தோழனே!

நீ! எதையும் சாதிக்கப் பிறந்தவன்!

நீ! எதையும் சந்திக்கப் பிறந்தவன்!

நீ! எதையும் சிந்திக்கப் பிறந்தவன்!

நீ! எதையும் முந்திக்கப் பிறந்தவன்!

நீ! எதையும் போதிக்கப் பிறந்தவன்!

எதிலும் நீ வெற்றி வாகை சூட வந்தவன்!

உன்னைப் போன்றுள்ளவர்களின் சாதனைகளைச் சேகரி. அதுவே உனக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும்.அந்த நம்பிக்கையே உனது முன்னேற்றத்துக்குத் தேவையானதாகவும், வாழ்வுக்கு அவசியமானதாகவும் இருக்கும்.முடியாது என்கிற பேச்சுக்கே இடம் கிடையாது என்று எப்பொழுது உன் இதயம் சொல்கிறதோ அப்பொழுதுதான் நீ நினைத்ததை முடிப்பவனாகத் திகழ முடியும் – திழ்வாய். அப்படித் திகழும் பொழுதுதான் உலகம் உன்னைப் புகழும்.

வீரன் என்பவன் யார்?எதற்கும் அஞ்சாமல் தைரியத்துடன் எதையும் எதிர்கொள்பவன்தான் வீரன். மாவீரன் என்பவன் எவன்? இப்பொழுது சாகிறோம் என்று தெரிந்தும் எவன் ஒருவன் போர்க்களத்தில் கண்ணீர் வடிக்காமல் தைரியத்துடன் செயல்படுகிறானோ அவனே மாவீரன். மண்ணில் இப்பொழுது மடிகிறோம் என்று தெரிந்தும் அந்த மரணத்தை சந்தோசத்துடன் ஏற்று, உயிரை இழந்தாலும் கொள்கையை இழக்கக்கூடாது என்று போர்க்களத்தில் எதிரி என்கிற எமனுடன் பின்வாங்காமல், புறமுதுகு காட்டாமல் இறுதிவரை படுபயங்கர துணிச்சலுடன் எதிர்கொண்டு எழுந்து நின்று எவன் போரிடுகிறானோ அவனும் மாவீரன்தான்!அறிவுப்பூர்வமான வீரனாக இரு; உன்னை யாரும் அவ்வளவு எளிதில் வெல்ல முடியாது. அறிவுப்பூர்வமான வீரனாக இரு; உன்னை யாராலும் அசைக்க முடியாது. அர்த்தம் இருக்கிற வாழ்க்கையில் குறிக்கோள் இருக்கும்; குறிக்கோள் இருக்கிற வாழ்க்கையில் அர்த்தம் இருக்கும்! நோக்கம் இருக்கிற வாழ்க்கையில் ஆக்கம் இருக்கும்! ஆசை இருப்பவனது இதயத்தில் ஓசையிருக்கும்! முயற்சி இருப்பவனது வாழ்வில் உயர்ச்சி இருக்கும்! எண்ணம் இருப்பவனது வாழ்வில் பல வண்ணமிருக்கும்! துணிவிருக்கும் வாழ்வில் துக்கமிராது.

தெளிவிருக்கும் வாழ்வில் குழப்பமிராது. நோக்கம் இருப்பவனது வாழ்வில் ஏக்கமிராது. கடினமாக உழை, அறிவுப்பூர்வமாக உழை, உன் உழைப்பிற்குள் உன் வெற்றி ஒழிந்திருப்பதைக் கண்டுபிடி. உழைத்தால் தான் உயர முடியும். உயர்ந்துள்ளவர்கள் எல்லாம் உழைத்தவர்கள். உழைத்தவர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள். உழை, உழை , உழை, உழைக்காமல் இருப்பது தான் இவ்வுலகில் நீ செய்யும் பிழை. அதுவும் சந்திரன் சூரியன் பாராது உழை, உழைக்காமல் உயர்வு இல்லை, அதுபோல சிந்திக்காத நோக்கம் இல்லை செயல்படாத வெற்றி இல்லை, சரித்திரம் இல்லை.உளி படாத கல் சிலையானதாக சரித்திரம் இல்லை.

உழைப்பில்லாத கனவு நனவானதாக சரித்திரமில்லை.

உழைக்கத் தகுதியற்றவன் உலகில் பிழைக்கத் தகுதியற்றவன் என்ற கருத்தை ஏற்காதவர் உலகில் இல்லை.உழைப்பவனுக்கு மட்டுமே உலகம் உரிமையாகும் என்பது உண்மையாகும் .உலகத்தை ரசிபுத்தகத்தைப் புசி,கன்னியரை மதி, நல்லவர்களைத் துதி. வீதி வீதியாய்த் திரிவது தான் என் தலைவிதி என்று நினைக்காதே, அது பிரம்மனின் சதி.

அதை வெல்ல வந்த மருந்துதான் மதி.வெற்றியும் தோல்வியும் உன் செயல்களைப் பொறுத்தே அமையும். காலம் உன்னை வெல்வதற்குள், காலத்தை நீ வென்றுவிடு. சரித்திரம் படிப்பவர் பலர். சரித்திரம் படைப்பவர் சிலர். எனவே சரித்திரம் படிப்பதை விட நீ படை.ஜாதகத்தைப் பார்க்காதே. இந்த சமுதாயத்தைப் பார். உலகை நீ துதி. உலகம் உன்னைத் துதிக்கும். உன்னைத்துதிக்க வேண்டும் என்பதற்காக உலகைத் துதிக்கலாகாது. கையளவு உள்ள உன் இதயத்தை முதலில் நீ அடக்கு. பின்பு உலகை உன் கைக்குள் அடக்கலாம் .உறக்கம் வரும்பொழுது உறங்கு. உனக்குள் உறக்கத்தை வரவழைத்துக் கொண்டு உறங்காதே. கம்ப்யூட்டரையே கரைத்துக் குடித்தாலும், கற்றது கடுகளவு என்றறி. ஆழமாகச் சிந்தி.

அசுத்தமாகச் சிந்திக்காதே. முந்திச் செல்பவனுக்கு வழி விடு. முண்டிச் செல்பவனுக்கு சவால் விடு. நேற்றைய நாளை நினைவு நாளாக்கு. இன்றைய நாளை நல்ல நாளாக்கு. நாளைய நாளை சாதனை நாளாக்கு . ஆக்குவதும் ஆக்காததும் உன் கையில் . ஆகுவதும் ஆகாததும் உன் கையில். கருப்பாய் நீ இருந்தாலும் நெருப்பாய் இரு. எதிலும் நெருப்பாய் விழிப்புடன் செயல் படு. உண்மையைப் பேசு. உரக்கப் பேசு. இளைஞன் என்பதை இன்றே, இளமையிலேயே உணர். ஏற்றத்திற்கு அடுத்து வருவது இறக்கம். துன்பத்திற்கு அடுத்து வருவது இன்பம்.இன்பத்தைச் சென்றடைய பல துன்பங்களைக் கடந்து தான் ஆக வேண்டும்.

உடலையும், உள்ளத்தையும், சிந்தனையையும், செயலையும் எவனொருவன் ஒன்றாக இயக்குகிறானோ அவனால் முடியாது என்பது உலகில் இல்லை. அனைத்தையும் ஒன்றாக இயக்குபவனே சுய ஆளுகையில் சிறந்தவன்.  மனம் எதையும் முடியும் என்று நினைத்ததால் தான், மனிதனால் முடியாதது இல்லை என்ற கருத்தும் சமூகத்தில் பிறந்தது. பலம் என்பது பலவீனம் என்பதும் உனது மனதே: பலம் என்பது   உடம்பில் இல்லை, மனதில் தான் இருக்கிறது. உன் பலமும், பலவீனமும் மனதில் தான் உள்ளது. மனதைப் பலப்படுத்தினாலே நீ சக்திவாய்ந்த பலமான மனிதனாகிவிடுவாய்.மன வலிமையினால் நீங்கள் எதை நினைத்தாலும் அதை அடைய முடியும்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2018

சிற்பமே சிம்மாசனம்…! சிகரமே உன் அரியாசனம்…!
விளையாட்டில் சாதிக்கும் பள்ளி
சாந்தியோடு பிரயாணம்
வாழ நினைத்தால் வாழலாம் – 23
தன்னம்பிக்கை மேடை
எப்போதோ போட்ட விதை!
தொலைக்காட்சி மற்றும் அதன் பாதிப்பு
நீங்கள் உண்மைக்கு கீழ்படிபவரா?
உதவிக்கு கரம் நீட்டுங்கள்
மற்றவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றுவது எப்படி?
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 3
தன்னம்பிக்கை விதைகள்
சிந்திக்க வைக்கும் சீனா – 5
நினைப்பதே நடக்கும் – 1
வெற்றி உங்கள் கையில் – 60
உள்ளத்தோடு உள்ளம்