Home » Articles » நீங்கள் உண்மைக்கு கீழ்படிபவரா?

 
நீங்கள் உண்மைக்கு கீழ்படிபவரா?


சுவாமிநாதன்.தி
Author:

கீழ்படிதல் என்றால் அடங்கி நடத்தல் என்று பொருள். கீழ்படிதலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று உண்மைக்கு கீழ்படிதல். மற்றொன்று கண்மூடித்தனமாக கீழ்படிதல் ஆகும்.

கேள்வியே கேட்காமல் கீழ்ப்படிதல் மிக்க நல்ல பண்பாகும். அது ஒரு இராணுவ வீரனின் சிறப்புப்பண்பு. அது ஒவ்வொரு இராணுவ வீரனுக்கும் முக்கியமாக இருக்க வேண்டியது. அது அவனுடைய முதலும், முடிவுமான பாடமாகும். கேள்வி கேட்காமல் குறை கூறாமல் அதை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதை அவன் கற்றுக் கொள்ள வேண்டும்.

வயதில் மூத்தவர்களுக்கு கீழ்படிதல் என்பது ஒரு பாரம்பரிய நற்குணமாக சித்தரிக்கப்படுகிறது. கீழ்ப்படிதல் என்பது ஒரு அதிகாரம் இருப்பதைக் குறிக்கிறது. அப்படிப்பட்ட அதிகாரம் பெற்றோர், ஆசிரியர், அரசாங்கம் மற்றும் அலுவலகத்தில் பாஸ் போன்றவர்களுக்கு இருக்கிறது.

கீழ்ப்படிதல் எனும் குணம் உள்ள மாணவனுக்கு குரு வித்தையை முழுமையாக கற்றுத் தருகிறார். ஆரம்ப நிலையை கடப்பதற்கு, அறிவதற்கு கற்றுக் கொள்வதற்கு கீழ்படிதல் தேவை. இல்லையெனில் காலிப்பாத்திரமாக மாறிவிடுவோம். கற்கும் போது கற்பிப்பவர் அறிந்த இடத்திலும், கற்பவர் அறியாத இடத்திலும் இருக்கிறார். பயிற்சிக்காலத்தில் யாரிடம் கற்றுக் கொள்கிறாமோ அவரிடம் பணிவு இல்லாமல் எதையுமே முழுமையாக கற்க முடியாது.

பெற்றோர்களின் எச்சரிக்கைகளுக்கு பிள்ளைகள் கீழ்ப்படிதல் வேண்டும். அந்தப் அடுப்பைத் தொடாதே, அது சூடாயிருக்கிறது. அது ஆழமான குளம். ஜாக்கிரதை. சாலையை கடக்கும் போது சாலையின் இருபக்கமும் பார்க்க வேண்டும். விபத்து மிகுந்த பகுதி மெதுவாக செல்லவும். இது போன்ற எச்சரிக்கைகளுக்கு கீழ்ப்படிவது நியாயமானது. சரியானது. பொருத்தமானது. மேலும், அது ஞானமானது. இதனால் நம் வாழ்நாள் நீடிக்கிறது. சந்தோஷமாக இருக்கிறோம். எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது. அறையைச் சுத்தம் செய்வது, வீட்டு வேலையைச் செய்யும்படி பெற்றோர் உங்களிடம் கேட்கிறார்களா? கோயிலுக்கு போகச் சொல்லுகிறார்களா? கீழ்ப்படிதல் ஒரு சவால். கீழ்ப்படிதல் எப்போதுமே சுலபமில்லை. உங்களுடைய பெற்றோர் உங்களைவிட அதிக அனுபவம் வாய்ந்தவர்கள். மனைவியானவள் தனது சொந்த புருஷனுக்கு மாத்திரமே கீழ்படிய வேண்டும். மூன்றாவது மனிதர்களின் அறிவுரைகளை ஏற்று குடும்பத்தில் கலகம் செய்யக் கூடாது.

நம் பெற்றோர் அதிகம் கனி நிறைந்த வாழ்வுக்கென்று நமக்கு வழிகாட்டுகிறார்கள். ஒருவர் பிறரை வழிநடத்திச் செல்ல விரும்பினால் அவர் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் வழிநடத்திச் செல்ல தகுதி பெற்றிருக்க வேண்டுமென்றால், அவர் முதலில் பின்பற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அரசின் சட்ட திட்டங்களுக்கு குடிமக்கள் கீழ்படிய வேண்டும். அரசாங்கத்திற்கு கீழ்படிய வேண்டும். நிர்வாகத்தில் தலைமைக்கு கீழ்படிய வேண்டும். பெற்றோர்க்கு கீழ்படிய வேண்டும். பணியாளர்கள் முதலாளிக்கு கீழ்படிய வேண்டும். நல்ல பெற்றோருக்கு, நல்ல சகோதரருக்கு, நல்ல  தலைமைக்கு, நல்ல கணவனுக்கு கீழ்படிய மறுத்தவர்கள் சீரழிந்து போயிருக்கிறார்கள். காணாமல் போயிருக்கிறார்கள்.

அன்பு, அக்கறை மற்றும் மரியாதையை சம்பாதிக்க வேண்டும். குறிப்பாக, பெற்றோர்-பிள்ளைகள் உறவில் இது மிகவும் முக்கியம். சந்தோஷமான நிலையில் வளைந்து கொடுக்கும் தன்மை இருக்கிறது. இந்த வளைந்து கொடுக்கும் தன்மையில் இருந்தே தீர்வுகள் பிறக்கின்றன. கீழ்படிந்தவர்கள் பிற்காலத்தில் மிகுந்த வீரியத்துடன் எழுந்து வந்திருக்கிறார்கள்.

வீட்டில் சேரூம் குப்பைகளை நாம் அப்புறப்படுத்தவில்லை என்றால், சில நாட்களில் நமது வீடு முழுவதும் குப்பைத் தொட்டியாக மாறி விடும். தினமும் நாம் குப்பையை வெளல்யே கொட்ட வேண்டும். அப்போதுதான் வீடு சுத்தமாக இருக்கும். நாம் அப்படி செய்யவில்லை என்றால் நாம் தேங்கிப் போகிறோம். சிக்கிப் போகிறோம். அதற்குப் பிறகு எதுவும் வேலை செய்வதில்லை. இன்றைய பெற்றோர் தம் பிள்ளைகளிடம்  தொலைக்காட்சியை அதிக நேரம் பார்க்காதே. செல்;போனில் பொன்னான நேரத்தை வீணடிக்காதே என்கிறார்கள்.

சில நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அவைகளில் சில அதீதமாக இருந்தாலும் பெரும்பாலானவை. ஒரு சாதாரண மனிதன் கூட இன்றைய நாகரீக உலகில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படையான நிபந்தனைகளே. இதற்கு உடன்படுகிறவர்கள் உள்ளனர். புறக்கணிப்பவர்களும் உள்ளனர்.

மதுவருந்திவிட்டு வாகனம் ஒட்டும் போது வாயை ஊதச் சொல்லும் காவல்துறையிடம் கூனிக் குறுகி நிற்கிறார்கள். நற்பண்புகளை கடைப்பிடிக்க பிடிவாதமாக மறுப்பவர்கள் ஒரு நாள் சபையில் சமுதாயத்தில் அவமானப்படுகிறார்கள்.

அத்து மீறுபவர்கள், அடக்கம் இழந்தவர்கள் பிற்காலத்தில் உயர்நிலை அடைவதில்லை. எதையும் சாதிப்பதில்லை. ஒரு துறையில் நிபுணத்துவம் உள்ளவர்கள். அதன் அணைத்து மட்டங்களையும் அறிந்தவர்கள். அவர்களிடம் கீழ்படிவதால் நமக்குத்தான் நன்மை அதிகம்.

எந்த ஒரு மனிதனும் ஒரே இடத்தில் நிலை கொண்டிருக்க மாட்டான். வெவ்வேறு காலக்கட்டத்தில் அடுத்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பான். ஒரு கட்டம் வரை கீழ்ப்படிதல் நடக்கிறது. தலைவனுக்கு தொண்டன், ஆசிரியருக்கு மாணவன், பெற்றோருக்கு பிள்ளை, கணவனுக்கு மனைவி கீழ்படிய மறுத்து கலகம் செய்கிறார்கள். துருபிடித்த ஆணிகளுக்கு பலமான அடிகள் விழுகின்றன. நிலை குலைகிறது வாழ்க்கை. அஸ்திவாரங்கள் சிதறுகின்றன. சாம்பாரில் மீன் துண்டைப் போடலாமா? தேனீக்கள் துளிதுளியாகக் கொண்டு வந்து சேர்ப்பதைப் போல பெற்றோர்கள் சேர்த்த சொத்;தை சொல் பேச்சு கேளாமல் சொந்த மகனே அழிக்கிறான்.

சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாத, நன்னெறிகளுக்கு கீழ்ப்படியக் கூடாதென தீர்மானித்த ஆண்களாலும், பெண்களாலும்தான் சிறைச்சாலைகள் நிரம்பியுள்ளது. அநேகர் சட்டத்தை மீறுவதால் மாட்டிக் கொள்வோம் என்று ஓரு போதும் எதிர்ப்பார்ப்பதில்லை. மற்றவர்களை விடவும் தாங்கள் மிகவும் புத்திசாலிகள் என்று அவர்கள் கற்பனை செய்கிறார்கள். மற்றவர்களுக்கு விரோதமாக செயல்படும் போது சிக்கல் ஏற்படுகிறது. கணவன்-மனைவியிடம் அன்பு செலுத்தாதபோது மனைவி தன் கணவனிடத்தில் கீழ்ப்படியாத போது சிக்கல் வருகிறது. பிறர் என்ன கூறினாலும் தன்னை மாற்றிக் கொள்ளாமல் பிடிவாதமாக இருப்பவர்கள் உள்ளனர்.

உண்மைக்கு கீழ்படிதல்:

நமக்கு நல்வழிகாட்ட வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே துரதிர்ஷ்டவசமாக நம்மை தவறாக வழிநடத்தும் போது, என்ன செய்வது? நம் பெற்றோர்களே, பொய் சொல்லவோ, திருடவோ, தவறான எதையோ செய்யச் சொன்னால் என்ன செய்வது? அந்த சூழலில் கீழ்படிய மறுப்பது தவறல்ல. சமீபத்தில் பல்கலைக்கழக பெண் பேராசிரியர் ஒருவரின்  தவறான வழிகாட்டுதலை புறக்கணித்து ஆதாரத்துடன் அவரது முகமூடியை, சுயரூபத்தை வெளல்யிலகிற்கு வெளல்ச்சம் இட்டுக் காட்டிய மாணவிகளின் செயல்  மகத்தானது. அவர்கள் உண்மைக்கு கீழ்படிபவர்கள். பொய்மையை புறக்கணிப்பவர்கள் போற்றுதலுக்குரியவர்கள், மேன்மையானவர்கள். உறுதியானவர்கள். மதிக்கத்தக்கவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தங்கள் வாழ்வை நல்ல விதத்தில் செதுக்கி சீர்படுத்தத் தெரிந்தவர்கள்.

கண்மூடித்தனமாக கீழ்படிதல்:

வரலாற்றுரீதியாக, போர், இனஅழிப்பு, அடிமைத்துவ முறை உள்ளிட்ட காலக்கட்டத்தில் மிகவும், கோரமான, பயங்கரமான நிகழ்வுகள் கண்மூடித்தனமாக கீழ்படிதலால் நடந்ததே ஒழிய, கீழ்படிய மறுத்ததால் அல்ல.

கேள்வி கேட்காமல் கீழ்ப்படிதல் என்பது ஒரு சமுதாயத்தையும், கலாச்சாரத்தையும் அழிந்து போகச் செய்யும். துரியோதனனின் ஆணையை ஏற்று துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலை உரிய துணிந்தது சரியானதா? தவறாக அதிகாரம் செலுத்தும் போக்கு ஓரு வீட்டையும், நாட்டையும், சமுதாயத்தையும் கலாச்சாரத்தையும் தேங்கிப் போகச் செய்து காலப்போக்கில் அழியச் செய்கிறது.

கௌரவர்களின் பலாத்கார அதிகாரம், அடக்குமுறை, அல்லது கொடுங்கோல் தலைமை, அதிகார துஷ்பிரயோகம், நேர்மையற்ற முறையில் அதிகாரத்திற்குள் பிரவேசித்து மோசமாகவும், அநீதியாகவும் தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் மீது அதிகாரம் செய்து ஆக்கிரமிப்பு செய்பவர்கள் சமநிலையற்று பதவியை தவறாக பயன்படுத்துபவர்களின் நியாயமற்ற கட்டளைகளுக்கு கீழ்படிவது, உடன்படுவது கண்மூடித்தனமாக கீழ்படிதலாகும்.

ஜெர்மனியில் ஹிட்லரின் கட்டளையை நாஜிக்கள் கண்மூடித்தனமாக நிறைவேற்றினார்கள். நாங்கள் நேரடியாக பொறுப்பாளிகள் அல்ல. அவர்களது கட்டளையை ஏற்று பல மில்லியன் யூதர்களை கொன்றோம் என்றார்கள்.

கண்மூடித்தனமாக கீழ்ப்படிதல் ஒரு நாள் அதைப் பின்பற்றுபவர்களுக்கு வலி, துன்பம், அழிவையே தருகிறது. நமக்கு தனித்தன்மை உள்ளது. சிந்திக்க வேண்டும்.

கட்டளைகள் எல்லை மீறும் போது மனரீதியாக, உடல்ரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது.

சிறைச்சாலையில் கைதிகள் போல சில நேரங்களில் அடங்கிப் போக வேண்டிய நிலை வரலாம். வார்த்தைகளால் காயப்படுத்தப்படலாம். அடித்து துன்புறுத்தப்படலாம். தவறு என்று தெரிந்தும் பயத்தினால் கீழ்படிபவர்கள் உள்ளனர். எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்க்காக பணிபவர்கள் உள்ளனர்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் சொன்னார்கள் என்பதற்க்காக ஒரு அப்பாவியை துன்புறுத்தினால் அது பாவ காரியம். பலரது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி சிரழித்துக் கொண்டிருக்கும் ஒரு குற்றவாளியை, சமூக விரோதியை, தீய மனிதனை சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப விடாமல் தண்டிக்க உறுதுனையாய் இருந்தால் அது வரம். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் எஜமானர்களுக்கு அடிமைகள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டி இருந்தது. அமெரிக்காவில் நிறவெறி தாண்டவமாடிய காலக்கட்டத்தில் வெள;ளையர்களுக்கு கருப்பர்கள் அடங்கி கிடந்தார்கள். அரசியல் ரீதியாக,  அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கீழ்படிதலுக்கு எதிரான குரல் ஒலிக்கத் தொடங்கியது. இராணுவத்தில் சிப்பாய்கள் போல பொது மக்கள் கண்மூடித்தனமாக கீழ்படிய மாட்டார்கள் என்ற நிலை பரவலாகியது வரலாறு.

நல்ல தலைமைக்கு, கீழ்படிவது நமக்கு வெற்றியையும் பாதுகாப்பையும் தரும். நுட்று போதனைகளை விட ஒரு கீழ்படிதலே மேலானது. வாழ்வின் ஒரு மிகப்பெரிய சோதனை கீழ்படிதலாகும். கீழ்படிதல் நம்பிக்கையை காட்டுகிறது. கீழ்படியாமை நம்பிக்கையின்மையை காட்டுகிறது. கீழ்படிதலும், கடின உழைப்பும்தான் வாழ்வில் அற்புதங்களை  ஏற்படுத்துகிறது. உடனடியாகக் கீழ்படிதல் என்பதே கீழ்படிதலாகும். தாமதித்து கீழ்படிதல் ஒரு வகையில் கீழ்படியாமையே ஆகும். கீழ்படிதலே முடியாத காரியத்தையும் முடிக்கவல்லது. என்றும் உண்மைக்கு கீழ்படிவோம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2018

சிற்பமே சிம்மாசனம்…! சிகரமே உன் அரியாசனம்…!
விளையாட்டில் சாதிக்கும் பள்ளி
சாந்தியோடு பிரயாணம்
வாழ நினைத்தால் வாழலாம் – 23
தன்னம்பிக்கை மேடை
எப்போதோ போட்ட விதை!
தொலைக்காட்சி மற்றும் அதன் பாதிப்பு
நீங்கள் உண்மைக்கு கீழ்படிபவரா?
உதவிக்கு கரம் நீட்டுங்கள்
மற்றவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றுவது எப்படி?
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 3
தன்னம்பிக்கை விதைகள்
சிந்திக்க வைக்கும் சீனா – 5
நினைப்பதே நடக்கும் – 1
வெற்றி உங்கள் கையில் – 60
உள்ளத்தோடு உள்ளம்