Home » Articles » விளையாட்டில் சாதிக்கும் பள்ளி

 
விளையாட்டில் சாதிக்கும் பள்ளி


ஆசிரியர் குழு
Author:

இயற்கை எழில் கொஞ்சும் கொடிவேரி அணைக்கு அருகே கம்பீரமான தோற்றத்துடன் அமைதியான, பசுமையான சூழலில் அமைந்துள்ள பள்ளி தான் புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப் பள்ளி. பூத்துக் குலுங்கும் மரங்களில் பறந்து திரியும் மாணவ மாணவிகளைக் கொண்ட கலைகளின் விளை நிலம் தான் எமது பள்ளி. சுமார் அரை நூற்றாண்டு அதாவது 57 ஆண்டுகளாக சாதனைகளின் சிம்மாசனமாய் திகழும் சரித்திர புகழ் வாய்ந்ததுதான் எமது புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி.

மாணவர்களுக்கான கூடைபந்து, கோ-கோ மற்றும் கால்பந்து போட்டிகளில் குறு மைய மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பல ஆண்டுகளாக வெற்றி பெற்று வருகின்றார்கள் எமது மாணவர்கள்.

மாணவிகள் பிரிவில் கோ-கோ, கூடைபந்து மற்றும் தடகளத்தில் குறுமைய அளவில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் பட்டம் பெற்று சாதனை படைத்து வருகிறோம். மேலும் கபாடி போட்டியிலே இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் என மூன்று பிரிவுகளிலும் குறு மைய, மாவட்ட மண்டல, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி, யாரும் அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள் எம் பள்ளி மாணவிகள்.

கவிதா என்ற மாணவி தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 100மீ, 200மீ பிரிவுகளில் மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

லோகேஸ்வரி என்ற மாணவி இரண்டு ஆண்டுகளாக 80 மீ தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல் மற்றும் 4*100 தொடர் ஓட்டப் போட்டியில் மண்டல அளவில் பாபாபெங்கேற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

விதிமுறைகள்:

  • தொடர்ச்சியான பயிற்சி
  • முழுமையான ஈடுபாடு
  • வழிகாட்டுதல்

இந்த மூன்று மந்திரங்கள் தான் எம் பள்ளியையும் வீரர்-வீராங்கனைகளையும் உருவாக்கி உயிரோட்டமுள்ளவர்களாக்கியுள்ளது.

வருடம் முழுவதும் தினந்தோறும் மாலை பள்ளி முடிந்ததும் பயிற்சி ஆரம்பிக்கும். ஆசிரியர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ச்சியான பயிற்சிகள் இருக்கும்.

பயிற்சியில் பங்கு பெறும் மாணவ-மாணவிகள் பல்வேறு தடைகளைத் தாண்டி முழுமையான ஈடுபாட்டுடன் பயிற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், பயிற்சி பெற உரிய இடம், பெற்றோர் அனுமதி மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள்.

உடற்கல்வி ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சிகள் இளம் வீரர்-வீராங்கனைகள் ஆண்டுதோறும் பெருகி கொண்டே  இருக்கிறார்கள். இவை அனைத்திற்கும் அடிப்படையாக விளங்குவது ஒழுக்கமே பெரிய கொடிவேரி. புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி பெயரைக் கேட்டாலே முதலில் நினைவுக்கு வருவது பள்ளியில் நிலவும் ஒழுக்கமே.

பல்வேறு மாவட்டங்கள், ஊர்களிலிருந்து வரும் மாணவ-மாணவிகள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களை ஆதரித்து, அரவணைத்து ஒரு சிறந்த குடிமகனாக மாற்றும் மிகப்பெரிய கல்விப் பணியை சீருடனும், சிறப்புடனும் செய்து வருகிறது எமது பள்ளி.

கரூரில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான கபாடி போட்டியில் எங்கள் பள்ளி மாணவிகள் ஈரோடு அணிக்காக பங்கேற்று விளையாடி இரண்டாம் பரிசை பெற்று வந்துள்ளோம்.

பள்ளி அளவிலான போட்டிகளில் மட்டுமின்றி தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழகம் நடத்தும் போட்டிகளிலும் பங்கு பெற்று பரிசுகளும், சான்றிதழ்களும், கோப்பைகளும் பெற்று வருகிறார்கள் எம் வீரர்-வீராங்கனைகள்.

அடுத்தகட்ட முயற்சிகள்:

ஆண்டுதோறும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவ-மாணவிகளே மிகப்பெரிய சாதனைகளை செய்து வெற்றி வீரர்களாக வலம் வருகிறார்கள். இந்நிலையை மாற்றி எம் பள்ளியில் பயிலும் மாணாக்கர் அனைவரும் ஏதாவது ஒரு துறையில் சாதனையாளர்களாக பள்ளியை விட்டு செல்ல வேண்டும் இதுவே எம் பள்ளியின் குறிக்கோள்.

தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழகம் நடத்திய மிக இளையோர் மாநில சேம்பியன்ஷிப் கபாடி போட்டியிலே எம் பள்ளி மாணவிகள் ஈரோடு மாவட்ட அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர். திருவேற்காட்டில் நடைபெற்ற போட்டியிலே மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்று பள்ளிக்கும், பெற்றோருக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இனிவரும் காலங்களில் முதல் பரிசை பெற்று தமிழ்நாடு அணியில் இடம்பிடித்து மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க தயாராகி வருகிறோம்….

தமிழ்நாடு அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கபாடி வீராங்கனைகளின் விபரங்கள்:
பெயர் படித்த வகுப்பு ஆண்டு சென்ற இடம்
S. ரம்யா 8ம் வகுப்பு 2015 சத்தீஸ்கர்
M. மைனாவதி 10ம் வகுப்பு 2016 தெலுங்கானா
K.லாவண்யா 8ம் வகுப்பு 2016 மத்திய பிரதேசம்
K. அபிராமி 8ம் வகுப்பு 2017 சத்தீஸ்கர்
S. ரம்யா 10ம் வகுப்பு 2017 மத்திய பிரதேசம்
M. மைனாவதி 11ம் வகுப்பு 2017 டெல்லி
S. லோகேஸ்வரி 9ம் வகுப்பு 2018 பெங்களூர்
S. ரம்யா 11ம் வகுப்பு 2018 மத்திய பிரதேசம்
M. மைனாவதி 11ம் வகுப்பு 2018 டெல்லி

ஓடி விளையாடு பாப்பா

நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

ON YOUR MARK, GET SET GO

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2018

சிற்பமே சிம்மாசனம்…! சிகரமே உன் அரியாசனம்…!
விளையாட்டில் சாதிக்கும் பள்ளி
சாந்தியோடு பிரயாணம்
வாழ நினைத்தால் வாழலாம் – 23
தன்னம்பிக்கை மேடை
எப்போதோ போட்ட விதை!
தொலைக்காட்சி மற்றும் அதன் பாதிப்பு
நீங்கள் உண்மைக்கு கீழ்படிபவரா?
உதவிக்கு கரம் நீட்டுங்கள்
மற்றவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றுவது எப்படி?
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 3
தன்னம்பிக்கை விதைகள்
சிந்திக்க வைக்கும் சீனா – 5
நினைப்பதே நடக்கும் – 1
வெற்றி உங்கள் கையில் – 60
உள்ளத்தோடு உள்ளம்