Home » Articles » சிந்திக்க வைக்கும் சீனா- 4

 
சிந்திக்க வைக்கும் சீனா- 4


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

ஷியான் பழமையான நகரம். முந்தைய சீனாவின்  தலைநகரம். இந்நகரில் ஷியான் கோட்டை நகரச் சுவர் உள்ளது. ஒரு கோடி மக்கள் இந்நகரில் வசிக்கின்றனர்.

இருசக்கர வாகனங்கள் செல்ல தனிப்பாதை உள்ளது. ஆனால் குறைவான 2 சக்கர வாகனங்களே உள்ளன. இந்நகரின் சுற்றுச்சுவர் செவ்வக வடிவில் உள்ளது. 13 கி.மீ நீளமுள்ளது. இந்நகரில் சுமார் 30 இலட்சம் கார்கள் உள்ளனவாம். 14 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுவர் இது.

ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து, பஸ் இருக்கும் பகுதிக்குச் சென்றோம். வெயிலால் பலர் குடை பிடித்துச் சென்றனர். பெட்டிகளை வேனில் ஏற்றிக் கொண்டு ஓட்டலுக்குச் சென்றனர். எங்கள் பசிக்கு சப்வே வெஜ் சாண்ட்விச், நீர், டப்பா கோக்பானம் கொடுத்தனர்.

சுவைத்துச் சாப்பிட்டோம். பஸ் நேரே ஷியான் சுவர் சென்றது. நுழைவு டிக்கெட் எடுத்துக் கொடுத்து மேலே அனுப்பினர்.

இந்தச் சுவற்றில் 120 மீட்டர் நீளத்துக்கு ஒரு காவல் கோபுரம் கட்டியுள்ளனர். வேகமாக இழுத்து விடும் அம்பு சுமார் 60 மீட்டர் தூரம் போகுமாம். அதனால் இந்த தூரம் என்றனர்.

கிழக்கு வாயில் வழியாக 70 படிகள் ஏறி கோட்டைக்குச் சென்றோம். ஒரு மணி நேரம்  சுற்றிப் பார்த்தோம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஜி ஜின் பிங் தான் சீனாவின் ஜனாதிபதியாம். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மக்கள் BMW ஐ பயன்படுத்துங்கள் என்று சொன்னாராம்.

பொதுவாக BMW என்பது ஒரு வகையான கார். ஆனால் அவர் சொன்னது B- BUS; M- METRO (RAIL) W- WALK அரசு வாகனங்களான பஸ், ரயில் மற்றும் நடந்து சென்றால் சுற்றுச்சூழல் மாசடையாது. பொருளும் சேமிக்கலாம்; உடலும் நலமாக இருக்கும்.

பகல் 12.15 க்கு பஸ் ஏறி ரெட் போர்ட் என்ற இந்திய  உணவகம் சென்றோம். நம் சமையல் கலைஞர்கள் மதிய உணவாக சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, அப்பளம், பொரியல் வழங்கினர். சுவைத்து சாப்பிட்டு டைடான் ஜின் செங் ஆர்ட் ஓட்டல்  சென்று அறைகளில் தங்கினோம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2018

நோபல்பரிசு – 2018
சின்ன சின்ன மாற்றங்கள் பெரிய மாறுதல்கள்
வெற்றி உங்கள் கையில்-59
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 2
இலட்சியத்தை நோக்கி
மண்ணின் மகத்துவம் மகாத்மா காந்தியடிகள்
எப்போதோ போட்ட விதை!
முயன்றேன் வென்றேன்…
தன்னம்பிக்கை மேடை
மற்றவர்களை வசீகரிப்பது எப்படி?
அற்ப சுகங்களுக்காக வாழ்வை மலிவு விலைக்கு விற்கலாமா?
காய்ச்சலால் வரும் வலிப்பு (Febrile Fits)
வாழ நினைத்தால் வாழலாம் – 22
வின்னர்ஸ் அகாடமியின்
அலங்கரித்துக் கொள்…
துணிந்தவருக்கில்லை துயர்-நீங்கள் துணிச்சல் மிக்கவரா?
பயணங்கள் வெறுப்பதில்லை
சிந்திக்க வைக்கும் சீனா- 4
எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்… எதிர்காலத்தை நேர்த்தி செய்…
உள்ளத்தோடு உள்ளம்