Home » Articles » தலைவலி

 
தலைவலி


மீனாட்சி சங்கர்
Author:

தலைவலி என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான குமட்டல் அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான நோய் அறிகுறியாகும்.

இது ஆண்களை விட பெண்களில்தான் அதிகம் ஏற்படும் நரம்பு சம்பந்தப்பட்ட அசாதாரண நிலையாகும்.

தலைவலி ஏற்படும் முன்னர் சில எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.

அவை

 • பார்வை புலத்தில் மாற்றம் ஏற்படல்
 • கழுத்து, தோள் பகுதியில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு
 • உடல் சமநிலை குழம்புதல்
 • பேச்சில் தடுமாற்றம் ஏற்படல்
 • மணம் நுகர முடியாமை போன்ற உணர்வு தொடர்பான மாற்றங்கள் என்பவையே பொதுவான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கின்றன.

தலைவலியை தூண்டும் காரணிகள்

மனோவியல் காரணிகள்

 • மன அழுத்தம்
 • கோபம்
 • பதற்றம்
 • அதிர்ச்சி

உடலியல் காரணிகள்

 • களைப்பு
 • தூக்கமின்மை
 • அதிக நேர பயணம்
 • மாதவிடாய் நிறுத்தம்

உணவு வகைகள்

 • உணவு குறித்த நேரத்தில் எடுக்காதிருத்தல்
 • உடலில் நீரின் அளவு குறைதல்
 • எண்ணெய் வகை உணவுகள்
 • குளிர்பானங்கள்
 • மதுபானம்
 • காப்பி, தேநீர்
 • சாக்லேட், ஐஸ்கிரீம்

சூழலியற் காரணிகள்

 • பிரகாசமான செயற்கை ஒளி
 • அதிக இரைச்சல்
 • காலநிலை மாற்றம்
 • மருந்துகள் ( கருத்தடை மாத்திரைகள், தூக்க மாத்திரைகள் )

முக்கிய வகை தலைவலிகள்

 • முதன்மை தலைவலி (Primary headache)
 • இரண்டாம் தலைவலி (Secondary headache)

முதன்மை தலைவலி

90% தலைவலி இவ்வகையை சார்ந்தது. பொதுவாக 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. இவ்வகையில் பொதுவாக காணப்படுபவை போன்றவை. ஒற்றை தலைவலி, பதற்றம் வகை தலைவலி (ம) கிளஸ்டர் தலைவலி ஆகும்.

இரண்டாம் தலைவலி

இந்த வகை தலை வலிகள் சற்று ஆபத்தானவை தலையில் (அ) கழுத்தில் ஏற்படும் பல விதமான பிரச்சனைகளால் இவ்வகை தலைவலி உண்டாகும். அவை Meningitis எனப்படும் மூளைக்காய்ச்சல், பக்கவாதம், கண்ணின் அழுத்தம் அதிகரிப்பு (glaucoma) போன்ற காரணங்களால் ஏற்படும்.

இந்த வகை தலைவலிக்கு சிறப்பு சிகிச்சைகள் அவசியமாகின்றன. புதிதாக திடிரென்று தீவிரமான தலைவலி ஏற்பட்டால், முன் எப்போதும் எதிர்நோக்காத அல்லது முற்றிலும் வேறுபட்ட தீவிரமான தலைவலி ஏற்பட்டால், தீவிர காய்ச்சல் வாந்தி இருப்பின், பக்கவாதம் ஏற்பட்டு உணர்வற்றிருப்பின், காலையில் எழும்போது தலைவலி இருந்தால், இருமும் போதோ (அ) தும்மும் போதோ தலைவலி அதிகரிப்பின், பார்வையில் மாற்றம் ஏற்படின் உடனடி மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதர வகை தலைவலிகள்

 • சைனஸ் தலைவலி
 • விபத்துகளுக்கு பின்னால் ஏற்படும் தலைவலி
 • தமனிகள் தொடர்பான தலைவலி
 • தொற்றுகளினால் ஏற்படும் தலைவலி
 • வளர்சிதை மாற்றம் சம்பந்தமான தலைவலி
 • தலையிலுள்ள கண், மூக்கு, பல், வாய் மற்றும் முகம் ஆகியவற்றின் உருவ அமைப்புடன் தொடர்புடைய தலைவலி
 • தலையிலுள்ள உறுப்புகளின் நரம்புகளில் ஏற்படும் பிரச்சனைகளால் உண்டாகும் தலைவலி
 • குழந்தைகளுக்கு ஏற்படும் தலைவலி
 • வயதானவர்களுக்கு ஏற்படும் தலைவலி

தலை வலியை தவிர்க்கும் சில வழிமுறைகள்:

 • ஒவ்வொருவருக்கும் தலைவலியை தூண்டும் காரணிகள் வேறுபடும் அவற்றை இனங்கண்டு தவிர்த்தல் வேண்டும்
 • சரியான நேரத்தில் உறங்கி, எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
 • முறையான சமச்சீர் உணவை உட்கொள்ளவும்
 • ஒழுங்கான உடற்பயிற்சியை மேற்கொள்ளவும்
 • எரிச்சலூட்டும் உரத்த இரச்சலைவிட்டு விலகி இருக்கவும்
 • முடிந்தவரை வெயில்படாமல் ஒதுங்கி இருக்கவும்
 • அதிக செயற்கை ஒளிகளை தவிர்க்கவும்
 • இரவில் அதிக நேரம் கைப்பேசி உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2018

புதியதோர் கண்டுபிடிப்பு புற்றுநோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு
வெற்றி உங்கள் கையில் – 58
வாசியுங்கள்! வாகை சூடலாம்
உன்னால் முடியும் போராடு உலகை வென்று பூச்சூடு….
பெண்ணீயமே பெருமை கொள் உன்னை எண்ணி கர்வம் கொள்
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்
வீர தீர பண்புகளில் நீங்கள் எந்த வகை?
தன்னம்பிக்கை மேடை
காய்ச்சல்
மற்றவர்களோடு நெருங்கிப் பழக உதவும் யுக்திகள்
உடம்பும் – இலக்கும்
சிந்திக்க வைக்கும் சீனா
வீரத்திர விளையாட்டில் மகுடம் சூட்டிய மங்கை
தலைவலி
“வாழ நினைத்தால் வாழலாம்” – 21
முதுமையா? முதிர்ச்சியா?
உள்ளத்தோடு உள்ளம்